• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Kannalai vilungum irumbu ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
கனலை விழுங்கும் இரும்பு-காதம்பரி

தலைப்புக்காக கதையா? கதைக்காக தலைப்பா?..ஒரு சில கதைகள் தான் தலைப்போடவே இரண்டறகலந்து விடும்..அத்தகைய அற்புதமான கதை.. அழகான கதை , காதல் கதை, அந்த காதலும் மிக அழகு... தெளிந்த நீரோடையாக கதைகளம்.

சி.ஐ.டி ஆஃபிஸரான சயானா , அவள் சக ஊழியரான உன்னத தோழி ரேவ், இவங்களோடு மூத்த ஊழியர் கனகா மேடம், முன்பு ஒரு கேஸ் வருது. வரியேப்பு செய்ய துணிந்த முக்கிய புள்ளிகளின் வங்கி கணக்கிலிருந்து அணை கட்டி வைத்திருக்கும் கருப்பு பணமானது, அணையினை உடைத்துக்கொண்டு நதியாக பணம் அடித்து சென்று வரித்துறையென்ற கடலை போய் சேர்கிறது. இந்த அணையினை உடைத்த ஹாக்கர் யார்? என்ற கேள்விகளோடு தொடங்கும் கதை. தன்னை போல் ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் அந்த ஹாக்கர் மீது சயானாவிற்கு ஏன் என்று தெரியாத ஒரு கரிசனம் கசிகிறது..ஏனோ அவனை தவறாக எண்ண மனம் விரும்பவில்லை.. இந்நிலையில் சயானா தாயின் இறுதி ஆசையாக அவர் பார்த்த மாப்பிள்ளையுடன் பேசி பார்போம் என ரேவின் விருப்பத்தின் படி‌ தொடர்பு கொள்கிறாள் மனோகரை...மனோகரின் மனோகரமான பேச்சு ரசிக்க வைத்தாலும்..கண்ணிரண்டும் அணைத்துக்கொள்ளும் வேளையில் வேலையில்லாமல் வருகிறது ஹாக்கரின் நினைவுகள்..கானல் என்று எண்ணிய அவளின் ஹாக்கர் கனலாகவே அறிமுகமாகிறான்... தொடர் ஆராய்வின் பலனாக சக்திவேல் சன் ஆஃப் கனலினி பற்றி தகவல் கிடைக்கிறது..யாரிந்த சக்திவேல்? சயானாவின் சாயமற்ற வெள்ளை சட்டைக்கு சாயம் பூசுவானா? அல்லது சாய்ந்து போவானா? மனோகரின் மனம் கவர்ந்தவள் மனதில் மனோகரமான காதல் இசைக்குமா?
இதனிடையே முக்கிய புள்ளிகள் சேர்ந்திட்ட வரி ஏய்ப்பு கோலம் ஊருக்கு காட்டப்படுமா? காணாமல் போகுமா? என்று விறு விறு என்று நகரும் கதை...

முக்கிய புள்ளிகளாக, அமைச்சர், காவல் துறை அதிகாரி, ஜர்னலிஸ்ட், பிஸ்னஸ் மேன் என‌ நால்வர்.

சிறு வயதிலிருந்தே ஏழ்மையின் கோர பிடியில், தோள் கொடுக்க யாருமின்றி அநாதையாக்கபட்ட சயானா மற்றும் பாத்திரம் தேய்த்தே தன் மகளை பத்திரமாய்‌ பார்த்து கொண்ட‌ தாய்.அதனாலே என்னவோ சயானாவுக்குள்‌ ஒரு தைரியம் ஆண்மகன் போல்..பாரதி வடித்த நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட‌ பார்வையென அவளின் ஆஸ்தான புரவியாம் வெள்ளை என்ஃபில்டில் அவள் பவனி வருவதை பார்ப்பது மிக அழகு..

ரேவ் ஒரு தேவதை.. இப்படி ‌ஒரு தோழி வேண்டும். சும்மா ஆமாம் போடுவது மட்டும் நட்பல்ல. இது தப்பு ,பிடிக்கவில்லை நீ செய்வது என்று கூறி அதே சமையம் அவர்களை விலகாமல் இருத்தலாகிய பண்பு கொண்ட நட்பு கிடைப்பது வாழ்வின் புண்ணியம்.

மனோவின் ட்டேபியும் சயானாவின் கூஃபியும் மயிலிறகு வருடல்..தாய்மையை அவனிடத்தில் தேடிய சயானாவினால் அவனின் காதலன் முகம் விளங்கவில்லை.. அவர்கள் கூறும்" ஐ லவ் யூ ட்டேபி , ஆலிவ் கூஃபியும்"படிக்கும் போது தான் உணரமுடியும்...

