• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

New Karpaga Virutsham - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,861
Reaction score
23,435
Location
Phoenix
34



விஜய் ஜானவி இருவரும் தங்களின் மனதை பரிமாறிக் கொண்ட பிறகு, அவர்களின் கடமையை முடித்த பின் தான் மற்ற எதுவும் என முடிவு செய்தனர்.

அவன் படித்து முடித்தவரை அவளிடம் பகிர்ந்து இருந்தான். ஜானவிக்கு எதிரிகளைப் பற்றி தெரிந்து கொள்வது தான் முதல் வேலையாகத் தெரிந்தது. இருவரும் வெளியே சென்று அருகில் இருந்த கடையில் கடையில் மதிய உணவை உண்டுவிட்டு வர,

“அனந்து அங்கிள் சொன்ன மாதிரி உன்னோட உடல்ல கலந்து இருக்கற அந்த கெட்ட சக்திய வெளிய கொண்டு வரணும். இன்னிக்கு ராத்திரி நாம மானசரோவர் நதிக்குப் போகணும். அதுனால நீ கொஞ்சம் இப்ப ரெஸ்ட் எடு. நான் மீதம் இருக்கற இன்பர்மேஷன் படிச்சு முடிச்சுட்டு, அந்த எதிரிகளைப் பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன்னா நம்ம அடுத்த மூவ் பத்தி யோசிக்க கரெக்ட்டா இருக்கும்.” மலை மீது இருந்த அந்தக் குடிசைக்குள் நுழைந்த படி விஜய் கூற,

“நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? உங்களுக்கும் ரொம்ப டயர்டா இருக்கே" அக்கறையுடன் ஜானவி அவனைப் பார்த்தாள்.

“ம்ம்ம்..”மெல்ல சிரித்தவன், “இல்ல இத படிச்சு முடிக்கணும். அப்பறம் தான் எனக்கு தூக்கம் வரும். நீ ரெஸ்ட் எடு" ஓலைச்சுவடிகளைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

சைரந்தரி குழந்தையை விட்டுச் சென்ற பிறகு அவனை வளர்க்கும் பொறுப்பு வெங்கடேசனிடம் வந்து சேர்ந்தது. ஆனால் சைரந்தரி நினைத்தது போல அவளுக்கு வருத்தம் இல்லை. ஏனெனில் அவள் இருந்த இடம் அவளை துக்கமோ, வருத்தமோ, கண்ணீரோ எதையும் ஏற்படுத்தாதவாறு அவளை வைத்திருந்தது.

எல்லா இடத்திலும் வளர்ந்துவிடும் புல்லுருவிகள் போல, அங்கே வாழ்ந்த ஒரு சிலரின் அல்ப ஆசைகள் பல இன்னல்களுக்கு வழிவகுத்தது. பொதுவாக கைலாய மலைக்கு நடுவே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இந்த இடத்தை அடைந்த சித்தர்கள் அங்கிருந்து மீண்டும் பூலோகம் செல்வதில்லை.
ஆனால், ஒரு சில சித்தர்கள் அவர்களை பக்தி என்ற பெயரால் முறையாக பூஜை ஓமம் செய்து அழைத்தால், அந்த மந்திர ஒலிகளுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் உலகிற்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வருகிறார்கள்.

அப்படி வரும் போது அவர்களை தவறாக பயன்படுத்திய சிலர், இன்று உலக நியதியை மீறி இயற்கைக்கு மாறாக சிலவற்றை செய்யத் துடிக்கின்றனர்.

சித்தர்களை வேள்வி செய்து வர வைத்து, அவர்களிடம் இந்த உலகை ஆளும் சித்தியைத் தெரிந்து கொண்டு, பின் சித்தம் தடுமாறி ஆசை என்ற என்னத்திற்கு ஆட்பட்டு தீய வழிகளைச் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தாங்கள் கடவுளுக்கு நிகராக வாழ்வதாக நினைப்பு வந்தது.
இந்த உலகத்தில் என்ன நடக்கவேண்டுமோ அது அவர்கள் தான் நடக்கச் செய்தனர். தலைவர்கள் யார், எந்த நாடு என்ன செய்ய செய்ய வேண்டும் போன்ற அனைத்தும் அவர்களே செய்ய ஆரம்பித்தனர்.

