• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kaivalaiyaay.....Episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 3.

கணவன் அப்படிச் சொன்னதும் மனதுக்கு சற்றே தெம்பு வந்தது.அந்த காற்றோட்டமே இல்லாத வீட்டிலிருந்து கொஞ்ச நேரமாவது விடுதலை கிடைக்கும். அவளது சம்பளமும் சேர்ந்தால் நல்ல வசதியான வீடாகப் பார்க்கலாமே? என்று யோசனை செய்து கொண்டாள்.

ஆனந்தும் சொன்னபடியே பல இடங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் கொடுத்தான். அம்மா தந்து அனுப்பியிருந்த பணம் முழுவதும் கரைந்து விடும் நிலை வந்தது.

"என்னங்க! எங்கிட்ட இருந்த பணம் எல்லாம் தீரப் போகுது. உங்க சேமிப்புல இருந்து ஆயிர ரூவா குடுங்க. வீட்டுக்கு சில சாமான் வாங்கணும்"

"எனக்கு சேமிப்பா? இனிமே தான் ஆரம்பிக்கணும். ஆரம்பிச்சதும் தரேன் என்ன? இப்போதைக்கு எங்கியாவது கடன் வாங்கிக்கோ. அதையும் கூடிய சீக்கிரம் அடைச்சிடலாம். நாளைக்கு உன்னை பெரிய கடை முதலாளி இண்டர்வியூவுக்கு வரச் சொல்லியிருக்காரு" என்றான்.

தென்காசி நகரின் மிகப்பெரிய ஜவுளிக்கடை அது. மூன்று மாடிகளில் பல விதமான துணிகளோடு வாடிக்கையாளர்களை இழுக்கும் அந்தக் கடை. தையற்கடையும் சேந்தது .

"அங்க என்ன வேலை எனக்கு? சேல்ஸ் கேர்ள் வேலையெல்லாம் நான் பார்க்க மாட்டேன்"

"இல்ல அனி! இது அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல வேலை. நீ எம் காம் படிச்சிருக்க இல்லியா? அதனால உன்னை அக்கவுண்ட்ஸ் செக்க்ஷன் இன் சர்ஜா போட்டுடறேன்னு சொல்லியிருக்காரு முதலாளி. நாளைக்குக் காலையில பத்து மணிக்கு இண்டெர்வியூ" என்றான்.

கடன் வாங்காமல் இருப்பதை வைத்து ஒப்பேற்றினாள். மறு நாள் காலை சொன்னது போலவே தனது டூவீலரில் அழைத்துச் சென்றான். மெயின் ரோட்டில் அமைந்திருந்த அந்த பெரிய கட்டிடத்துக்குள் பயந்து பயந்து நுழைந்தாள். பல கேள்விகள் கேட்டார் முதலாளி. எல்லாவற்றிற்கும் திருப்திகரமாக பதிலளித்தாள். அப்போதே ஒரு ஸ்டேட்மெண்டையும் தயார் செய்து காண்பித்தாள்.

"சரிம்மா! உன் வேலை எனக்குப் பிடிச்சிருக்கு! வர மாசம் ஒண்ணாம் தேதியில இருந்து வேலைக்கு வா! மாசம் 15,000 தரச் சொல்றேன். ஆனா அதுல 5000 உன் புருஷன் வாங்குன கடனுக்கு கழிச்சுப்போம். "

திக்கென நிமிர்ர்ந்தாள்.

"அவரு கடன் வாங்குனாரா?"

"ஆமா! எங்கிட்ட கல்யாணச் செலவுக்குன்னு 50,000 ரூவா வாங்கிகிட்டுப் போனானே? வாங்கும் போதே நான் கட்டிக்கப்பொற பொண்ணு எம் காம் படிச்சுருக்கு அண்ணாச்சி! அதை உங்க கடையில வேலைக்கு அனுப்புதேன்னு சொன்னானே! அதை நம்பித்தான் நான் கடன் குடுத்தேன்." என்றார்.

மனதில் பெரும் பாரத்தை ஏற்றி வைத்தது போல இருந்தது அனிதாவுக்கு. இதை ஏன் என்னிடம் முதலில் சொல்லவில்லை என்று அவரைக் கேட்க வேண்டும் என்ற யோசனையோடு கணவனை நெருங்கினாள் அனிதா.

