Karigaiyin kanavu - 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

Author
Author
Joined
Jul 29, 2019
Messages
124
Reaction score
259
Points
63
Location
Tamilnad
Final episode :

நான்கு வருடம் கழிந்தது....

அந்த அழகான செம்மண் பூமியின் தக்காளி செடிகளிலிருந்து பறித்துக்கொண்டிருந்தாள் நம் குட்டி தேவதை குழலி. அந்த பிஞ்சு கைகள் தக்காளியை பறித்தவாறு எடுத்து ஒரு கூடைக்குள் போட்டுக்கொண்டு இருந்தது. அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

"ஹே...தமிழு இங்கே வாயேன் இந்த தக்காளி பாரேன் எப்படி இருக்குனு" என்று அந்த மூன்று வயது தேவதை தன் தாய் தமிழ்ச்செல்வியை அவ்வாறு அழைக்க ,அவள் சிரித்துக்கொண்டே அந்த தேவதை இருக்கும் இடத்திற்கு சென்று வாரி அணைத்து கொண்டு.
"செல்லம் என்ன பண்றீங்க.. இந்த கூடையில் இருக்கும் தக்காளி யாருக்கு" என்று வினவ அந்த மழலையோ
"இது அந்த மாசிலாமணி தாத்தா வீட்டுக்கு ,அங்கே பாவம் அந்த மாசிலாமணி தாத்தா தனியா இருக்காரு வீட்டில் அவருக்கு காய்கறி வாங்கிதரக்கூட ஆளு இல்லையாம்" என்று பரிதாபமாக கூற அந்த குழந்தையின் கரிசன குணத்தை பார்த்து அனைவரும் பிரம்மித்தனர்.

ஆம் மாசிலாமணி தனது சூழ்ச்சமத்தால் நிறைய இழந்து இன்று தனிமரமாய் இருக்கிறார். அன்று தர்மலிங்கம் மற்றும் அமுதனை கேலி செய்தவன் இன்று இவர்கள் பயிர் வைத்து விளைத்த தக்காளியை இலவசமாக வாங்கிக்கொள்ளும் அவல நிலை. சரி அதுபோகட்டும் வாங்கள் தமிழ்ச்செல்வியுடன் பயணிப்போம்.

"நான் தமிழ்ச்செல்வி" அதான் உங்களுக்கே தெரியுமே ! வரண்ட நிலம்போல காட்சியளித்த என்னுடைய வாழ்க்கை எப்படி மாறியது? வாருங்கள் சொல்கிறேன். சற்று அமர்ந்து கண்களை மூடுங்கள்... அன்று என்ன நடந்தது? மருந்தகத்தில் ப்ரெக்னன்ஸி கிட் வாங்கியது யார்? நிச்சயமாக நானில்லை என்னுடைய தங்கை மன்னிக்கவும் என்னுடைய மூத்த மகள் கலையரசி தான்.

ஆம் அவளுக்கு தான் நாட்கள் தள்ளிபோகியிருக்க...ப்ரெக்னன்ஸி கார்டில் பரிசோதனை செய்தபோது நேர்மறை பதில் தான் வந்தது ,மருத்துவரும் பாஸிட்டிவ் என்று தான் சொன்னார்கள். தாய்மை அடைந்து அந்த கனவோடு என்னை சந்திக்க வந்தாள் கலை...

"அக்கா நான் மாசாமாகியிருக்கேன். என் வயிற்றில் வளர்வது உன் பிள்ளை." என்று அவள் ஏற்கனவே முடிவு செய்தபடி என்னிடம் உரைக்க நானும் சற்று நெகிழ்ந்து போனேன். அடடா நமக்கு வளர்க்க ,பாராட்டி சீராட்ட ஒரு பிள்ளை வந்துவிடும் என்று....

தினமும் என்னை ஒரு தாய்ப்போல் பாவித்துக்கொண்டேன். அவள் வயிற்றை தடவி அந்த பிஞ்சு கருவை எனக்குள் உணரச்செய்தேன். இது அல்லவா சுகம்...ஆனால் என் வயிற்றில் சுமக்க இயலவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் வாட்டி வதைக்க துவங்கியது.

மறுமாசம் நான் எதர்ச்சையாக மாதவிடாய் வரவில்லையே என்று பக்கத்து வீட்டு பரிமளம் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு இருக்க...அந்த பாட்டியோ என் நாடி பிடித்து பார்த்தது.

"பாட்டி அதெல்லாம் ஒன்றுமிருக்காது நீங்கவேற " என்று சலித்து கொள்ள அந்த பாட்டி சிரித்தாள்.
"என்ன பாட்டி சிரிக்கிறீங்க" என்று வினவினேன்.

"ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு இப்படி வயிற்றை நிரப்பிக்கொண்டு இருக்கியே கள்ளி" என்று கிண்டலடிக்க... எனக்கு அந்த நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. சற்று சூழ்நிலையை புரிந்து கொண்டு நானும் யோசிக்க துவங்கினேன்.

