Kandam Thandiya Paravaigal

Aparna

Author
Author
"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்தாலே..."
காதோடு காதலுடன் பாடிய சங்கர் மஹாதேவனோடு, ட்ராலியை தள்ளிக்கொண்டு, லக்கேஜ் செக்கின் செய்ய வரிசையில் நின்றிருந்தேன்....

சென்னை பன்னாட்டு விமானம், பள்ளி காலங்களில் வானத்தில் பறந்த விமானத்தை பார்த்து டாடா சொன்ன நான் இன்று அதற்குள்ளே!!!! சிரித்து கொண்டே முன்னேறினேன்..

மக்கள் கூடும் இடம் தான் எவ்வளவு உணர்ச்சி குவியல்களை சுமந்திருக்கும் பூக்கூடை!!!!

கனவுகளோடும், கடமைகளோடும் வான் பறக்க சிறகுகளை விரித்திருந்த இளவட்டங்கள்.. தன் வாழ்வில் வெற்றி பிள்ளைகளைகளின் வெற்றி என்று பெருமையுடனும், கர்வத்தோடும் பிள்ளைகளை காண செல்லும் பெற்றோர்கள்.. குடும்பத்தை விட்டு, இதயத்தை அவர்களிடம் தந்து, நினைவுகளையும் கண்ணீரையும் சுமந்து பயணிப்பவர்கள் என் பலரை கடந்த செல்லும் போது..

பல நாள் கழித்து கண்ட உயிரை கட்டி அகமகிழும் உறவுகள்," எப்படி இருக்க, மெலிஞ்சிட்டயே" என்றும் , "டேய் மச்சான் பாட்டில் வாங்கிட்டு வந்தியா?" என உறக்க கூறி பின்பு சுற்றம் புரிந்து" சென்ட் பாட்டில் டா " என்று நகைச்சுவையாய் பேசி வரவேற்க்கும் நட்புகளின் கூவல்களை நினைத்த போது, மூன்று வாரம் முன்பு என்னையும் என் குடும்பம் இப்படி தானே வரவேற்றது என்ற அசை போட்ட மனம் என்னையும் மீறி அவர்களிடம் அழைத்து சென்றது, விழி நீர் சூழ..

உள்ளிளுத்தேன் கண்ணீரோடு, 3 வார பொக்கிஷமான நொடிகளை..." விஷ் யூ எ ஹாப்பி ஃப்ளைட் மேடம்" என்று பயணச்சீட்டு தந்த பெண்ணிடத்தில் நன்றி கலந்த புன்னகையை வீசியபடி.. இமிகிரேஷன் ஆபிஸர் " போய்ட்டு வா மா செல்லம், இந்தியா விட்டு இன்னிக்கு போற" என்ற ரீதியில் கடவுச்சீட்டில் முத்திரை குத்தி , முறையாக விடை குடுத்தார்..

ஓ.கே.. இதோ உனைத் தேடி வருகிறேன்.. என் வேடந்தாங்கல் வாசம் முடிந்து பணி கூட்டுக்குள் வந்து சேர பறக்கிறேன்.. சுதந்திர தேவியை சுமக்கும் நாடு.. குடியேறியவர்களின் நிலம் அமெரிக்கா.. இதோ வருகிறேன்..
விவேக் சீனிவாசனை போன்ற பல மேக காதலர்களான பைலட்கள், விமான பணிபெண்கள் புடை சூழ வருகிறேன்...

வாழ்க்கையில நிறைய தருணங்கள் நமக்கு நிறைய பாடங்கள் கற்று தரும் தானே, ஒவ்வொரு பக்கத்திலும்..அந்த புத்தகத்தோடு கடக்கும் இரயில் பயணிகள் தாம் நாம்.. வாங்க நாம் அவங்க அவங்க புத்தகத்தோட அடுத்த பக்கத்த புரட்டுவோம்..

"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே ..!!" அட ஃப்ளைட் கிளம்பிடுச்சுபா வேற‌ ஒண்ணுமில்ல ??

கடவுசீட்டு கையிலேந்தி , கனவுகள் பல சுமந்தபடி

கடல் கடந்து வந்தோமடி கிளியே!!!

பெற்றோர் கூடயில்லை, சூழும் சொந்தம் அருகிலில்லை

தனிமையினை அணைத்தோமடி கிளியே!!

உடுக்கை இழந்தவன் கை போல என்

இடுக்கண் களைய வந்ததடி நட்பு கிளியே!!!

ஜாதி,மத,மொழி, இனம் மறந்து ஒரு

கூட்டு பறவையாய் வாழ்கிறோமடி கிளியே!!!

நிலச்சோறு தின்ற ஏக்கம் போக்க

கூட்டாஞ்சோறு உண்கிறோமடி கிளியே!!!

காக்கை கூட்டுக்குள் குயில்கள் ஆயினும் இன்பமாய்

கூவிக்கொண்டு இனிமை காண்கிறோமடி கிளியே!!!

வேடந்தாங்கல் பறவையென மூன்று வார விடுப்பில்

தாய் மண்ணை தொட பறக்கிறோமடி கிளியே!!!

பெட்டி நிறைய பரிசு கொண்டு கனமான

இதயம் வாங்கி வருகிறோமடி கிளியே!!!

பஞ்சு மெத்தை பார்ப்பவர்களுக்கு வெளிநாடுவாசம்

நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!

வெளிநாடு வந்த பின்பும் தணியாத தமிழ் தாகம்

இதை பகிறவைத்ததடி கிளியே!!

நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!

Continued....
 
Last edited:

Aparna

Author
Author
Th
Lovely இன்னும் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் உங்கள் விமர்சனங்களை விட குறைவாக உள்ளது
Thank u Chitra , first attempt Adan??? will add more stuff to it soon ?
 
