• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen Episode 3( 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
நன்றிகள் பல ப்ரோ
 




Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Hahahahah nice epi...
Yennathu namma baby ma ku brain konjam kammy yaa.....
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Hahahahah nice epi...
Yennathu namma baby ma ku brain konjam kammy yaa.....
Lightaa... slow pickup...loosunnu நினைச்சிடாtheyl.....???
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
v
“சரி விடுடா லேடிஸ்க்கு சமையலில் இன்டரெஸ்ட்
அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்க…?”- இளா.

“இதெல்லாம் கூட ஓகே. ரெண்டும் ஒரே மாதிரி டிரஸ்
போட்டுகிட்டு மூஞ்ச அஷ்ட கொணலா வச்சிக்கிட்டு ,
எல்லா வீகெண்டும் போடுங்க பாரு ஒரு செல்ஃபி….
என் ஃபேஸ் புக் அக்கௌன்டையே ஊத்தி மூடிடலாம்னு
இருக்கேன். சகிக்கலை அதுங்க கொட்டம்..”


“இப்ப புதுசா டப் மாஷ் வேற ஸ்டார்ட் பண்ணி இருக்குங்க. முடியலடா…”

“என் நிலைமையை பார்த்தியா கோதண்டம் ..?
என் பொண்டாட்டி ய விட உன் பொண்டாட்டி தான் என்னை அதிகமா டார்ச்சர் பண்ணுது. என்ன இப்படி தனியா இதுகல்ட்ட தவிக்க விட்டு நீ பாட்டுக்கு சந்தோஷமா
போயிட்ட…” கிருஷ் மேலே கைகளை தூக்கி செத்து போன அப்பாவிடம் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தான்.



அதற்குள் அவன் ஃபோன் ரிங்டோன்
“ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…… உன்
பேரை சொல்லும் ரோசாப்பூ”…என்று பாடியது..….எடுத்தவன்


“சொல்லுடி என் ரோசா மலரே ராச குமாரி. . ஒஹ்...ஓகே
கார்லிக் பியுரி ஆ…? சரிடா. வாங்கிட்டு வரேன்.
இல்லடா மாறன் கூட பீச்சில் இருக்கேன் டா ஹனி.
இதோ தரேன் பேசு டா”..


பம்மியவன் ஃபோனை இளமாறனிடம் கொடுத்தான்.

சிரித்தபடியே இளா….

“சொல்லு மா ரோஸ். வேதா டார்லிங் எப்படி இருக்கு.?
இல்லமா மும்பைலேர்ந்து லட்டு வந்துட்டா..
இன்னைக்குதான் வந்தாள்.”


“என்ன ஆச்சு..? அப்படியா…? அதான் அவ வந்துட்டாள்ள…… ஃபிட்டிங் லாம் இனி
கரெக்ட் ஆக இருக்கும். காலையில ஆஃபீஸ் பொகுறதுக்கு முன்னே லட்டுவ கூட்டி வந்து விடறேன்.சரி என் டார்லிங் கிட்ட ஃபோனை கொடுமா..”


“வேதா டார்லிங் என்ன ஆச்சு உனக்கு .? . எப்படி போன
வாரம் டிசைன் பண்ணின டிரஸ் அதுக்குள்ள லூஸ் ஆச்சி. ? ஆமாம் …லட்டு வந்துட்டா .. உடனே உன் டிரசையெல்லம் ஃபிட் பண்ணி கொடுத்திடுவா....
உனக்கு டிசைன் பண்ணத்தானே அவளை
ஃபேஷன் டெக்னாலஜியை படிக்க வைக்கிறேன் டியர்.”


……………………………………

“ சரி நெக்ஸ்ட் வீக் என்டுக்கு என்ன தீம்மில் டிரஸ் போட போறீங்க..? நாளைக்கு சீக்கிரம் வந்துடறேன் . நாம நாலு பேரும் சேர்ந்து டிசய்டு பண்ணிடுவோம்.. லட்டு
நல்லதா சீக்கிரம் பண்ணி தருவா டோண்ட் வொர்ரி..”
………………….