அப்படியென்றால் நான்... நான்.... ஐயோ..எம்புட்டு சந்தோஷமான விஷயம். என்று இறக்கை முளைத்த பறவை போல மாறிப்போனது மனம். என் தங்கையும் கருவுற்றிருக்க மறுமாதமே நானும் கருவுற்றிருக்க..என்னை பெற்றவர்களுக்கோ..தலையில் மகுடம் சூட்டியது போல் இருந்தது.

பரிமளம் பாட்டி என்னை எதற்கும் மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்துகொள்ள அறிவுருத்த நானும் அவ்வாறே செய்தேன். என்ன ஆச்சரியம் மருத்துவரும் நான் கருவுற்றிருக்கிற விஷயத்தை ஸ்கேன் செய்து உறுதியாக கூற எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

ரங்கநாயகி என்னை பூபோல பார்த்துக்கொள்ள எனக்கு தாய்வீட்டு ஞாபகம் கூட வரவில்லை. உறவினர்கள் என்னை தினமும் வந்து பார்த்துவிட்டு அறிவுரைகள் வழங்கிவிட்டு செல்வர். ஒரு பெண் கருவுற்றிருக்கும் சமையத்தில் சுற்றத்தினர் அந்த பெண்ணை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை தினம் தினம் பார்த்து மகிழ்ந்தேன். இத்தனை நாள் இதெல்லாம் இழந்தோமே என்று எனக்கு நானே வருந்திக்கொண்டேன். இந்த வருத்தம் என் வயிற்றில் உள்ள கருவை பற்றி நினைக்கும்போது மறைந்துவிடும்.

அமுதனுக்கு இது எல்லையற்ற மகிழ்வு...ஒரு ஆண் தகப்பனாக அந்தஸ்து அடையும் போது அவனது மனநிலை எப்படி இருக்கும் என்பதை அனுஅனுவாக ரசித்தேன். இனி எல்லா முத்தங்களும் உங்கள் பிள்ளைக்கு தானோ என்று செல்லமாக அவரிடம் முறுக்கிக்கொள்வதும் உண்டு. என்ன பெயர் வைக்கலாம் என்பதில் துவங்கி எங்களது குழந்தை சார்ந்த உரையாடல் நீண்டு கொண்டே போகும். இந்த உரையாடல் எங்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது.

எங்களுக்கென்று ஓர் வாரிசு வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அனைத்து துயரங்களையும் தூக்கி எறிந்தோம். என் தங்கையின் நல்ல குணத்தை பற்றியும் அவ்வப்போது பேசுவோம். அவள் வாய் முகூர்த்தமோ என்னவோ அவள் கருவுற்ற செய்தி கேட்ட மறு மாதமே நான் கருவுற்றேன். இனி அவளது குழந்தைக்கு நான் பெரியம்மா ஸ்தானத்தில் இருக்கிறேன். என் குலத்தை காத்த பிள்ளையவன்...என்றும் அவனுக்கு ஒரு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவனும் எனக்கொரு பிள்ளை தான்.

ஆம் அடுத்த பத்து மாதத்தில் கலையரசியிற்கு ஆண் குழந்தையும் எனக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது குழந்தையின் பெயர் கதிரவன். கதிரவனும் குழலியும் அண்ணன் தங்கைகள் ஒரே வயதே என்பதால் இருவருக்கும் உண்டான நட்பும் பாராட்டும்.

சென்னைக்கு இன்று நான் புரப்பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆம் இன்று அவனுக்கு பிறந்தநாள். மூன்று வயது முழுமையாக நான்காம் வயதை தழுவுகிறான். வருடாவருடம் விமர்சையாக எங்கள் பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அடுத்த மாதம் என் ஒரே செல்ல மகளின் பிறந்தநாள் அதுவும் விமர்சையாக கொண்டாட இருக்கிறோம்.

"மா...நீ பேசினது போதும் வாா.." என்றது அந்த தேவதை..

"ஏண்டா மா" என்றாள் தாய்.

"அய்யோ தமிழ் நம்ப சென்னை கிளம்பனும்ல இன்னைக்கு கதிரவனுக்கு பிறந்தநாள் மறந்துட்டியா" என்றது அந்த குழந்தை முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு .

"ஹாஹா சரிடா செல்லம்...வா போலாம்"

பார்த்திங்களா என் குழந்தையை என்னை பேசக்கூட விட மாட்டேங்குறா..இப்படியெல்லாம் என்னை தொந்தரவு பண்ண ஆளில்லாமல் இம்புட்டு நாள் ஏங்கியிருந்தேன் ஆனால் இன்று....

என் குழலி..என் குட்டி தேவதையோடு சின்ன சின்ன விஷயம் கூட ரசிக்கும்படி இருக்கிறது. இதோ நானும் அமுதனும் தயாராகிட்டோம் குழலியும் தயார் தான்.

