• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
- சாரா


அத்தியாயம் 9

இளா,ஆராதனா உடலிலிருந்து பரவிய ஜூவாலை , கடற்கரையிலிருந்து, கடல் நீரிலும் பரவியது…. தூரத்தில் ஒரு கப்பல் , அதை நோக்கி தீ வேகமாக பரவ……. கப்பலில் இருந்து அபாய ஒலி , ஒலிக்கிறதோ…..?

பாம்…,…………பாம்…………..பாம்…………..

விருக்கென்று ,கண்ணைத் திறந்தான் இளமாறன்….
அவன் காரைத் தாண்டி மற்றொரு கார் அதிவேமாக ஹாரன் ஒலியுடன் சென்று கொண்டிருந்தது……………

நல்லவேளை இந்த கார் நம்ம கனவை கலைச்சது….இல்லன்னா……அய்யோ நம்ம காதல்த்தீ யில கடலே எரிஞ்சிடுச்சே இளா….? ( அது காதல் தீ யில்ல அப்பு……., காமத்தீ ?)
அவனுகுள்ளாகவே கேள்வி கேட்டு கொண்டவன், ஏசி யிலும் வேர்த்திருந்த முகத்தை டிஷ்யூவால் துடைத்து கொண்டான்….டேய் இளா…, காதல் உனக்கு ஸ்டீம் பாத் கொடுத்திடுச்சா….? என்றபடி சீ ட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…..

உடலெங்கும் இனம் புரியாத அவஸ்தை… உடலுக்கு உள்ளிருந்து யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது…….. வைரமுத்து சார் இப்படி புழுகிட்டீங்களே…?, அடிவயிற்றில் பந்து உருளல …, பாறாங்கல்லே உருளுது சார்….…. வைரமுத்து விடம் நியாயம் கேட்டவனுக்கு , இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே ….என்று யோசித்தவன்….,

வேதாவிற்கு அழைத்தான்..
“இப்ப தானடா பேசிட்டு வச்ச…..?” வேதா குரலில் ஆச்சர்யம்.

“ஆமா டார்லிங்… உன் கூட போட்டி போட ஆளு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்…” - இளா.

“அடேய் , அதுக்குள்ள எப்படிடா….? ஆரா தான…?”

“எப்படி டாலி…? அதான் என் வேதா ஜி ,ஐ லவ் யூ செல்லகுட்டி”

“ம்க்கும்….. கையிலேயே இருக்குதாம் கொழுக்கட்டை, அதை தேடிக்கிட்டு போகணுமாக்கும் பட்டுக்கோட்டை… ….. “

“கொழுக்கட்டை பஞ்ச் ..,விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆஹ் டாலி….”

“ஆமாண்டா…, துப்புகெட்ட துடப்பகட்டை….. இப்ப என்னத்துக்கு எனக்கு ஃபோன் பண்ணின….?”

“எனக்கும் லவ் வந்திட்டுன்னு யார்கிட்ட சொல்றது…? அதான் உன் கிட்ட சொல்லனும்னு பண்ணினேன் டாலி…. ஐ லவ் யூ டாலி… எனக்குள்ள பொங்கிர காதல் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியல டாலி”

“புதுசா ஆறு உருவான அப்படி தான் பாதை தெரியாமல் வெள்ளம் பாயும். நான் வேணும்னா பென்னி குவிக்க்கு ஈமெயில் அனுப்பி பார்க்கவா.. வந்து பெரியாற விட பெரிய டாம்மா கட்டுவாரு. பெரிசா காதல் சொல்ல வந்துட்டான்…..ஆராகிட்ட சொல்லாமல் என் கிட்ட எதுக்குடா சொல்ற….?”(அதானே செக்கு மாட்டுக்கு வடக்கு எது தெற்கு எதுன்னு தெரியாதாம்…. அதுபோல இல்ல இருக்கு….?)

