• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karigaiyin kanavu -5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
அழைப்பிதழை வாங்கியவளுக்கோ அதை வீட்டில் எவ்வாறு காட்டுவது,தன்னுடைய கணவன் திருமணத்திற்கு செல்ல அனுமதிப்பான? என்ற பல யோசனைகள் அவள் மூளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன...அவள் வழக்கமாக செல்லும் ஆட்டோவும் வந்துவிட்டது அதில் ஏறிக்கொள்ள ஆட்டோவும் கிளம்பியது.

வீடுவரும் வரை அந்த அழைப்பிதழை பார்த்தவாறு இருந்தாள். வீட்டினுள் நுழைந்ததும் கை கால் அலம்பிவிட்டு தேநீர் தயாரிக்க உள்ளே சென்றாள்.
வழக்கமாக காபி குடிக்கும் அவளுக்கோ தேநீர் மீது எப்படி ஆசை வந்தது என்று கேட்டால் கேண்டினில் அவ்வப்போது உதயாவுடன் தேநீர் அருந்தும் பழக்கத்தினால் தான், இப்படி அவனுடன் பழகும்போது கிடைத்த பழக்கத்தை கூட மாற்றமுடியவில்லையே எப்படி அவனுடைய நட்பை ஒரேடியாக மறப்பது,அது கடினம் தான் ஆனாலும் முயற்சித்து தானே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.

"என்ன அம்முலு மேஜைமேல் ஏதோ அழைப்பிதழை பார்த்தேன்"என்றான் அமுதன்.

"ஆமாங்க உதயாவுக்கு கல்யாணமாம் அதான் கொடுத்தான்,ஏன் இதில் எதாவது பிரச்சனையா"?என்றாள் தன்னுடைய திருத்திய புருவத்தை உயர்த்தியப்படி.

"இல்லை... சும்மா தான் கேட்டான்,சரி என்ன பரிசு வாங்கலாம் உன் நண்பனுக்கு"என்று வினவ அதை கேட்டு ஆச்சரியத்துடன் அவனை நோக்க "என்ன பாக்குற தமிழ்,ஓ கல்யாணத்திற்கு போகவே கூடாது னு சொல்லிடுவேனோ என்று பயந்தியா..இங்க பாரு அம்முலு நீயும் அவனும் நெருக்கமான தோழர்களா பழக வேண்டானு தான் சொன்னேன் மற்றப்படி அடியோட அவனுடைய நட்பை மறக்க சொல்லவில்லை"என்று அவள் தலையை வருடியவாறு கூறினான் அமுதன்.

"என்னங்க... நான் தெரியாமல் தான் கேக்குறன் அப்படி என்னங்க நாங்க நெருங்கி பழகினோம். ஒரே பெஞ்சில் உக்காருவோம்,கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருப்போம். யுனிவர்சிட்டி கேண்டினில் டீ வாங்கி சாப்பிடுவோம்,இதை தவிர நாங்க எதுவுமே பண்ணவில்லை.. அப்றம் ஏங்க உங்களுக்கு அப்படி தோனுச்சு. சமுதாயத்தில் நடக்கிற பிரச்சினை யை பார்த்து பயம் என்றால் எப்படிங்க ?எங்கோ எவனோ ஒருவன் செய்யும் தவறிற்காக ஒட்டுமொத்த ஆண்களையே எப்படிங்க தவறு என்று சொல்லமுடியும். அதுவும் உதயா பற்றி எனக்கு தெரியாதா என்ன"? என்று கேள்விகளை அம்பு போல் பாய்க்க அதில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
....
மறுநாள் காலை மருத்துவமனையிலிருந்து அமுதனுக்கு அழைப்பேசி வந்தது. அவன் காலை ஒன்பது மணியளவில் மருத்துவமனைக்குச் சென்றான். இவளோ ஒன்றும் புரியாமல் 'என்ன இவர் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி ஹாஸ்பிட்டல் போயிருக்காரு,அதுவும் நம்மை கூப்பிடாமல்' என்று நினைத்தாள்.

மருத்துவரை சந்தித்த அமுதனை உள்ளே அழைத்த மருத்துவர் "தம்பி உக்காருங்க உங்கள் கிட்ட தனியா பேசனும்னு தான் வரச்சொன்னேன்"என்று கூற.

"மேடம் என்ன விஷயம் சொல்லுங்கள்"என்றான் சற்று இயல்பாக.

"மன்னிக்கவும், அன்றைக்கு ரிப்போர்ட் பார்த்துட்டு எல்லாமே சரியாக இருக்கிறது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்லி அனுப்பினேன்....ஆனால்"

"எ..என்ன மேடம்"?என்று பயத்தில் வார்த்தை குழறியது.

