• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unathan Kai valaiyaay....Episode 9.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 9.

ஒரு புறம் நம்பிக்கையின்மை மறு புறம் ஒரு வேளை நிஜமாகவே திருந்தியிருக்கலாமோ என்ற எண்ணம் எனாலைக்கழிக்கப்பட்டாள் சரசு டீச்சர். பணம் கேட்டானே? அதைப்பற்றி எதுவுமே பேசவில்லையே? என நினைத்துக் கேட்டாள்.

"அப்ப பிசினஸ் செய்யலையா நீங்க?"

"என்னால முதலாளியாக முடியாது. அவ்வளவு தானே? அதனால பரவாயில்ல. எனக்கு வேலை கிடைக்காமலா போயிரும்?என்ன? அனிதாவை கார் பங்களான்னு வாழ வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அது முடியாது போலிருக்கு. கடைசி வரையில வாடகை வீடும் நூல் சேலையும் தான் அவ விதின்னா மாத்தவா முடியும்?" என்று பெருமூச்செறிந்தான். அதன் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை. அனிதா கர்ப்பமாக இருப்பதையும் இந்த நேரத்தில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னாள் சரசு. ஒரு வாரம் கழித்து அவர்கள் புறப்பட்டனர். மகளுக்கு அரிசி பருப்பிலிருந்து காய் வரை எல்லாம் வாங்கிக்கொடுத்தாள். கிளம்பு முன் மருமனைளை அழைத்தாள் சரசம்மாள்.

"மாப்பிள்ளை! இதுல லட்ச ரூவாய்க்கு செக் வெச்சிருக்கேன். அதை உங்க பிசினசுக்கு உபயோகப் படுத்திக்கோங்க. நான் அரசுப் பள்ளியில் ஆசிரியை. இதுக்கு மேல என்னால கொடுக்க முடியாது. இருக்குறதை வெச்சு புத்திசாலித்தனமா பொழைச்சுக்குங்க. என் மகளை கலங்க விட்டுராதீங்க" என்றாள் கண் கலங்கி. முகமெல்லாம் பூரிப்பாக அதை வாங்கிக்கொண்டான் ஆனந்தன்.

"அத்தை இதை நான் கடனாத்தான் வாங்கியிருக்கேன். இன்னும் ஆறே மாசத்துல வட்டியோட சேர்த்து திருப்பிக்கொடுத்துடறேன். உங்க மக, என் மனைவி நான் பத்திரமா பார்த்துக்குவேன்." என்று சொல்லி மனைவியை அணைத்துக்கொண்டு காரில் ஏறினான் ஆனந்தன். மகளை அனுப்பி விட்டு உள்ளே வந்த சரசுவுக்கு தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டோமோ என்ற அச்சம் ஏற்பட நிம்மதி இல்லாமல் தவித்தாள்.

தென்காசிக்கு வந்து மீண்டும் பெரிய கடையில் வேலையில் சேர்ந்தாள் அனிதா. ஆனந்தன் அவளை வேலைக்கே போக வேண்டாம் என தடுத்தான். இப்போது தான் குழந்தை உண்டாகி இருக்கிறாள் வீட்டில் ஓய்வாக இருந்தால் நல்லது என சொன்னான். ஆனால் அனிதா அவனை நம்பி வீட்டிலேயே இருந்தால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டியது இருக்கும். பிசினஸ் எப்படிச் செய்கிறான் பார்க்கலாம். நம்பிக்கை வந்தால் வேலை விட்டு விட்டு அவனுக்கு பிசினசில் உதவி செய்யலாம் என எண்ணிக் கொண்டாள். ஆனால் அதைச் சொல்லாமல் வீட்டில் இருந்தால் பொழுது போகாது என்றும் வேலைக்குப் போய் விட்டு வந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறி அவனை சம்மதிக்க வைத்தாள்.

ஆனந்தனும் அங்கே இங்கே என்று அலைந்து தன் தொழிலைத் தொடங்கினான். ராஜபாளையத்தில் சில மில்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் முன் பணமாக ஒரு லட்சம் வாங்கிக்கொண்டு இவனுக்கு துணிகள் சப்ளை செய்வதாகவும் சொன்னான். அதோடு தென்காசி, திருநெல்வேலி, புளியங்குடி போன்ற நகரங்களில்ல் இருக்கும் ரெடி மேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் அவர்கள் சில குறிப்பிட்ட வகைத் துணிகளை வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்தான். பேல் பேல் பேலாக துணிகளை வாங்கி அப்படியே விற்பதில் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அப்படி வரும் லாபத்தில் சொந்த வீடு ஒன்று கட்டலாம் என இருப்பதாகவும் சொன்னான். அனிதா சொந்த வீடு என்று பேராசை படவில்லை எப்படியோ அவன் பொறுப்புணர்ந்து நடந்தாலே போதும் என்று நிம்மதியோடு இருந்தாள். நாட்கள் ஓடின. ஆனந்தனும் எப்போதும் பிசியாக ஓடிக்கொண்டிருந்ததால் அனிதாவுக்கு எதுவும் கவலை ஏற்படவில்லை .

