33
மீண்டும் ஒரு குரல் ஒலிக்க, அது இப்போது அந்த ஆதிசேஷனின் குரலாக இருந்தது.
“மார்த்தாண்டா.. நீ இந்த உலகத்தில் பிறந்தவன். ஆகையால் உனக்கு நேரடியாக விஷ்ணுவை அடையும் விதி இல்லை. உனக்கு ஒரு வழி சொல்கிறேன். நீயும் சைரந்தரியும் இப்போது கைலாயத்தின் மத்தியில் இருக்கும் அந்த நகரத்திற்குச் செல்லுங்கள்.
அங்கே இந்த உலகத்தின் பழுதுகள் எதுவும் படாமல் சிறிது காலம் விஷ்ணுவின் நாமத்தை ஜபித்த படி அங்கிருப்பவர்களோடு காலத்தை கழியுங்கள். காலம் வரும் போது நீ வைகுண்டம் செல்வாய்.
சைரந்தரிக்கு குழந்தை அங்கே நல்லபடியாக பிறக்கும். அதன் பிறகு அங்கிருந்து சைரந்தரி மட்டும் குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தக் கோவிலுக்கு வர, அது சேரவேண்டிய ஒருவரிடம் நல்லபடியாகக் கிடைத்து நன்றாக வளரும். அவன் ஒருவனுக்கு மட்டுமே நான் இந்த நாகபந்தத்தை அவிழ்க்கும் சக்தி தருவேன். அதுவும் அவன் என் விஷ்ணுவை உயிருடன் கொண்டுவரும் போது மட்டும் தான்.
அவன் நாகபந்தத்தை அவிழ்த்து உள்ளே வந்து உங்களுடைய மூன்றாவது விருப்பத்தை நிறைவேற்றுவான். அதாவது இந்த கற்பக மரத்தை மீண்டும் தேவலோகத்திற்கு அனுப்பி வைப்பான். அப்போது தான் இதன் பலன் நிறைவேறும்.
அதுவரை இந்த நிலவறையை யாரும் திறக்க முடியாது. அது என்னுடைய பொறுப்பு. அத்துடன் குரல் கேட்பது நின்றது.
“மார்த்தாண்டா, நீ முதலில் உன்னுடைய விருப்பத்தைக் கூறு. அதாவது ஒருமுறை மட்டும் தான் அந்தக் கைலாய நகரத்திற்கு நாம் செல்ல முடியும் என்று கூறினார் அங்கிருந்த ரிஷி. ஆனால் இப்போது நாம் மீண்டும் அங்கு செல்வதினால் நீ அந்த வரத்தைத் தான் கேட்க முடியும் என்று தோன்றுகிறது.”
சைரந்தரி அவனிடம் சொல்ல,
“அப்போது நீ என்ன கேட்கப் போகிறாய்? நீயும் அங்கு தானே வரவேண்டும்?” மார்த்தாண்டன் யோசித்தபடி கேட்க,
“ஆமாம், ஆனால் என் பிள்ளையை இங்கு வந்து விட மீண்டும் இங்கு வரவேண்டும். அப்படி நான் மீண்டும் வந்தால், நான் திரும்புவது எப்படி? அதுனால் சற்று யோசித்துக் கேட்கிறேன்.” என்றாள்.
“நீ ஏன் இரண்டையும் ஒன்றாகக் கேட்கக் கூடாது? அதாவது உன் பிள்ளையை அங்கே பெற்று இங்கு வந்து சேர்த்துவிட்டு மீண்டும் அவ்விடம் சேரவேண்டும் என்று கேட்டுப் பாரேன்.” மார்த்தாண்டன் சொல்ல சைரந்தரிக்கு கேட்டுப் பார்க்கலாம் என்று தான் தோன்றியது.
"ஆனால் பிள்ளையை விட்டு என்னால் இருக்க முடியுமா?” அதற்குத் தான் அவள் யோசித்ததும். அவள் குரலில் வருத்தம் தெரிய,
“சைரந்தரி, நான் செல்லப் போகும் இடம் இந்த பந்த பாசத்தையெல்லாம் நமக்குத் தராது. அதனால் நீ தாராளமாக அப்படிக் கேட்கலாம்.” அங்கு சென்று பார்த்த அனுபவத்தில் கூற,
“உண்மை தான். அப்படி நடக்கவும் வாய்ப்புள்ளது. சரி நான் அப்படியே கேட்கிறேன்" முடிவிற்கு வந்தாள்.
