• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai valaiyaay....Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 4.

அம்மாவிடம் கூட இது வரையில் அடி வாங்கிய்ராத அனிதாவுக்கு கணவன் தன்னை அடிக்கிறான் என்ற அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள் பலமான அடிகள் விழுந்து விட்டன. அதோடு பேச்சுக்கள் வேறு.

"என்னடி என்னை என்ன நெனச்ச? ****** நாய் செய்ன்னா செய்யணும், படுன்னா படுக்கணும். அதுக்குத்தாண்டீ நீங்க இருக்கீங்க! ஏதோ படிச்ச படிப்பு வேஸ்ட் ஆக வேண்டாமேன்னு நெனச்சா என்னையே கேவலமா பேசுறியா? நாயே! உன்னை இன்னைக்கு என்ன பண்றேன் பாரு" என்று மிருகத்தனமாகத் தாக்கினான். தோள் வயிறு முதுகு என அடி விழாத இடமே இல்லை. அனிதாவுக்கு முதல் முறையாக உயிர்ப்பயம் வந்தது. "என்னை விட்டுருங்க இனுமே பேசல்லை பேசல்லை" என்று கதறினாள். அவன் வெறி முழுவதும் அடங்கிய பிறகே அவன் விட்டான். சட்டையைப் போட்டுக்கொண்டு சென்றவன் திரும்பி வந்து கன்னத்தில் அறைந்து சும்மா இருக்காம ராத்திரிக்கு சமைச்சு வையி. அப்புறமா ஜாலி தான் என்று கண்ணடித்து விட்டுப் போனான்.

இவன் மனிதன் தானா? ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி அடித்து விட்டு கண்ணடித்து விட்டுப் போகிறானே? மயக்கமாக வந்தது அவளுக்கு. அடி தாங்காமல் வலி ஒரு புறம், அவமானம் ஒரு புறம் இரவை நினைத்து பயம் ஒரு புறம் எனத் தவித்தாள். கடவுளே அவன் வராமலே போய் விடக் கூடதா என்று கூட நினைத்தது அவள் பயந்த உள்ளம். உடலெங்கும் ஆங்காங்கே ரத்தக் கசிவு, சில இடங்களில் ஆழமான காயம். அதிலிருந்து பெருகும் ரத்தம் என அவளது உடல் யுத்த களம் போல இருந்தது. கண்ணீரை அடக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று தண்ணீரால் கழுவினாள். தண்ணீர் பட்ட இடம் சுரீரென்றது அதோடு குளிரவும் செய்தது. ஏன் குளிர்கிறது எனத் தெரியாமல் வெளியில் வந்து எரிச்சல் எடுத்த கண்களை மறந்து உப்புமாவும் சாம்பாரும், செய்து முடிப்பதற்குள் அவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது.

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க பயத்துடன் தடுமாறி கதவைத் திறந்தாள். எதிரில் நீலா நின்றிருந்தாள். கூடவே இன்னொரு பெண்மணியும். அனிதாவின் நிலையைப் பார்த்து "ஐயையோ" என்று கூவி விட்டாள் நீலா.

"மேடம் என்ன ஆச்சு மேடம்? எவனாவது ஸ்கூட்டர் காரன் இடிச்சுட்டுப் போயிட்டானா? இப்படி அடிபட்டிருக்கே?" என்று பதறினாள்.

"நீலா! இவங்க உடம்பு வேற நெருப்பா சுடுதும்மா! டாக்டர் கிட்ட காட்டியே ஆகணும். உடனே போயி ஒரு ஆட்டோ கூப்பிடு" என்றாள்.

அந்த நேரத்திலும் "நீங்க எப்படி இங்க? நீங்க நீலாவோட அம்மா தானே?" என்றாள்.

"ஆமா மேடம்! பக்கத்துல கோயிலுக்கு வந்தோம். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு நீலா சொல்லிச்சு. அதான் வந்தோம். இப்படி இருக்கீங்களே மேடம்? ஆக்சிடெண்ட் ஆனதும் உடனே உங்க வீட்டுக்காரருக்கு ஃபோன் பண்ண வேண்டியது தானே?" என்றாள் நீலவிந்தாய் பரிவுடன்.

அவளது வார்த்தைகள் அம்மாவின் நினைவைத் தூண்ட கண்ணைக் கரித்தது மீண்டும். அதற்குள் ஆட்டோ வரவே இருவரும் கைத்தாங்கலாக அனிதாவை ஆட்டோவில் ஏற்றி விட்டுத் தானும் அமர்ந்து கொண்டனர்.