“எனக்கு தெரியாது , அந்த கிக்கை க்விக்கா அனுப்பு டாலி… நான் ஐ லவ் யூ உன்னையும் தான்…. ….”
வம்பு வளர்த்து கொண்டிருந்தான்....

“போடா போக்கிரி.., சரி உடனே கிளம்பி வீட்டுக்கு வா..அந்தத் தடியன் காலையிலேயே , பாங்கோ வா பஜ்ஜிஜின்னு ஜொள்ளு உட்டுகிட்டே சாப்பிட்டான்..அதான் அவனுக்காக, வாழைக்காய் பஜ்ஜி போடலாமுண்ணு இருக்கேன்..சட்டினி எல்லாம் அரைச்சு ரெடி ஆக இருக்கு. இனிப்பு செய்தி சொன்ன சக்கரை கட்டிக்கு, பால்கோவா செஞ்சு வைக்கிறேன் சீக்கிரம் வாடா…”

“இனிப்புன்னா கிச்சனை விட்டு நகராமல் உட்கார்ந்திருப்பாளே லட்டு…, அவகிட்ட செஞ்சு கொடு டாலி…”

“காலையில நீங்க ரெண்டு பேரும் ,போன உடனே குலாப் ஜாமூன் செஞ்சா.., ரோ.., செஞ்சு முடிச்சதிலேயிருந்து , பாகுல ஜாமூன் ஊறிடுச்சான்னு பார்க்குறேன்னு, பாதிய காலி பண்ணிடுச்சு லட்டு… ஜாமுனை ஊற விடல, உள்ள லட்டு தான் ஊறிகிட்டு இருக்கு.”

“அடடா… ஒரு குலாப் ஜாமுனே ,ஜாமுன் சாப்பிடுகிறதே……!ஆச்சரியக்குறி…. “

“இப்ப அங்க நான் வந்தேன்னா………உன் நெஞ்சிலெயே ஏறி ஒரு மிதி………..சரி.. உடனே கிளம்பி வர்ற…”

“ நீ மிதிச்சா தாங்க மாட்டேன்..
நாலு மாசம் தூங்க மாட்டேன்…” என்று இளா பாட..,

“அப்பா சாமி.., ஆளை விடுடா…உன் காலில வேணும்னா விழரேன்…” வேதா கதறினார்….

“காலுல விழறியா அதெல்லாம் , மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம் டார்லிங்….”


“வேணாண்டா நான் அழுதுடுவென்… உனக்கு பால்கோவா வேணுமா வேணாமா….? இப்படியே என்னை கடுப்பாக்குன…, அப்புறம் சுகர் இருக்குன்னு கூட பார்க்காமல் மொத்ததையும் சுவாகா பண்ணிடுவேன்…..”

“நான் கண்டிப்பா வர்றேன்… என்னை நேர்ல பார்க்கணும்னு சொன்னா உடனே ஓடி வருவேன் டாலி …இப்ப எதுக்கு பால்கோவாவ காரணம் காட்டி கூப்பிடற..? ஐ லவ் யூ டார்லிங்…”

“அய்யோ பைத்தியமாயிட்டியாடா பாவி…! உன் லவ் எல்லாத்தையும் வந்து ஆரா கிட்ட காட்டு.. நான் இப்போ ஃபோனை வைக்கிறேன்.. “ சிரித்து கொண்டே ஃபோனை வைத்தார் வேதா.

“ரோ இங்க வாடா.. பால்கோவா செய்யணும்.. பாலை அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க வை..” ரோஜா வை உதவிக்கு அழைத்தார்.

ரோஜா அதற்கு , “என்ன மீ.. காலையிலதான ஸ்வீட் செஞ்சோம்.. மறுபடியும் ஸ்வீட்…?”