மார்த்தாண்டன் முதலில் கற்பக விருட்ஷத்தின் முன்னே வந்து நின்றான். கண்ணை மூடி தன்னுடைய நாடும் அதில் குடிகொண்டிருக்கும் அவனது பத்மனாபாப் பெருமாளும் அவன் கண் முன் வர, கண்ணீர் சிந்தினான். அந்த பத்மநாபனை விட்டுப் பிரிந்து செல்ல அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் அப்பெருமாளை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்க அவன் செய்த புண்ணியத்தை நினைத்து மகிழ்ந்தான்.
அதற்கு தனக்கு உதவி செய்த சைரந்தரியைப் பார்த்து, “இவை அனைத்தும் உன்னால் தான் எனக்குக் கிடைத்தது. மிக்க நன்றி" கைகூப்பி நன்றி சொன்னான்.
சைரந்தரி லேசாகத் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள்.
பிறகு அந்த ஜொலிக்கும் கற்பக மரத்தினை விழுந்து வணங்கினான். அதில் மூன்று பூக்கள் மட்டுமே இருந்தது.
“கேட்பதை கேட்டவற்குக் கொடுக்கும் கற்பக மரமே, நான் என் பகவான் விஷ்ணுவைக் காண வைகுண்டம் செல்ல முதற்கட்டமாக அந்தக் கைலாய மலையில் இருக்கும் நகரத்திற்கு சில காலம் வாசம் செய்ய நான் விரும்பிகிறேன்.” இரு கை நீட்டி அம்மரத்திடம் வேண்டி நின்றான்.
உடனே அம்மரம், அவனுக்கு ஒரு பூவை அவனது கைகளில் உதிர்த்தது. அதைப் பெற்றுக் கொண்ட பிறகு அவனுக்கு ஒரு ஒளி வழிகாட்டியது. அந்த வழியில் அவனை செல்லுமாறு பணித்தது.
சைரந்தரியைப் பார்த்து , “ சீக்கிரம் வந்து விடு நீயும்" என்றவன் அந்த ஒளியில் கால் வைக்க, அது அவனை க்ஷண நேரத்தில் கைலாய மலைக்கு நடுவே இருக்கும் அந்த நகரத்திற்கு அனுப்பியது.
ஒளி மறைந்தது.
அடுத்து சைரந்தரி அந்த மரத்தின் எதிரே வந்து நின்றாள்.
தன் வாழ்வில் நடந்துவிட்ட அனைத்தும் அவளுக்கு கனவு போல இருந்தது. நீண்ட மூச்சை உள்வாங்கி விட்டவள், அங்கு அவள் செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்திருந்தாள். அவளது நாட்டை அமைச்சர்களே கூடி ஆள வேண்டும் என்றும், அதற்கு பிறகு அவர்களே பொறுப்பான ஒருவரைக் கண்ட பிறகு அவரையே அரசனாகவோ அல்லது அரசியாகவோ நியமிக்க அதிகாரத்தை வழங்குவதாக ஓலை ஒன்றில் ஆணை பிறபித்து இருந்தாள். அதே போல அவர்கள் செய்வதாக பதில் ஓலையில் வாக்கு கொடுத்து இருந்தனர்.
அவள் தனது பயணத்தைப் பற்றி எழுதி வந்த புத்தகத்தை மார்த்தாண்டனின் மகனிடம் கொடுத்து பத்திரப் படுத்தி வைக்க வேண்டும் என்று கூறி இருந்தாள். அது அவர்களின் பத்மநாபபுற வலராற்றுப் புத்தகத்தோடு அவன் இணைத்துக் கொண்டான்.
அதில் அவள் கடைசியாக குறிப்பிட்டு இருந்தது எதிரிகளை தன் மகன் சமாளிக்க வேண்டும் என்று தான். கைலாய நகரத்திற்குச் சென்று வந்த பிறகு அவளுக்கு சில நேரம் மகனின் எதிர்காலத்தை கிரஹிக்கும் சக்தி வந்திருந்தது. அதில் தன் மகன் ஒரு நாள் மார்த்தாண்டன் வம்சத்தில் வரும் பெண்ணோடு சேர்ந்து தான் இந்த காரியத்தில் இறங்க முடியும் என்றும், அவளுக்கு இருக்கும் சில இடர்களை இவன் தீர்க்க உதவுவான் என்பதும், அவனுக்கு அந்தப் பெண் உதவுவாள் என்பதும் தெரிந்தது. அத்தோடு மார்த்தண்டனுக்கும் தனக்கும் இருக்கும் நட்பு எதிர்காலத்தில் உறவாக அமையும் , அமையவேண்டும் என்று உவகை கொண்டாள்.
