• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

karigayin kavanvu - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மருத்துவமனையா ? ஏன் என்ன ஆச்சு இவருக்கு எதாவது உடம்புக்கு முடியாமல் போய்விட்டதோ என்று யோசிக்க...ஒருவேளை வேற எதாவது பிரச்சினை இருக்குமோ? என்று மனதுக்குள் கேள்வி எழுப்பிவிட்டு மீண்டும் அவனிடமே கேள்வியை திணிக்க "என்னங்க என்ன ஆச்சு" என்றபடி சிறு அழுத்தத்தோடு கேட்க அவனோ "நான் மேகாவோட வந்திருக்கேன்..அது வந்து" என்று ஏதோ சொல்ல நினைத்துவிட்டு நிறுத்தியதன் காரணம் இவளுக்கு விளங்கவேயில்லை..

"மேகாவோட உங்களுக்கு மருத்துவமனையில் என்ன வேளை"? என்று சந்தேகத்துடன் கேட்க ,எங்கு அவள் மனது ஏதேனும் தப்பாக சிந்தித்து விடுமோ என்ற பதற்றத்தில் "ஒன்னுமில்லை அம்முலு எல்லாம் நம்ப விஷயமா தான் வந்திருக்கேன்" என்று அமுதன் கூறவே சற்று சமாதானம் ஆனவளாக மூச்சு இரைத்தப்படி "சரி சரி நேரடியாக விஷயத்துக்கு வாங்க"என்று கூறவும் மருத்துவமனையில் டாக்டர் அமுதனை அழைக்கவும் சரியாக இருந்தது.

"வாங்க மிஸ்டர் அமுதன். மேகா என்கிட்ட எல்லா விஷயமும் சொன்னா"என்றபடி மருத்துவர் பேச்சை ஆரம்பித்தார்.

"ஆமா டாக்டர் கிட்டத்தட்ட மூன்றரை வருஷம் ஆச்சு. ஐ.வி.எப் பண்ணியும் எங்களுக்கு குழந்தை நிக்கவில்லை,என் தமிழ்ச்செல்வி இதை நினைச்சு நினைச்சு நிறைய சந்தோஷத்தை இழந்துட்டா..எப்படியாவது ஒரு கரு அவளோட வயிற்றில் உருவாகினா நல்லாயிருக்கும்." என்று தன் வேதனையை சொல்லி முடிக்க விஷயத்தை காதில் வாங்கிய மருத்துவர்.
"அமுதன்..நான் மேகாவுக்கு மெடிக்கல் காலேஜில் ப்ரொபஸராக இருக்கேன். எனக்கு வயசு 58 ஏதோ என்னோட அனுபவத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள் சொல்றேன் கேளுங்க"

"சொல்லுங்கள் சார்" என்றபடி அவரையே கண்கொட்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். இதற்கிடையில் மேகா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

"மிஸ்டர் அமுதன். உங்களுக்கு உந்துதல் சக்தி கம்மி னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனால் உங்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒன்று இல்லைனாலும் இன்னொனு முந்திச்செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத்திரை மருந்து இதையெல்லாம் தாண்டி சில விஷயங்களை கடைப்பிடிக்கணும். நல்ல ஆரோக்கியமான உணவு,காய்கறிகள் பழங்கள் ..முக்கியமா செவ்வாழை பழம் ரொம்ப நல்லது. பிறகு மாதுளை இதெல்லாம் எடுத்துக்கணும்...தினமும் காலை அல்லது மாலை வாக்கிங் போகனும். அப்றம் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கனும்,வாரம் இருமுறையாவது உங்கள் மனைவியோடு உறவாடனும்..நான் சொல்றது உங்களுக்கு.....

"ம்ம்ம்.. புரியுது டாக்டர்" என்று தலையசைக்க அவரோ மீண்டும் தொடர்ந்தார்...
"பெண்களுக்கு போலிக்ஆக்ஸிட் ரொம்ப ரொம்ப அவசியம் ,வைட்டமின் டி..இதெல்லாம் ரொம்ப முக்கியம் கருமுட்டை வளர்ச்சிக்கு.."என்று சொல்லிவிட்டு சில மாத்திரைகள் மட்டும் பரிந்துரை செய்துவிட்டு.
"நான் சொல்றபடி இருந்து முயற்சி செய்து பாருங்கள்..." என்று கூறி அனுப்பி வைக்க வெளியே வந்த அமுதன் ஏதோ ஓர் தெளிவான மனநிலையில் இருப்பதை உணர்ந்த மேகா...

"அமுதன் டாக்டர் பேசினாரா"என்று வினவ...

