Latest Episode Kanmani unai naan karuthinil niraithen episode 20

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
டார்லிங் babies......

அம்மாடி அம்மா...... ஒரு வழியா உருண்டு பிரண்டு இருபது episode வந்துட்டேன்..... இது வரைக்கும் அம்பானி (Jio) தான் அருள் புரிஞ்சுட்டு இருந்தாரு... பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ சிம்மை சிதைச்சுபுட்டாரு.....

சரி போனால் போகுதுன்னு பழைய கஸ்டமர் ஏர்டெல் காரனுக்கு வாழ்க்கை கொடுத்து அவன் சிம்ம போட்டா , அவன் 4ஜி கொடுக்க மாட்டேங்குறான்.....

மூணு mb audio வை டவுன்லோட் பண்ண முக்குறான், முனகுறான்...... வளையத்தை சுத்தி சுத்தி என்னாத்தையோ தேடிட்டு இருக்கிறான்.... கடைசி வரைக்கும் , தம்பி டீ இன்னும் வரல.....🙄

ஏண்டா கம்பெனி வச்சிருக்கீங் களா...? இல்லை காய்லான் கடை வச்சிரு க்கீங்களாண்ணு , கஸ்டமர் கேர் க்கு ஃபோனை போட்டா , அவன் நைசா பேசி ஹோல்டு ல போட்டுட்டு எஸ்கேபp.... இருந்தாலும மனம் தளரா சாரா.... போஸ்ட் பண்ணிட்டா பா ர்றா.... 2018-12-26-17-15-22.jpg
 
Last edited:

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா


அத்தியாயம் – 20

காத்து வாங்கிட்டு வரேன்னு மாடிக்கு போன சீமா, காதல் தோல்விய மட்டும் வாங்கிட்டு ,வேதா ரூமுக்குள்ள போனாள்.

வாடி சீமா, உனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…. சொல்லி முடிக்கும் முன்,

வேதாவின் தோள் சாய்ந்து கொண்டு அழ,

வாடி என் அண்ணன் பெத்த அருமை மகளே……கற்பகம் பெத்த காட்டெருமையே ……. நீ போட்ட திட்டத்துக்கு தீட்டி எடுத்துடேரன்டி உன்னை …. என்றெல்லாம் மனதிற்குள் கறுவி கொண்டிருந்த வேதாவிற்கே வெலவெலப்பு… …..

சிக்குன்னு சிறுத்த குட்டி போல இருந்தவ, சீக்காளி சீமாவா மூஞ்ச தொங்க போட்டுட்டு கதறி கதறி அழவும், வேதாவின் தாய்மை அசைந்து விட்டது……
அவளும் பெண் தானே…. மோமன்ட்…….அங்கே.

ஒவ்வொருவருடைய குணாதிசயத்தையும், சக மனிதரை அன்பு பாராட்டுர மனப்பான்மையையும், வளர்ப்பு தான அதிகம் தீர்மானிக்கிறது என்றெல்லாம் யோசித்தவருக்கு தன் அண்ணன் வளர்ப்பு மேலே கோபம் ரூட் மாறியது,

அடேய் வைத்தியநாதா…….. , வேண்டாவெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டாமிருகமுன்னு பேரு வச்ச கணக்கா , கடமைக்கு பெத்து போட்டுட்டு கம்பெனி கம்பெனியா கணக்கு பார்க்க கிளம்பிட்ட நீ… ஆடிட்டராம் ஆடிட்டர், எங்க போயி ஆடுரயோ நீ……… என் அண்ணன் தான் இப்படி ஆக்கங் கெட்டவன்னா,, அண்ணின்னு வந்தது ஒரு பன்னி, தின்னுட்டு தூங்கறத தவிர வேற வேலை தெரியாது……. ஒரு நல்லது கெட்டது சொல்லி கொடுத்து புள்ளை வளர்த்திருக்குதுங்களா ரெண்டும்….. துப்பு கெட்ட துடைப்ப கட்டைங்க….. வேதாவையே வெறுப்பேத்தி பேட் வேர்டு பேச வச்சிடுச்சுங்க ………. மைண்ட் வாய்சில் வறுத்தெடுத்தவருக்கு சீமா மேல பரிதாபம் ஏற்ப்பட்டது…
ஒஸ்தில சிம்பு, கோபமா சொல்ல வேண்டிய டயலாக்கை ,ஹீரோயின பார்த்து ஜொள்ளிகிட்டே, இந்த நாட்டோட பரிபாளனங்களை கட்டி காக்காம விடமாட்டேன்னு சாஃப்ட்டா ரவுடிய மிரட்டுவாரே அது போல ,
கோபமா பேசரத்துக்கு ரெடி பண்ணி வச்சிருந்த அர்ச்சனையை சாஃப்ட்டாக பண்ண ஆரம்பித்தார்….
“பாருடி , இன்னார்க்கு இன்னார்ன்னு முடிவு பண்ணி வச்சது போல தான் வாழ்க்கை அமையும்…. நாமளா இடையில பூந்து என்ன கோல்மால் பண்ணினாலும் கடவுள் போட்ட முடிச்ச,நாம அவிழ்க்கவும் முடியாது, மாத்தி முடியவும் முடியாது…”.(ஆமா ரொம்ப டைட்டாக இருக்கும்)

