• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தெய்வமே... தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே....
இப்பாடலை விரும்பி கேட்டவர் திருமதி பானுமதி ஜெயராமன் அவர்கள்..????
ஆனாலும், அந்த அழகுத்
"தெய்வத்தின் மகனா? சே, சே
மகளா, இவங்க? ஹ........"
வரிகள் மிஸ்ஸிங்,
சாரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தெய்வமே... தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே....
இப்பாடலை விரும்பி கேட்டவர் திருமதி பானுமதி ஜெயராமன் அவர்கள்..????
ஆனாலும் எனக்கு ஸெல்ப்-ல
பெருமை அடிச்சுக்கறது
பிடிக்கவே பிடிக்காதுப்பா,
சாரா டியர்
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஆரா இன்னும் கொஞ்சம் வளரனும் புள்ள
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
ஆராவிற்க்குள்…. அதிர்ச்சி,ஆனந்தம் ,குழப்பம் ,பயம், தவிப்பு….என அனைத்து உணர்வுகளும் சுழன்றடித்தது…..

அனைத்தையும் உரியவளிடம் சேர்பித்த பிறகு மனம் லேசாக…, அணைப்பிர்க்கு அதிகமாய் எந்த பிரயத்தனமும் செய்யாமல்…..கண்ணியத்துடன் காதலை மட்டுமே கரைபுரள விட்டிருந்தான் இளா…. ஒரு வழியாய் மீண்டவன் , ஆராவை விட்டு விலக….. மீளாப் பார்வை இப்போது அவளிடம்….. அவளை மடியிலிருந்து எழுப்பியனை இன்னும் தொடர்ந்தது பார்வை….. விழிகளை விரித்து பார்த்திருந்தவளை சேரில் மீண்டும் அமரவைத்து விட்டு….சென்று கட்டிலில் அமர்ந்தான்…

சிமிட்டாமல் விழி விரித்திருந்தாள்…அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல், இவன் புருவங்களை உயர்த்தி கேள்வியாய் நோக்க…. கையிலிருந்த லேப் டாப் பை சேர்ரில் வைத்தவள்…… ஓடி வந்து இளாவின் மேல் விழுந்து பிரண்டாள்….

“என்னடி….?”

“ஏண்டா இப்படி பண்ணின…..? என் மனசு முழுக்க பாரமா இருக்கு….. தொண்டையெல்லாம் அடைக்குது…….”

“மேடம் என்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எல்லார்க்கும் முன்னாடி சொன்னிங்க….. அதை நம்பி என் மனச உன்கிட்ட சொன்னா…..? இப்ப என்ன ஆச்சு என் லட்டு குட்டிக்கு…?”

“தெரியலடா…. எனக்கு கஷ்டமா இருக்கு….. அண்ணா அண்ணி கூடவே இருக்கிறது போல…, நீ என்கூடவே எப்போதும் இருப்பன்னு நினைச்சு மட்டும்தான்….. கல்யாணம் பண்ணிக்கிறேண்ணு சொன்னேன்….. இப்ப நீ என் மேல இவ்வளோ லவ் வச்சிருக்கண்ணு சொல்ற…..?”

“ஆமாண்டி உன் மேல காதல் எக்கச்சக்கமா வச்சிருக்கேன்…. அதனால் என்ன….?”

“தெரியல……. ஏன்னா என்கிட்ட , உன்கிட்ட இருக்கிறது போல உனக்கு தர எதுவும் இல்லையே இளா …..? கல்யாணம் ரொம்ப ஈஸி இல்லையோ…? எனக்கு கஷ்டமா இருக்கு… பயம்மாவும் இருக்குடா.”
என்றவள் தேம்பியபடி அவன் நெஞ்சிலயே படுத்து அழ ஆரம்பித்தாள்….. இதுதானே ஆரா..,அவளது அனைத்து வலிகளுக்கும் இளா மட்டும்தான் மருந்து…. அவனே காயப்படுத்தினாலும் கூட….


அவசரப்பட்டு…, மனசை கொட்டி அவளை துன்புறுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு தலை தூக்க……

“சரி…, நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு….,”
சுமூகமாக சரி செய்யும் முயற்சியில் இறங்கினான்…


“என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு உன் ஆழ் மனசில இருந்து சம்மதமா…? பொறுமையா நிதானமா யோசிச்சு சொல்லுடா…. மத்தபடி நான் பேசினதை எல்லாம் விடு… உன்னை கல்யாணம் பண்ணி தான் உன் மேல அன்பு செலுத்தனும்னு இல்லை…நான் எப்போதும் உன் இளா தான்… இப்ப உனக்கு மட்டுமேயான இளா…. அவ்வளவு தான் வித்தியாசம் லட்டு…ம்…..சரியா…?”

