• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen Episode 5 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
“அடியே ரோசா …… இத்தனை நாளாய் சமைக்கிரீங்க உங்களுக்கு இவ்வளோ ப்ரேக் பாஸ்ட் அயிட்டம் சமைக்க தெரியும்னு இன்னைக்கு தாண்டி தெரியும். பாதி ஐட்டம் , நான் கண்ணுலயே பார்க்காத ஐயிட்டமா இல்ல இருக்கு. “

“ஆமாம் கிருஷ்.காண்டினெண்டல் ஐட்டம் சிலது டிரை பண்ணியிருக்கொம். நல்லா இருக்கான்னு பாரு…?” ரோஜா.

எங்க பார்ப்போம்.... என்றபடி அனைத்தையும் திறந்து பார்த்தான்.
”இது என்னாடி சிக்கன் மேல கொழ கொழான்னு குழம்ப ஊத்தி வச்சிருக்கீங்க…?”


“அது பேரு சிக்கன் பிக்காட்டா…. “

“பிச்சி போட்ட சிக்கனுக்கு பேரு பிக்காட்டா வாம் … நல்லா சொல்லுறீங்க டி டீட்டைலு….”

“எப்படியோ என்னையும் ஞாபகம் வச்சி எனக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜி ய வாவது செஞ்சீங்களே அதுவரைக்கும் உனக்கு புண்ணியமா போகட்டும் ஆத்தா….”

“அய்யோ அது பஜ்ஜி இல்லடா க்ரஸ்டட் பன்கோ. என்ன கிருஷ் இப்படி தப்பு தப்பா டிஷ் பேர சொல்லுற…?” ரோஜா கத்தினாள்.

“ஓஹ்ஹோ ண்னானன். …….. இவ்வளவு நேரமா எங்காத்தாகாரி என்னை கழுவி கழுவி ஊத்தும்போது உனக்கு தப்பாவே தெரியல…இந்த பங்கோவ …, பஜ்ஜின்னு சொன்னது பங்கமாயிடுச்சு. உங்களை எல்லாம் கும்மிப்புடுவேன் கும்மி……”

“வேலையா இருக்கும்போது காமெடி பண்ணாதிங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். போ கிருஷ்…”

“எல்லா டிஷும் செம்ம டேஸ்டியா இருக்கு ரோஸ்… … இந்த தடியனைத்தான் பழைய கஞ்சிய ஊத்தி காலையிலேயே வெளியில அனுப்ப சொன்னேனே. இப்ப பாரு என் வேதா டாலி எனக்காக ஆசை ஆசையா சமைச்சதை பாத்து காண்டாகிரான்….” – இளா

கிருஷ் முறைத்தான்.
ஆரா வந்த வேலைக்கு மட்டும் வாயை பயன்படுத்தி வெளுத்து கொண்டிருந்தாள். திடீரென அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட இருவரையும் மாறி மாறி பார்த்தான். அதை பார்த்த வேதா..,


“ஏண்டி உன் புருஷன் என்னடி….? திடீர் திடீரென கண்ணை காட்டுறான்…... முழிய உருட்டுறான்…... இப்ப வந்த….. புள்ளைகள வேற வெறிக்க….வெறிக்க….. பார்க்கிறான்.எனக்கு ரொம்ப பயம்மா இருக்குடி. காத்து கருப்பு அண்டியிருக்குமோ….போய் கருப்புசாமி கோயிலில் மந்திரிசுட்டு வந்துருவோம்மா……….” வேதா ரோஜாவின் காதை கடித்தார்.

“மீ …. அவரோட ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்கும். “

“சரி இப்ப எதுக்கு முழிக்கிரான்னு சொல்லு…?.”

“அதான் சொன்னேனே ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு அப்புறம் எப்படி ஒரு அர்த்தத்தை சொல்றது….?”
ரோஜா சமாளித்தாள்.


“இந்த வேதாவுக்கு ஏத்த சோதா டி நீ….” நெட்டி முறித்தார் வேதா..