“அப்போ இளா மேல நான் ஆசைப்பட்டது தப்பா ஆன்டி….?”

“அவன் அழகுக்கும்,திறமைக்கும் ,குணத்துக்கும் பார்க்குற பொண்ணுங்களுக்கு ஆசை வரும் தான்.. பழகுன பொண்ணு நீ ஆசைப்பட்டதில் தப்பே இல்லடி…. ஆனா அவனுக்கு ஆராவ மட்டும் தானே பிடிச்சிருக்கு……”

“நல்லா அம்முகுனி போல இருந்துட்டு இளாவ அப்படியே அமுக்கிட்டு போயிட்டா….. என்கிட்ட இல்லாதது…….. அப்படி அந்த அரைலூசு கிட்ட என்ன இருக்கு……?என் அழகுக்கு முன்னாடி அவ நிக்க முடியுமா…?”

“அடிச்சு பல்லை உடைச்சிடுவேன் பார்த்துக்க……. ஆரா உன் அழகுக்கு முன்னாடி நிக்க முடியலனா படுத்து தூங்கிட்டு போறா விடு….. ஏதோ மனசு ஆறாம புலம்புரன்னு விட்டா, அடுத்த வீட்டு புள்ளைங்கள மட்டம் தட்டி பேசிட்டு நாம உசத்தின்னு காட்டிக்கரது என்ன பழக்கம்….?”

“நான் விக்ரமை கூட்டிட்டு இப்பவே போறேன் போங்க….நீங்க எனக்குத்தான் ஆன்டி, ஆனா அவ மேல தான் உங்களுக்கு பாசம்.. எல்லாரையும் வளைச்சு போட்டுகிட்டா…நான் எங்கயாவது போயி சாகறேன்”
“அப்படியே போட்டென்னா பாரு…”.கையை ஓங்கி, அதட்டல் போட்டு சீமாவை அலற வைத்தார்….

“கேட்டது எல்லாத்தையும் வாங்கி கொடுத்து, கிடைக்கலன்னா, அடுத்தவங்க கிட்ட இருந்து பிடுங்கி கொடுத்து ,எல்லாம் நினைச்ச உடனே வேணும்ன்னு , நல்ல பழக்கம் பண்ணி வளர்த்துருக்காங்கடியம்மா உன்னை…. ஒரு சின்ன தோல்விய , புறக்கணிப்ப தாங்க முடியல உன்னால…. உன்ன பார்த்தா ,கோபம் வரல டி ….நீ இப்படி பூஞ்சயா வளர்ந்து நிக்குறியேன்னு பயம்மா இருக்கு.”

“நல்லா கேட்டுகோடி.., ஆரா கிட்ட என்ன இருக்குன்னு கேட்டியே, ஆரா கிட்ட வஞ்சம் வச்சி பழி வாங்க தெரியாத குழந்தைத்தனம் இருக்குது... அடுத்தவங்கள மட்டமா காலில போட்டு மிதிக்க தெரியாத அருமையான மனசு இருக்குது….”

