• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karigaiyin kanavu -11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது தான் பக்கத்து வீட்டு சரஸ்வதி அக்கா வந்தாள்.
"அட சாப்பிட்டு கொண்டு இருக்கீங்க மன்னிக்கவும் உள்ளே நுழைந்ததற்கு"என்று கூற தமிழின் தாய் அவரை உள்ளே அழைத்து "அட பரவாயில்லை உள்ள வா சரஸு நீயும் ஒருவாய் சாப்பிடு மணக்க மணக்க கறிகுழம்பு வச்சிருக்கேன்" என்று கூறி புன்னகையிக்க சரஸ்வதி இது தான் சரியான வேளை என்பதுபோல் வந்து தமிழின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.

"அக்கா...உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமேனு வந்தேன்" என்றிழுக்க அதை காதில் வாங்கியபடி அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க..அவளோ அவர்களை நோக்கி "அது வந்து என் மச்சினர் பொண்டாட்டிக்கு இப்பதான் குழந்தை பிறந்திருக்கு. தொப்புள்கொடி விழுற நேரம். தமிழ் மாதிரி குழந்தை இல்லாதவர்கள் அந்த பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வாழைப்பழத்தில் வைத்து விழுங்கினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று என் வீட்டு ஆளுங்க பேசிக்கிட்டாங்க அதான் உங்கள் கிட்ட சொல்லி பார்க்கலாமேனு வந்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் கலையரசி குறுக்கிட்டாள்...

"ஹலோ சரஸக்கா எந்த காலத்துல இருக்கீங்க இன்னுமும் இந்த மூடநம்பிக்கை எல்லாம் நம்பிட்டு இருக்கீங்க? இன்னமும் ஏன் இதையெல்லாம் பின்பற்றி வருகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியல"என்று ஆதங்கத்துடன் வினவ..

சரஸ்வதி கை கழுவியபடி "கலை நீ சின்ன பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது. பெரியவங்க நாங்க பேசிக்கிறோம் நீ அமைதியா இரு" என்று கூற..

"அக்கா இங்க பாருங்க நானும் உலகம் அறிந்தவள் தான் எது நியாயம் தர்மம். என்று எங்களுக்கு தெரியும். ஆமாம் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சாப்பிட்டு குழந்தை பிறந்ததை நீங்க கண்கூட பார்த்தீங்க? சரி அதெல்லாம் இருக்கட்டும் அப்போ இந்த மருத்துவம் விஞ்ஞானம் எல்லாம் எதுக்கு?நாமளே இந்த மாதிரி வீட்டு வைத்தியம் வச்சிக்கிட்டு எல்லாம் நோய்களையும் குணப்படுத்தலாமே..சை என்ன உலகம் டா இது? இந்த 21ம் நூற்றாண்டில் கூட இப்படி ஓர் மூடர்கூடம் இருக்கத்தான் செய்றாங்க" என்று தனக்குள் முனவிக்கொண்டே ஆதங்கப்பட்டாள்.

"சரி சரி எனக்கு என்ன போச்சு சொல்றது சொல்லியாச்சு நான் கிளம்புறன்.." வந்ததுக்கு கறிகுழம்பு கமகமக்க சாப்பிட்டது லாபம் என்ற தோரணையில் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

பாதி சாப்பாட்டில் எழுந்த தமிழ்ச்செல்வியை அமரும்படி எல்லோரும் கூற கண்கலங்கியபடி "எனக்கு குழந்தை இல்லைனு தானே ஆளாளுக்கு ஏதேதோ சொல்லிட்டு போறாங்க..கடவுள் என்னை ஏன் இப்படி சோதிக்கனும்?" என்று வருத்தப்பட்ட அக்காளை சமாதானம் செய்ய முற்பட்டாள் கலை.

"தமிழ்..இங்கப்பாரு உன் கஷ்டம் எனக்கு புரியுது. வந்தவங்க ஏதோ சொல்லிட்டு போறாங்க இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுடு அக்கா... ஒரு பொண்ணுக்கு குழந்தை இல்லைனா போதும் சுத்தி இருக்கிற அனைவரும் கைனகாலஜிஸ்டா ஆகிடுறாங்க என்ன பண்றது நம்ப உலக வழக்கு அப்படி.. விடு அக்கா நீ முதல்ல சாப்பிடு..என்று உருண்டை பிடித்து தன் அக்காளுக்கு ஊட்டினாள்.அவள் கொடுத்த உருண்டையை வாயில் வாங்கியவாறு தாயுமானவளாய் இருக்கும் தங்கையை உற்று நோக்கினாள்.