தன் மகனை பெற்ற பிறகு சில காலம் கழித்தே அவனை இங்கு வந்து விடவும் அவள் நினைத்திருந்தாள். யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் அவளின் நுண்ணறிவு காட்டியது.
அகவே தன் மகனுக்கு உதவ அதை மார்த்தாண்டனின் மகனிடம் கொடுத்து பெரிய விஷயத்தை செய்து முடித்திருந்தாள்.
நிம்மதியுடன் தன் வயிற்றில் கை வைத்து அந்த சிசுவை உணர , அது அவளை உதைத்து தன் உணர்ச்சியைக் காட்டியது.
மன நிறைவுடன், அந்த கற்பக விருட்ஷத்தை வணங்கினாள். அதனிடம்,
“நான் கனவிலும் நினைக்காத ப்ராப்தம் எனக்கு கிடைத்தது. அது தான் என் மகவு. அதே போல நீயும் நான் காணக் கிடைக்காத ஒரு பொக்கிஷம். உன்னை நல்ல முறையில் என் மகன் வழியனுப்ப வருவான். அது வரை காத்திரு.
இப்போது என் மகவோடு நான் கைலாய நகரத்திற்குச் சென்று நல் முறையில் அவனைப் பெற்றெடுத்து, இங்கு வந்து விட்டு மீண்டும் நான் அந்த நகரத்தை அடைய எனக்கு அருள் செய்.” தன் கரங்களை நீட்டி மீதி இருந்த இரண்டு பூக்களில் ஒன்றைப் பெற்றாள்.
அந்தப் பூவிலிருந்து வந்த ஒளிப்பாதை அவளை வழிநடத்தியது. நொடிப் பொழுதில் அவள் கைலாய நகரத்தில் இருந்தாள்.
அவள் சென்ற போது, மார்த்தாண்டன் ஏற்கனவே ஒரு அழகிய மாளிகையில் , அதில் ஒரு பூஜையறை அமைத்து அந்த விஷ்ணுவை வணங்கிக் கொண்டிருந்தான்.
அவள் சென்ற போது, அவளுக்கும் அதே போல ஒரு மாளிகை அமைத்து அதில் அவளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருந்தனர். அவள் பெருத்த நிம்மதியோடு அங்கே வந்து சேர்ந்தாள்.
பிறகு அடுத்த மூன்று மாத காலத்தில் அவளுக்குத் தங்க விக்ரஹம் போன்ற மகன் பிறந்தான். அவனை சீராட்டி பாலூட்டி ஆசை தீர வளர்த்தாள். அவனுக்கு நான்கு வயதாகும் போது அவனை எடுத்துக் கொண்டு மீண்டும் திருவனந்தபுறம் வந்தாள்.
அந்த நான்கு வருடம் இந்த உலகில் பல நூற்றாண்டுகளாகி இருந்தது.
அவள் வந்த நேரம், அப்போது கோவிலில் பக்தியுடன் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என வருந்திக் கொண்டிருந்த வெங்கடேசன் கைகளில் அந்தப் பிள்ளையை ஒப்படைத்தாள்.
“இனி இவன் உன் பொறுப்பு. உன் மகன் தான் இவன்.” எனக் கூற, மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அவரும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
சைரந்தரி கொஞ்சமும் வருத்தப்படாமல் அந்த பத்மநாபனை வணங்கிவிட்டு மீண்டும் கைலாயத்திற்கு மறைந்திருந்தாள்.
தன் கைகளில் இருந்த அந்த ஓலைச்சுவடியில் முக்கால் வாசி படித்து முடித்திருந்தான் விஜய் பூபதி. ஒரு பெரிய பொறுப்பு தன் தலை மேல் இருப்பதை உணர்ந்தான். தன் பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டது அவனுக்கு பெரிய மலைப்பாக இருந்தது.
அத்தோடு அந்த ஓலையை தானே எழுதி இருப்பது இன்னும் ஆச்சரியத்தை தந்தது. அவனுக்கு ஆசுவாசம் அடைய நேரம் தேவைப்பட்டது.
அந்த ஓலைகளை தன் மீதே போட்டுகொண்டு சிறிது நேரம் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான்.
மூளை ஏகப்பட்ட விஷயங்களைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தாலும் ஒரு ஓரத்தில் அனைத்தும் இப்போது தெளிவடைந்து வருவது புரிந்தது. தனக்கு இன்னும் வேலைகள் நிறைய உள்ளதோ. அதி கூறியிருப்பது போல தான் அந்தக் கதவைத் திறக்க, விஷ்ணுவையே அழைத்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறதே. அதற்கு என்ன செய்யலாம்? அத்தோடு எதிரிகளை சமாளிக்க வேண்டும் என்றால், யார் அந்த எதிரிகள்? எப்படி சமாளிக்க?
