• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vantha kalvane...! - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 5

அவளின் நினைவுகள் அனைத்து அவளின் அனுமதி இன்றி காலையில் கண்ட கனவின் நினைவுகளைத் தேடிச் சென்றது..

அதே கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு வந்து அமர்ந்தாள் கவிமலர்..

“என்ன சுவாமி தரிசனம் முடிந்ததா..? என்ன வேண்டிக் கொண்டாய்..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.. அவள் அவனின் குரலின் மூலமே தெரிந்தது வந்தது கதிர்நிலவனே என்று கண்டுக் கண்டாள்..

“என்ன பெருமாளைப் பார்க்க வந்தால், அனுமார் இடையே வருகிறார்..? என்ன ஏதாவது புதிய வேண்டுதாலா..?” என்று அவனை குரங்கு என்று கேலி செய்தாள் கவிமலர்..

“நான் உன் கண்களுக்கு அனுமாராகவா தெரிகிறேன்.. ராமன் போல தெரியவில்லையா..?” என்றான் அவன் சோகமாக

அவனின் முகத்தைப் பார்த்த கவிமலர், “எனக்கு ராமனும் வேண்டாம்.. கண்ணனும் வேண்டாம்..” என்று அவள் முடிக்கும் முன்னே..

“கதிர்நிலவன் தான் வேண்டும் என்கிறாய்..!”என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை நிறைவு செய்தான் கதிர்நிலவன்...!

“இல்லையே..” என்று அவன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுத்தாள் கவிமலர்..

“என்ன இல்லையே..?” என்று அவளுடன் வம்புக்கு இழுத்தான் அவன்

“எனக்கு நான் மட்டும் போதும்..” என்றாள் கவிமலர் புன்னகையுடன்..!

“நான் இருப்பது உன்னில் தானே..! அதனால்தான் உனக்கு நீயே போதும் என்று சொல்கிறாய்..” என்று அவளின் முகம் பார்த்தான் கதிர்நிலவன்..

அவன் சொன்னது உண்மையே என்று அவனுக்கு கூறியது அவளின் சிவந்த கன்னங்கள்..!

ஆனால் அதையும் மீறிய ஒரு சோகம் அவள் கண்களில் இருந்ததை அவன் குறித்துக் கொண்டான்..!

அவளின் அருகில் அமர்ந்தவன், “நீ குங்குமம் வைக்க வில்லையா..?” என்ற கேள்வியுடன் கோவிலில் கொடுத்த குங்குமத்தை அவளின் பிறை நெற்றியில் வைக்க அவளின் மேனி சிலிர்த்தது..

“இந்த நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் பாக்கியத்தை எனக்கு மட்டும் கொடு கடவுளே..!” என்று அவன் சத்தமாக வேண்டிக்கொள்ள,

“ஹா..ஹா..”என்று அவனைப் பார்த்து சிரித்தாள்..

“மலர் சிரிக்காதே..” என்றான் அவன்

“மலர்கள் என்று சிரிக்காமல் இருந்திருக்கிறது..?” என்று கேட்டு மீண்டும் சிரித்தாள்..

“அந்த மலர்கள் சிரிக்கலாம்.. இந்த மலர் என்னை கேலிச்செய்து சிரிக்க கூடாது..” என்று கூறினான்..

“ம்ஹும்..” என்றவள் அவனை நோக்க, “ஏய்! இது கோவில்..!” என்றான் கதிர்நிலவன் மையல்கொண்டு கூறினான்..

அவனின் பார்வையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து உதட்டைக் கடிக்க, “அதை எதற்கு கடிக்கிற.. பாவம் விட்டுவிடு..” என்று கூறினான்.

அவள் அமைதியாக அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து, “இந்த கோவிலில் நமது திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்..?” என்று கண்களில் கனவு மின்ன கூறினான் கதிர்நிலவன்..

“நடக்காத ஒன்றை எதற்கு கனவாக காண்கிறீர்கள்..?” என்று வெடுக்கென்று கேட்டாள் கவிமலர்..