"மிஸ்டர் அமுதன்.. உங்களுக்கு விந்தணுக்கள் நீந்திச்செல்லும் சக்தி மிக குறைவாக இருக்கிறது.. அதனால் இயற்கையான முறையில் கர்ப்பம் அடைவது கொஞ்சம் கடினம் தான். அதனால ஐ.வி.எப் பண்ணித்தான் ஆகனும்"

"மேடம் என்ன சொல்லுறிங்க..அப்போ எதுக்கு அன்றைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அனுப்புனிங்க?"என்று கேட்க அவர் மிக இயல்பாக ஒரு சிறிய முறுவலுடன் "மிஸ்டர் அமுதன் அன்று உங்கள் மனைவியை பரிசோதனை செய்த போது அவங்க ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தாங்க,ரிப்போர்ட் பார்த்து இதை நான் சொல்லியிருந்தால் இன்னும் மனவேதனை க்கு ஆளாகியிருப்பாங்க அதனால் தான் எதுவுமே 'இல்லை' என்று சொல்லி அனுப்பினேன். இதை நீங்களே பக்குவமா நேரம் பார்த்து உங்கள் மனைவியிடம் சொல்லி விடுங்கள்" என்று கூற அவனோ எதுவும் புரியாமல் அப்படியே சிலைபோல் அமர்ந்திருப்பதை கண்ட மருத்துவர் "அமுதன் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ரிலாக்ஸா இருங்க எல்லாம் சரியாகிடும். ஐ.வி.எப் இப்போது சாதாரண சிகிச்சை முறை மாதிரி தான் பெருசா பயப்பட ஒன்னுமே இல்லை"

"ஆனால் டாக்டர் இந்த சிகிச்சை முறையில் என் மனைவிக்கு எதாவது சிக்கல் வந்திடுமா"? என்று கேட்க.

"எந்த சிக்கலும் இல்லை அவங்க நல்லாதான் இருப்பாங்க. என்ன கொஞ்சம் வலியை தாங்கிக்கனும் அவ்வளவு தான்." என்று விடையளிக்க அவன் தலையசைத்துவிட்டு "ஓகே டாக்டர் நான் கிளம்புறன்"என்று விடைபெற்று சென்றான்.

மருத்துவமனையிலிருந்து அலுவலகத்திற்கு நேராக சென்றுவிட்டான். இதை மனைவியிடம் எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடனே அன்றைய வேலைகளை எல்லாம் செய்தவனுக்கோ உள்ளுக்குள் ஓர் குற்றவுணர்வு இருந்து கொண்டு இருந்தது . "சை கடைசியில் இப்படி ஆயிடுச்சு. நான் ஏதோ பிரச்சனை ஒன்றுமில்லை என்று தானே நினைத்தோம்' என்று நினைக்க அலுவலகத்தில் தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கிக்கொண்டிருக்க..

"என்ன மச்சி ஸ்வீட் எல்லாம் " என்று அமுதன் கேட்க அவனோ சிரித்துக்கொண்டே"எனக்கு கல்யாணம் ஆகபோது"என்று கூற கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொன்னான். இதை கவனித்த ஆபிஸ் ப்யூன்
"சார் அதை ஏன் கேக்குறிங்க அது ஒரு பெரிய கதை"

"ஏன்..என்ன ஆச்சு"

"முதல் மனைவியிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று விவகாரத்து பண்ணிட்டு ஐயா இரண்டாவது கல்யாணம் பண்றாங்க"என்று மூஞ்சியை சுளிக்க..

"என்ன"

"அட ஆமா சார்"

"சை..இதெல்லாம் ஒரு பிழைப்பா? இப்படி பெண்கள் செய்தால் என்னவாகும் யோசித்து பார்க்கிறார்களா" என்று புலம்பியப்படி பக்கத்து சீட்டில் இருந்த பெண் ஒருவர் நொந்து கொள்வதை கவனித்த அமுதன்.

'ஆமால இப்படி பெண்கள் இதையெல்லாம் காரணம் காட்டி விவாகரத்து பண்ணால் ஆண்கள் மனது தாங்குமா'என்று சிந்தித்தான்.
உடனே தன் மனைவி தமிழ்ச்செல்வி க்கு அழைப்பு விடுத்தான்.
"என்னங்க... சொல்லுங்கள்"

"ப்பா உன் பேச்சை கேட்டபின் தான் ஏதோ நிம்மதியாக இருக்கு அம்முலு. அப்றம் உன்கிட்ட ஓர் விஷயம் சொல்லனும்.. அது வந்து"என்று இழுக்க அவளோ பட்டென்று போட்டு உடைத்தாள்.

"கல்யாணத்திற்கு என்ன பரிசு வாங்கனும் என்று முடிவு பண்ணிட்டிக அதானே."என்று புன்னகையிக்க..

"ஓய் அம்முலு அது இல்லை டா..என்னை பற்றி சொல்லனும்"

"உங்களை பற்றியா"?

"ம்ம்ம்"

"எதுவும் சொல்ல வேண்டாம்..நீங்க உங்க வேலையை பாருங்க நானும் குமரனும் கேரம்போர்ட் விளையாடுறோம்..நான் பிஸியா இருக்கேன் அப்றம் பேசிக்கலாம்" என்று போனை துண்டித்தாள்.

அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்குள் இருந்தது. ஆனால் இதை எப்படியேனும் அவளிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். சரி அதற்கான தக்கச்சமயம் வரட்டும் பொறுமையை கடைப்பிடிப்போம் என்று மனதிற்குள் தனக்கு தானே நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டான்.

அவளிடம் இதை சொல்லும் போது எதிரில் அவளுடைய எதிர்வினை எப்படி இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாக்யாசிவக்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top