ஆனால் கிருஷின் கவனம் இன்னும் வந்தவர்கள் மேலேயே இருந்தது.
இளாவும் , ஆராவும் வந்ததிலிருந்து பேசிக்கொள்ள வில்லையே என்பது உரைக்க. ஒருவேளை பயலை நாம குழப்பி விட்டதுல வந்த விளைவா இந்த மௌனம். என்று நினைத்தபடி…


“ஏய் லட்டு … என்னடி அமைதியா இருக்க… நீயெல்லாம் அமைதியா இருந்தா … உலகத்துல ஏதோ பேரழிவு வர்ற போகுதுன்னு அர்த்தம். ஒரு வேளை இளா கூட சண்டை போட்டியோ…? “

“நான் ஒன்னும் சண்டை போடல அண்ணா. இவன்தான் என்னை முதுகிலெயே அடிச்சிட்டான். அதுவும் காலங்காத்தால…”

“இளா அண்ணாவுக்கு .., லட்டு மேல கோபமா…? நீ என்னடி அப்படி பண்ணின எங்கண்ணன் பொங்கற அளவுக்கு…?”ரோஜா கேட்க

“ஏதோ தூக்கத்தில் காலை தூக்கி தலையில் போட்டு விட்டேனாம்…. அதை பெரிய துக்கமாக நினைத்து முதுகிலேயே ஒன்று போட்டு விட்டான் இந்த லகுட பாண்டியன்.”
( ஆஹா…. இம்சை அரசி ரிட்டர்ன்ஸ்……???)


“யாரு டி லகுட பாண்டியன்….? காலை யாடி தூக்கி போட்ட….? என் தலையில கடப்பா கல்லையே தூக்கி போட்டது போல இருந்துச்சு டி….” இளா கவுண்ட்டர் கொடுக்க…..

“இவன் , இவனோட ரூமிலேயே தூங்கி இருந்தா நான் ஏன் காலை போட போறேன்…?. என் கால்மாட்டுல தலைய வச்சி தூங்கிட்டு இருந்திருக்கான்.., அப்படியே லைட்டா டர்ன் ஆகும்போது லேசா உரசிடுச்சி..இது ஒரு குற்றமா..
( டேங்கர் லாரி. , பைக்கை உரசினது மாதிரியே சொல்றா பாரு) என்னோட பெட்லயே தூங்கிட்டு என்னையவே குறை சொல்லு ரான் . பாருங்க மாதா ஜி.”


கிருஷ் கேள்வியுடன் இளா வை பார்க்க…
( வேற என்ன கேட்பான்…? அவளை அஞ்சலி பாப்பா ரேன்ஜிக்கு பில்ட் அப் கொடுத்திட்டு… அவ பெட்டுல என்ன பண்ணிகிட்டு இருந்தடா பேட் பாய்ன்னு தான்….? ???)


இளாவோ… அய்யோ இவன்கிட்ட இப்படி மாட்டி விட்டுட்டாளே கிராதகி…….நான் என்னவோ இவளை அவளுக்கே தெரியாமல் ரேப் செஞ்சிட்ட மாதிரி பார்க்கிறானே என்று நினைத்தபடி மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போல நடிக்க ..
( டேய் இளா என்னது…ரேப்….பா?…..கிருஷ் பய அப்படியெல்லாம் நினைக்கவே இல்லையேடா…உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா…?.)
கிருஷ்,. வேதாவிற்கும் , ரோஜா விற்கும் இளா உடைய தடுமாற்றத்தை ஜாடை காட்டினான்.


“ரோஜா அந்த பங்கமான பஜ்ஜியில ஒன்னை வை….”
முறைத்தவளை அருகில் வா என்று சைகையில் அழைத்தவன்…. ஆராவிடம் இளா வை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேசி பாருடா… என கிசு கிசுத்தான்….
புன்னகைத்தவாறே சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவள் கண்ணசைவில் கூறினாள்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க…, வேதாவும், ரோஜாவும் சாப்பிட உட்கார்ந்தனர். அவர்களுடன் பேசியபடியே ஆரா பரிமாறிக் கொண்டிருந்தாள். இளாவும் , கிருஷும் இணைந்து கொண்டனர்.…. பேச்சு இந்த வார செல்ஃபி தீம் பற்றி திரும்பியது…
இந்த வாரம் ரெட்ரோ வாரம் என முடிவு செய்ய இந்த பேச்சில் கலந்து கொள்ளாத கிருஷ் .., கடுப்புடன் பார்த்து கொண்டு இருந்தான். அப்போது வேதா,


“ இங்க பாரு ஆரா , ரோஜாவுக்கு உதட்டை சுத்தி ஒரே பிக்மெண்டேஷன் ஆக இருக்கு.இதை முன்னாடி பார்லர் போய் சரி பண்ணுவோம். மத்ததை அப்புறம் பார்ப்போம் செல்ஃபி எடுக்கும்போது தனியா தெரியுது.”.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த கிருஷ்,

“எருமைய எவ்வளவு தான் சிங்காரிச் சாலும் எருமையா தான் இருக்கும்… ஏஞ்சலினா ஜோலி யா மாறாது…”
என்க அனைவரும் சேர்ந்து அவனை மொத்தி எடுத்தனர்.