ஒரு மாதம் கழித்து சில ஆயிர ரூபாய்களைக் கொண்டு வந்து கொடுத்தான் ஆனந்தன்.

"இந்தா அனி! இது நம்ம பிசினஸ்ல முதல்ல வந்த லாபம். இதை நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ" என்று அவன் 20,000 ரூபாய்களை நீட்டியபோது நம்பவே முடியாமல் அதை வாங்கி சாமி படத்தின் முன் வைத்து வணங்கினாள். இனி தனக்கு விடிந்து விடும் என எண்ணி இறைவனுக்கு நன்றி சொன்னாள். அதோடு அம்மாவுக்கும் ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னதும் சரசுவுக்கு கொஞ்சம் நிம்மதியானது. இனி மகள் வாழ்வு பற்றிய கவலை இல்லை என எண்ணிக் கொண்டாள்.

ஒரு சில நாட்கள் தான் இனிமையாகச் சென்றிருக்கும். அதன் பிறகு வீட்டுக்கு மிகவும் லேட்டாக வர ஆரம்பித்தான் ஆனந்தன். வரும் போது கண்கள் சிவந்து குடித்திருக்கிறான் என்பதைப் பறை சாற்றின. பயந்து போன அனிதா அவனைக் கேட்டாள்.

"என்னை மாதிரி பிசினஸ் பண்றவங்க அப்பப்ப தண்ணி போட்டுத்தான் ஆகணும் அனி. இன்னைக்கு பெரிய மில் முதலாளி பார்ட்டி குடுத்தாரு. அதுல இதெல்லாம் குடுக்கத்தான் செய்வாங்க. நான் குடிக்கலைன்னா எனக்கு மரியாதை தெரியல்லேன்னு சொல்லிடுவாங்களே!" என்றான்.

"தினமுமா பார்ட்டி? கடந்த மூணு நாளா டெய்லி குடிச்சுட்டு வரீங்க?" என்பதோடு நிறுத்திக்கோண்டாள்.

அடிக்கடி 5000, 2000 என்று பணம் கொடுத்தான். அது அனிதாவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அவள் அக்கவுண்ட்ஸ் படித்தவள் , தொழிலிலோ, வீட்டிலோ கணக்கே இல்லாமல் பணம் எடுத்துக்கொண்டே இருந்தால் அது நல்லதல்ல என அவளுக்குத் தெரியும். அதிலும் சொந்தமாக தொழில் செய்யும் போது பணத்தைப் பற்றிய கவனம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமே? இவன் இப்படி பணம் கொடுக்கிறானே? எல்லாவற்றிற்கும் கணக்கு வைத்திருக்கிறானா? என்ற சந்தேகம் வந்தது அவளுக்கு. ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் அதிசயமாக வீட்டில் இருந்த போது அவனுக்கு சாப்பாடு போடும் போதே இலகுவாகக் கேட்பது போலக் கேட்டாள்.

"என்னங்க? நான் தான் எம் காம் படிச்சிருக்கேனே? நம்ம பிசினஸ் கணக்கு வழக்கெல்லாம் நானே பார்க்கட்டுமா? இத்தனை நாள் பிசினஸ் பண்றீங்க? ஒரு ஆபீஸ் ரூம் கூட இல்லையே? ஃபைல் எங்க வெச்சிருக்கீங்க?" என்றாள்.

அவளை முறைத்தான் அவன்.

"என்ன படிச்சிருக்கேன்னு எங்கிட்ட காமிக்கிறா மாதிரி இருக்கு? நானும் தான் படிச்சிருக்கேன். இப்படி வாங்கி அப்படி குடுக்குற பிசினஸ்ல ஆபீஸ் எங்கே போட முடியும்? எனக்கு அடவைஸ் பண்ற வேலையை வெச்சுக்காதே" என்றான் ஒரு மாதிரி குரலில்.