அவளின் கேள்வியில் புருவம் உயர்த்தி பார்த்தவன், “உண்மையைச் சொல்லு மலர்..? நானா கனவு காண்கிறேன்.. நீதான் கனவு காண்கிறாய்..” என்று கூறினான் அவன்

அவன் சொன்னதைக்கேட்டு திகைத்தவள் கனவு கலந்து எழுந்து அமர்ந்தாள்.. அவன் சொன்னதே அவளின் மனதில் நின்றது..

“நடக்காத ஒரு விஷயத்தை நமது ஆழ்மனம் எவ்வாறு விரும்பியது.. அது ஒரு கனவு என்று மூளைக்கு தெரிந்தாலும், மனது அதை ஒப்புக்கொள்ள மறுத்தது..”

“அது ஒரு கற்பனை உருவம்..” என்று மனதிடம் கூறினாள் அவள்..

“இல்லை நீ சொல்வது பொய்.. அவன் இருக்கிறான்.. எனக்காக வருவான்..” என்றது அவளின் மனம்..

“இல்ல..!” என்று கத்திய வாய்திறக்கும் பொழுதுதான் தான் இருக்கும் இடத்தின் என்பது நினைவு வந்தது.. கோவிலில் அமர்ந்தும் மனம் அமைதி இன்றி தவித்தது..

“அப்பொழுது கடிதத்தில் வந்த கனவுகாதலன் யார்..?” என்று கேட்டது அவளின் மனம்..

“இதற்கு என்ன பதில் சொல்வது..?” என்று பதில் தெரியாமல் தவித்தாள் அவள்

மனம் சொன்ன இரண்டையும் ஏற்க மறுத்து தலையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்..

‘அவனின் மீது தான் கொண்ட நேசம் உண்மை.. அதில் மாற்றம் இல்லை.. அதேபோல கனவுகாதலன் மீதும் கோபம் வரவில்லை.. குழப்பம்தான் வருகிறது.. நான் என்ன செய்ய..?’ என்று அமர்ந்திருந்தாள் அவள்

அவளுக்கு கடிதத்தைப் போட்டு, அவளைக் குழப்பத்தில் தவிக்க விட்டவன் சிறிதும் தயக்கம் இன்றி தனது தொழிலில் ஈடுபட்டான் கதிர்நிலவன்..

அன்றாட வேலையில் ஈடுபட்ட கதிர்நிலவன் கணக்குகளை சரிபார்க்க அதில் இருந்த குளறுபடியில் அவனுக்கு தலைவலிதான் வந்தது..

தனது கைபேசியை எடுத்தவன், அகிலனுக்கு அழைத்தான்.. அகிலன் அறைக்கதவைத் தட்டி, அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே வந்தான்..

“என்னடா நடந்தது..? கணக்கில் இத்தனை குளறுபடிகள்..? தலையும் புரியல.. வாலும் புரியல.. கணக்குகளை சரியாக ஒரு ஆடார் இல்லாமல் இருக்கிறது..” என்றான் கோபமாக கத்தினான்..

“யார் இந்த கணக்கை எழுதியது..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..

“கதிர்..” என்று இழுத்தான் அகிலன்..

“என்ன இழுக்கிறாய்..? சொல்லவந்ததை நிறுத்தாமல் சொல்லு..” என்று அகிலனை அதட்டினான் கதிர்நிலவன்..

“நிஷாதான் கணக்கை எழுதியது.. இத்தனை குளறுபடிக்கும் அவளே காரணம்..” என்றான் அகில் நிலவனைப் பார்த்து கூறினான்

அவனை நிமிர்ந்துப் பார்த்தவன், “அவளை இங்கே வரசொல்லு.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவன் “இன்னும் ஒருவாரத்தில் கணக்கில் இருக்கும் குளறுபடியைச் சரிசெய்து தரவேண்டும் அகில்..” என்று அழுத்தமாக கூற அதன் உட்பொருள் புரிந்துக் கொண்டு சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்த அகிலன்..

நிஷா இருக்கும் இடத்திற்குச் சென்றவன், “நிஷா உன்னை கதிர்நிலவன் கூப்பிட்டான்..” என்று கூறிவிட்டுச் சென்றான்..