“உன்னை போல அவ ஒன்னும் அப்பன் சீராட்ட,அம்மா தாலாட்ட வளருல….. சின்ன புள்ளைங்க ரெண்டும் ஒன்னுகொண்ணு அப்பனும் ஆத்தாவுமா மாறி மாறி இருந்து வளர்ந்துகிச்சுங்க….. உங்க அப்பா இருக்காரே, கார்டியன்னு பேரை மட்டும் வச்சிக்கிட்டு அடிக்கடி காணாம போயிடுவாரு…காசு பணத்த கணக்கு பண்ணி அடுக்கி வச்சா கடமை முடிஞ்சுடுமா….?.இதுல உங்கம்மாவுக்கு என்னமோ உங்கப்பா பிரீயா வேலை பார்த்து தர்றது போல சலிப்பு…. காசு வாங்கிட்டு தான கார்டியன் வேலை பார்த்தார்…..”

“நானும் போயி நல்லது கேட்டதுக்கு கூட இருந்தேன்… சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் அந்த புள்ளைங்க வலிய கூட இருந்து பார்த்துக்க தாண்டி முடியும் ,பங்கு போட்டுக்க முடியாது…. இதெல்லாம் இப்ப உனக்கு புரியாது, நாளைக்கு உனக்கும் வலிச்சு புள்ளை பெத்து வளர்க்கிறப்போ தான் வாழ்க கைன்னா என்னான்னு தெரியும்…..”

“அவள அரை லூசுன்னு சொன்னியே ,அது உண்மைதான்டி….. இல்லைன்னா நேத்து வரைக்கும் நீ சீமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இளாவை பிடிச்சி தொங்கிட்டு இருந்திருப்பாளா……?”

“என் அண்ணன் பொண்ணா இருந்தாலும் என் பொண்ணா மதிச்சு சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுதா என்னன்னு தெரியல. …. புரிஞ்சுதுன்னா , இனிமேயாவது மனுஷங்க கிட்ட அன்பை மட்டும் காட்ட பழகு, இல்லைன்னா இவளோ நேரம் தொண்டை தண்ணி வத்த புத்தி சொன்ன எனக்கும் ஒரு அரை லூசு பட்டத்த கொடுத்திட்டு போயி தூங்குடியம்மா…… முடியல எனக்கு…”

கூம்பி போன முகத்தோடு சீமா படுத்ததை பார்த்து மனது கேட்காத வேதா,

“நடுராத்திரி ஆயிடுச்சு ,அப்படியே வெறும் வயிறொட போயி படுக்காத பாலெடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு படு, யாரை என்னா பண்றதுன்னு நல்லா திட்டம் போடறதுக்கும், நடுராத்திரி வரை பார்ட்டியில கொட்டம் போடறத்துக்கும் தெம்பு வேண்டாம் ”
என்று கிளாஸ்சில் பாலெடுத்துட்டு வந்தவர், சீமா வயித்துக்கு மட்டும் ஊத்தல , அவ வயித்தெரிச்சலுக்கும் சேர்த்து பாலூத்தினார்…..

சீமாவும் அமைதியாக படுத்திவிட, வேதாவும் ஆழ்ந்த நித்திரைக்கு போய்விட்டார்…..

திடீரென்று காலிங் பெல் காதை கிழிக்க, வெறுப்புடன் எழுந்த வேதா, கதவில் பொருத்தப்பட்டிருந்த லேன்சில் பார்க்க, கற்பகத்தை காட்டியது…….
நேரத்தை பார்க்க ஐந்து பத்து…….
அந்த சீமா சிங்காரிதான் புத்தி கெட்டு போய் காலையிலேயே வான்னு சொன்னா, அவ ஆத்தாகாரி, அஞ்சு மணிக்கே சிங்காரிச்சுட்டு வந்து நிக்குறா…..
வில்லங்கம் பண்றதுக்கு விடிய காலையிலேயேவா விருந்தாளியா போயி நிப்பாளுங்க…… என்னா டிசைனோ…..?
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
“வாங்க அண்ணி….. என்ன காலங்காத்தால……..? நாங்க ஒன்னும் உங்க பொண்ணை கடிச்சி சாப்பிட்டிட மாட்டோம்…… ஹி ஹி ஹி……” (அந்த காட்ஸில்லா எங்களை முழுங்காம இருந்தா சரி….. மைண்ட் வாய்ஸ் சில் வாரினார்)
“காபியா, டீ யா அண்ணி…?” (அண்ணன் பொண்டாட்டிங்கிரதுனால இந்த மரியாதை) பல்லை காட்ட….,


“அதெல்லாம் எதுவும் வேணாம்…..ஏழு மணிக்கு ஓட்ஸ் எடுத்துட்டு வர சொல்லு உன் மருமகளை…….” கெத்து காட்டினார் கற்பகம்..

