karigaiyin kanavu -15

#1
அமுதனுக்கு எல்லாம் புரிந்தது இது வெறும் அவளுடைய தடுமாற்றமே என்று..
"மேகா உனக்கு இருக்கிற இந்த தடுமாற்றம் எல்லாருக்குமே உன் வயதில் இருந்தபோது வந்திருக்கலாம்..இங்க பாரு இதெல்லாம் திடிரென என்கூட பழகுறது காரணமாக வந்த குழப்பம் தான். என்கூட தான் க்ளோஸா பழகுறதா நீ சொன்ன இல்லையா! இதற்கு காரணம் என்னிடம் உனக்கு இருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு மற்றவர்களிடம் உனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்"என்று அவளுக்கு அறிவுரை கூற அதை ஏற்று கொண்டவள் போல் தலையசைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவனும் சற்று இளைப்பாற மொட்டை மாடியிற்கு வந்தான்.

'தமிழு உன்னை மாதிரியே ஒரு நல்லவளை இந்த ஊரில் நான் பார்த்துட்டேன்..ஆனால் அவள் வெறும் தோழியே'என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் மழை தூவ ஆரம்பித்தது. மாடியில் உலர்த்திய துணிகளை எடுக்க வந்தாள் மேகா...

இன்னும் மழைத்தூரலில் நினைந்து கொண்டிருக்கும் அமுதனை பார்த்து "மிஸ்டர் அமுதன் உள்ள வாங்க ஏன் மழையில் நனையிறிங்க" என்று பிடித்து இழுக்க...கையை உதறியவன் "மழையில் நனையாத வாழ்க்கை எல்லாம் ஓர் வாழ்க்கையா..இதெல்லாம் அனுபவிக்கனும் மேகா" என்றபடி முகத்தை மேல்நோக்கி வானத்தை பார்த்தபடி மழையில் நினைய மேகாவோ கையில் இருந்த துணிகளை ஓரமாக வைத்துவிட்டு தானும் நனைந்தாள்.

அவள் நனைய நனைய அவள் மனதில் இருந்த குழப்பங்களும் நீரோடு நீராக கரைந்து போனது...சிறிது நேரத்தில் மழைவிட்டுபோக மேகா அமுதனருகே வந்து "அமுதன் இனிமே நீங்க எனக்கு ஒரு நல்ல ப்ரண்டு.. என்ன ஓகேவா" என்று கைகளை நீட்ட அவனோ புன்னகையித்தபடி அவள் கைகுலுக்கி ப்ரண்ட்ஸ் என்று கூற இருவருக்கும் இருந்த நட்பு இன்னும் வலுப்பெற்றது.

........
'மும்பையில் பலத்த மழை பெய்யக்கூடும்' என்ற செய்தியை டிவியில் பார்த்தவள் அவனுக்கு போன் செய்தாள் தமிழ்ச்செல்வி "என்னங்க மும்பையில் மழையாமே..பார்த்துங்க ரொம்ப நனையாதிங்க ஜலதோஷம் பிடிச்சிரும்" என்று கரிசனத்தோடு கூற அதை கேட்டு சிரித்தவன்
"என்னடி நீயும் மேகா மாதிரியே சொல்ற" என்று எதர்ச்சையாக மேகாவின் பெயரை பயன்படுத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

"ஆமா யாருங்க அது மேகா" என்று வினவினாள் சற்று ஆச்சரியத்துடன்.

"ஓ..உனக்கு சொல்லவேயில்லை மறந்துட்டேன். நான் மும்பையில் ஓர் தமிழர் குடும்பத்தில் வசிக்கிறேன் சொன்னேன்ல அவங்க பேரு மேகா,அவங்களும் அவங்க பாட்டியும் தான் வீட்டில் இருக்கிறாங்க அதான் என்னை இங்கேயே இருக்க சொல்லி ..நானும் இங்கேயே தான் இருக்கேன்"என்றான் மொத்த விவரத்துடன்.

"ஓ..." என்றபடி அமைதியானாள். அவளுடைய மௌனத்திற்கு காரணம் அவனால் அறிய முடியவில்லை.."என்னடி ஆச்சு ஏன் திடிரென அமைதியாக ஆயிட்ட" என்று கேட்க..

"ஒன்றுமில்லை நான் போனை வைக்கிறன்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு தன் இருகால்களையும் சேர்த்து கையோடு கோர்த்து சுவற்றில் சாய்ந்தபடி "அமுதன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறக்க ஆரம்பிச்சிட்டிங்க போலருக்கு.. மேகா மாதிரியே என்ற வார்த்தை எனக்குள் குத்துகிறது..அது எப்படி நீங்க அப்படி ஒப்பிடலாம்."என்று தனக்குள் அவனிடம் கேள்வி கேட்டவாறு இருக்க...மணி மதியம் மூன்றை தாண்டியது. விருவிருவென எழுந்து சிங்கில் இருந்த பாத்திரங்களை அலம்பிட்டு தன் உடையை மாற்றிக்கொண்டு தன்னுடைய பகுதிநேர வகுப்பிற்கு தயாரானாள்.

பேருந்து நிறுத்ததிற்கு வந்து நின்றவளுக்கோ மீண்டும் அமுதனின் நினைவு எட்டிப்பார்த்தது 'பதிலே சொல்லாமல் போனை வச்சிட்டோமே எதாவது தப்பா எடுத்துப்பாரோ' என்ற டென்ஷன் வேறு இவள் போன் எடுத்து பேச முற்பட்டபோது பேருந்து வந்து நின்றது.
ஏறி சீட்டில் அமர்ந்து கண்டக்டரிடம் யுனிவர்சிட்டிக்கு ஓர் டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அதை பையில் வைத்துக்கொண்டு மீண்டும் அமுதனிற்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் தற்போது அவன் அழைப்பை எடுக்கவில்லை.