“ஓகே வேதா டார்லிங். லட்டு க்கு திங்கள் கிழமை தான் காலேஜ் ஓபன். அதுவரைக்கும் எவ்வளோ டிரஸ் தைக்கணுமோ தச்சிக்கோ. அதோட இவ வாயையும் கொஞ்சம் தச்சு சன்டே அனுப்பி விடுங்க. எனக்கு இப்போ டைம் ஆயிடுச்சு. வேளச்சேரி பிராஞ்சில கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன். ஏய் ஆரா என் டார்லிங்கையும், என் தங்கச்சியை யும் தொல்லை பண்ணாமல் இரு,. “என்ற இளா கிளம்பினான்.
கிரிஷும், ஆராவை பார்த்துக்க சொல்லிவிட்டு கிளம்பினான். பெண்கள் மூவரும் அரட்டையில் அமர்ந்து விட்டனர்.
கொஞ்ச நேரம் கழித்து ரோஜா…,
“இளா அண்ணனுக்கு வயசாகிகிட்டே இருக்கு.. எப்ப கல்யாணம் பண்றது ஆரா…? “என கேட்க..


“நானும் பேசி பார்த்திட்டேன் அண்ணி. இளா தான் சீமா வை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டான்..”

“அட யாருடி இவ…? அந்த சீமை சிங்காரிய விட்டா வேற பொண்ணு இல்லையாடி….?”- வேதா.

“சரி அப்ப வேற பொண்ணை பார்க்கலாம் தான்… ஆனால் இளா எனக்கும் அவனுக்கும் இடையில் யாரும் வர கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான் மாதாஜி.”

“வேற யாரையும் விடக்கூடாதுன்னா … அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்கயென் லட்டு.” கொக்கி போட்டாள் ரோஜா.

நானா…? திரு திரு வென முழித்தவள். ,
“ எனக்கும் இளாவுக்கும் கல்யாணமா…… ? ஒரே காமெடியா இருக்கு… எனக்கு நினைச்சி பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது. போங்க…….அண்ணி.”


“ஆமாண்டி… சிரிப்பு தான் வரும். இன்னைக்கு நீ சிரி.., நாளைக்கு ஊரு சிரிக்கட்டும்… “குமட்டிலயே குத்தினார் வேதா.
( இவளுக்கு என்னைக்கு காதல் வர்றது…. நம்ம கதை என்னைக்கு முடியரது………????? அவளை அப்படியே ரைட்டில் வாங்கி லெஃப்ட் டில் நல்லா குத்துங்க வேதாஜி ,….,நீங்க ஒரு தொப்பியில்லா நேதாஜி)


ரோஜா, ஆராவின்அருகில் அமர்ந்து…,”இங்க பாரு லட்டு கல்யாணம் பண்றதுங்கறது செம்ம ஜாலியான விஷயம். தினம் தினம் சண்டை, ரொமான்ஸ், பாட்டு, புருஷனை கலாய்க்கிறது , வம்பு வளக்குறதுண்ணு ஒரே என்டெர்டெயின்மென்ட் தான். யோசித்து பாருடா. நீயும் உங்கண்ணிய போல ஹாப்பியா இருக்கலாம்.”
( அடிங் கொய்யாலே….அதான் கிருஷ், வெள்ளன்ன வேலைக்கு போயிட்டு அர்த்தராத்திரி யில வீடு திரும்புறான்னா…? ???? நல்லா வாழ்றடி ரோசா….. வயிறு(பர்சனல்லா )எரியுது டி எனக்கு.. சாரா…..கடமைன்னு வந்துட்டா சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை… மனச கல்லாக்கி கிட்டு மேல எழுதுகிறேன்..??)


“அதுக்கெல்லாம் எதுக்கு அண்ணி கல்யாணம் பண்ணிக்கணும். இப்பவே இளாவோட ஃபுல் என்ட்டெர்டெயின்மென்ட் தான்... “(,?ம்..ம்க்கும்… கிழிந்தது கிருஷ்ணகிரி…?)

சாரா.
Me too sara akka stomach burning??
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top