“செய்யிற சாப்பாட ரோஸ் க்கு மட்டும் கொஞ்சமா கொடுத்துட்டு
மிச்சம் எல்லாத்தையும் நீயே சாப்பிடு செல்லம்.. . இந்த குண்டன்
வெளியில கூட சாப்பிட்டுக்குவான். பாரு டிரஸ் லூஸ் ஆனத கேட்டதும்
மனசு பதறுதில்ல வேதா டாலி..…?”
………
“அந்த சிகப்பு ட்ரெஸ் செல்பீக்கு “வாவ் “ எமொஜி காலைலயே
கொடுத்துட்டேன். நம்ம வேதா ஆர்மி லையும் போஸ்ட் பண்ணிட்டேன். நீ பேசாமல் என் டெக்ஸ்டைல்ஸ் க்கு மாடலிங் பண்ணலாம் டார்லிங்,….
நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளோ
அழகு.யாரும் இதுக்கு முன்னாடி இவளோ அழகை
பார்த்திருக்க மாட்டாங்க.” ( அடங்கோப்புறானே...வாரணம் ஆயிரம் சூர்யா...?????.)
……
“மறக்காம ரோஸ் கிட்ட சொல்லு .., ராஜா ராணி
படத்துல நீ பேசிய அந்த நஸ்ரியா டயலாக் டப் மேஷ்
சரியாவே எடிட் பண்ணல..வேதா ஆர்மி மெம்பேர்ஸ்
லாம் அப்செட் ஆயிட்டாங்க..”
……
“காலைல எனக்கும் லட்டுக்கும் அங்க தான் ப்ரேக் பாஸ்ட். உன் கையால சாப்பிட தான் வரேன். வழக்கம் போல பழைய கஞ்சிய ஊத்தி இந்த தடியன வெளில
துரத்திடு. இல்லைனா நம்ம ரெண்டு பேரையும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுவான். பை
டார்லிங். டேக் கேர்…”
இவன் பேசி முடிக்க காதில் புகையுடன் கிருஷ்..
“எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் டா.. அதுக
போடிர கிழிஞ்ச டிரசுலாம் டிசைன் பண்ணி கிழிச்சு
விட்டது போல இருக்கேன்னு பார்த்தேன். “


“அந்த கூஸ் பெரியும், நீயும்
சேர்ந்து பார்த்த வேலையா டா இது…?” நான்
உங்களுக்கு என்ன டா பாவம் பண்ணினேன்.
கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தவனிடம்…


“டேய் நான் வேதா ஆர்மி யோட தலைவன். என் மேல கை வச்சா மத்த மெம்பர்ஸ் சும்மா இருக்க மாட்டாங்க. தமிழ்நாடே கொந்தளிக்கும்…”
என்றபடி இளா ஓட ஆரம்பிக்க…


"கொஞ்சம் கூட
வெட்கமே இல்லாமல் ஒரு வேளை சோத்துக்கு அந்த
கிழவிய போய் அழகிங்கிர… இதுல வேதாஆர்மி…..வேற…
உன்னை …." துரத்திய படி மணலில் ஓடினான் கிருஷ்...


வேதவல்லி , கிருஷ்ணாவின் தாயார். இளா விற்கு மட்டும் வேதா டார்லிங். ஆராவிற்க்கும் இளாவிற்க்கும் தாங்கள் அனாதை என்ற எண்ணம் வராததிர்க்கு
முக்கியமான காரணம் இந்த வேதா மட்டுமே.. ஆக மொத்தம் இந்த வேதாஜி ஒரு லேட்டெஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் மாதாஜி.


ஓடி முடித்து, தண்ணீரில் உருண்டு விளையாடிய பின்
சிரித்தபடியே ஓரிடத்தில் சுட்ட சோள கதிருடன் அமர்ந்தார்கள்.
“இப்ப சொல்லுடா ஆராவிர்க்கு என்ன பிரச்சினை.?-“கிருஷ் கேட்க


கண்களாலேயே ”எப்படிடா …?”என்றகேட்ட இளமாறனிடம்

“நீ உனக்காக எப்படா யோசிச்சி இருக்க..? உன் உலகமே
ஆரான்னு தெரியாதா எனக்கு…? ம் ..ம்.. இப்ப புதுசா
என்ன..?”


“சீமா தான்டா பிரச்சினை. லட்டுகிட்ட
கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை அப்படி பார்த்துக்கிறேன்… இப்படி பார்த்துகிறேண்ணு தூண்டி விட்டுருக்கா..”