“உன் அண்ணன் நல்ல செய்தி சொல்லியிருக்கான் ரோ . அதுக்கு தான். இப்பதான் ஆரா மேல காதல் இருக்கிறது பயலுக்கு தெரிஞ்சிருக்கு.. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் நல்ல காரியம் நடக்க ஆரம்பிச்சிருக்குடா அவனுக்கும் ஆராக்கும்.அதுவும் அவங்க பெத்தவங்க செத்து இத்தனை வருஷத்திற்கு அப்புறம்……
அதான் ஸ்வீட் செஞ்சே ஆகணும் எனக்கு இப்போ..”

“இளா அண்ணா, ஆராவோட அப்பா,அம்மா இப்ப உயிரோட இல்லைன்னு தெரியும் எப்போ இறந்தாங்க மீ….?”

“ கிட்டதட்ட பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும் அவங்க எல்லாம் தவறி….....”

“அவங்க நாலு பேருமே ஒரே டைம் ல செத்துட்டாங்களா மீ…”

“இல்ல ரோ…உனக்கு அவங்களை பத்தி தெரியாது தானே … இரு சொல்றேன்.. முதல்ல இருந்து சொன்னாதான் தெரியும்... அப்படியே பால் சுண்ட ஆரம்பிச்சதும் கை விடாமல் கிண்டனும்…”
பால்கோவா வுடன் சேர்த்து இளா, ஆராவின் ஃபிளாஷ் பேக்கையும் கிண்டினார் வேதா...

“இளாவுடய அப்பா சுகுமாறன், ரொம்ப வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவன் அம்மா இளவரசியும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்கதான். இளவரசியின் பெரியப்பா மகன் தான் ராமச்சந்திரன் அண்ணன். ராமு அண்ணன் ,சுகுமாரன் அண்ணன், என் அண்ணன் வைத்தியநாதன் மூணு பேரும் ரொம்ப நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ..…..”

“ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சு சுகுமாறன் அண்ணனும் , ராமச்சந்திரன் அண்ணனும் நடத்த என் அண்ணன் லீகல் அட்வைசெரா இருந்தாரு. திருச்சியில் ஆரம்பிச்ச ஆசிர்வாத்தோட கிளையை பார்த்துக்க ராமு அண்ணன் போனாரு. போன எடத்துல …,பெரிய குடும்பத்து பொண்ணான பொற்கொடிய காதலிச்சாரு … பொற்கொடியொட அப்பா ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். “

“இவங்க காதலுக்கு சிவப்பு கொடி காட்டிட்டாரு. அப்புறெமேன்ன….,பொற்கொடிய மலைக்கோட்டையில வச்சி மாலை மாத்திகிட்டாரு ராமு அண்ணன்… இது தெரிந்த அவ அப்பா, அம்மா , அண்ணன் தம்பி எல்லாம் இவளுக்கும் நமக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு தலை முழுகிட்டாங்க. அப்புறம் பொற்கொடியும் , ராமு அண்ணாவும் சென்னைக்கே வந்துட்டாங்க. அப்ப இளாவுக்கு ரெண்டு வயசு இருக்கும்.. கிருஷுக்கு எட்டு மாசம் இளமை அவன்.”
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
“ராமு அண்ணாவும் மாறன் அண்ணனும் சேர்ந்து அப்பதான் ஆசீர்வாத் பவன் கட்டி குடி போனாங்க… இளவரசி குடும்பத்தில் அவங்க பெத்தவங்களுக்கு அப்புறம். பெரிய சொந்த பந்தம் இல்லை.. ஆனா சுகுமாறன் அண்ணனுக்கு சுகந்தின்னு ஒரு தங்கச்சி இருந்தாள். அவளை ராமு அண்ணனுக்கு எப்படியாவது கட்டி வச்சிடனும்னு நினைச்சிட்டு இருந்தாங்க அவங்க அம்மா ,ஆண்டாள் அம்மா… ஆனா ராமு அண்ணனின் கல்யாணம் அவங்களுக்கு பெரிய இடியா விழுந்துடிச்சி..”