"ம்ம்ம்.. ரொம்ப எதார்த்தமாக பேசினார்"

"என்ன சொல்றீங்க அமுதன்"என்று அவள் கேட்க அவனோ "ஆமா மேகா இப்படி ஒரு எதார்த்தமாக எந்த டாக்டரும் அட்வைஸ் பண்ணதே இல்லை... பொதுவா இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் ஐ.யு.ஐ..ஐ.வி.எப் னு சொல்ற டாக்டரை தான் நான் பார்த்துருக்கேன் ஆனால் இப்படி இவ்வளவு சுலபமான ஆலோசனை சொல்லி அனுப்புவாறு என்று நினைக்கக்கூட இல்லை..." என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு.
"மேகா நான் சென்னை கிளம்பலாம்னு இருக்கேன்" என்று திடிர் முடிவை சொல்ல... அவளோ "அப்போ உங்களோட வேலை" என்று கேட்க..

"வேலையை விடப்போறேன் மேகா...நான் இனிமே இப்படி பட்ட ஸ்ட்ரெஸ்ஸான ஜாப் பார்க்க போறது இல்லை.. இனி எனக்கு குழந்தை பேறு பற்றிய சிந்தனை தவிற எதுவுமே இல்லை... நான் போறேன் என் மனைவியோட புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க போறேன்"என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து அலுவலகத்திற்கு விரைந்தான். ராஜினாமா கடிதத்தை மெயில் மூலம் சமர்பித்தான்.

இதற்கிடையில் மேகாவும் வீட்டுக்கு விரைந்து அவனுடைய துணிமணிகள் எல்லாவற்றையும் மடித்து அவன் பையில் வைத்துவிட்டு அவனுடைய ஞாபகமாக ஒரே ஒரு ஷர்ட்டை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டாள்.

'டேய் நண்பா...மிஸ்..யு..டா நீ நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும். இந்த திடிர் முடிவு உனக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புறன் ' என்று நினைத்துவிட்டு விஷயத்தை பாட்டியிடமும் தெரிவிக்க பாட்டியோ "எப்படியோ அந்த தம்பி நல்லாயிருக்கனும் அது போதும் "என்று சொல்லிவிட்டு அவன் கிளம்புவதற்கான பலகாரம் சுட்டு வைக்க சமையல்கட்டுக்குச் சென்றார்.

அன்றிரவே....கிளம்பினான் ரயிலில்... வேலையை விட்டாச்சு இனி அடுத்து என்ன பண்ணப்போறேனு எனக்கு தெரியல ஆனால் எல்லாத்தையும் விட தமிழ்ச்செல்வி முகத்தில் சந்தோஷத்தை பார்க்கணும்,அவளை ஒரு அம்மாவா பார்க்கணும் இதை தவிர வேற எந்த சிந்தனையும் எனக்கில்லை என்பதுபோல் பயணித்தான்.

மருத்துவமனை சென்றுள்ளேன் என்று சொன்னவர் தான் ஆனால் எதுவும் கூறவில்லையே என்று இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி. உறக்கம் வரமறுத்தது எனினும் உடல் அசதி அவளை உறங்க வற்புறுத்தவே சற்று கண்களை மூடி உறங்கச்சென்றாள்.

ஒருநாள் பொழுது சாய்ந்து மறுநாள் காலை தான் ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்தது ரயில். சென்னை சென்ட்ரலில் இறங்கியதும் ஏதோ தாய் வீட்டுக்கு வந்த மகள் போல உற்சாகம் அடைந்தான் அமுதன். உடனே ஒரு ஆட்டோ பிடித்து தன் வீட்டிற்கு வந்தடைந்தான்.

கலையரசி தமக்கையுடன் பேசியவாரு "அக்கா...அங்க பாரு மாமா மாதிரி இருக்கு" என்று கூற..

"மாமாவே தான்... என்ன திடிரென வந்துட்டாரு" என்று யோசித்தவாறு "வாங்க வாங்க" என்றபடி பையை வாங்கிக்கொண்டு அவனை உள்ளே அழைக்க அதைபார்த்து அங்கிருந்த ரங்கநாயகியும் குமரனும் சந்தோஷம் அடைந்தனர்.

"என்ன அண்ணே..ஆபிஸ்ல லீவா"குமரன் கேட்க..

"இல்லைடா குமரா வேலையை விட்டுட்டேன்"என்று அசால்ட்டாக கூறவே அனைவரும் திடுகிட்டு போக தமிழ்ச்செல்வி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டவளாய் "என்னங்க சொல்றீங்க ஆபிஸ்ல எதாவது பிரச்சனையா" என்று கேட்க அவனோ " ஒரு பிரச்சனையும் இல்லை வேற வேலை கிடைச்சிருக்கு அதான்" என்று கூறவே ஒன்னும் புரியாதவளாய் என்ன என்று கேட்க...

"சொல்றேன்...இப்போதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்கள் எல்லாரும் என்னை" என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்க தன் அறைக்கு சென்றான்.

தொடரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
பாக்யா சிவக்குமார் டியர்
 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top