அனிதா வேலைக்குப் போக ஆரம்பித்து மாதங்கள் மூன்று ஓடி விட்டன. காலையில் பொறுப்பாக ஒன்பதரைக்கு அவளைக் கொண்டு விடுவான். அவள் கணக்கு வழக்குகளை சரி பார்த்து டேலி செய்து விட்டுப் புறப்பட எப்படியும் ஏழு மணியாகி விடும். மிகச் சரியாக வண்டியோடு காத்திருப்பான். சம்பள நாள் அன்று அவன் கைகளுக்குப் போய் விடும் முழுச் சம்பளமும். அண்ணாச்சி சொன்னது போலவே 5000 பிடித்துக்கொண்டு தான் கொடுத்தார். வேலை கிடைத்த அன்று அண்ணாச்சி கடனைப் பற்றிக் கூறியதும் அதை அவள் ஆனந்திடம் கேட்டதும் ஒவ்வொரு சம்பள நாளும் நினைவுக்கு வரும்.

வேலை கிடைத்த சந்தோஷத்தை விட கணவன் கடன் வாங்கியது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வீடு வந்ததும் எல்லா விவரத்தையும் சொல்லி வேலை கிடைத்த விவரத்தைதையும் சொன்னாள். அவள் எதிர்பார்த்தது போல எந்த அதிர்ச்சியும் காண்பிக்கவில்லை அவன்.

"எப்படியோ மாசம் 10000 வருதுல்ல?" என்றான்.

"ஏங்க நீங்க எதுக்குக் கடன் வாங்குனீங்க? கல்யாணச் செலவு முழுக்க எங்க அம்மா தானே ஏத்துக்கிட்டாங்க? அப்புறம் உங்களுக்கு என்ன செலவு?" என்றாள்.

"என்னடி? ரொம்ப வாய் நீளுது? இந்த வீட்டை பிடிக்கணும் அதுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். இதுக்கெல்லாம் பணம் உங்கம்மாவா குடுத்தாங்க?"

"இந்த வீட்டு வாடகை 1200 ரூவா பத்து மாச அட்வான்ஸ்னாலும் 12,000 ரூவா தானே ஆச்சு. 50,000 என்ன செலவு?"

எதுவும் பேசாமல் அவளை நெருங்கி வந்தான். பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவளது கழுத்தைப் பிடித்தான். பிடி அழுத்தமாக இருக்கவே மூச்சுக்காற்றுக்குத் திணறி இருமவும் முடியாமல் தவித்தாள் அனிதா.

"நான் ஆம்பளை! எனக்கு ஆயிரம் செலவு இருக்கும். இதையெல்லாம் பொட்டச்சி கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல! பொண்ணா லட்சணமா பொங்கிப்போட்டுக்கிட்டு இரு. இல்லை அனாவசியமா என்னை கொலைகாரன் ஆக்காதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே அவளுக்கு இரு தினங்கள் பிடித்தன. அன்றிலிருந்து இன்று வரை அவள் வாயே திறப்பதில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது அம்மாவிடம் என்ன பேச? அவளை எப்படி இங்கே வரச் சொல்ல? இந்த மூன்று மாதங்களில் அவள் ஆனந்தனைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டாள். அதுவும் உடன் வேலை செய்பவர்கள் மூலமாகத் தான். அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் அவளுக்குக் கீழே மொத்தம் மூன்று பேர் வேலை செய்தனர். சரவணன் இளைஞன் அவன் பி காம் முடித்து விட்டு உடனே வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு அடுத்து நீலா அவள் வெறும் +2 ஆனால் கெட்டிக்காரி. பில் பொடுவாள். மூன்றாவதாக இருப்பவர் தான் ராஜாராமன். அவனுக்கு வயது 35 இருக்கலாம். பெரிய சொத்துக்காரர். வீட்டில் சும்மா இருந்தால் போரடிக்கும் என்று ஜாலிக்காக வேலை செய்ய வந்தவர். அவர் பெயரில் ஒரு பெட்ரோல் பங்கும், அவர் மனைவி பெயரில் சில வீடுகளும் இருந்தன. எல்லாவற்றையும் அவர் மனைவி பார்த்துக்கொள்ளுகிறாள் என்பதால் ராஜாராமன் கவலை இன்றி வேலை செய்தார் . சரியான பெண்டாட்டி பிரியன்