ஏகப்பட்ட கேள்விகள் முன்னே வந்து பயமுறுத்தியது. லேசாக கண்ணை சுழற்றிக் கொண்டு வர, சிறிது நேரத்தில் கண் அயர்ந்தான்.
அவன் படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நன்றாக படுத்து உறங்கி இருந்தாள் ஜானவி. இரண்டு நாட்களாகச் சரியாக தூங்காதது அவளை களைப்பில் ஆழ்த்தி இருந்தது.
ஆனால் அவளை விடவும் மிகவும் களைத்துப் போய் இருந்தது விஜய் தான். அவன் காட்டுவாசிகளுக்காக பயணம் மேற்கொண்டதிலிருந்தே களைத்துத் தான் இருந்தான்.
இப்போது ஜானவி விழித்துக் கொள்ள, விஜய் அயர்ந்து உறங்குவதைக் கண்டவள் அவனுக்காக வருந்தினாள். குளிர் லேசாகத் தெரிய, அவனுக்கு எடுத்து வந்திருந்த மெல்லிய சால்வையை போர்த்திவிட்டாள். மிக அருகில் அவனைக் கண்டதும் பால் போன்ற முகத்தைக் கண்டு ரசித்தாள். அதில் பொதிந்திருந்த கோபமும் அழகும் அவளை கட்டி இழுத்தது. இமைகளை மூடி அவன் உறங்கினாலும், யாரும் அவனை நேரங்க முடியாது என்பது போன்ற தோரணை அவனை அவனாகவே காட்டி காதல் கொள்ள வைத்தது. லேசான அந்தக் குளிர் காற்றி அவனது தலைமுடி அசைய, அதைப் பிடித்து கோத நினைத்த கரங்களை மடக்கிக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.
அவளின் நிலை அவளுக்கே வெட்கத்தைத் தந்தது. ‘ச்ச.. என்னோட மைன்ட்ட கொழப்பிவிடறான் அடிக்கடி. நான் எப்படி இருந்தேன். இப்ப இவன் கிட்ட வந்து மயங்கறேன்..’ தன்னைத் தானே நொந்து கொண்டு எழப் பார்க்க,
சட்டென அவளது கையைப் பற்றினான் விஜய்.
அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவன் அவளது கையை எடுத்து தன் தலையில் வைத்து, “நிச்சதை பண்ணிடு" மெலிதாகச் சிரிக்க,
அந்த செயலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. ஸ்தம்பித்துப் போனாள்.
“ப்ளீஸ்.. டூ இட்.. எனக்கு இப்ப இது வேணும்" மேலும் கண்கலைச் சுருக்கி அவளைப் பார்க்க, அப்போது அவள் அதிலிருந்து மீண்டு வரவில்லை. அவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்தாள். முழுதாக அவனுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
அவளது மோன நிலைப் புரிந்தவன், அவளை ஒரே இழுப்பில் தன் மேல் சாய்த்துக் கொள்ள, அவள் தடுமாறி விழுந்தாள். விழுந்த அவளை அள்ளிக்கொண்டு அவள் முகத்தைப் பற்றி அவளது உதடுகளை ருசிக்க ஆரம்பித்தான். ஜானவி மயக்கம் தெளிந்தது போல் இருந்தாலும், மீண்டும் அவனது முத்தத் தேடலில் மயங்கினாள். அவனோடு இசைய ஆரம்பித்தாள்.
அவனது தலையை இறுகப் பற்றி தன் விருப்பத்தையும் தெரிவித்தாள். இப்போது அவள் முறையாக அவனது இதழ்களை சிறை செய்ய, அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் கண்களைச் சந்தித்தான்.
“நிஜமா உனக்கு ஓகே வா… நான் யாருன்னு..தெரிஞ்சும்..ஐ மீன்..” அவனது பிறப்பை பற்றி அவன் சொல்ல வர,
“அது பத்தி நான் கவலை படல.. எனக்கு இந்த விஜய்..” அவனது நெஞ்சில் கை வைத்துக் காட்டி.. “இவன் தான் வேணும்..மத்ததை பத்தி நான் யோசிக்கல.” அவள் சொல்லி முடிக்க அடுத்த நொடி அவளோடு பின்னிப் பிணைந்து முத்த மழையில் நனைத்துவிட்டான்.