“சுகந்திக்கு வேற இடத்தில கல்யாணம் ஆகியும்
அந்த கோபத்தை இளவரசி மேலயும், பொற்கொடி மேலயும் காட்டிட்டு இருந்தது அந்த அம்மா. இதைப் பார்த்த சுகுமாறன் அண்ணா கேள்வி கேட்கவும், அவர்கிட்ட சண்டை போட்டுட்டு சுகந்திவுடைய வீட்டுக்கு போயிட்டாங்க..”

“அடுத்த கொஞ்ச வருஷத்துல ஆராதனா பிறந்தாள்.
ரெண்டு குழந்தைகளும் அந்த வீட்டுல இளவரசன், இளவரசி யா வளர்ந்தாங்க... ஊரே கண்ணு படறது போல இருந்தது அவங்க நட்பு. சுகுமாறன். அண்ணா வுக்கு கல்யாண நாள் வந்தது…, இளா க்கும் , கிருஷுக்கும் அன்னைக்கு பரீட்சை. இளா வை என்கிட்ட விட்டுட்டு, விருத்தாச்சலத்தில் இருக்கிற குல தெய்வக் கோயிலுக்கு போனாங்க… “

“ம்.. க்கும்” தொண்டையை செருமிக்கொண்டு வேதா மேலே தொடர்ந்தார்.
“மதியம் இளாவுக்கு பரீட்சை முடியறது க்கு முன்னாடியே, அங்க மூணு பேரோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சி…ஆரா வையும், பொற்கோடியையும் மட்டும் அரை உசிரா மீட்க முடிஞ்சது. உசிர கையில பிடிச்சு கிட்டு ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தாங்க அம்மாவும் மகளும்…அப்ப என் அண்ணன் பொற்கொடி குடும்பத்துக்கு தகவல் சொல்லி விட்டாரு..”

“ஆனா பொற்கொடின்னு யாரையும் தெரியாதுன்னு பழைய கோபத்தில் அவ அப்பா கதவை பூட்டிட்டாரு … ஆராவுக்கு ஓரளவு உடம்பு தேற தேற , பொற்கொடிக்கு ரொம்ப மோசமாகிகிட்டே வந்தது..”

“என் அண்ணனை கூப்பிட்டு இளா வை பார்க்கணும்னு வரவழைச்சாங்க….அவங்க பேருல இருந்த எல்லா சொத்தையும் இளா பேருக்கு எழுதினாங்க. ஆரா பேர்ல இருக்கட்டும் என்று எவ்வளவோ பேசிபார்த்தோம். “

“என் பொண்ணெயே மருமகங்கிட்டா ஒப்பைடைக்கிறேன்.., சொத்து கொடுத்தா தப்பான்னு கேட்டு எங்க வாயை அடைச்சிட்டாங்க. இளாக்கு பொற்கொடின்னா உசுரு.. அவளாவது இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தான் புள்ளை..”

“இளா வை கூப்பிட்டு, பொற்கொடி சந்தோஷமா பேசினா….. கடைசியாக அவ பேசின வார்த்தை இன்னும் எனக்கு அப்படியே நினைவில் இருக்கு.”

“அத்தை கிட்ட , என்ன ஏன் கல்யாணம் பண்ணிக்க லைன்னு கேட்டியே டா தங்கம்…உனக்கு அத்தைய அவ்வளோ பிடிக்குமா இளா. எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டா கண்ணா. ஆனா உன்னை ஆளாக்கி பார்க்க எனக்கு கொடுத்து வைக்கல டா..அத்தையால உன் கூட இனிமே இருக்க முடியாது… ஆனா என் உயிர்க்கு உயிரான ஆரா வை உன்கிட்ட விட்டுட்டு போறேன் டா…ரெண்டு பேரும் சந்தோஷமா நீடூழி வாழனும் …அத்தை உன்னை விட்டு எங்கேயும் போகல பார்த்துகிட்டே , உன் கூடவே தான் இருப்பேன் …”
“அப்படின்னு சொல்லிட்டு இங்க வாடான்னு இளாவை கூப்பிட்டு அவனோட நெத்தியில் முத்தம் கொடுத்தவதான்… மகாராசி அவ ஜீவனை அந்த புள்ளைக்கிட்டயே விட்டுட்டு போயிட்டா...”

