Kanne kadhal Penne--EPI 15 (Epilogue)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

CRVS

Member
Joined
Jun 19, 2021
Messages
63
Reaction score
84
Points
18
Location
Ullagaram
"புள்ளைங்கல நம்ம கஸ்டத்தக் காட்டித் தான் வளக்கனும்! நாம நாய் படாத பாடு பட்டுக்கிட்டு , அவன மட்டும் ராஜா மாதிரி வளத்தா வாழ்க்கையோட கருப்பு பக்கம் தெரியாமலே போய்டும். எதா இருந்தாலும் அதான் அம்மாவும் அப்பாவும் இருக்காங்களே அவங்க பாத்துப்பாங்கன்னு அலட்சியம் வந்துடும். இந்தக் காலத்து புள்ளைங்க கெட்டு போறதுக்கு இதான் காரணம்!"

வாவ்....! அருமையான கருத்து மட்டுமல்ல... உண்மையான கருத்தும் கூட....! ஆனால்... எத்தனை பெற்றவர்கள் இதை கடை பிடிக்கிறார்கள் என்றால்... பலன் வெறும் பூஜ்யம் மட்டும் தான்! ஏனென்றால் இங்கு 95% பெற்றவர்கள் தான்... காணா உலகைத்தான் பிள்ளைகளுக்கு காட்டுகிறார்கள்.... தன் பெற்றவர்கள் தனக்கு கொடுக்காத சலுகைகளை தன் குழந்தைகளுக்கு கொடுப்பதோடு... அவர்களை அறியாமலே, தன் பிள்ளைகளை தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை! முன்பு பத்து குழந்தைகள் இருந்தாலும் ஒரே மாதிரி தான் வழி நடத்துவார்கள்.. ஆனால்....இப்பொழுது பத்து குழந்தைகள் என்பதே குறைந்து.... ஏன் குழந்தைகள் என்பதே குறைந்து ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே போதும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல்.... எல்லாவித வசதிகளும், சலுகைகளும், அது செல்வமானாலும் சரி... அன்பானாலும் சரி.... ஒரே குழந்தைக்கே கிடைக்கட்டும் என்றாகி விட்டது.... ம்....என்னத்தைச் சொல்றது..... இது தவறான சித்தாந்தம்.... என்பதை யார் உணர்த்துவது....?
காலக்கொடுமையடா சாமி...!"

ஆனாலும்.... ஒரு நடைபாதை வாசிகளின் அன்றாட வாழ்க்கைப் பயணத்தை கூற ஆரம்பித்து..... கோபால், சங்கர், மல்லி என்னும் மூன்று கதா பாத்திரத்தை மட்டுமே வைத்து அவர்களை சுற்றியே காட்சிகளை பின்னி பிணைந்து செல்லும், சம்பவங்கள், சோகங்கள், வாழ்க்கை சங்கடங்கள், நிதர்சனங்கள், அவர்களுக்குள் ஏற்படும் அருமையான உறவுகள், காதல்கள், ஊடல்கள, சமாதானங்கள், ஏற்றத்தாழ்வுகள், முன்னேற்றங்கள் என்று அழகாய் வாழ்க்கைத் தடத்தை மாற்றி அமைத்துக் கொள்ள எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகள்....
ஏழையாய் பிறப்பதில் தவறில்லை... ஏழையாய் வாழ்வதிலிருந்து சிறுக சிறுக வெளிவந்து..,. நிச்சயமாய் ஏழையாய் மட்டும் இறப்பது.... எங்கள் வாழ்க்கையின் நோக்கமில்லை ....என்று மல்லியும் சங்கரும் விட்டுக் கொடுக்காமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அழகாக தங்கள் வாழ்க்கை முன்னேற பாடுபட்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நைனாவும் மிக அழகாக ஒத்துழைத்திருந்தார்.
இது ஒரு அழகான வாழ்க்கை கல்வி, வாழ்க்கை பாடம் என்றே சொல்லலாம். பாமர மக்கள் தானே இவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள இருக்கிறது என்றில்லாமல்..... இவர்களுக்கும் வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தர அனைத்து தகுதிகளும் உண்டு என்று நிருபித்த வநி ஜீ அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வந்தனங்கள்.
வாழ்க மற்றும் வளர்க தங்களின் எழுத்துப் பயணம்.
🙏🌹🙏🌹🙏🌹
 
Last edited:

Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
637
Reaction score
1,006
Points
93
Location
Harlow
இன்னாம்மே அதாங்காட்டியும் கதைய சுருக்குன்னு முடிச்சிட்ட?😉😉
ஹி ஹி இவங்களோடான பயணம் ரெம்ப நல்லா இருந்துச்சு.😘😘
என்ன babyன்னு decide ஆத்தர்ஜிக்கு இல்லாத அதிகாரமா என்ன?😉😉
ரொம்பவே சரியான advice,husbands எப்படின்னு புரிஞ்சு adjust பண்ணிக்கனும்.அத விட்டுட்டு சும்மா இரக்கப்பட்டு அப்படியே தூக்கி குடுத்திட கூடாது ,சில பேரு வீட்ட கூட அவங்க பேர்ல வாங்கிட்டு loan மட்டும் பொண்டாட்டிய கட்ட விடுவாங்க.கண்டிப்பா கவனமா தான் இருக்கனும்.
வித்தியாசமான கதை, அத நீங்க கொண்டு போன விதம்,உங்க மொழி நடை, writing style இதெல்லாம் தான் highlights.👏👏Thanks author ஜி. 🙏🙏
சீக்கிரமா அடுத்த கதையோடு வரணும். 😉😉
advance தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐💐
 
Mano

Well-known member
Joined
Mar 17, 2018
Messages
296
Reaction score
487
Points
93
Location
USA
As always, Nice Story. வியாபாரம் காந்தம் thoughts vera level:love::love::love:
 
Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
3,430
Reaction score
4,546
Points
113
Location
Chennai
வாழ்கையில் பிச்சை எடுத்தவன் மனைவியின் துணை கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சிங்க குடும்பமா சிறந்து விளங்குவது அருமை. இந்த முறை எதற்கு food video வருதுன்னு யோசிச்சா கடைசியில் இவங்க ஹோடலில் ரிலேட் பண்ணிட்டீங்க. பஞ்ச் டயலாக்ஸ் காதல் பாசம் என உங்க ஸ்டைல மற்றுமொரு அழகான கதை.
Lovely super story congrats and thanks Nishaling. :love: :love: :love:
விரைவில் அடுத்த கதையோடு வாங்க
 
Advertisements

Latest Episodes

Advertisements