• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay..... Episode 8.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 8.

மகள் மிகுந்த காய்ச்சலோடு வந்ததும் அவள் உடலில் இருந்த காயங்களும் எதையோ உணர்த்தின சரசுவுக்கு. அந்த நேரத்துக்கு சமாதானம ஆனாலும் மருமகனிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்துப் பேசினாள்.

"உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்காக என் மகளை இப்படி அடிச்சீங்க?" என்றாள் அனிதா உறங்கும் போது.

"என்ன இது? சாதாரணமா ரெண்டு தட்டு தட்டுனேன் அதை உங்க மக ரொம்பப் பெருசாக்கிட்டா. வேற ஒண்ணுமில்ல. ஆமா நான் கேட்ட பணம் என்ன ஆச்சு?"

"இதைப் பாருங்க மாப்பிள்ள! நீங்க என்ன தொழில் செய்யப் போறீங்க? இடம் பார்த்தாச்சா? இதுல உங்களுக்கு அனும்பவம் இருக்கான்னு எத்தனை கேள்விகள் வருது? அதுக்கு பதில் சொல்லுங்க"

சற்று நேரம் அமைதியாக இருந்தான் ஆனந்தன். தான் முறையாகக் கேட்டதில் கலங்கி விட்டான் என சரசு கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் போது அதை தப்புக்கணக்கு என நிரூபித்தான்.

"இதுக்கு பதில் சொல்லலேன்னா பணம் குடுக்க மாட்டீங்க அப்படித்தானே?" என்றான் ஒரு மாதிரி குரலில். இப்போது மௌனமாவது சரசுவின் முறை.

"நீங்க பணம் தர வேண்டாம் அதோட பொண்ணையும் தர வேண்டாம். அவ இங்கேயே இருக்கட்டும். உங்களுக்கு என்னிக்கு பணம் கொடுக்கணும்னு தோணுதோ அன்னிக்கு பணத்தையும் அனிதாவையும் எங்கிட்ட ஒப்படைங்க" என்றான்.

திடுக்கிட்டாள் சரசு. இது என்ன மிரட்டல்? பணம் இல்லையென்றால் அனிதாவும் வேண்டாமா? பெண் என்றால் என்ன பணம் காய்க்கும் மரமா? எந்தக் காலத்தில் இருக்கிறான் இவன்? இவனுடன் அனிதாவை அனுப்புவது நல்லது தானா? பணத்தை தொலைத்து விட்டு மீண்டும் அனிதாவைக் காயப்படுத்த மாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஆனால் எத்தனை நாள் மணமான பெண்ணை என்னுடன் வைத்துக்கொள்ள முடியும்? யோசனையில் பிரமித்து நின்றாள். எல்லாவற்றையும் கேட்டாவாறு படுத்திருந்த அனிதா எழுந்து நடக்க முடியாமல் நடந்து வந்தள்.

"அம்மா நான் திரும்பப் போகல்ல! என்னை இவரோடு அனுப்பாதே! நான் இங்கேயே இருக்கேன். எனக்கு ஏதாவது வேலை கிடைக்கும். உனக்கு பாரமா இருக்கவே மாட்டேன். என்னை இவரோட அனுப்பாதே அம்மா ப்ளீஸ் " என்று கதறியவள் அப்படியே மயங்கினாள்.

பதறிப் போனாள் சரசு. என்ன ஆச்சு என் குழந்தைக்கு? எப்படி இருந்தவளை ஒரு திருமணம் எந்தக் கோலத்தில் வைத்து விட்டது? அப்போது தான் முதல் முறையாக தான் செய்தது தவறோ என்னும் எண்ணம் சரசுவுக்கு உள்ளே நுழைந்தது.

"ஆத்தாளும் மகளும் என்னமா நடிக்கறீங்க? நீங்க கேக்குறதும் இவ மயங்கி விழுறதும் நடிகையர் திலகம் சாவித்திரி கெட்டாங்க போங்க" என்றான் இளக்காரமாக.