உடனே எழுந்து கதிர்நிலவன் அறைக்குள் சென்றாள் நிஷா.. உள்ளே சென்றவளைக் கேள்வியாகப் பார்த்தான் கதிர்நிலவன்.. அவனின் பார்வைக்கு சலிக்காமல் எதிர்ப் பார்வைப் பார்த்தாள் அவள்..

“நிஷா என்ன பண்ணி வைத்திருக்கிறாய்..? கணக்கை எதற்கு இப்படி குளறுபடி செய்து வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “ஏன் நிச்சயதார்த்தத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்தாய்...?” என்று எதிர்கேள்விக் கேட்டாள் நிஷா..

அவளது கேள்வியில் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியவன், “அப்போ அம்மா சொன்னது உண்மைதானா..?” என்றவன், “உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.. அதுதான் காரணம்..!” என்றான் கதிர்நிலவன் அழுத்தமாக கூறினான்..

“அப்போ என்னோட பதில் இதுதான்.. நீயாக நிச்சயத்தார்த்தத்திற்கு ஓகே சொல்லும் வரையில் எனது வேலையை நான் இப்படித்தான் செய்வேன்..” என்று அதிகாரமாக கூறினாள் நிஷா..

“நிஷா நீ லிமிட் தாண்டிப் பேசுகிறாய்.. உனக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கணும் அவ்வளவு தானே..?” என்றான் கதிர்நிலவன் நிஷாவைப் பார்த்தபடியே..! அவளும் ‘ஆமாம்’ என்று தலையாட்டா..

“நான் நிச்சயத்தார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..” என்று கதிர்நிலவன் முடிக்கும் முன்னே, அவளின் முகம் புன்னகையில் மலர “தேங்க்ஸ் கதிர்..!” என்று நிஷா..

அவளின் “இரும்மா நான் இன்னும் முடிக்கவில்லை.. நிச்சயம் உன்னோடுதான் அதில் மாற்றம் இல்லை.. ஆனால் திருமணம் நான் விரும்புகின்ற பெண்ணோடுதான்.. ஓகே! இதில் உனக்கு சம்மதம் என்றால் நானும் இந்த நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..!” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன்..! அவன் சொன்னதைக்கேட்டு அவளின் முகம் மாறியது..

“என்ன கதிர் விளையாடுகிறாயா...?” என்றாள் நிஷா அவளின் முகத்தில் கோபத்தில் முகம் சிவக்க, பெண்புலியாக மாறியவள் கதிரின் முன்னே நின்றிருந்தாள்..

“இல்லையே..! திருமணம் என்று முடிவாகும் முன்னர் என்னை இந்த அதிகாரம் செய்பவள். என்னை திருமணம் செய்தபிறகு என்னுடைய அம்மா-அப்பாவை நீ எவ்வாறு அதிகாரம் செய்வாய்.. அவர்களுக்கு என்று இருந்த ஒரே ஆசை.. நான் அவர்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதே.. ஆனால் அந்த ஆசையும் எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டனர்.. ஸோ, அவர்களுக்கு ஏற்ற மருமகளை நான் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது நான் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.. அந்த பொண்ணு நீ கிடையாது..” என்று கூறினான் கதிர்நிலவன்..

“கதிர் நீ எந்த பெண்ணை திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..” என்று கோபமாகக் கத்தினாள் நிஷா

“ஜெஸ்ட் ஸ்டாப் இட்.. நீ இங்கிருந்து போகலாம்.. உனக்கு இனிமேல் இங்கு எந்த வேலையும் கிடையாது.. நீ வெளியே போகலாம்..” என்று அமைதியாக கூறினான் கதிர்நிலவன்..

அவனை ஒருமுறை பார்த்தவள், ‘நீ எப்படி திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று மனதில் கருவியவள், வெளியே சென்றாள்.. நிஷாவின் மனதில் வளர்ந்த வன்மத்தை அறியாமல் வேலையில் ஈடுபட்டான் கதிர்நிலவன்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அகிலனுக்கு யோசிக்க யோசிக்க தலைவலிதான் மிஞ்சியது..! அகிலன் இந்த பிரச்னையை எவ்வளவு திறப்பது என்று யோசிக்கும் போது அவனின் மனக்கண்ணில் தோன்றியது கவிமலரே..!