"நீலா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போக கொல்லும்மா! இப்ப எங்கிட்ட காசு இல்லை" என்றாள். அவமானத்தில் மீண்டும் கண்ணீர் வந்தது. அவளை வியப்பாகப் பார்த்த நீலாவின் தாயார் "இந்நேரத்துல கவர்மெண்ட் ஆஸ்பத்தியில யாருமே இருக்க மாட்டாங்க! எனக்குதெரிஞ்ச டாக்டர் வீட்டுக்கே போவோம். பணத்தைப் பத்திக் கவலைப்படாதீங்க! எங்கிட்ட இருக்கு. அப்புறமா நான் வாங்கிக்கறேன்" என்றாள்.

டாக்டர் ராஜகுமாரி என்று பெயர் போட்ட கிளினிக் முன்னால் ஆட்டோ நின்றது. வயதான அந்த டாக்டரைப் பார்த்ததும் அன்னையின் நினைவு அதிகமாக அழுதாள் அனிதா. கூட வந்த இருவரையும் போகச் சொல்லி விட்டு அவளைத் தனியாக படுக்க வைத்து சோதித்தார் டாக்டர் ராஜ குமாரி.

"உன் பேரென்னம்மா?"

"அனிதா"

"அனிதா! கண்டிப்பா இது ஆக்சிடெண்ட் கிடையாது. யாரோ நல்லா அடிச்சிருக்காங்க! யாரு அடிச்சது? சொல்லு"

பதில் பேச முடியாமல் விம்மினாள் அனிதா.

"நீ அழுறதையும் உன் கழுத்துல இருக்குற தாலியையும் சேர்த்து பார்க்குற போது அடிச்சது உன் புருஷனோன்னு எனக்கு சந்தேகமா இருக்கும்மா! நான் வெறும் டாக்டர் மட்டும் கிடையாது. பெண்களுக்கு ஆலோசனை சொல்ற சமூக சேவகியும் கூட சொல்லும்மா" என்றாள்.

என்ன சொல்லுவாள் அனிதா? என் புருஷனை வேலைக்குப் போக்ச் சொன்னேன் அதற்காக கோபப்பட்டு அடித்து விட்டார் என்றால் எத்தனை அவமானம்? பதில் பேசாமல் மௌனமானாள். டாக்டருக்கு கோபம் வந்தது.

"உன்னை மாதிரி சில பெண்கள் அடிமைகளா இருக்குறதால தான் நம்மை கிள்ளுக்குக்கீரையா நினைக்கிறாங்க ஆண்கள். சொல்லலைன்னா போ! நான் தூண்டித்துருவி கேக்க மாட்டேன். அது உன் மன நிலைக்கு நல்லதில்லை படிச்ச டாக்டர் எனக்குத் தெரியும்" என்று சொல்லி விட்டு மருந்துகளை வைத்துக் கட்டி விட்டு ஊசியும் போட்டாள்.

"இதைப் பாரும்மா! உனக்கு காயம் ரொம்ப அதிகமா இருக்கு. அதோட ஃபீவர் வேற. கட்டாயம் நீ குறைஞ்சது ஒரு வாரம் ஓய்வா இருக்கணும். எந்த வேலையும் செய்யக் கூடாது. சில இடத்துல எலும்புல அடி பட்டிருக்கு. முதுகெலும்புல கூட பாதிப்பு இருக்கலாம்னு நினைக்கறேன். முதல்ல உனக்கு காயங்கள் ஆறி ஃபீவரும் சரியாகட்டும். அப்புறமா ஸ்கேன் எடுத்துப் பார்த்துக்கலாம். ஆனா நீ ரெஸ்டா இல்லைன்னா நல்லதில்ல. அவ்வளவு தான் சொல்லுவேன் அப்புறம் உன் இஷ்டம்" என்று வெறுப்போடு சொனாள் டாக்டர்.

நீலாவின் அம்மா பணம் கொடுத்து விட்டு வரும் போது அனிதாவை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

"அனிதா மேடம்! உங்கம்மாவோட நம்பர் தரீங்களா? உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லணும்." என்றாள். யோசித்தாள் அனிதா.

"உங்க வீட்டுக்காரர் என்ன சொல்லுவாரோன்னு யோசிக்காதீங்க மேடம்! டாக்டர் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்க! இப்ப நீங்க இங்க இருக்குறது நல்லது இல்லீங்கம்மா! தயவு செஞ்சு உங்கம்மாவை வந்து கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லுங்க!" என்றாள்.