"வாயை மூடுங்க! உங்க மனசுல ஈவு இரக்கமே இல்லையா? என் மக கண்ணே திறக்க மாட்டேங்கறாளே? எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் டாக்டரை வரவழையுங்களேன்" என்றாள் கோபம் கெஞ்சல் எல்லாம் கலந்து,

அவன் மரம் மாதிரி நிற்கவும் இனி இவனை நம்பிப் பயன் இல்லை என்று அனிதாவை பக்கத்து நாற்காலியில் அமர வைத்து விட்டு வெளியில் வந்தாள். அந்த நேரம் மிகச் சரியாக பக்கத்து வீட்டு ஆள் வரவும் "அண்ணே! என் மக கண்ணே தொறக்காம மயக்கமா கெடக்குறா! கொஞ்சம் உதவி பண்ணுங்க" என்றாள் பயத்தில். பக்கத்து வீட்டு அண்ணன் என சரசு குறுப்பிட்ட ராமசாமி மிகவும் கண்டிப்பான சுபாவம் உள்ளவர். அனாவசியமாக யாருடனும் பேசவோ பழகவோ மாட்டார். ஆனால் அவரே அனிதாவின் நிலையைப் பார்த்து விட்டு ஒரு ஆட்டோ பிடித்து வந்தார். இருவருமாக அவளை ஏற்றி டாக்டரிடம் விரைந்தனர். மெதுவாக உணர்வு வந்தது அனிதாவுக்கு. இமைகள் அசைந்தன. மெல்ல வருடினாள் தாய்.

"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா! இதோ டாக்டர் வீடு வந்தாச்சு" என்று மகளை தேற்றிய கண்களில் இருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது. மருத்துவர் கவனமாகப் பரிசோதித்தார். அவரது முகம் இரும்பு போல காணப்பட்டது.

"என்ன டாக்டர்? ஏதாவது பிரச்சனையா?" இதைக் கேட்பதற்குள் சரசுவுக்கு வியர்த்து விட்டக்து.

"உங்க மக கர்ப்பமா இருக்காங்க" என்றாள். குபுக்கென உள்ளுக்குள் பொங்கிய மகிழ்வில் மகளை அணைத்துக்கொண்டாள் சரசு. டாக்டர் தொடர்ந்தாள்.

"ஆனா இப்ப இவங்களுக்கு விஷக் காய்ச்சல் வந்துட்டதால உள்ளுக்குள்ள இருக்குற கருவுக்கு என்ன பாதிப்பு இருக்கும்னு சொல்ல முடியாது. மூளை வளராமலோ, கை கால் முடமாகவோ ஊமையாகவோ போகறதுக்கு வாய்ப்பு இருக்கு" என்றாள்.

அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர் தாயும் மகளும். எங்களுக்கு ஏன் இப்படி சோதனைக்கு மேல் சோதனையாகக் கொடுக்கிறாய் இறைவா? உனக்கு எங்கள் மேல் இரக்கமே இல்லையா? என மௌனமாக கண்ணீர் வடித்தாள் சரசு.

"இதைப் பாருங்க! கரு வளர்ந்து இன்னும் நாப்பது நாள் ஆகல்ல! அதனால அதைக் கலைக்குறதும் ஈசி. நல்லா யோசிச்சு இன்னும் ரெண்டு நாளைக்குள்ள முடிவு எடுங்க" என்றாள் டாக்டர்.

"ஏன் மேடம்? கண்டிப்பா ஏதாவது ஊனத்தோட தான் பிறக்கும்னு நிச்சயமா சொல்றீங்களா?" என்றாள் அனிதா மெல்லிய குரலில்.

"நான் கடவுள் இல்லையேம்மா? அது மாதிரி பிறக்க 90% வாய்ப்பு இருக்கு. அதைத்தான் நான் சொன்னேன்"

"இல்லை மேடம்! இது என் முதல் குழந்தை. நான் கலைக்க மாட்டேன். எப்படி இருந்தாலும் என்னால அவனைக் காப்பாத்த முடியும். கடவுள் அருளால அவன் நல்ல முறையில பிறக்கவும் வாய்ப்பு இருக்கே?" என்றாள் கண்களை மூடியவாறு அனிதா.

அவளை ஏறெடுத்துப் பார்த்த டாக்டர் தோளைக் குலுக்கினாள். ஆனால் சரசுவை தனியாக அழைத்தாள்.

