• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen Episode 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் - சாரா

அத்தியாயம் 7


வைத்தியநாதனின் ஃபோனை கட் செய்தபின் இளாவுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
குறுக்கும் நெடுக்கும்மாய் நடந்தவன்….,
ச்சை என்ன பொண்ணு இவ..? எவ்வளவு விரட்டினாலும் காலை சுத்தின பாம்பா விட மாட்டேங்கிராளே……… அந்த அங்கிளுக்காக அமைதியா இருக்கணும்னு நினைச்ச என்னையே என்னவெல்லாம் பேச வச்சிட்டா…?

அப்போது தான் அவன் சீமாவிடம் பேசியது ஞாபகத்திற்கு வந்தது..

அய்யய்யோ என்னவெல்லாம் பேசிட்டோம்….. கல்யாணம் …….., ஆரா…….., அழகா ஆறு பிள்ளைகள் ………….. அனைத்து வார்த்தைகளும் வட்டம் போட்டது மனதிற்குள்…..
அடப்பாவி ஏன்டா இளா இப்படியல்லாம் சவால் விட்ட….? அதுவும் லட்ட போய் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டியே டா… அவளை எப்படிடா இப்படி பார்க்க முடிஞ்சது உன்னால…..?
தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தவன்…. ஏன் இப்படி பேசினோம்… நேத்து வரைக்கும் நல்லா தான் இருந்தோம்.. நேத்து கிருஷ் கிட்ட பேசறவரைக்கும்…

எல்லாத்துக்கும் காரணம் அந்த கிழிஞ்ச வாயன் கிருஷ் தான்…. அவனை சும்மா விடாத போய் கிழி கிழி கிழின்னு கிழிச்சிரு …. இளாவை அவன் மனசாட்சி உசுப்பி விட்டது.(?)

“செல்லில் கிரிஷிர்க்கு அழைத்தான். டேய் மச்சான் ஃப்ரீ யாடா…? ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் டா..”


…??…….?……

“டேய் ரொம்ப பந்தா பண்ணாத… , நீ வந்தால் லஞ்சுக்கு, பான் ஏசியா போயி, பெக்கிங் டக் சாப்பிட்டுக்கிட்டே விஷயத்தை பேசிடலாமுன்னு பார்த்தேன்… சரி விடு .., முக்கியமான வேலை இருக்குன்னு வேற சொல்ற… ஒகே ட…….. “
அவன் பேசி முடிக்கும் முன்….,அந்த பக்கம்,

…………???……………..


“இல்லை பரவாயில்ல டா…. நான் ஈவ்னிங் பேசிக்கிறென். எனக்காக அவ்ளோ தூரம் வர வேண்டாம் மச்சான்..”

……………???….

“அப்போ சரியா ஒன் ஓ கிளாக், பான் ஏசியாவில் மீட் பண்ணலாம். லஞ்சிக்கு அப்புறம் எனக்கு வேளச்சேரி பிரான்ச்சில ஒர்க்கேர்ஸ் மீட்டிங் வேற இருக்கு சீக்கிரம் வந்துடு. “(வராத கிருஷ்……. வாத்து கறி திங்கவர்ற உன்னை கொத்து கறி பண்ண பார்க்கிறான்……?)
(வாத்துக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்..?,
வாத்துதான் இருக்கும்…
ஆனா இந்த பெக்கிங் வாத்தை உள்ள வச்சி வலைய போட்டா நம்ம கிருஷ் இருப்பான்.ஏன்னா அந்த சைனிஸ் டிஷ் மேல நம்ப கிருஷ்சுக்கு ஒரு கிரஷ்,…)

ஒரு வழியாக வந்த வேலை,வராத வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு , ஆமை வடைக்கு வேலை மேல வேலையா கொடுத்து அவளை உளுத்த வடையாக ஆக்கிவிட்டு,வாத்து கறி சாப்பிட, கிண்டியில் இருக்கும் பான் ஏசியா விர்க்கு கிளம்பினான் இளா.

மணி பனிரெண்டு ஐம்பது ,பான் ஏசியா வில் நுழையும் பொழுது.
ரெஸ்டாரண்ட் உள்ளே நுழையும் போதே ,


“என்னடா என்ன வர சொல்லிட்டு இவ்வளவு லேட் டா வர…? உனக்கு கொஞ்சம் கூட பங்சுவாளிட்டியே இல்லடா மாப்ள..” நம்ம கிருஷ்தான்.