“ம்………”ஆராவிடம் விசும்பல் குறைந்த பாடில்லை…

இன்னும் அதிகமாய் அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்….

“சாரி டா… …… உன் மனசை நானே ரொம்ப காயப்படுத்திடேனே லட்டு…. நீ எதையும் யோசிக்காத…. நான் பேசினதை தயவு பண்ணி மறந்திடுமா…..நமக்குள்ள காதல்.., கல்யாணம்…, எதுவும் வேணாம்டா….. என் பழைய ஆராவா என் கூடவே இரு…அதுவே போதும் எனக்கு….” முடித்தவனின் குரலில் வலி இருந்ததோ…. அவள் கண்ணீர் அவன் காதலை விட பாரமாய் நெஞ்சை கனக்க வைத்தது…. தாங்க முடியாதவனாய்….

அவன் விழிகளிலிலும் கண்ணீர்…… அவன் அணைப்பில் அழுது கரைந்து கொண்டிருந்த ஆராவை எட்டியது…. நிமிர்ந்து அவன் கண்ணீரை கண்டதும் அதிர்ந்து இயல்பிற்கு வந்தாள்….இத்தனை வருடங்களாக ஒருவரை ஒருவர் தேற்றி கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லவா…..கண்ணை துடைத்து கொண்டு…..
“அழாத இளா……… இப்ப என்ன வேணும் உனக்கு…..? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…… எனக்கும் உன்னை போல லவ் பண்ண கத்து கொடு…ம்..ம்சரியா….?”


குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சமாதானப் படுத்தும் தொனியில் கேட்டவளை , பார்த்ததும் இளாவின் முகத்தில் புன்னகை அரும்பியது….

சிரிப்புடன்….. “நீ ஒன்னும் அவ்வளோ கஷ்டப்பட்டு என்னை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க வேணாம்….?. சிரிச்ச முகத்தோடயே இரு…. அழுதா ரொம்ப கேவலமா இருக்கிற….பார்க்க சகிக்கல……”

“ரொம்ப கேவலமாக வா இருந்திச்சி என் அழுகாச்சி….? ஆனாலும் உன் அளவு மட்டமா இருந்திருக்காது …. அண்ட் ஐ ஆம் டேம் ஷ்யூர்….” ரொம்ப சீரியஸாக கலாய்த்தாள் ஆரா...

அவளின் கேலியை புரிந்தவன்…,
“நான் உனக்கு மட்டமா தெரிஞ்சேனா…?”
அவளை கீழே பிடித்து தள்ளி …, குமுற தொடங்கினான்…. ஆரா தான் ஹெவி வெயிட் சாம்பியன் ஆச்சே….விட்டு கொடுக்காமல் எகிறி அடித்து கொண்டிருந்தாள்…. இவர்கள் எப்போதும் இப்படித்தான் …சண்டைன்னு வந்துட்டா சம்பவத்தில் இறங்கி விடுவார்கள்…ஒரு அமுக்கு…. அப்படியே ஒரு குமுக்கு….என ரூம் முழுவதும் உருண்டவர்களுக்கு…, வாய், கை, கால் என அவ்வப்போது பேசும்….ஆனால் இருவர் மனமும் பேசிக்கொண்ட இந்த நாள் புதிது, சூழ்நிலையும் புதிது…..


“சாப்பாடு ரெடி கொட்டிக்க வாங்க பக்கீஸ்…..” கூப்பாட்டோடு வந்த கிருஷ்…, அப்படியே ஷாக் ஆயி நின்ணுட்டான்….

காதலோட கட்டி பிடிச்சு உருளுங்க….. அத்து விட்டு கூட்டி வரேன்னு ஏகப்பட்ட பில்ட் அப்பை வெளியில் கொடுத்துட்டு உள்ள வந்தா……..கருமம்… கருமம் ..., பன்னி குட்டிங்க சேத்துல பிறல்ற கணக்கா ரூம் ஃபுல்லா உருளுதுங்க பாரு…..தலையில் அடித்து கொண்டான்…

சாரா….?
????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top