"நீங்க படிச்சவங்கன்னு பார்த்தாலே தெரியுது. அதனால சொல்றேன். இப்ப உங்க மக ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கலைக்க மாட்டேன்னு சொல்றாங்க. ஆனால் நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க. கைகால் இல்லாத, மூளை வளர்ச்சி இல்லாத அந்தக் குழந்தை பூமிக்கு வந்து என்ன பாடு படும்? அதை யாரு கவனிச்சுப்பாங்க? எவ்வளவு பணம் செலவாகும்னு தெரியுமா? எல்லாத்தையும் சமாளிப்போம்னு நீங்க சொன்னாக் கூட உங்க காலத்துக்குப் பிறகு உங்க மக கதி என்ன? அவங்க வேலைக்குப் போவாங்களா? இல்லை குழந்தையைப் பார்த்துப்பாங்களா? உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்கா?" என்று ஊசியாகக் குத்தினாள்.

வயிற்றில் புளியைக் கரைத்தது சரசுவுக்கு. புருஷனும் சரியில்லை குழந்தையும் சரியில்லை என்றால் அனிதாவின் கதி என்ன? இப்போதே தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருகிறதே? இன்னும் நாலைந்து ஆண்டுகள் கழித்து நான் போய் விட்டால் அனிதாவுக்கு யார் துணை? அவள் கணவனை எவ்வளவு தூரம் நம்ப முடியும் ? குழந்தை, அனிதா இருவரையும் அடித்துப் போட்டு விட்டுப் போனால் கூட கேட்க நாதி இருக்காதே..யோசனை செய்யச் செய்ய தலை சுழன்றது அவளுக்கு.

"நீங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க. பக்குவமாப் பேசுங்க! இன்னும் ரெண்டு நாள் டயம் இருக்கு. அதுக்குள்ள வந்துட்டீங்கன்னா எதுவும் பிரச்சனை இருக்காது. சின்ன வயசு தானே? அடுத்த ஆண்டே குழந்தை வந்துட்டுப் போகுது" என்றாள். எல்லாவற்றிற்கும் சரி சரி எனத் தலையாட்டி விட்டு மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவள் நேரே கணவனின் படத்துக்கு அருகில் சென்றாள். தன்னை மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அதனைப் பார்த்த அனிதாவுக்கு குற்ற உணர்வு குறுகுறுத்தது.

"அம்மா என்னால தானே உனக்கு இந்த நிலைமை? என்னை ஏம்மா பெண்ணாப் பெத்த? ஆம்புளைப் புள்ளையா நான் பொறந்திருந்தா இந்த நிலை இல்லேல்ல?" என்று தாயைக் கட்டிக்கொண்டு தானும் அழுதாள். மகளை அணைத்துக்கொண்டு விம்மினாள் சரசம்மாள்.

"என் கண்னே! உன்னை இப்படி ஒரு இக்கட்டுல மாட்டி விட்டுட்டேனேம்மா! "

"சும்மா கவலைப் படாதேம்மா! எனக்கு தெய்வ நம்பிக்கை நிறைய உண்டு. நான் இந்தக் குழந்தையைக் கலைக்க மாட்டேன். எனக்கு கடவுள் எப்பவும் நல்லது தான் செயவரு. கண்டிப்பா ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் பாரு" என்றாள்.

"அப்படி இல்லைன்னா என்ன ஆகும் அனிக்கண்ணு? கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா"

"நான் அதைப் பத்தி யோசிக்கவே போறதில்ல." என்று வாக்கு வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். நாட்கள் சில சென்றன. அன்று அனிதா மயங்கி விழும் போது வெளியேரீய ஆனந்தன் அதன் பிறகு வரவேயில்லை. அனிதாவின் உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல முன்னேற்றம். தாய் சுவையாக சமைத்ததை விரும்பி உண்டாள். தனக்கு ஒரு வேலை கிடக்குமா என அவள் பார்த்த போது கோபமானாள் சரசு.

"உன்னை உக்கார வெச்சு சோறு பொடுற அளவு நான் சம்பாதிக்கறேன் அனிதா! பிள்ளைத்தாய்ச்சிப் பொண்ணு நீ வேலைக்குப் போக வேண்டாம் என தடுத்து விட்டாள்" அனிதாவும் சரியென இருந்து விட தாயும் மகளும் நிம்மதியாகக் காலம் கழித்தனர். மாதம் ஒன்று ஓடியது. ஞயிற்றுக்கிழமை கருவுற்றிருக்கும் மகளுக்கு நெத்திலி மீன் நல்லது என சொல்லி வைத்து வாங்கி அதை குழம்பு வைத்துக்கொண்டிருந்தாள் சரசு. திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தவனைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது இருவருக்கும். வந்தவன் ஆனந்தன் தான். ஆனால் அவனது தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. பத்து நாள் தாடி, கண்கள் குழி விழுந்து இளைத்துக் கருத்துக் காணப்பட்டான்.