“ஒரு மணிக்கு வர சொன்ன நானே பத்து நிமிஷம் முன்னாடி வந்திருக்கேன். சரி நீ எப்போ வந்த…? “

“ஜஸ்ட் உனக்கு இருபது நிமிஷம் முன்னாடி...”

“அட வெக்கங்கெட்டவனே….. ஒரு கர்ட்டேசிக்கு சாப்பிட வாடான்னா… இப்படியாடா அரைமணி நேரம் முன்னாடியே இருப்ப…”

“போடா… அங்க அந்த தாய் கிழவி என்னை தாளிச்சு விட்டதில கொஞ்சமா நாலு கரண்டி பொங்கல், அஞ்சு இட்லி, மூணு தோசை, பங்கமான பஜ்ஜில மூணு, பிச்சு பொட்ட சிக்கன் நாலே நாலு பீஸ் மட்டும்ன்னு சாப்பிட்டுட்டு அவசரமா கிளம்பிட்டேன் டா… அதான் பாப்பாவுக்கு சீக்கிரம் பசி வந்துட்டு…”

“ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லை…? அங்க காலை சாப்பாடு தீர்ந்துடுச்சின்னு சொல்லியும் கிளம்பாமல் …, ரோஸ் , வட்டி, சட்டிய முதல்கொண்டு கழுவி கவுத்ததுக்கு அப்புறம் ஏதாவது இருக்குதான்னு அண்டாகுள்ள எல்லாம் தலையை விட்டு பார்த்திட்டுதானடா வீட்ட விட்டுட்டு கிளம்பின..?”

“ஓ இப்படியெல்லாம் கண்ணு வைக்கிறியா…நீ…? சரி அதெல்லாம் விடு… என்னை எதுக்கு இப்ப நீ உடனே பார்க்கணும்னு அடம் பிடிச்ச…? நான் அழகுதான் அதுக்காக உன் முன்னாடியே இருக்க முடியுமா..? எனக்கும் வேலை இருக்குமில்ல..? உடனே பார்க்கணும்னு ஆசையா இருந்தால் செல்ஃபி எடுத்து அனுப்பி இருப்பேனே டா....”

“அடிங்க…. எல்லாம் உன்னால தான்…டா .. என் நிம்மதியே போய்டுச்சு. என் வாயும் ,மூளையும் நான்சிங்க்கா செயல்படுது. எனக்கு நீதான் ஏதோ சூனியம் வச்சிட்ட.. உன்னை நேர்ல பார்த்து குமுறினாதான் என் மனசுக்கு சந்தோஷம் கிடைக்குமுன்னு தான் உன்ன வர சொன்னேன்…”

“அடப்பாவி .., இப்ப தெரியுதா நான் ஏன் இன்னும் அம்பானி ஆகலைன்னு….? முன்னேறதுக்குகான முன்னூறு வழிகளில், முக்கியமான வழியில போய்ட்டு இருக்கும்போது பெக்கிங்க் டக், பேக் பண்ணாத குக்குன்னு ஆசைய மூட்டி என்ன வரவச்சு , பூசைய பொடலாமுன்னு பார்த்திருக்க….?வொய் யூ கூப்பிட்டு கும்மிங் டா…? மார்னிங் மை ஹோம் யூ கம்மிங் நா..?”

“டேய்..,குங்ஃபூ பாண்டா…. உன் இங்கிலீஷை நிப்பாட்டு இல்ல, வாழ ஆரம்பிக்காமலே நான் தற்கொலை பண்ணிகிட்டு வாழ்க்கைய முடிச்சுப்பேன்...”

“சரி பொழைச்சு போ. இங்கிலீஷ் தெரியலன்னு சொல்ல வேண்டியது தான…இரு டிரேன்ஸ்லேஷன் பண்றேன். காலையில கூட நல்லா சோறு போட்டு சந்தோஷமா தானே டா அனுப்பி வச்சேன். கூப்பிட்டு சோறு போட்டவனை கும்மற பழக்கம் நம்ம தமிழ்நாட்டிலேயே யாருக்கும் கிடையாதே… வொய் யூ டா…?”

இளா பல்லை கடித்தான் …., உதட்டை மடக்கி கோபத்தை கட்டுபடுத்த,

கிருஷ்.., “சரி…… , நண்பனை கும்மனும்னு நினச்சோமேன்கிரா துக்கம் உனக்கு தொண்டைய அடைக்கறதின்னு என்னால புரிஞ்சிக்க முடியுது .. இரு நானே கண்டு பிடிக்கிறேன்…..
ஒரு வேளை நான் ரோஜா கிட்ட காட்டுற முரட்டுத்தனத்தையும் போர்குணத்தையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகி எதாவது பொண்ணு கிட்ட சண்டை ய போட்டுட்டு, அந்த பொண்ணு உன்னை ஆடம் டீசிங் பண்ணிட்டாளா..?”

