Kanavu Nokki Oru Payanam... Short story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

RajiPrema

Author
Author
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Points
33
Location
Tirunelveli
"அப்பா எவ்ளோ நேரமா பேப்பர் படிப்பிங்க ...தாங்கப்பா " என்றது அதட்டும் தொனியிலேயே இருக்கும் அக்குரல்...நாம கதையின் நாயகி!!பேரு "பூஜா" ..வீட்ல ரொம்பவே செல்லம்..அப்பாவை வச்சே காரியம் சாதிச்சுடுவா..எல்லா பொண்ணுங்களும் அப்டிதானுங்களே...பிடிவாதம் ரொம்ப அதிகம் ..


சட்டென வீட்டுக்குள் யாரோ நுழைவது கண்டு அப்பாவிடம் பேப்பர் வாங்கி கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்...வேறென்ன ஏதும் யாரும் கேட்ருவாங்களோனு பயம் தான்!. . இன்ஜினியரிங் முடிச்சுட்டு இன்னும் வேலைக்கு போலையா ???வீட்ல உட்கார்ந்து என்ன பண்றனு தினம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு பயந்தே ஒரு உறவினர் வீட்டுக்கும் செல்வதில்லை..வீடுண்டு தானுண்டுனு சர்க்கார் வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் பலருள் அவளும் ஒருத்தி!!!. . .


வேலைக்கு அடுத்தப்பேச்சாக நம் அருமை உறவுகள் ஆரம்பிப்பது ம்ம் !!வேறென்ன கல்யாணம் தான் !!! அதெப்படி நாம வீட்டு பொண்ணுக்குலாம் கல்யாணம் ஆயிட்டு ..இந்த வீட்டு பொண்ணு எப்படி வீட்ல இருக்கலாம்னு ஒரு உயர்ந்த எண்ணம்?!!...சொல்லிவைத்தார் போல் ஆரம்பிக்கப்பட்டது அதுவும்...என்ன அண்ணன் "மாப்ளலாம் பாக்கிகளா "என திருவாய் மலர்ந்தது...அவள் காதில் இது விழாமல் இல்லை கண்டுக்கிடாதது போல காதை மட்டும் தீட்டிக்கொண்டு கண்ணை பேப்பரில் நுழைத்தாள் !!!பாத்துட்டே தான் இருக்கோம்னு அப்பாவும் ஒரு பேச்சுக்கு சொல்லி வைக்க நானும் ஏதும் நல்ல வரன் வந்தா சொல்றேனேன் என்றபடியே நகர்ந்தது அக்குரல் !!!.


(அப்பாவிற்கும் அவளை சீக்கிரமே கல்யாணம் முடித்து வைக்க ஆசை எனினும் அவளின் ஆசையோ வேலை வாங்குவதிலேயே குறியாய் இருந்ததை அப்பாசமிகு தந்தையும் தாயும் அறியாமல் இல்லை!!!மகளின் ஆசையே அவர்களுக்கும் சரியென பட்டது ..அதனால் அவர்களும் அவளின் ஆசைக்கு செவிமடுத்தனர் ..!!அதன் பின்னர் முன்னைக் காட்டிலும் அதிக வேகத்துடன் இலக்கு நோக்கி பயணப்பட எத்தனித்தாள் ..!!)


உறவினர் சென்றாலும் அவரின் வார்த்தைகளிலேயே இவள் மனம் லயித்திருந்தது !!!அவள் பயம் திருமணத்தில் இல்லை...அவள் குடும்பம் !!!ஆம்!! அவள் அதிகம் நேசிக்கும் மனிதர்கள் அவளின் குடும்பத்தில மட்டுமே உளர் ...!அதனை விட்டுச்செல்ல எந்த பெண்ணிற்கு தான் மனம் வரும். .!ஏன் இப்டி சமூகம் இப்டி விதிமுறை பெண்டிர்க்கு மட்டும் வைத்தது என இன்னும் பல எண்ணங்கள் நொடிப்பொழுதில் மனதில் வந்து மறந்தன ..!!!


அதனை நிறுத்தும் பொருட்டு கைபேசியின் ஒலி கேட்கவே நினைவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு ...!கைபேசியை எடுத்தால் அவள் சகோதரனிடம் இருந்து அழைப்பு "ஹல்லோ ..ஹேய் நீ expect பண்ண எக்ஸாம் ரிசல்ட் வந்துட்டு !...பார்த்துட்டு கால் பண்ணு "என்று பதில் கூட எதிர்பாராமல் வைக்கப்பட்டது அந்த அழைப்பு!!!..