"என்ன ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் மனைவி. அவள் குரலில் கடமை உணர்வு மாத்திரமே. அதற்காகவே காத்திருந்தானோ என்னவோ அவளைக் கட்டிக்கொண்டு ஓவென அழுதான். ஏனோ இந்த நாடகம் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை அவளுக்கு.

"என்ன விஷயம்? எதுக்கு இப்படி அழுறீங்க?" என்றாள் கடுமையாகவே.

"அனிதா என்னை மன்னிச்சிரு. அத்தை நீங்களும் என்னை மன்னிசிருங்க! இந்த ஒரு மாசத்துல உங்க அருமை எனக்கு தெரிஞ்சு போச்சு. இப்ப என்னை கவனிக்க ஆளில்ல. ஒரு வாய்ச் சோறு போட ஆளில்ல" என்றான். அவனை அமர வைத்தாள் அனிதா. சரசு கொடுத்த காப்பியை ரசித்துக் குடித்துக்கொண் டே சொல்லத் தொடங்கினான்.

சொந்தமாக காசை வைத்து ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன். நல்ல இடமும் பார்த்து வெச்சிட்டேன். எங்கம்மாவோட நகையை வித்து முன் பணமும் கொடுத்தாச்சு. ராஜபாளையத்துல இருந்து மில் துணிகளை வாங்கி தெங்காசி ரெடிமேட் தோழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யுறது தான் நான் தேர்தெடுத்த தொழில். இடம் இருக்கு வாடிக்கைக்காரங்க இருக்காங்க. ஆனா சரக்கு மட்டும் இல்லை. ஒரு முதலாளி கிட்டப் போயி கடனா சப்ளை செய்ய முடியுமான்னு கேட்டேன். என்னவோ தெரியல்ல என்னைப் பத்தி சொன்னதும் உடனே ஒத்துக்கிட்டாரு. ஆனா காப்புப்பணமா ஒரு லட்சம் கட்டச் சொல்றாரு. அதுக்கு முயற்சி செய்துக்கிட்டு இருக்கும் போது தான் எனக்கு ஆக்சிடெண்ட் ஆயிரிச்சு" என்றான். அதற்கு ஆதாரமாக கால் காயத்தையும் காட்டினான். பெரிதாக கட்டுப்போட்டிருந்தது.

"கால் காயம் பட்டு நான் படுத்துக்கெடந்த போது தான் எனக்கு உன் அருமை தெரிஞ்சது அனி! எவ்வளவு அன்பா நீ என்னை கவனிச்சுக்குவ? ஆனா நான் உன்னை மிருகம் மாதிரி அடிச்சு திட்டி சே" என்று தலையில் அறைந்து கொண்டு அழுதான். அனிதாவும் பாவமாக தாயைப் பார்த்தாள். அவளும் சற்றே இளகித்தான் இருந்தாள். ஆனாலும் கண்டிப்பை விடவில்லை.

"இப்ப என்ன பணத்தையும் வாங்கிட்டு அனிதாவையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்திருக்கீங்க அப்படித்தானே?" என்றாள். அவளே எதிர்பாராமல் ஆனந்தன் அப்படியே சரசுவின் காலில் விழுந்தான். பயந்து இரண்டடி பின் வாங்கினாள் சரசு.

"நீங்க என் தாய்க்கு சமம். என்னை எப்படி வேணும்னாலும் பேச உங்களுக்கு உரிமை இருக்கு. நான் எவ்வளவு கொடுமைக்காரானா இருந்திருக்கேன்னு எனக்கே தெரியும். ஆனா நான் இப்ப வந்தது அனிதாவைக் கூட்டிக்கிட்டுப் போக மட்டும் தான். பத்து காசு கூட உங்களைக் கேக்கல்ல" என்றான் ஆனந்தன். திகைத்துப் போய்ப் பார்த்தாள் சரசு டீச்சர்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இத்தனை துயரமான கதையை படிக்க தயங்க வேண்டி உள்ளது. மனம் கனத்து தூங்க முடியாது போகிறது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top