…………??? இளா காண்டாக

“யாருடா அவ சொல்லு…? மச்சான் நான் இருக்கேன்.. ஒரு அழகான பையன் ரோட்டில் போக முடியல…… “

இளா முறைத்தபடி, ஃபோனை கையில் எடுத்தான். ஆனால் கிருஷ் இன்னும் நிப்பாட்ட வில்லை…

“சொல்லுடா மச்சான்.. கூட்டமா போய் அவளை கையை பிடிச்சு இழுத்திடலாம்…..”அவன் சொல்லி கொண்டே போக…

“கூட்டமாகவா…..? யாரடா கூட்டிட்டு போறது…?” கேட்டது நம்ம இளா தான்.

“என் பொண்டாட்டி ய தான்… அவ ஒருத்தி வந்தாளே கூட்டமாதான் இருக்கும்.. வேணுமின்னா தாய் கிழவியவும் சேர்த்துக்கலாம் தான்………கையில கல்லு இல்லாமலே வீடுகட்டி ,வாசல் வச்சி ,கிரகப்ரவசமே பண்ணிடும். காலையிலே எப்படி சாம்பிள் கொடுத்துச்சு , பார்த்தீல..?..… ஒரு வேளை உன்னை கையை பிடிச்சு இழுத்தவ சூசைட் பண்ணிகிட்டா அப்புறம் போலீஸ் கேஸ் ஆயிடும்னு பார்த்தேன்.”
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
“இப்ப என்ன ஸ்னிகேர்ஸ் வேணுமா உனக்கு.…?..
பசி வந்தா நீ நீயாக இருக்க மாட்ட… லூசா மாறிடுவ தானே.”
கடுப்பிலும் கலாய்த்தான் இளா.


“இல்லடா பெக்கிங் டக் போதும். அப்புறம் மத்ததெல்லாம் சாப்பிடுறேன். முதல்லயே ஸ்வீட் சாப்பிட்டா அப்புறம் சரியா சாப்பாட்ட சாப்பிட முடியாதுன்னு எங்க மம்மி, கும்மி கும்மி சொல்லி ஃபயிங் டா.”

அதற்குள் சர்வர். “வெல்கம் டூ பான் ஏசியா,…யூவர் ஆர்டர் பிளீஸ்., வாட் டூ யூ வான்ட்…சார்?”

“இவன் வாயை ஒட்டுற மாதிரி எதாவது ஐட்டம் இருக்கா உங்க கிட்ட…?” – இளா.

சர்வர் சிரித்து கொண்டே ,

“நோ சார்.. அந்த மாதிரி டிஷ் எதுவும் நாங்க பன்றதில்லை சாரி சார்...“

கிருஷ் , இளாவை முறைத்து கொண்டே.., சர்வரிடம். , “அந்த மாதிரி டிஷ் என் பொண்டாட்டி பண்ணுவா எடுத்திட்டு வந்து தரட்டா…? “ கடுப்பாக கேட்டவன்…
“போங்க சார் போயி பெக் டக்கிங்கும்………”


“சார் அது பெக்கிங் டக் சார்…” சர்வர் திருத்த…..

“உங்க ஊரு தஞ்சாவூர் தான…?” சர்வரிடம் கிருஷ்.

“ஆமாம் சார் எப்படி கண்டுபுடிச்சீங்க…?”

“என் பொண்டாட்டி ஊரும் அதுதான்.உங்க ஊர்காரங்க டிஷ் பேர தப்பா சொன்னா…,அப்படியே பொங்கிடுவீங்களோ…,. ? பேர தப்பா சொன்னா என்னையா …? அதான் நான் சொன்ன டிஷ் உனக்கு புறியுதில்ல… போயி அந்த பெக் டக்கிங்கும்,
(அப்படி தான் சொல்லுவேன் என்று பார்த்தபடி ?) டூ பிளேட் பான் கேக் ,ஸ்வீட் பீன் சாஸ்ஸும் எடுத்திட்டு வாங்க..”


சர்வர் போனதும்.