"சுவர்ணா செய்த சாம்பார், அவ செய்த பூவேலை என்று எதையாவது சொல்லுவார். "எங்க சுவர்ணா மாதிரி பொண்ணு கிடையாது மேடம். அவளுக்கு எல்லாமே தெரியும் என்பான். அவர் சொல்லுவதற்கு ஏற்ப அவர் மனைவியும் கணவனை அப்படித்தான் பார்த்துக்கொண்டாள். சரியாக மதியம் 1:30 ஃபோன் வரும். சாப்டீங்களா? தண்ணி குடிச்சீங்களா? வெயில்ல போகாதீங்க என்று சொல்லுவாள். ஃபோன் வரவில்லை என்றால் ராஜாவும் தவித்துப் போய் விடுவார். அவர்களது அன்பைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும் அனிதாவுக்கு. கணவன் மனைவிக்குள் இப்படிக் கூட அன்பு இருக்குமா? என்று வியந்து போவாள். ஏனோ அவள் மனம் தன் வாழ்க்கையை நினைத்து வேதனைப் படும்.

தன் கணவன் ஒரு ஊதாரி, சோம்பேறி என்ற உண்மைகளை சிறிது சிறிதாக தெரிந்து கொண்டாள். எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க மாட்டான் எதிலும் பொறுப்புணர்வு கிடையாது என்று புரிந்து கொண்டாள்.

"மேடம்! உங்க வீட்டுக்காரர் இங்க கூட வேலை செய்தாரு. ஆனா ஏனோ தெரியல்ல மூணு நாளுக்கு மேல வரல்ல! அண்ணாச்சி கேட்டதுக்கு எனக்கு வேற வேலை கெடச்சுட்டுதுன்னு சொல்லிட்டாரு" என்றாள் நீலா.

அப்போது ஏன் அவரை நம்பி அண்ணாச்சி கடன் கொடுக்க வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை உதறி வேலையில் ஆழ்ந்தாள். அவளைக் கூட்டிப் போவதும் கொண்டு விடுவதுமே தன் வேலை என்பது போல நடந்து கொண்டான் ஆனந்த். பத்தாயிரம் சம்பளத்தில் எப்படி இந்தக் காலத்தில் குடும்பம் நடத்த முடியும்? பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்தாள்.

"என்னங்க? ராஜா இருக்காருல்ல அவருக்கு பெட்ரோல் பங்கை பார்த்துக்க ஆள் வேணுமாம். சுவர்ணா முழுகாம இருக்குறதால இனிமே அவங்களால எல்லத்தையும் கவனிச்சுக்க முடியாதுன்னு சொன்னாரு. "

"எவ முழுகாம இருந்தா எனக்கென்ன? இதை எதுக்கு எங்கிட்ட சொல்ற?"

"நீங்க அந்த வேலைக்குப் போனா என்ன? ராஜா கிட்ட சொல்லி நான் வாங்கித்தரேன். அப்படி ஒண்ணும் கஷ்டமான வேலை இல்லையாம். தினமும் பங்குக்குப் போகணும். பணத்தை கரெக்டா ஹேண்டில் பண்ணனும், கொள்முதல் ரெஜிஸ்டரை மேயிண்டெய்ன் பண்ணனும். அவ்வளவு தான். மாசம் 12000 தரேன்னு சொல்றாங்க. என்ன போறீங்களா?"

"உனக்கு அப்படிப் பணம் வேணும்னா உங்க அம்மா கிட்ட கேட்டு வாங்கிக்கோயேன். ஏன் என்னை வேலைக்குப் போகச் சொல்ற?"

சட்டென கோபம் வந்தது.

"நீங்க பேசுறது நல்லாவே இல்ல! எதுக்கெடுத்தாலும் நான் ஆம்பிளை ஆம்பிளைன்னு பேசுறீங்க இல்ல? அப்ப ஆம்பிளையா லட்சணமா சம்பாதிச்சுட்டு வர வேண்டியது தானே? அதை விட்டு என் சம்பளத்தையும் என் எங்கம்மா சம்பளத்தையும் ஏன் எதிர்பார்க்கறீங்க?" என்றாள்.

அவள் பேசி முடிக்கும் முன்னே பாத்திரம் ஒன்று அவள் தலையைப் பதம் பார்த்தது. அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் சரமாரியாக அடி விழுந்தது அவளுக்கு.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இப்படி பட்ட கணவன் தேவையா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top