“ரோ ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருப்பா….. வேலை செய்யுற பொண்ணு ராணி இருக்கா….அவ கிட்ட உங்களுக்கு தேவையானது செய்யசொல்றேன் அண்ணி…..” (என் மருமக உனக்கு எதுக்கு சேவகம் செய்யனும்)

“ரொம்ப செல்லம் கொடுத்து வச்சிருக்க போலயே வேதா….அப்புறம் தலை மேல ஏறி உக்கார்ந்துக்க போறா அந்த ரோஜா….” குத்தவும்,

“நான் பெத்த பிள்ளைய நெஞ்சுல சுமக்குறா, அவளை தலையில சுமந்தா பாரம் இல்ல அண்ணி வரம் தான்….” (யாருகிட்ட)


மாடிப்படியில் அரவம் கேட்க…,

இளா தான், இன்னமும் தூங்கி கொண்டிருந்த ஆராவாய் போர்வையோடு சுருட்டி கைகளில் ஏந்திய படி வந்திருந்தான்…..

“என்னாச்சு இளா….?” , வேதா.

“ஒன்னும் இல்ல டாலி…… மொட்ட மாடில பனி பெய்யுது….. இவ குளிருல உருண்டா….. ரொம்ப லேட்டா தான் தூங்க ஆரம்பிச்சா… அதான் பன்னி குட்டிக்கு உடம்புக்கு ஏதாவது வந்துற போகுதுன்னு நானே தூக்கிட்டு வந்துட்டேன்….”

இளாவும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தான்….

அதற்குள் கற்பகத்தின் குரலில் நீங்க எதுக்கு வந்தீங்க தோரணை காட்டி கொண்டு நிற்க…,

“என்னப்பா இப்பதான் என் நாத்தனார் மருமகளை தலையில் சுமக்கிறேன்னு சொன்னாங்க, நீ ஆராவ கையிலேயே சுமந்திட்டு வந்து நிக்கிற….. பார்த்துப்பா பின்னாடி ரொம்ப வலிக்க போகுது…..” நக்கலுட்டார்…..

“மனசுல அன்பு இருக்கும்போது, எல்லா சுமையும் சுகமாத்தான் அண்ணி இருக்கும்….”. வேதாவே கோதாவில் இறங்க…..

டாலி கையில் மாட்டினா நீங்க காலி….. இளாவிர்க்கு தான் கொட்டாவி நெட்டி தள்ளியது…..

வேதா, “ஆரா இருந்த ரூம் பெட்ல அவளை படுக்க வச்சிட்டு நீ திவான்ல தூங்குடா இளா…..” அனுப்பினார்…..

தான் ஒரு பொருட்டே இல்லை என்பது போல சென்ற இளாவை கனல் தெறிக்க பார்த்திருந்தார்….

இவ பொண்ணு பண்ற வேலைக்கு ஆத்தாகாரிக்கு ஆரத்தி எடுப்பான இளா, மனதிற்குள் வேதா…

பதினாறு அடிக்கு பாய திட்டம் வைத்திருந்த குட்டிய பாலை கொடுத்து கட்டி போட்டுட்டார், ஆனால் எட்டடிக்கு பாய்ந்தே தீருவென்னு கங்கணம் கட்டிட்டு வந்த கற்பகத்தை பார்த்து , மதுரைய கண்ணகி கடைசியாக பார்த்த பார்வைக்கு வந்துவிட்டார்…. ஆனா உத்து உத்து முறைச்சதில் கற்பகம் எரியல, வேதாஜி கண்ணுதான் எரிஞ்சது…. தூக்கத்தை தொலைத்ததில்…..

“ எதுவும் சரியாக யோசிக்க கூட முடியல… தூக்கம் கண்ணை கட்டுது. நீங்க போயி சீமா கூட என் ரூம்ல படுங்க .நான் ஆரா ரூம்ல கொஞ்சம் படுத்து எழறென்….”
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
“அது என்ன வேதா , யாரோ எவரோ ஆரா, அவளுக்கு தனி ரூம்…., என் பொண்ணுக்கு உன் ரூமா…..?”