"அதுக்கில்லீங்க! நீங்க அப்பப்ப 2000, 3000 குடுக்கறீங்க. தொழில் நடக்கும் போது அதுல இருந்து இப்படிப் பணம் எடுக்குறது நல்லது இல்லே! ஒரு வேளை உங்களுக்கு கணக்கு தெரியாம இப்படி செய்யறீங்களோன்னு தான் கேட்டேன்" என்றாள். அவன் சிரித்தான்.

"அனி! உன் சின்ன மூளையை அதிகமா செலவழிச்சு கவலைப் படாதே! ஏதோ உனக்கு பொழுது போகணும்னு தான் உன்னை வேலைக்கு அனுப்பறேன். இல்லைன்னா பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியும்? நீ பாட்டுக்க ராணி மாதிரி செலவழிச்சுக்கிட்டு இரு." என்றான்.

முகம் சுருங்கியது அனிதாவுக்கு. அவள் ஒன்றும் சின்ன மூளைக்காரி அல்லவே? அதோடு இரு மாதங்கள் முன்னால் வரையில் இந்தப் பெட்டைக் கோழி கூவித்தானே பொழுது விடிந்தது? என்று சொல்லத் தோன்றிய நாவை அடக்கிக்கொண்டாள். சொன்னால் அவன் எப்படி மாறுவான் எனத் தெரியாது. ஆனால் இனி அவன் கொடுக்கும் தொகைகளை அப்படியே சேமிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

சில நாட்கள் குடிக்காமல் வந்தவன் மீண்டும் ஆரம்பித்து விட்டான். பகலில் எங்கோ போய் வந்தான் இரவில் நன்கு குடித்து விட்டு புரண்டான். பிசினஸ் எப்படிப் போகிறது நீங்கள் சப்ளை செய்யும் வாடிக்கைக்காரர்கள் யார்? நீங்கள் துணி வாங்கும் மில்கள் எது? எனக் கேட்க வேண்டும் என நினைப்பாள். ஆனால் துணிவு இருக்காது. அதுவும் தவிர அவளுக்கு தன் வயிற்றுப்பிள்ளையைப் பற்றிய கவலை அதிகமாக இருந்தது. மூன்று மாதங்கள் ஆகப் போகிறது ஆனால் அவள் உடலிலோ ஹார்மோன்களிலோ எந்த மாற்றமும் இல்லை. தலை சுற்றல் வாந்தி மயக்கம் என எதுவுமே வரவில்லை. அதுவே அவளுக்குக் கவலையாக இருந்தது. டாக்டரிடம் போகலாம் என்றால் அவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்த்து விட்டு என்ன குண்டைத் தூக்கிப் போடுவார்களோ? கலைத்து விடு என்று சொன்னால் மனது தாங்காதே எனப் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தாள். அம்மாவிடம் தன் கவலையை மெல்ல சொன்ன போது சிலருக்கு தலை சுற்றல் வாந்தி வராது என்றாள். அதனால் கொஞ்சம் நிம்மதியானது.

அனிதா வேலை பார்க்கும் ஜவுளிக் கடை முதலாளியின் மகன் திருமணம் சென்னையில் வைத்து நடக்க இருந்தது. தங்களிடம் வேலை பார்க்கும் அனைவரும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கு ரயிலில் டிக்க்கெட்டுகள் எடுத்து அங்கே சென்னையில் தங்குவதற்கு ரூம்களும் ஏற்பாடு செய்திருந்தனர். கட்டாயம் அனிதாவும் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாச்சி சொல்லி விட்டதால் அவளால் தட்ட முடியவில்லை. கணவனிடம் இதைப் பற்றிச் சொன்ன போது அவன் போகக்கூடாது எனத் தடுப்பான் என் எண்ணியவள் ஏமாந்தே போனாள். ஆம் அவன் மிகவும் உற்சாகமாக அவளை அனுப்பினான். சேலை எதுவும் புதிதாக வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்றான். மூன்று நாட்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு பயணித்தாள்.
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
லேட்டஸ் அப்டேட்ல வரமாதிரி பண்ணுங்கள் நீங்கள் போடுகின்ற அப்டேட் காலதாமதமாக தெரிகிறது
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
லேட்டஸ் அப்டேட்ல வரமாதிரி பண்ணுங்கள் நீங்கள் போடுகின்ற அப்டேட் காலதாமதமாக தெரிகிறது
Ok sir
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஏதோ பெரிய ப்ளான் செய்து விட்டான் ஆனந்த்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top