“இருந்தாலும் இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது ரோ. உலகம் தெரியாத புள்ளை…, பெரிய பங்களா, கோடி கணக்கில் சொத்து எல்லாம் இருந்தும் அனாதையாக நின்னான். பத்து வயசு கொள்ளி போடுற வயசா…? அடுத்தடுத்து நாலு பேருக்கு கொள்ளி வச்சான். எல்லாத்தையும் இழந்துட்டு நிர்கதியா எங்க இளா இப்படி இந்த மடியிலே தான் சுருண்டு கிடந்தான் ……………” துக்கம் தாங்காமல் வேதா வெடித்து அழ,

ரோஜா “விடுங்க மீ… இன்னொரு நாள் பேசிக்கலாம்.. நடந்த எதையும் நம்மால மாற்ற முடியாது மீ…” என்றுஎன்று தேற்றினாள்.. ஆனாலும் மனது ஆறாத வேதா மீண்டும் தொடர்ந்தார்…

“சொந்தம் பந்தமின்னு பல பேரு வந்தாங்க போனாங்க…..காரியம் முடிச்சதும் பார்த்தா ஒரு ஈ காக்கா கூட மிச்சமில்லை.. அதுக்கப்பறம் எல்லாரும் ஆரா பொழைச்சி வரணும்னு தவமா தவம் இருந்தோம்… அவ பிழைச்சா ஆனா ..,கண்ணுல ஜீவனை தேக்கிகிட்டு உசிரோட்டமே இல்லாமல் இருந்தாள்.. டாக்டருங்க , அவ கண்ணு முன்னாடி ரத்த வெள்ளத்தில் மிதந்த பெத்தவங்களை பார்த்து மூளை ஸ்தம்பித்து போயிட்டுதுன்னு சொல்லிட்டாங்க. “

“அன்னைக்கு பக்குவ பட்டவந்தான் இளமாறன்.. ஆரா வை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்க ஆரம்பிச்சான். என்னதான் நெஞ்சு நிறைய பாசம் இருந்தாலும் நாங்க வெற்றாள் தானே…? பகலில் கூட இருக்க முடிந்தது ஆனா ராத் தங்க முடியல.. சொத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டிகிட்டோம்ன்ற பழி சொல் வந்துட கூடாதுன்னு ஒரு சுய நலம் தான்…”

“அந்த ஆண்டாள் அம்மா , வேண்டா வெறுப்பா , அப்பப்ப வரும் போகும், வீட்டு வேலைக்கு இருந்த வடிவு அம்மா, சின்னசாமி அய்யான்னு எல்லாரும் சேர்ந்து புள்ளைக்கு துணையா நின்னோம்..”

“ராத்திரி எல்லாம் என் பொண்ணு அம்மா அம்மான்னு அழுவும் , இளா தான் ராத்திரி கண்ணு முழிச்சு அவளை சமாதானம் பண்ணி தூங்க வைப்பான். ராத்திரியும் தூங்காமல் காலையில பள்ளிக்கூடமும் போவான். சீக்கிரமா உன் புருஷனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு , போய் பகலில் லட்ட பார்த்துப்பேன்.ஆரா க்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்ஆரம்பிச்சது.”

“ அவ உலகமே இள மாறன் தான்.அவன் கூட தான் தூங்குவா, சாப்பிடுவா எல்லாத்துக்கும் இளா தான்.. இளாப்பான்னு கூப்பிட்டா அவளுக்கு ஏதோ கஷ்டம்ன்னு அர்த்தம். படிக்கிறதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு தான் பள்ளி கூடம் போக ஆரம்பிச்சா. அதான் அவ இப்பதான் இருபத்தி இரண்டு வயசுல காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறா.”