'ஒரு வேளை பிஸியா இருப்பாரோ' என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு யுனிவர்சிட்டியின் வாயலினுள் வந்து இறங்கினாள். திடிரென அவளை யாரோ அழைத்தது போல இருந்தது...

"தமிழு"..என்று.

திரும்பி பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி அங்கு நிற்பது வேறு யாருமில்லை உதயன்.
"என்ன உதயன் இந்த பக்கம்? நீ டிஸ்கன்டினியூ பண்ணிட்டேனு கேள்வி பட்டேன். அப்போ எப்படி இந்த பக்கம்"?என்று கேட்க அவனோ புன்னகையிக்க..

"சொல்லு டா சிரிக்காதே" என்றாள்.

"உன்னை பார்க்க தான் இந்த பக்கம் வந்தேன்"என்றான் அவன்.

"என்னை பார்க்கவா"?என்றாள் சற்று நிதானமாக.

"ஆமாம் ...இவ்வளவு நாள் உன்னை பார்க்காமல் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் மனைவி தான். சரியான சந்தேகம் பிடிச்சவ ,அவளை தவிர எந்த பொண்ணு கிட்டயும் பேசக்கூடாது என்று கட்டளையிடுவாள். என்னால மத்த பொண்ணுங்களை அவ தப்பா நினைக்ககூடாது என்று தான் நான் பேசாமல் இருந்தேன். இப்ப அவள் அம்மா வீட்டுக்கு ஊருக்கு போயிருக்கா அதான் ரொம்ப நாள் ஆச்சே என்று உன்னை பார்த்துட்டு போலாமேனு வந்தேன்" என்று சொல்லி முடித்துவிட்டு தன் கையிலிருந்த காஜுகத்லி இனிப்பு பாக்ஸை அவளிடம் கொடுத்தான்..உனக்கு பிடிக்குமேனு வாங்கிட்டு வந்தேன்" என்று கூறி அவளிடம் கொடுக்க அதை வாங்கியவள் "தேங்க்ஸ் ஆனால் இனிமே இப்படி பார்க்க வராத டா உதயா..உன் மனைவிக்கு தெரிந்தால் அது இன்னும் பிரச்சினை அதிகபடுத்தும். உன் வாழ்க்கைக்கு எமனாகிடும்..ப்ளீஸ் இனிமே உன் மனைவி அனுமதி இல்லாமல் எந்த பொண்ணையும் சந்திக்க போகாதே" என்று அறிவுரை கூறிய தமிழ் "ஓகே பை நான் கிளாஸ்க்கு கிளம்புறன்" என்று விடைபெற்று சென்றாள். அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த உதயன் "உன்னை மாதிரி ஒரு ப்ரண்டு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கனும். என்னோட நலனை புரிந்து கொண்டு பேசுற பாரு... ப்பா சேன்ஸே இல்லை டி" என்று அவளை மனதிற்குள் புகழ்ந்தான்.

உதயனிடம் பேசிவிட்டு வகுப்பிற்கு உள்ளே வந்தவள் தன் இருக்கையில் அமர்ந்து எதையோ யோசிக்க துவங்கினாள். வகுப்பில் சற்று நேரத்தில் பேராசிரியரும் உள்ளே நுழைந்து பாடம் எடுக்க துவங்கினார்.
பாடம் எதுவும் அவள் செவிகளில் கேட்கவில்லை தன் மனம் வேறு எங்கோ சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவள் அதை கட்டுக்குள் கொண்டு வந்து பாடத்தை கவனிக்க துவங்கினாள்.

உதயனின் நலனை கருதி அவனிடமிருந்து விலகியிருக்கும் என்னைப்போல் அமுதனின் வாழ்க்கையை கருதி மேகா விலகியிருப்பாளா? என்ற குழப்பம் நீரோடை போன்று ஓடிக்கொண்டிருந்தது.

தொடரும்
 
#5
எனக்கு வந்த சந்தேகம்தான் தமிழுக்கும் வந்திருக்கு
அமுதனுக்கு ஏன் இந்த வீண் வேலை?
மேகா வீட்டில் தங்கியது என்ன விபரீதத்தைக் கொண்டு வரப் போகுதோ?
அமுதனின் குழந்தைக்கு மேகா அம்மாவாகிவிடுவாள்ன்னு தோணுது, பாக்யா டியர்
அப்போ தமிழ்ச்செல்வியின் நிலை?
 
#6
எனக்கு வந்த சந்தேகம்தான் தமிழுக்கும் வந்திருக்கு
அமுதனுக்கு ஏன் இந்த வீண் வேலை?
மேகா வீட்டில் தங்கியது என்ன விபரீதத்தைக் கொண்டு வரப் போகுதோ?
அமுதனின் குழந்தைக்கு மேகா அம்மாவாகிவிடுவாள்ன்னு தோணுது, பாக்யா டியர்
அப்போ தமிழ்ச்செல்வியின் நிலை?
Tamil selvi life spoil agadhu sis...Amudhan true ah than irukan . Megha ku oru chinna confusion . Namba romba nerungi pazhagum nu adhan appadi😁
 
Advt

Advertisements

Top