‘இதற்கு கவிமலரிடம் தான் தீர்வு இருக்கிறது’ என்று அவளுக்கு அழைத்தான் அகிலன்.. அன்று அவள் கொடுத்த நம்பருக்கு அழைத்தான்..

கோவிலில் அமர்ந்திருந்தவளின் கைபேசி அடித்தது.. அதை எடுத்துப் பார்த்தாள்.. புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் போனை எடுத்தாள் அவள்..

“ஹலோ...?!” என்றாள் கவிமலர்..

“கவி நான் அகில்..” என்றான்

“சாரி அகில்.. இது உன்னோட நம்பரா...? சரி என்னடா விஷயம்..?” என்று கேட்டாள் அவள்

“கவி நான் வொர்க் பண்ணும் இடத்தில் ஒரு சின்ன பிரச்சனை.. கணக்குகளில் நிறைய குளறுபடி பண்ணியிருக்கிறார்கள்.. அதை எப்படி சரி செய்வது..?” என்றான் முகிலன்..

“ரொம்ப சிம்பிள்.. கொள்முதல், விற்பனை இரண்டிற்கும் உள்ள ரெசிப்ட்கள் மற்றும் அனைத்து கணக்கையும் எடுத்து செக் பண்ணு.. அதில் இருக்கும் அமௌன்ட் சரியாக பதிந்திருக்கிறதா..? என்று பார்.. அதன்பிறகு அந்த ரெசிப்ட் ஆடார்படி கணக்குளை மாற்றியைத்தால், கணக்கு இரண்டு பக்கமும் ஒரே அமௌன்ட் வந்தால் கணக்குகள் சரி.. தட்ஸ் ஆல்!” என்றாள் கவிமலர்..

“இதில் தான் தவறு என்று நீ எப்படி சொல்கிறாய்..?” என்று யோசனையுடன் கேட்டான் அகிலன்..

“இது தொடர்ந்து நடக்கும் பிரச்சனையா..? இல்ல இப்பொழுதுதான் நடக்கிறதா..?” என்றாள் கவிமலர்..

“இப்பொழுதுதான் நடக்கிறது கவிமலர்..” என்றான் அகிலன்

“அப்போ இதில்தான் மாற்றியமைத்திருப்பார்கள்.. செக் பண்ணிட்டு சொல்லுடா.. நான் சொன்னது சரியா..? தவறா..? என்று உனக்கே புரியும்.. நான் ஒரு ஆடிட்டர் நம்பர் தருகிறேன்.. அவரிடம் கொடுத்தால் சரிசெய்துவிடுவார்..” என்று கூறினாள் கவிமலர்.. அவள் சொன்ன ஆடிட்டர் தகவலை எழுதியவன்..

“ம்ம் பார்க்கிறேன்..” என்று அழைப்பைத் துண்டித்தான் அகிலன்.. அதன்பிறகு வேலையைப் பார்க்க சென்றாள் அவள்..

கவிமலர் சொன்னபடியே அனைத்து சரிபார்த்தான் அகிலன்.. அவள் சொன்னபடியே வரவுகள் அனைத்தையும் தொகை முதல்கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தாள் நிஷா..

அதை சரியான பதிவுகளாக மாற்றியமைக்கும் வேலையில் தனது முழு கவனத்தையும் பதித்தான் அகிலன்..

அவனிடம் பேசிவிட்டு தனது வேலையைக் கவனிக்க சென்றாள் கவிமலர்.. அவள் அலுவலகத்தின் உள்ளே நுழைய, “கவிமலர் கொஞ்சம் உள்ளே வாங்க..” என்று அழைத்தார் ரவிவர்மா..

அவரின் அறைக்கதவைத்தட்டி அனுமதிப் பெற்றுகொண்டு உள்ளே சென்றாள் கவிமலர்..

“சார்..?!” என்றாள் கவிமலர்..