இளா , அவன் ஃபோனை கிருஷிடம் கொடுத்தான்.
“இந்தா டா பேசு…”


“யாருகிட்ட டா…?”

“ யாரோ ..தஞ்சாவூர் காரங்க லைன்ல இருக்காங்க பேசு…”

“அடப்பாவி ரோஜா வாடா….? அவளுக்கு எப்படா ஃபோன் பண்ணின…?”

“நீ கூட்டமா போயி ஏதோ ஒரு பொண்ணை கைய பிடிச்சு இழுக்கலாம்னு பிளான் போட்டியே.., அப்பவே பண்ணிட்டேன்…”

“போடா இவனே.., உன் தொங்காச்சி கிட்ட விசுவாசத்தை காட்ட இதுவாடா நேரம்….? அய்யோ நான் வேற வாய்ய ,வாட்டர் வாஷ் பண்ற அளவுக்கு அவளை கலாய்ச்சிட் டேனே …”

போனை வாங்கியவன்..,

“சொல்லுடா பேபிம்மா….”

….??....?????…..

“அய்யோ , உன்னை குண்டா இருக்கேன்னு சொல்லலடா… கும்முன்னு இருக்கேன்னு சொன்னேன்…”

…?????…..

“அவரு பார்க்க நல்லவரா தெரிஞ்சாரு… சரி டிஷ் பெரு வேற கரெக்ட் ஆ சொன்னதும் உங்க ஊரு காரர்னு கண்டுபிடிச்சி ட்டேன் டார்லிங்…”
…….


?????………..

“அய்யோ உன் சாப்பாட்டை மட்டும்தான் நான் வாயை மூடிக் கிட்டு சாப்பிடுவெண்ணு சொல்ல வந்தேன் டா பேபி…”

……?????……

“சரி சும்மா கிண்டல் பண்ணினேன் டா..என் குட்டிம்மா. …லவ் யூ டா..????.. சரி மாமா சொன்ன வேலை என்னாச்சு ஆரா கிட்ட பேசினியா…?”
லவுட் ஸ்பீக்கர்ரை ஆன் செய்தான்…


“இளா அண்ணனை பத்தி ஆரா கிட்ட பேசி, இன்னைக்கு உன் வீட்டுல இழவு விழுந்திருக்கும் டா கிருஷ்.” – ரோஜா.

“ஏண்டி என்னாச்சு…? ஆரா தப்பா புரிஞ்சுசிட்டு , ஏதாவது டிரை பண்ணிட்டாளா டி…?”

“அட நீ வேற டா…
அவ சரியா.., தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு .., மாத்தி மாத்தி பேசி எனக்கு பிப்பீ வர வச்சிட்டா… கடைசியில மீ தான் என்னை அவ கிட்டயிருந்து மீட்டாங்க…”.


“நீ இளா கூட அவளுக்கு கல்யாணம் பண்றதை பத்தி அவ கிட்ட கேட்டியா…?”

“ம் …ம்.. கேட்டனே…. அவளுக்கு சிரிப்பு சிரிப்பா வருதுன்னு கடுப்பெத்துற மாதிரி காமெடி பண்றா கிருஷ்..”

“சரி கடைசியாக என்னதான் சொன்னா…?”

“சிங்கப்பூர் ல ஆடிக்கான்னு ஒரு நைட் கிளப் இருக்குதாம்… அங்க எல்லோரும் சேர்ந்து போயி கும்மாளம் போடுவோம்னு சொன்னா… டிரெஸ்ஸை எல்லாம் பேக் பண்ணிடட்டா…?”

“……அடிங்க.....?.”

“எங்க அண்ணா கிட்ட இதை பத்தி பேசிட்டீங்களா..? அவரு என்ன சொன்னாரு…?”

“உன் அண்ணன் பக்கத்தில தான் இருக்கான். இதை பத்தி பேசதான் பான் ஏசியாவிர்க்கு அவனை வர சொன்னேன்..(.?????அட புழுகு மூட்டை ).. பேசிட்டு கூப்பிடிரென் டி பை…”

“போனை கட் செய்து விட்டு ,இளா விடம் எப்படியோ அவளை சமாளிசிட்டேன்… ஏண்டா உனக்கு இந்த கொலவெறி…?”