சக்திவேல் சயானா உறவும் அவர்கள் , ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் காட்சியும் இயல்பாகவே இருக்கு..

சயானாவின் மதியூக வியூகங்கள் அபாரம்..என்னம்மா நீ வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரனாய் மாறிடறன்னு கேட்க தோணுது..

அனைத்து கேள்விகளுக்கும் லாஜிகல் பதில்கள் கிடைகின்றன இறுதியில்..

இதுவரை கதை இனி..

எப்பாஆஆஆஆஆ என்ன பொண்ணும்மாஆஆஆ கட்டிப்போடுது எழுத்தால..ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. நாம் பள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கணத்தில் "ஆகுபெயர்" பற்றி படிச்சிருப்போம் , ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் என்பதாகும்...இந்த கதையில் தமிழ் விளையாடியிருக்கு..எ.டு "பத்திரிகை பிரசுரித்தது தன் கருத்தை (ஜர்னலிஸ்ட் பேசினானாம்),

பில்டர் தன்னை உணர்ந்து தரைதளத்தை பார்வையிட்டார்( தலை குனிஞ்சானாம்),

அவளின் கேள்வியில் பில்டரின் முகம் கான்க்ரீட் பூசியது( இறுக்கமா ஆகிருச்சாம்) "
இது மாதிரி என்ன அழகு தமிழ்... உவமை, உருவகம் , சிலேடையென புகுந்து விளையாடியிருக்கீங்க போங்க... ஏலக்காய் முந்திரி ,நெய் போன்ற அலங்கார வஸ்துக்கள் சேர்த்தும் உங்கள் கதையென்ற சக்கரை பொங்கல் தன் தனித்தன்மையை இழக்காமல் இருந்தது..அதற்கே ஒரு சபாஷ்..

பாரதியாரின் காதல் வரிகள்..அப்பப்பா அதுவும் பத்தாம் பகுதியில் நான் உருகியே போனேன்.. சரியான இடத்தில் சரியான பாடலின் இடை சொறுகல்....

நல்ல அழகான வார்த்தைகளின் பயன்பாடுகள் ... கனலை விழுங்கும் இரும்பிற்கான விளக்கம் அருமை....

இந்த கதை, பொறுமையா வாசிக்கணும்..வேகமா படிச்சிட்டு போணும்னு நினைக்கறவங்களுக்கானது இல்ல.. ஆனா கண்டிப்பா படிக்க வேண்டிய கதை...

வாழ்த்துகள் காதம்பரி , ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதையை தந்து, ஆச்சரிய படுத்தறீங்க... மேன்மேலும் இந்த பணி தொடரணும் .. நன்றிகளுடன் வாழ்த்துகள் ? ஆலிவ் காதம்பரி?

காதல் என்ற பட்டறையில் ஆணென்ற கனலை விழுங்கும் பெண் என்ற இரும்பும் அது கனலை விழுங்கும் செயல்முறைகளும் என்றுமே ரசனைக்குரியதே..?
மிக்க நன்றி அபர்ணா அக்கா ♥
ஆகுபெயர்... இந்த ஒரு வார்த்தையே போதும் அக்கா... அத்தனை மகிழ்ச்சி அளிக்கிறது....

ஆலிவ் அபர்ணா அக்கா ???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Arumayana vimarsanam...ungal uvamaigalum arumai...ezthalurukku miha arumayana vimarsanangal kidaithalae ariya paarattu...kadambari sis??...Aparna sis?...
Thanks Raghavi
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
காதம்பரியின் தமிழுக்கு, கவிதைக்கு ஏற்ற பாராட்டு ... மிக அருமை உங்கள் விமர்சனம். ????
மகிழ்ச்சி :love:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மிகவும் அருமையான விமர்சனம் டியர். காதம்பரியின் தமிழ் உவமை உவமேயங்கள் கட்டி இழுக்கிறது நம்மை.
அவரது தனிச் சிறப்பே அவரது தமிழ் நடைதான்.
நீங்கள் கூறிய எடுத்துக் காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல....
நாவல் முழுக்க வர்ணனைகளும் உவமைகளும் ததும்பி வழிகிறது... நாம் அதில் மூழ்கிப் போகிறோம்...
மிக்க நன்றி செல்வா அக்கா ♥
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அப்பு அசத்தல் ரிவ்யூ..அருமையான கதைக்கு...எல்லாமே பெர்பக்ட் நோட் ..அப்பு.... உன் வழில கலக்கிட்ட...
Olive goofy ?
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top