"மா இன்னைக்கு கறிகுழம்பு வச்ச நேரம் சரியில்லை பேசாம இதெல்லாம் ஓரங்கட்டு இரவு உணவுக்கு ஹைதராபாத் பிரியாணி ஆர்டர் பண்ணிக்கலாம்" என்று குறும்புடன் கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.

இப்படி கலகலவென்று பேசவும் தனக்கு உறுதுணையாக இருப்பதற்கும் ஆளில்லாமல் தான் பலர் மன இருக்கத்திற்கு ஆளாகின்றனர்...முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம் என்பதை உணர்ந்தவளாய் தமிழ்ச்செல்வி ஒருமுடிவுக்கு வந்தாள். தன் வீட்டிற்கு மேலே உள்ள போர்ஷன் சும்மா தானே பூட்டி கிடக்கு, கலையரசியிற்கு கல்யாணம் ஆனபிறகு அவளை அங்கு குடித்தனம் வைத்தால் தான் என்ன என்பது போல் யோசிக்க இதற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற யோசனையும் இருந்தது.

"தமிழ் நான் ஒன்று சொன்னால் தப்பா நினைக்க மாட்டல" என்று கலையரசி கேட்க என்ன என்பது போல் அவளை நோக்க அவளோ "அது வந்து கல்யாணம் ஆகிட்டு அந்த மேல் போர்ஷன் எனக்கு தருகிறாயா, குடியிருக்க" என்று கேட்ட மறுகணமே "ஏய் இது என்னடி கேள்வி உனக்கு தராமலா..சும்மா பூட்டி கிடக்கு இதை உனக்கு தருவதில் எனக்கு சந்தோஷம் தான்" என்று கட்டியணைத்து சொல்ல..

அக்கா தங்கை இருவரும் ஒற்றுமையாக இருந்தால் சந்தோஷம் தானே என்பது போல் பெற்றோர் "நல்லாயிருக்கட்டும் புள்ளைங்க"என்று ஆசிர்வதித்து விட்டு இடத்தை விட்டு நகர்ந்தனர்.

....
திங்கள் கிழமை அதிகாலை அது, ஆம் அமுதன் சொன்ன நாளும் இது தான். குளித்து முடித்துவிட்டு தயாராக அமர்ந்திருந்தாள்.

"என்ன டி இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட" என்று தாய் கேட்க "ஆமாம் மா இன்னைக்கு வீட்டுக்காரு அழைச்சிட்டு போக வருவாறு" என்று வெட்கத்துடன் கூற அவளின் வெட்கம் தாயிற்கு புரிந்தது .கணவனை சந்திக்கும் ஆவல் அவளிடம் இருப்பதை உணர்ந்து "சரி சரி இந்தா காபி குடி" என்று கொடுக்க அவளும் அதை வாங்கி பருகிய நேரம் அமுதனும் உள்ளே நுழைந்தான்.

"அத்தை தமிழை அழைச்சிட்டு போக வந்திருக்கேன். இன்னைக்கு சேனலுக்கு வேற கூட்டிட்டு போகனும் அதான் சீக்கிரமே வந்துட்டேன்"என்று கூற

"அட என்ன மாப்பிள்ளை நீங்க உங்கள் மனைவியை அழைச்சிட்டு போக எங்க கிட்ட எதுக்கு விளக்கம் சொல்றீங்க"என்று புன்னகையிக்க சரிங்க அப்போ நாங்க கிளம்புறோம் என்று கூறிவிட்டு விடைபெற்று சென்றனர்.

அமுதனின் பின்னே பைக்கில் அமர்ந்துக்கொண்டு சைகையால் தாயிற்கு பை சொல்லிவிட்டு கிளம்பினாள்.
"கடவுளே என் பொண்ணுங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்" என்று மனதில் இஷ்டதெய்வத்தை வேண்டிவிட்டு தனது அன்றாட வேலையை கவனிக்க துவங்கினார்.

"அமுதன் சேனல் இன்னும் எவ்வளவு தூரம்"? என்று கேள்வி கேட்டாள் அவன் தோளில் கைப்போட்டபடி.

"கொஞ்சம் தூரம் தான் போயிடலாம்.. வெயிட் பண்ணு என்று கூற"..

"சரி சரி...நான் இல்லாத இந்த இரண்டு நாள் உங்களுக்கு எப்படி போச்சு"..என்ற கேள்வி கேட்பதற்கும் அமுதனின் கைப்பேசி அழைப்பதற்கும் சரியாக இருந்தது..

எதிர்முனையில்...

தொடரும்.
 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top