இவ பொண்ணு எல்லாரையும் காலையில சீக்கிரமா வந்து கவனின்னு போன்ல சொன்னா………, இவ வாளா அதையே பிடிச்சுக்கிட்டு இவளோ சீக்கிரம் சூரியன் எழறத்துக்கு முன்னாடியே ஏழரையா வந்து நிக்கிறா கடங்காரி…கொஞ்சம் என்னை தூங்க விட்டுட்டு கவனிங்க பன்னி…..சாரி அண்ணி.. தூக்கம் வேற சொக்குது …… கற்பகம் உன் கடமை உணர்ச்சிய நினைச்சாதான் விக்குது….. “விக்குதா” வேதா உன் அறிவு இங்க தான்டி நிக்குது…. மைண்ட் வாய்ஸ் விக்கியில் ,திக்கி நிக்க, பல்ப் எரிந்தது வேதாவின் முகத்தில்...

“அண்ணி, எவனோ ஒரு தெருவுல போறவன் போல, எதையோ வித்துட்டு போயிருக்கிறான் அந்த விக்குறவன்…. அவனை அழைச்சிட்டு நடுராத்திரில வந்து நிக்குறா உங்க பொண்ணு….. சோத்தை போட்டு அந்த டிரவுசர் அவுந்த பயலை துரத்தி விடுடி , என் அண்ணி மானஸ்தி, அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு ரொம்ப போராடி பார்த்தேன் அண்ணி….. கேட்டாள அவ…. நானும் அவன் கூட பன்னிரெண்டு மணிக்கு போறேன்னு நிக்குறா…. அதான் நம்ம அண்ணன் வீட்டு மானம் எதுக்கு பார்ட்டியில போகனும்னு ,அந்த பயல ஒரு ரூம்ல போட்டு அடைச்சிட்டு ,சீமா குட்டிய புத்தி சொல்லி என் ரூம்ல பாதுகாப்பா தங்க வச்சேன்…. இது தப்பா அண்ணி……”

இப்போது கற்பகத்தின் முகம், காக்கா கக்கா போனதை தொட்டது போல இருந்தது….(வ்வே)

“நீங்களும் போயி அவளுக்கு புத்தி சொல்லுங்க….. அருமையான அம்மாவுக்கு பிறந்துட்டு , இவ்வளோ அடங்கா பிடாரித்தனம் ஆவாதே அண்ணி……. நான் ஒரு மணி நேரம் கண்ணை மூடறேன்….. உங்களுக்கு ஏதாவது வேணுமின்னா வேலைக்காரப் பொண்ணு ராணி வருவா கேளுங்க……”

சிரித்தபடியே விடைபெற்ற வேதாவை, இவ நம்மள கலாய்ச்சாளா இல்ல, நிஜம்மாவே கடமை உணர்வோட பேசினாளா… ? இவ நல்லவளா இல்ல கெட்டவளா…..? தனக்குள்ளேயே குழம்பியபடி உள்ளே போனார் கற்பகம்…

வயதில் சிறியவரான வேதாவை , கோதண்டம் மறைவிற்கு பின் மரியாதை இல்லாத தொனியில் கற்பகம் நடத்த ஆரம்பிக்க, அதன்பின் தனித்து வந்து தனது ராஜ்ஜியத்தை நிறுவி விட்டாலும் வேதா குறித்த இழி எண்ணம் நீங்கவில்லை தொடர்ந்தது… ஆனால் வேதா சிறந்த தடுப்பாட்டக்காராராய் மாறிவிட்டார்…. பால் வந்தாலே பவுண்டரி க்கு தான்….….

வேதா , தூங்கப்போகும் முன், ரோஜாவுக்கு வாட்ஸ்அப் பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்….

காலைல அஞ்சு மணிக்கே கற்பகம் கமிங், ராத்திரி ரெண்டு மணி வரை சீமா நோ ஸ்லீப்பிங்…… எனக்கு கண்ணை கட்டிங்…… சீமா மம்மி யூ நோ சீயிங்….. ஐ ஆம் 7.30 வேகிங்…. ஓவர்….. ஓவர்….

அவ்வளவு தான் அடுத்த நிமிடம், கோதண்டத்துடன் டூயட்டில் வேதா……. மலர்ந்த முகத்துடன் உறக்கத்தை தழுவினார்…..