“ அவ பெரிய பொண்ணு ஆகிறது போல இருக்கவும், வீட்டில் பொம்பளை துணை வேணும்னு எங்கண்ணன் மூலமா பேசி,ஆண்டாள் அம்மாவ வர வழைச்சோம்.. இளா அப்ப காலேஜ் போயிட்டு இருந்தான்.”

“ஆண்டாள் அம்மா இளா வீட்டுல இல்லாதபோது எல்லாம் நம்ம ஆரவ கொடுமை படுத்திட்டு இருந்திருக்கு. அவ தன் பேரனை கைக்குள்ள போட்டுகிட்டான்னு ..,அவளை எந்நேரமும் கரிச்சி கொட்டிட்டு இருக்கும். அந்த வீட்டுக்கு உரிமையுள்ளவங்க அந்த அம்மா , அதனால் எங்களாலயும், ஒண்ணும் கேட்க முடியல.”


“இதுல என்ன ஒரு கொடுமைன்னா, அந்த அம்மாவுக்கு இவள பிடிக்காதது கூட தெரியாம பாட்டி, பாட்டின்னு ,அது காலையே சுத்தி வரும் நம்ம லட்டு..”

“ஆனா தெறியலன்னு கூட சொல்ல முடியாது.., ஆரா வுக்கு வீடு முழுக்க சொந்த பந்தம் இருக்கணும்னு ஆசை.. அஞ்சு வயசுல இழந்ததை இன்னும் தேடிக்கிட்டு இருக்கா போல… உன் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அடிக்கடி ரெண்டு பேரும் இங்கேயே தங்கிடுவாங்க. அவங்க சம்மர் லீவ் பூரா இங்க தான் இருப்பாங்க..உன் மாமாவுக்கும் இவங்கன்னா உசுரு.”

“அதான் கிருஷ் ரொம்ப உயிரா இருக்காரு போல மீ…சின்ன வயசுலயிருந்து ப்ரெண்ட்ஸ் வேற..”,ரோஜா கூற…,

“அட நீ வேற மா, சின்ன வயசுலேயிருந்து இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தன ஒருத்தனுக்கு புடிக்காது…இதுக்கு இடையில மகராசி அந்த சீமா சிங்காரி வேற ரெண்டு பக்கமும் கொள் மூட்டி விட்டுடுவா… ரெண்டு பேருக்கும் பொதுவான பிடிச்ச விஷயம் ஆரா. “

“இதுல அவங்க அப்பா அம்மா போனதுல இருந்து ஆரா பொழைச்சி வர வரை நான் இளா கூடவே இருந்ததை பார்த்ததும், கிருஷ்க்கு பொறாமை வேற..அவனும் சின்ன புள்ளை தான …? உங்க மாமாதான் அவனுக்கு துணையா இருந்தார்.அப்புறம் நைட் தூங்குறப்ப சமாதானம் பண்ணி தூங்க வைப்பேன்..”

“அப்புறம் எப்பதான் சேர்ந்தான்க மீ……?” ஒருத்தர் மனச இன்னொருத்தர் பேசாமலே புரிஞ்சுக்குற இந்த நட்பு எப்படி சேர்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரோஜாவுக்கு ……

சாரா....
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
வேதா அம்மாவை எனக்கு மிகவும் பிடித்தது அருமையாக நகர்கிறது கதை நகைச்சுவை உணர்வுடன் கலந்து இருக்கிறது
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Wow nice ud
இளா ,பாறாங்கல் உருளுதா?
இதில்,வைரமுத்துகிட்ட டவுட் வேற
ஹா..ஹா..
இளவரசி,சுகுமாறன் மகன் இளமாறன்
சூப்பர் .
Flash back அருமை
கோதண்டம் கம்மியாக வந்தார்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb epi sisபென்னி குக் கூப்பிடனுமா dam கட்ட (y):love::love:;) serious ana flash back koota light a solliteenga super.(y)(y)கொளுக்கட்டை, pattukottai rhyming asathal vedhaji
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top