“கவிமலர் நீ முதலிலேயே பயிற்சிகள் அனைத்தும் முடித்து விட்டாய்.. நீ ஆடிட்டர் கடைசி செமஸ்டர் எழுதிவிட்டால் அடுத்த ஆடிட்டர்.. செமஸ்டருக்கு படித்துக்கொண்டு இருக்கிறாயா..?” என்றார் ரவிவர்மா..

“செமஸ்டருக்கு படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் சார்..” என்று பதில் கூறினாள் கவிமலர்..

“செமஸ்டர் நன்றாக எழுதும்மா..” என்றவர் நிறுத்திவிட்டு பிறகு தொடர்ந்தார்..

“சுந்தர் போன் பண்ணிருந்தான்..” என்றார் ரவிவர்மா..

“நான் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இங்கே இருப்பேன் சார்.. அதனால் நான் இங்கே இருப்பதாக சொல்லவேண்டாம்.. அவங்க மனைவி ரொம்ப வருத்தப்பட போறாங்க.. எனக்காக யாரும் வருந்துவது எனக்கு பிடிக்கவில்லை..” என்று கூறினாள் கவிமலர்..

“உன்னைப்பற்றி ராமன் சொன்னது தவறே கிடையாது.. நூறுசதவிகிதம் உண்மை.. நீ ராமன் ஸ்டுடென்ட்தான்..” என்று சிரித்தார் ரவிவர்மா..

அவரின் சிரிப்பைப் பார்த்த கவிமலர், “உண்மையான வருத்தம் கொண்டால் அதை என்னால் ஏறுக்கொள்ள முடியும்.. ஆனால் என்னை வருத்தப்பட வைப்பதற்கே வருந்தினால் எனக்கு கோபம் தான் வரும்.. அதை தவிர்க்கவே நான் இப்படி இருக்கிறேன்.. தட்ஸ் ஆல் சார்..!” என்றவள்

“சார் நான் வேலையைப் பார்க்கிறேன்..” என்று வெளியே சென்றாள் கவிமலர்..

அவள் வெளியே செல்வதைப் பார்த்த ரவிவர்மா, “இந்த பெண்ணின் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாக இருந்துவிடுமா.. ஆண்டவா இந்த பெண்ணிற்கு நீதான் துணையாக இருக்க வேண்டும்..” என்று வேண்டியக் கொண்டவர்,

சிறிது நேரம் சென்று, “துணிச்சல் கொஞ்சம் அதிகம் தான்.. என்னையே கொஞ்ச நேரத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டாள்.. பொல்லாத சுட்டி பெண்தான்..” என்று நினைக்கவே அவரின் மகள் அவரின் மனக்கண்ணில் தோன்ற, ‘இவளும் ஒரு பெண்..?!’ என்று சலித்தபடியே நினைத்துக் கொண்டார்..

அவரின் அறையை விட்டு வெளியே வந்த கவிமலரின் நினைவுகள் கடந்த காலம் செல்ல நினைக்க, மனதிற்கு கடிவாளம் இட்டு அடக்கிவிட்டு வேலையில் ஆழ்ந்தாள் அவள்..

ஆனால் அவள் தன்னை சுற்றியுள்ள அனைவரின் நிம்மதியையும் கெடுக்கவே பிறப்பெடுத்திருக்கிறாள்.. அவளுக்கு தேவை அவளின் சுதந்திரம், அவள் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும்.. அதிகாரம் செய்ய வேண்டும் என்பதே..!

அவள் செய்ய போவதை பாவம் அவர் தெரிந்துக்கொள்ள வில்லை போல.. அப்படி தெரிந்திருந்தால் அவளை என்ன செய்திருப்பார்..?
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nisha nee rompa over a pora enka kavi kathir life la ethum vilayada ninacha nee gaali be careful:cool::cool:
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Kavi thanoda dream boy a eppo paarpa waiting for next ud:love::love:
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Podi nisha...periya iva vandhutta ?? unakellam kalyanam edhukku di.. appdiye odiru
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
nice epi....nisha than villiya?? ponge nisha namme aalu dreams leye love you solli kalayanathuku pesitaru... neega ippa than avaru munukku punch dialogue pesikittu irukke...romba late ma nee:LOL::LOL:
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Nice ud.வில்லி நிஷா என்ன பண்ண போகிறா???:unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top