சீமாவை தேடி சென்ற கற்பகம் அவள் தூங்குவதை பார்த்து நொந்து கொண்டார்…

'அவன் அந்த ஆராவ அலேக்கா தூக்கிட்டு வரான் கட்டின பொண்டாட்டி மாதிரி, அந்த வேதா என்கிட்டயே போட்டு வாங்குறா, இதுல நான் ஏதோ சாதிச்சிட்டு வரேன்னு பெருமை பேசி அந்த வீணா போன விக்ரமையும் கூட்டிட்டு வந்துட்டு , ஒன்னுமே கிழிக்காம மல்லாக்க படுத்துகிட்டு மங்குனி போல தூங்குறா இந்த எருமை…..'
அவரும் புலம்பியபடி கண்ணை மூட, அந்த வீடு ,சற்று ஓய்வெடுத்தது…


மீண்டும் வீடு உயிர்த்தெழுந்த போது ,எட்டு மணி…. இளா, குட் மார்னிங் டாலியுடன் வெளியே வர, வேதா சிரிச்சவாரே காஃபி தந்தார்…..
கிரிஷ்ஷும் ரோஜாவும் கீழே வர,


“ரோ , மணி எட்டு, லட்டு பசி தாங்காதே இன்னும் தூங்குது, போயி அவளை எழுப்பி விடு ரெடி ஆகட்டும்…..”
'சரி மீ'யுடன் நகர்ந்த ரோஜாவை,


“அவ தூங்கட்டும் ரோஸ், அவளுக்கு வயிறு வலி…. இன்னும் ரெண்டு நாளைக்கு சரியா சாப்பிட மாட்டா…எழுப்பினாலும் அவளுக்கு தான் கஷ்டம்…தூங்கற வரை தூங்கட்டும்….அவளே வருவா….” இளா தான்….

கேட்டதும் வேதாவும் ரோஜாவும்….
ஒருவரைப் பார்த்து ஒருவர் அர்த்தமாக புன்னகைத்து கொண்டனர்


“நேத்து அந்த சோத்து மூட்டை என்னைய பார்க்க வச்சிட்டு பால்கோவாவை முழுங்கும்போதே தெரியும், இன்னைக்கு அவளுக்கு வயிறுவலிதான்னு……ஹ… ஹ.. ஹா….” பல்லை காட்டிய கிருஷ் ஷை, மூன்று பேரும் சேர்ந்து முறைத்தனர்…..

திரு திரு முழியை கொடுத்துவிட்டு அமைதியாக கவுச்சில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறது போல ஆக்ட் குடுத்தான்…. இப்ப என்ன சொல்லிட்டோம்னு இந்த த்ரீ இடியட்ஸ் என்னை முறைச்சதுங்க….. ஃபன்னி பீப்பிள்…… மனசுக்குள் சிரித்துகொண்டான்….

இளா, “ திருந்தாத திருட்டு பையன் முழியப் பாருங்க, அவனை விடுங்க , டாலி ப்ரேக் ஃபாஸ்ட் என்ன…?”

வேதா , “சிக்கன் குழம்பு, வடை கறி, இட்லி அதோட சேமியா கேசரி….. லேட் ஆனதுனால , சிம்பிளா முடிச்சிடுவோம்…. லஞ்சுக்கு வெரைட்டி பண்ணிக்கலாம்…..”

“ஓஹோ சன்டே செலிபிரெஷன் ….சூப்பர்….நானும் , லட்டும் லஞ்ச் முடிஞ்சதும் கிளம்பனும்…..கொஞ்சம் வேலை இருக்கு…அவளும் ஏதோ பிராஜெக்ட் பாக்கி இருக்கு, நாளைக்கு சப்மிட் பண்ணனும்னு சொன்னா…..”

“சரிடா கிளம்பலாம்.நான் சிக்கன் வாங்கனும், நானே போயி வாங்கினாத்தான் நல்லது….. நீ வண்டிய எடு இளா போவோம்…..”

கிளம்பும் முன், ரோஜாவை கூப்பிட்டு,
“வேதா மருமக எங்கேயும் தலை குனிய கூடாது, முக்கியமா கற்பகம் அண்ணி கிட்ட….. பார்த்து நடந்துக்க ரோ…”.காதை கடித்து விட்டு இளாவுடன் வெளியே சென்றார்….