“நீ வாயை மூட மாட்டேனுட்ட..? அதோட ரொம்ப சந்தோஷமா வேற என்னை நீ கலாய்ச்சியா..? அதான் உன்ன தட்டி கேக்க ஒருத்தி இருக்கிரான்னு , அந்த ஒருத்திக்கு ,ஃபோனை தட்டினேன்… சரி ஆரா கிட்ட எதுக்குடா பேச சொன்ன…? பாவம் டா அவ…”

“என்னது ஆரா பாவமா…? பார்த்தீல்ல என் வீட்டு கட்டம்மா கதறுனதை…? உங்க ரெண்டு பேருக்கும் பாவம் பார்த்தா… நீ போடுற குண்டுக்கு , நான் எப்ப என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது….”

“அதுக்கு எதுக்கு டா இப்படி ஒரு முடிவு..?”

“சரி ஆரா வை பத்தி அப்புறம் பேசலாம்… முன்னாடி நீ எதுக்கு என்னை பார்க்கணும்னு சொன்ன…? “

“எல்லாம் சிலுக்கு பண்ணின வேலை டா… ஆஃபீஸ்க்கே வந்துட்டா டா…”

“என்னடா சொன்னா அந்த ராங்கி…? அவளை…?”

“அவ எப்போதும் போலதான் உலருனா… ஆனா நான்தான் அவகிட்ட எக்ஸ்டிராவா உலறிட்டேன் டா…”

“அப்படி என்னதான் டா சொன்ன…? “

ஆர்வத்துடன் கேட்டவன்.. ஆரா, கல்யாணம், அன்னியோன்யம், அழகா ஆறு பிள்ளைகள் சவாலை கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான்…

“இப்ப எதுக்குடா சிரிக்கிற..?? பயம்மா இருக்குடா..?” இளா.

“நான் கூட உன்னை என்னமோ நெனச்சிட்டேன்… கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணினா , நீ புள்ள பெக்க பிளான் பண்ணியருக்க….அதுவும் ரொம்ப அட்வான்ஸ் ஸா ஆறு பிள்ளைகள்… ஃபேமிலி பிளானிங்கிரது இதுதானா..? அடேய் அயிட்டக்காரா…?”

“டேய் , நானே யோசிக்காமல் தப்பு தப்பா கோபத்தில் பேசிட்டோமென்னு ஃபீல் பண்றேன் நீ வேற.. போடா…”

“கோபத்தில் அடிச்சி ,திட்டி தானடா பார்த்திருக்கேன்… குழந்தை குழந்தைன்னு அவளுக்கு ஆறு குழந்தைய கொடுக்க டிரை பண்ணியிருக்க டா நீ காமக்கொடுரா…”

“போடா…. நான் கிளம்புறேன்…. எனக்கு மீட்டிங் இருக்கு… “

“இருடி … மாப்ள…இன்னும் அதுக்கு ஒரு மணி நேரம் இருக்கு…நீ பதில் சொல்லிட்டு தான் இங்கயிருந்து போகணும்…”

அதற்குள் ஆர்டர் செய்த உணவுகள் வந்து விட…

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்… இளா மூஞ்சை உர்றேன்று வைத்திருந்தான்…

அதை பார்த்த கிரிஷிற்கு புரிந்தது… இளா ரொம்ப குற்ற உணர்ச்சியில் இருக்கிறான். ஆராவை பற்றி உள்ளுக்குள் இருந்த காதல் தான் அவனை அப்படி சீமாவிடம் சவால் விட வைத்திருக்கிறது , அதை அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டும்..என்று நினைத்தபடி…

“டேய் மாப்ள, உனக்கு ஆரா மேல உள்ளுக்குள்ள காதல் டா..
அதுதான் உன்னை சீமாகிட்ட அப்படி பேச வச்சிருக்கு… எங்க எல்லாருக்கும் தெரியும் ,நீங்க ரொம்ப அழகான ஜோடின்னு.. ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ,இன்னொருத்தர் பிறந்திருக்கீங்க டா… உன் நிம்மதி அவ கிட்ட தான் இருக்கு… அவளோட சந்தோஷம் உன்கிட்ட மட்டும் தான் இருக்கு.. இதை கூடிய சீக்கிரம் முழுசா ரெண்டு பேரும் உணருவீங்க…இப்போ அமைதியா சாப்பிடுடா இளா……….”


இளா விற்கும் பிடித்திருந்ததோ… அமைதியாக உண்டவனின் மனதிற்குள்ளும் பேரமைதி…..


சாரா..
 




Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
கிருஷ் மாதிரி ஒரு நண்பன் இருந்தால் கலக்கல் தான் மச்சி சிாித்து சிாித்து அப்பா முடியவில்லை அருமையான பதிவு சாரா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top