"அத்தை மாமா பை"...என்றேன்..

"போயிட்டு வாத்தா...பத்ரம்" என்றபடி அவர்கள் கையசைக்க நாங்கள் சென்னைக்கு தற்போது போய்க்கொண்டு இருக்கிறோம். போகிற வழியெல்லாம் பசுமையை காணமுடிந்த எங்களால் சென்னையினுள் நெருங்கும்போதே ஒருவித சலிப்பு...
"ம் என்னதான் இருந்தாலும் கிராமம் கிரிமம் தான்" என்றார் கணவன் அமுதன். நாங்கள் இருந்த மேல்தளத்தில் தான் தற்போதும் என் தங்கச்சி குடியிருக்கிறாள்.

அந்த வழியில் செல்ல என்ன ஒரு ஆச்சரியம் அந்த குப்பை கிடங்கு அப்படியே மாறாமல் கிடக்கிறது. பலமுறை இந்த குப்பை கிடங்கை கடந்து அல்லவா நான் சென்றிருக்கிறேன். ஹாஹா இது ஒன்றும் புதிதல்ல நகரத்தில். ம்ம்ம் வீடு வந்து சேர்ந்தாச்சு.

இடையில் குமரனிடமிருந்து போன்
"அண்ணி பிறந்த நாள் விழாவில் நான் அவளை அழைச்சிட்டு வரலாமா என்று தன் காதலியை பற்றி கேட்க " தமிழோ சிரித்தவாறு
"ஹாஹா அதற்கென தாராளமாக கூட்டிட்டு வா குமரா" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு அமுதனிடம்
"ஏங்க முதல்ல இந்த குமரனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பேசி முடிக்கனும்"என்று கூறிக்கொண்டு லக்கேஜ் பேகை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

"அக்கா...வா வா" என்று கலை வரவேற்க ரவியோ தன் சகலை அமுதனை கட்டித்தழுவி வரவேற்க உள்ளே இருக்கும் கதிரவன் ஓடி வந்தான்...
"செல்விமா..ஏன் இவ்வளவு லேட் " என்று கேட்டப்படி..அட ஆமாங்க நம்ம கதிரவன் தமிழ்ச்செல்வியை அப்படித்தான் அழைக்கிறான் "செல்வி மா" என்று. நம்ப வாண்டூ குழலி தனது சித்தி கலையை "சித்தி" என்று மரியாதையாகவும் சிலநேரம் "ஏய் கலை"என்று குறும்போடும் அழைப்பாள் குழலி...

ரவியிற்கு குழலி என்றாலே அவ்வளவு பிரியம்..ஆசையாக அவளை மகளே என்றே அழைப்பார். இப்படி அனைவரின் அன்பையும் சம்பாரித்து விடுகிறாள் நம் குழலி.

சரி பயணம் களைப்பு கொஞ்சம் நேரம் போகட்டும் அப்றம் நம்ப பேசலாம்... ஆங் ஒன்று சொல்ல மறந்துட்டேன்
"இனியாவது குழந்தையில்லா தம்பதியரை குற்றமா பார்க்காமல் அன்பாக பாருங்கள். அவர்களை எதார்த்தமாக இருக்க அனுமதியுங்கள். கண்டிப்பாக உனக்கும் பிறக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளியுங்கள். ஒரு காரிகையின் கனவு என்பது பல வடிவங்களில் இருக்கும். படிப்பு ,வேலை என...அதில் அவர்களை ஜெயிக்க ஊக்கப்படுத்துங்கள். திருமணமான சராசரி பெண்ணிற்கு குழந்தைபேரு அவசியம் என்றாலும் அது மட்டுமல்ல வாழ்க்கை. இன்று நான் ஆசைப்பட்டபடி இன்ஜினியரிங் முடித்துவிட்டேன். ஆனால் கணவனுடன் விவசாயத்தில் இறங்கியுள்ளேன். கனவுகளும் லட்சியங்களும் காலத்திற்கு ஏற்ப போல மாறிக்கொண்டே இருக்கும். கதை எழுதும் ஆர்வமும் மீண்டும் துவங்கியுள்ளது".

தமிழ்ச்செல்வி.

.....முடிவுற்றது........
 
honey1207

Well-known member
Joined
Mar 16, 2020
Messages
821
Reaction score
1,117
Points
93
Location
chennai
Sis all the update is nice ..unga ud konjam short ah than irukkum .very sensitive issue but u have handled very nicely , given confidence to all.best wishes for ur new story soon ?
 
Bhagyasivakumar

Author
Author
Joined
Jul 29, 2019
Messages
124
Reaction score
259
Points
63
Location
Tamilnad
Sis all the update is nice ..unga ud konjam short ah than irukkum .very sensitive issue but u have handled very nicely , given confidence to all.best wishes for ur new story soon ?
Thank you so much ma. Thanks for spending time for my story. Have a nice day
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top