செமஸ்டர் பரிட்சைக்கான தேர்வு முடிவு காணும் போது கூட அத்தனை படபடப்பானதில்லை அவளின் மனம்....விறுவிறு என கணினியை நோக்கி விரைந்தாள் ..அந்த வலைத்தளம் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அவள் இருதய துடிப்பு அளவின்றி அடித்தது. .!!ஒருவழியாக அவள் மதிப்பெண் பட்டியல் வந்தது. .அவள் பார்த்தது கனவா நினைவா என எண்ணி கொண்டே இருந்தவளுக்கு மறுபடியும் ஒலித்த கைபேசியின் ஒலி உணர்த்தியது அது நினைவு தான் என ...!!!தோழியிடம் இருந்து வந்த அழைப்பை எடுத்தவளுக்கு பேச கூட வார்த்தை இல்லை. .மகிழ்ச்சியில் .!!சிறிய சந்தோசம் தான். . . தேர்வாணைய அறிவித்திருந்த இடத்திற்குள் அவள் பெயர் சற்று மேலாகவே இருந்தது. .!!!!இரண்டு மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு வரப்பெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேர்வாணைய கடிதத்தினை அன்னை தர வாங்கப் பெற்றாள்!!!!. .


தலைநகருக்கு பயணப்பட்டாள் தந்தையுடன் ..!!!விரைவிலேயே கலந்தாய்வு கடிதமும் வரப்பெற்றாள் ..படிப்புக்குப் பின்னான எத்தனையோ நேர்காணலுக்கு ஏமாற்றம் மட்டுமே தந்த தலைநகர் தனக்கான வேலையை...! தன் கனவை... பரிசளிக்கும் என எதிர்ப்பாக்கவில்லை அவள். .!!!முதல் முறை தன்னால் பெருமை கொண்ட தந்தையின் புன்னகை கண்டு அவள் விழிகள் சற்று நனைந்து தான் போயின. .!!!முதல் முறையாய் மகிழ்ச்சியின் எல்லை உணர்ந்தாள். .அவள் மனம் ஒன்றை மட்டும் அவளிடம் கூறிக் கொண்டிருந்தது எப்போதும் அவள் உச்சரிக்கும் வரிகள் அவை..."என் தந்தை என்னை கையிலேந்தியபோது அடைந்த மகிழ்வை நான் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !!!அத்தருணம் உணர்ந்து பார்க்க ஆசை என் வேலைக்கான ஆணை பெற்று உங்களை சிறிதேனும் பெருமைப்படுத்தும் தருணம் !!!"""ஆசைகள் இனிதே நிறைவேறியது!!!தலைநகரும் இம்முறை ஏமாற்றவில்லை!!!சொந்த ஊரை நோக்கி பிராயணப்பட்டாள் நெகிழ்வுடனேயே !!!!!
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
27,227
Reaction score
65,956
Points
113
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராஜிபிரேமா டியர்
 
Last edited:

Buvi

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 20, 2018
Messages
111
Reaction score
178
Points
43
very positive story. பெண்களின் இன்றைய மனவோட்டத்தை அழகாக சொல்லியிருக்கீங்க. திருமனத்தை விட அவர்களின் ஆசை வாழ்க்கையில் செட்டிலாவது என்ற சொல்லில் தான் இருக்கிறது. முந்தைய தலைமுறைக்கு திருமணம் தான் வாழ்க்கையில் செட்டிலாவது. ஆனால் இந்த தலைமுறையின் ஆசை வேறு. நல்ல முடிவு. இதை இன்னும் கொஞ்சம் கூட பெரிது படுத்தலாமே. சின்ன சஜஷன்.
 
RajiPrema

Author
Author
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Points
33
Location
Tirunelveli
very positive story. பெண்களின் இன்றைய மனவோட்டத்தை அழகாக சொல்லியிருக்கீங்க. திருமனத்தை விட அவர்களின் ஆசை வாழ்க்கையில் செட்டிலாவது என்ற சொல்லில் தான் இருக்கிறது. முந்தைய தலைமுறைக்கு திருமணம் தான் வாழ்க்கையில் செட்டிலாவது. ஆனால் இந்த தலைமுறையின் ஆசை வேறு. நல்ல முடிவு. இதை இன்னும் கொஞ்சம் கூட பெரிது படுத்தலாமே. சின்ன சஜஷன்.
உண்மை தான்...பெண்ணிற்கு சுயமரியாதையும்,தன்னம்பிக்கையும் கொடுப்பதே அவள் தனக்கென ஒரு வழி வகுப்பது தான்... அழகாய் சொன்னீர்கள்... நிச்சயம் முயற்சிக்கிறேன் தோழி நீங்கள் கூறியபடியே...மிக்க மகிழ்ச்சி...தங்கள் அன்பிற்கு என் நன்றிகள் தோழி ?...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top