“லட்டு என்னையே சீமாவ கல்யாணம் பண்ண சொல்லி
கேன்வாஸ் பண்ணுது. செம்ம கடுப்பாயிட்டண்டா.
அவளுக்கு ஃபோன் பண்ணி ஏன் டி இப்படி
பண்ணுறன்னு கேட்டா..? இதுல என்ன தப்பு. என்ன
கட்டலைன்னா நீ சாமியாராதான் போகணும்னு
நக்கலடிக்கிறா..” இளா பொரிந்து தள்ளினான்.


“சிலுக்கு திருப்பி அவ வேலைய ஆரம்பிச்சுட்டாளா…?
அவளை என்னதான் செய்யறது..? அடங்கா பிடாரி.
சரி அத்தை மாமாகிட்ட பேசி பார்க்கிறேன்.” –
கேட்டதும் கொதித்தது கிருஷிற்கு.


சீமா, கிரிஷின் முறைப் பெண். வேதவல்லி , சீமாவின்
தந்தை வைத்தியநாதனுடையஉடன் பிறந்த தங்கை . வேதா ஒரு முறை
அவனிடம் திருமண பேச்சை ஆரம்பிக்கும் போது கூட ,
சீமாவை உனக்கு பெண் கேட்போமா என்று கேட்டு பார்த்தார். ஆனால்
கிருஷ் அந்த பேச்சே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அதன் பிறகு தான் தூரத்து சொந்தத்தில் பெற்றோர் இல்லாமல் உறவினர் வீட்டில்
வளர்ந்த ரோஜாவை கிருஷ்க்கு மணமுடித்தார்.


கொஞ்ச நேரம் யோசித்த கிருஷ்.
.”ஏன்டா மாறா……. நீ
கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..?
அழகான வயசு பையனை
வீட்டுல வச்சிட்டு வயத்துல நெருப்ப கட்டிகிட்டு
எத்தனை நாள் தான் நாங்களும் இருக்கிறது. இப்ப பாரு
கண்டவள்ளாம் உன் அழகுல மயங்கி , உன்னையே
டாவடிக்கிறாளுங்க…"


இந்த வயசில் பண்ணாமல் இனிமே எப்போ பண்றதா
இருக்க கல்யாணம்..?”


அதற்கு இளா – “நான் எப்படிடா என் ஆராவ தனியா
விட்டுட்டு கல்யாணம் பண்ணுவேன்…?”


“உன்னை யாரு விட்டுட்டு பண்ண சொன்னா..?
ஆராவையே கல்யாணம் பண்ணிக்கோ.
உனக்கும் அவளுக்கும்
அஞ்சு வயசுதான் வித்தியாசம்..
அவளையே கல்யாணம் பண்ணி கிட்டா
நீயும் அவளை பிரியவேண்டாமே…? “ – கிருஷ்
போட்டுடைத்தான்.


“ஆராவ எப்படிடா நான் கல்யாணம் பண்றது…? அவ
மூளை வளர்ச்சி குறைவான குழந்தை.. உனக்கு இது
தெரியாதா..?
எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசுற…? லூசா டா நீ..?” – இளா.


“நான் லூசு இல்லடா…ஆனா கூடிய சீக்கிரம்
ஆகிடுவேன். நீயே என்ன ஆக்கிடுவ.. அவளுக்கு மூளை வளர்ச்சி
ஸ்லோவா இருக்கும்னு தான் சொன்னாங்க. அவ
மூளையே வளராத குழந்தைன்னு எப்ப
சொன்னாங்க...?"


"அவளோட அப்பா அம்மா செத்த அதிர்ச்சிதான்
அஞ்சு வயசு ஆராவோட மூளைய ஸ்தம்பிக்க
வச்சிடுச்சி… ஆனால் ஸ்லோவா ரெகாவர் ஆகிடுவான்னு தான டாக்டர்ஸ்
சொன்னாங்க. "


"அவ இப்போ ரொம்பவுமே நார்மல் ஆகிட்டா
மத்தவங்களுக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை."