அவமானத்தால் தலையைக் குனிந்து கொண்டு வேறு வழியில்லாமல் தாயின் நம்பரைச் சொன்னாள். தன் ஃபோனிலிருந்து போட்டாள் நீலாவின் அம்மா.

"நான் உங்க மக கூட வேலை செய்யுற பொண்ணோட அம்மா பேசுறேன். உங்க மகளுக்கு உடம்புக்கு முடியல்ல!"

ஸ்பீக்கரில் போட்டிருந்தால் மறுமுனையில் அம்மா பதறுவது தெரிந்தது.

"ஐயையோ என்ன ஆச்சுங்க? அவ இப்ப எங்கே? அவ வீட்டுக்காரர் கூட இல்லையா? "

"அம்மா" என்றாள் அனிதா. கன்றின் குரலைக் கேட்ட தாயின் உள்ளம் துள்ளியது.

"அனிக்கண்ணு! உனக்கென்னடா? எங்கே இருக்கே?"

"அம்மா..வந்து வந்து.. எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடிச்சும்மா! உடம்பெல்லாம் அடி. ஃபீவர் வேற. என்னை வந்து கூட்டிக்கிட்டுப் போம்மா" என்றாள் அழுகைகையோடு.

"மாப்பிள்ளை எங்கேம்மா?"

"அவரு வந்து வேலை விசயமா சென்னை போயிருக்காரு" என்றாள். அவளை விழித்துப் பார்த்த நீலாவின் பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்தாள்.

"கூட இருக்குற அம்மாவுக்கு ஃபோன் குடு" என்றதும் நீலாவின் தாய் பேசினாள்.

"அம்மா நீங்க யாரோ எவரோ தெரிய்லலா! ஆனா நல்ல சமயத்துல என் மகளுக்கு உதவி செஞ்சிருக்கீங்க! நான் ராஜபாளையத்துல இருக்கேன். நான் வந்து என் மகளைக் கூட்டிக்கிட்டுப் போக நிறைய நேரமாகும். அதனால தெரிஞ்ச டாக்சி ஏதாவது பிடிச்சு என் மகளை ஏத்தி விட்டுருங்கம்மா! எனக்குப் பதறுது. அவளைப் பார்த்தா தான் என் மனசு ஆறும். இந்த உதவியைச் செய்ங்கம்மா" என்று அழுதே விட்டாள் கண்டிப்புக்குப் பெயர் போன சரசு டீச்சர்.

"நல்ல யோசனை தான். நீலா அப்பாவும் டாக்சி தான் ஓட்டுறாரு. அவர் டாக்சியிலயே நான் அனுப்பி வெச்சுடறேன். வந்து சேர்ந்ததுக்கு தகவல் குடுங்க! கூட என் மகன் நீலாவோட தம்பியையும் அனுப்பறேன். கவலைப் படாதீங்க" என்று ஆறுதல் சொன்னாள் அந்தத் தாய்.

ஊசியின் விளைவாலேயோ அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்ற நிம்மதியாலேயோ உறங்கத் தொடங்கினாள் அனிதா. நீலாவின் அப்பா வேலுச் சாமியின் டாக்ஸியில் அனிதாவை ஏற்றி, கூட துணையாக தன் மகன் மகேஷையும் அனுப்பிய பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள் நீலாவின் தாய் இசக்கியம்மாள்.

எப்போது வண்டி தென்காசியிலிருந்து கிளம்பியது, எப்போது ராஜ பாளையத்தை அடைந்தது என எதுவும் தெரியாமல் மயக்க நிலையில் இருந்தாள் அனிதா. நல்ல வேளையாக இசக்கியம்மாள் சரசு டீச்சரின் நம்பரை கணவர் வேலுச்சாமி கையில் கொடுத்திருந்தாள். அட்ரஸ் கேட்டு சரியாக அழைத்து வந்து விட்டார். எங்கோ அரை மயக்கத்தில் இருந்த அனிதாவுக்கு தாயின் குரல் கேட்கவும் சட்டென விழித்துக்கொண்டாள். அழுதழுது சிவந்திருந்த கண்களோடு இருந்த தாயைப் பார்த்ததும் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறினாள். பணம் கொடுத்து அவளைத் தேற்றி வீட்டுக்குள் கொண்டு சென்று படுக்க வைத்த சரசு டீச்சரின் முகத்தில் கவலை ரேகைகள் கோடு போட்டன.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அனிதா டாக்டரிடம் உண்மையை சொல்லி இருக்கலாமே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top