Last edited:

Aparna

Author
Author
என்று என்றோ நான் கிறிக்கிய கவிதை நினைப்பு வர .. இருள் சூழ்ந்த அந்த இரவு வானத்தை திரும்பி பார்த்தேன்.. ஆம் இங்கு தான் வளர்ந்தேன், படித்தேன் .. என் உறவுகள் இங்கு தான் என் உரிமைகள் இங்கு தான் என் பிரபு மாதிரி "என் தங்கம் என் உரிமை" னு சத்தம் போட்டு கொண்டிருந்த என் மனதை பார்த்து ப்ளிஸ் உனகெல்லாம் ஆங்கிரி பேர்ட் ஃபேஸும், அழுமூஞ்சிதனமும் சுத்தமா செட் ஆகால என என் மூளை கிண்டலடிக்க, அட ஆமாம்ல தெரிஞ்சு தானே வந்தோம் கொஞ்ச நாள் தான் இருப்போம்னு அப்பறம் என்ன, இதோ அடுத்த லீவ் வர போது அப்ப இன்னும் ஜாலியாய் இருக்கணும். எங்கெல்லாம் போகணும் , திருப்பியும் தி.நகர் போணும்னு எனக்குள்ளே அடுத்த வருட பயணத்துக்கு ப்ளான் போட ஆரம்பிச்சேன்...

விமான பணிப்பெண்கள் அவங்க வழக்கமா சொல்லற டையலாக்ஸ் எல்லாம் சொன்னாங்க..

ரன் வே ல மெது மெதுவாக போன விமானம் வேகத்தை கூட்ட , " கோபால் என் வாழ்வே உன் கையில் தான் கோபால்" என்று திஸ் யூர் கேப்டன் ஃபார் திஸ் ஃபிளையிட்னு சொன்ன பையலட்டிடம் மானசீகமாக கூறி கொண்டு , சீட் பெல்ட்டை என்னுடன் வாரி அணைத்தேன்...
என்ன தான் பல முறை விமான டேக் ஆஃப், லேன்டிங் ஃபில் பண்ணிருந்தாலும் , நம்மில் பலருக்கு வடிவேல் சொன்ன மாதிரி " பில்டிங் ஸ்டிராங்கு , பேஸ்மன்ட் வீக்" தாங்க..

விமான பயணம் என்றுமே ஒரு சுகானுபவம் தான்.. வாங்களேன் ஜன்னல் வழியா காட்டறேன் அந்த பௌர்ணமி வானத்தை.. என்ன பண்ண சின்ன புள்ளயில இருந்து பஸ்,டிரையின்ல ஜன்னல் ஸிட்டுக்கு சண்டை போடும் சங்கத்தில் நானும் ஒருவள் தான் ஹிஹிஹி ..

கீழே பார்த்தால்..மின்விளக்குகளால் பூமியவள் தங்க, வைரமென மின்னி என்னை பார் என் அழகை பார் னு நம்மள வாய் பொழக்க வைப்பாள், அவள் இரவு உடை இப்படி என்றால் பகலில் சிறிது சிறிதாக கிழித்து போட்ட காகிதம் போல இருக்கும்..

பௌர்ணமி வானம், அழகு ச ச அதுக்கும் மேல.. ஜன்னல் வழியே அந்த நிலவு நம்மை பார்த்து இன்னும் அழகாக சிரித்து தன் மேக புடவைக்குள் புகுந்து புகுந்து விளையாடினாள்.. அவள் புடவையில கற்கள் போல நட்சத்திரம் ஜோலிப்பில் அவ்வளவு அழகா இருந்தது.. அதுவும் நிலவு அவளின் தங்க நிறம் அவள் புடவையிலும் பிரதிபலித்து பித்தம் கொள்ள வைத்தது...

நகரும் அந்த வெண்ணெய் மேக கூட்டங்களை பார்க்கும் போது.. "டேய் கண்ணா ஏன்டா கோபியர் வீட்டில்ல போய் திருடி வெண்ணெய் தின்ன இங்க பாரு எவ்வளவு இருக்கு, யாரும் உன்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்க"னு சொல்ல தோணும் அப்படி இருக்கும் அவ்வானம்..

போகும் இடம் எவ்வளவு மையில்கள் என முன் இருக்கை பின்புறம் இருக்கும் திரையில் பார்த்த படி

இடப்பக்கம் திரும்பினேன்.. அங்கே மத்திய வயது தம்பதியர்... "ஆடின காலும், ஸர்வே எடுத்த வாயும் அடங்குமா என்ன ?" ஹிஹிஹி ஷாக் ஆகாதீங்க இது மாடிஃவட் பழமொழிங்க.. ஆமாம் நான் புள்ளியியல் மாணவி பேசாமயா இருப்பேன்???...

பேச பழகுங்கள்.. பேச பேச அடுத்தவரை உணரலாம், பேச பேச பல அறியா தகவல்களை கற்றுக்கொள்ளலாம்.. பேச பேச தான் உலகறிவு வரும்.. அதனால் தான் திண்ணை இருந்தது நம் வீடுகளில்.. பேசுவது நம் உணர்வுகளுக்கு வடிகால்.. பேசுவதால் இரண்டு நாடுகளுக்குள்ளே பிரச்சினை ஸால்வ் ஆகுதுனா பார்த்துக்கோங்க பேச்சோட அருமைய..ஆனா பேசறது இவங்க இன்னும் பேசமாட்டாங்களான்னு இருக்கணும். ஏன்டா பேசராங்கன்னு இருக்க கூடாது..
 
Last edited:

Advertisements

Advertisements

Top