"நீ தான் அவளை பேம்பர் பண்ணி பண்ணி…. பேபியாகவே
வச்சிருக்க.. "கிருஷ் முடிக்கவில்லை.. அதற்குள் இளா,


“நான் என்னடா பண்றது..? இப்ப கூட டாக்டர் கிட்ட
கன்செல்ட் பண்ணி தனியா பொயிட்டுவான்னு அவளை
காலேஜ் எஜுக்கேஷனல் டூருக்கு மும்பை வரைக்கும் அனுப்பினேன்.
ஒரு வாரம் அவள் கூட சுத்தமா பேசவே இல்லை.
என்னை போய் இப்படி சொல்ற…?
நானும் அவளை இண்டிபெண்டன்ட் ஆக்க தான் டிரை
பண்ணிட்டு இருக்கேன்.”


எப்படி…? அந்த சுரேகாவுக்கு ஒரு நாளைக்கு எட்டு
தடவை ஃபோன் பேசியிருக்க.. ஆரா சாப்பிட்டாளா…. ,
தூங்கினாளான்னு…. .., அவ புருஷன் ஃபோன்
பண்ணினப்ப எல்லாம் அவ ஃபோன் பிஸியா வே
இருந்திருக்கு…அது பத்தி அவன் கோபமா பேசியிருக்கான்
சுரேகா கிட்ட..


அவ என்கிட்ட ஃபோன் பண்ணி , ஆராதனா உங்களுக்கு அவ்வளவு
முக்கியமா இருந்தால் எதுக்கு வெளியே அனுப்புறீங்க
வீட்டிலேயே வச்சி பூஜை போட வேண்டியது தான…, உன் தோஸ்துக்கு மாமி வேலை பார்க்க தான் லெக்சரர் ஆக சேர்ந்தெனா..? லவ் பன்றவனெல்லாம் ஃபிரெண்ட தான் டார்ச்சர் பண்ணுவாங்கனு சொல்றது சரியா இருக்கு.


உங்க கூட படிச்ச பாவத்துக்கு எனக்கு டிவர்ஸ் வாங்கி கொடுக்காமல் விட
மாடீங்களாண்ணு புலம்புறா…. என்று கிருஷ் முறைக்க…


"ஹி.. ஹி.. ஹி…! –??? அப்ப அப்ப ஃபோன்
பண்ணி என்ன பண்றா ஆரானு கேட்டது தப்பா..? லவ்
பண்றேன்னு உன்கிட்ட சொல்லியிருக்கா அந்த
மென்டல்." இளித்தபடியே இளா கூற..


"ரொம்ப வழியுது துடைச்சிக்க.. அதுக்குதான் சொல்றேன்.
ஆராவையே கல்யாணம் பண்ணிக்கோ. கூடவே வச்சி
கொஞ்சிக்கோ இல்ல என்ன கருமமாவது பண்ணிக்கோ.
எங்களை ஆள விடு. இந்த சீமா, கோமான்னு எவளும்
தொல்லையும் பண்ண மாட்டா…." கிருஷ் கடித்து
துப்பினான்.


“போடா……. அத்தை என்னை நம்பி லட்டுவ
ஒப்படைசிட்டு போயிருக்காங்க. பின்ன நானே எப்படி
அவளை கல்யாணம் பண்ணிக்க..? அது நல்லாவா
இருக்கும்…?" –இளா.


( டேய்… மறுபடியும் முதல்லேர்ந்தா…?)

"ஆராதனாவுக்கும் கல்யாண வயசு ஆச்சு..அப்ப அவளுக்கு வேற நல்ல
மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம். ஒகே..? "கிருஷ்ணன் குண்டைப் போட்டான்.


"டேய் வர்றவன் யாரோ…எவரோ....? எப்படி அவளை நல்லா
பார்த்துப்பான்னு நமக்கு தெரியும்..? ஒரு வேளை என் லட்டுவ அவன் ஏதாவது
செஞ்சிட்டா..? "
இளாவால் தாங்க முடியவில்லை.


"என்னடா செய்வான் உன் லட்ட..,? புட்டு வாயில போட்டு
முழுங்கிடுவானா..?
என்னடா இது கூத்து..? நீயும் ஆராவை கட்ட
மாட்டெங்குற. வேற மாப்பிள்ளை கட்டிக்கவும் உட மாட்டேங்குற..?"
(அய்யோ கிருஷ்ஷு உனக்கு வந்தவதான் வாழை
மட்டைன்னா, வாய்ச்ச ப்ரெண்ட் தேங்காய் மட்டையா
இருக்கானே..)


சாரா
very intersting sara akka...
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இளா தாங்க முடியவில்லைப்பா உன்னோட பாசமழையை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top