“ரோசா….. லட்டு எருமைக்கு தான் கேசரி பிடிக்காதே…. உடம்பு வேற சரியில்ல…அவளுக்கு பிடிச்சத செய்யாம, தாய் கிழவி பாட்டுக்கு தானா மெனு போடுது…..”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் கிருஷ்….நான் அவளுக்கு தனியா எதுவும் செஞ்சிடறேன்…..” என்றவள் அருகே சென்று அமைதியான குரலில் , “கற்பகம் அம்மா வந்துட்டாங்களாம்…..உள்ள சீமா கூட இருக்கிறாங்க….அத்தை ஜாக்கிரதை யா இருக்க சொல்லிட்டு போனாங்க…..”

கடுப்பானான் கிருஷ்…. “சீமாக்குதான் அறிவில்லன்னா ,அத்தை அதுக்கும் மேல….. இதுக்கு நான் கடைக்கே போயிருப்பேன்……” அவனும் கிசுகிசுப்பிலேயே கடுப்படித்தான்….

ஆராவும் எழுந்து வர, “இப்ப எப்படி இருக்கு லட்டு…?” ரோஜா…

“கொஞ்சமா திங்கணும்.. நேரம் காலம் பார்க்காமல் தின்னா, தெய்வம் நின்னு கொல்லும் அதுவும் அண்ணனை பார்க்க விட்டு தின்னா உடனே கொல்லும் பார்த்தியா…?…. சேத்து பன்னி கணக்கா உருளாம கிளம்பு , ஹாஸ்பிடல் போகலாம்…. போயி உன் வாய தச்சி கூட்டிட்டு வந்தா தான் அடங்குவ…..

பதில் சொல்லாமல், ரோஜாவை கட்டி பிடித்து சாய்ந்து கொண்டாள்….

“ரோஜா தான், சும்மா இரு கிருஷ் இதெல்லாம் உனக்கு புரியாது என்றாள்….”

“அது என்ன வயிறு வலி, எனக்கு தெரியாத வலி,..” முறைத்து விட்டு அமைதியானான்வேதாவின் ரூமில் ,அப்போதுதான் விழித்த சீமா, விக்ரமிற்கு ஃபோன் செய்து பேசினாள்,
“கெட் ரெடி சூன் விக்கி….. என்னால இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது…. மம்மி இங்க தான் இருக்காங்க…. பட் நோ யூஸ் இனிமே என்ன பண்ணினாலும்……..”
வைத்து விட்டாள் ஃபோனை…


“என்னடி நடந்தது…..?” பேசி முடித்தவளிடம் கற்பகம் கேட்க…,

“எல்லாம் முடிஞ்சு போச்சு….உன் பொண்ணு ஆரா கிட்ட தோற்த்துபோயிட்டா…… எல்லாரும் ஆல்ரெடி டிசைட் பண்ணி வச்சிட்டாங்க மம்மி, ஆராவுக்கும் இளாவுக்கும் கல்யாணம் பண்ண, இளா கடைசி வரை என் லவ்வ ஃபீல் பண்ணவே இல்ல மம்மி அத நினைச்சாத்தான் தாங்க முடியல, எனக்கு வாழவே பிடிக்கல மம்மி….….” கற்பகத்தின் மடியில் படுத்துக்கொண்டு அழுத சீமாவின் கண்ணீரை பார்த்து , கற்பகத்திற்கு வெறி கிளம்பியது.
என் பொண்ணை அல்லாட விட்டுட்டு ,அந்த ஆராவ மகாராணி ஆக்கி அழகு பார்ப்பாங்க….அதை நான் பாரத்துட்டு சும்மா இருப்பேனா….. ஆத்திரத்துடன் ஹாலுக்கு போனவர், ரோஜாவிடம் சலுகை கொண்டாடுவதும், கிருஷ் திட்டுவது போல ஆராவைத் தாங்கவும் இன்னும் கொதித்தார்…


“ ஏய் , அம்மான்ஜி ஆரா, எழுந்திரிடி முதல்ல, அப்பன் ஆத்தா ,மாமன், அத்தைன்னு எல்லாரையும் முழுங்கிட்ட , அடுத்து என் பொண்ண முழுங்க பார்க்குறியா…? போடி வெளில….…..” வீடே அதிரும்படி அலறினார்…..

சாரா…..😘💕
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
இப்ப கிடைக்கிற நெட்வொர்க் ல இதுக்கு மேல அல்லைன் பண்ண முடியல.... Night கிடைச்சா பண்றேன் puppies...😏
 

Advertisements

Top