அவர்கள் தான் இப்போது வளர்ந்து அந்தக் கைலாய நகருக்கு நிகராக ஒரு தனி நகரை அமைத்து அங்கிருந்து கைலாயத்தில் இருக்கும் நகருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழி அந்த பத்மநாப கோவிலில் இருக்கும் ரகசிய அறையில் தான் கிடைக்கும் என்பது வரை தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

அதற்கு உன்னையே வைத்து வழியையும் பெற்றுவிட முடிவு செய்து வைத்திருக்கும் நிலையில் தான் உன் கையில் இந்த ஓலை கிடைக்கும். அவர்களிடமிருந்து உன்னால் சுலபமாக தப்பிக்க முடியும். ஆனால் அவர்களுடைய அந்த நகரை நீ தகர்த்தெறிய அடைய வேண்டியது அந்தக் கடவுள் விஷ்ணுவின் உருவம். அதை வைத்துத் தான் நீ அந்த ரகசிய அறையையும் அடைய முடியும்.

அதற்கு மார்க்கம் இங்கே கூறுகிறேன். கவனமாக படி.

இன்று இரவு அந்த மானசரோவர் நதியில் நீ நீராடிய பிறகு, அங்கே நித்தமும் நடக்கும் ஒரு நிகழ்வை, யாரும் காணக் கிடைக்காத ஒரு அதிசயத்தை நீ காண நேரிடும்.

அதாவது சப்த ரிஷிகளும், முப்பது தேவர்களும் தினமும் அந்த ஈசனின் அருளைப் பெற அவருக்கு பிரம்ம முஹுர்த்த பூஜை செய்வது வழக்கம். அதற்கு முன் அவர்கள் நட்சத்திர வடிவில் வந்து மானசரோவர் நதியில் நீராடி விட்டு ஈசனின் தரிசனம் பெற செல்வார்கள்.

அப்படி அவர்கள் மானசரோவர் நதியில் வந்து நீராடும் போது நீ அவர்களைக் காண்பாய். அதே நேரம் அந்த தேவர்களோடு இன்று விஷ்ணுவும் வருவார். மாதத்திற்கு ஒரு முறை ராமர் உருவில் அந்த சிவனை பூஜை செய்வது விஷ்ணுவின் வழக்கம்.

நீ அந்த நேரத்திள் அந்த விஷ்ணுவை அடையாளம் கண்டு, அவர் நதியில் நீராடும் நேரம் அவரை ஒரு மரபெட்டியில் தாங்கிக் கொள். உடனே அந்தப் பெட்டியை நீ மூடிவிட வேண்டும்.

அதை நீ மீண்டும் அந்த பத்மனாப கோவிலில் அந்த ஆறாவது அறையின் முன் தான் திறக்க வேண்டும். அதன் பிறகு நீ கற்பக விருட்ஷத்தை மீண்டும் அதன் இடம் நோக்கி செல்ல சொல்லும் போது மீண்டும் அதனிடம் நீ அந்த எதிரிகளின் உலகத்தை தகர்க்க வழி கேட்கலாம்.

அது உனக்கு வழி சொல்லும். நாராயணன் துணை செய்வார்.

இவ்வாறு அந்த ஓலை முடிந்திருந்தது. விஜயின் மூளை அடுத்து அந்த நட்ஷத்திரத்தை தாங்கக் கூடிய சக்தி உடைய மரப் பெட்டியை எப்படி செய்வது என்று தான் யோசித்தது.

ஜானவி அமர்ந்தவாக்கிலேயே உறங்கிப் போயிருந்தாள். இவன் அந்த சிறு குடிலில் இங்கும் அங்கும் நடை பழகி யோசித்தான்.

அவனுக்கு ஒன்று நினைவு வந்தது. பத்மநாப சுவாமி கோவிலில் இருக்கும் பெருமாள் முதலில் இலுப்பை மரத்தில் தான் இருந்தார். அதனால், இங்கும் ஒரு வேளை அந்த மரம் கிடைத்தால் அதில் பெட்டி போல எதாவது செய்யலாம் என்று முடிவுக்கு வந்தான்.

ஜானவியை எழுப்பாமல் தான் மட்டும் அருகில் இருந்த காட்டில் சென்று தேடலாம் என்று நினைத்து மெதுவாகக் கதவை சாத்த, அந்த சத்தத்தில் எழுந்து கொண்டாள். அவன் எழ்கோ கிளம்புவது தெரிந்ததும்,
“நானும் வரேன்" அவசரமாக எழுந்து வந்தாள்.

“ஹே..நீ தூங்கு..” அவன் ஜானவியைத் தடுக்கும் முன்

“இங்க நான் தூங்கறதுக்கு வரல. வாங்க போலாம்" அவனுக்கு முன் சென்று கதவைத் தாழிட்டாள்.

“எங்க போறோம் னு கேட்கல..?” அவளின் வேகத்தைப் பார்த்து,

“அந்த ஓலைல சொல்லிருக்கற ஏதோ ஒரு விஷயத்துக்காக எதையோ தேடி போறோம்..” என்றாள்.

“எப்படி இவ்வளோ தெளிவா சொல்ற?”

“இத கூட யூகிக்க முடியலன்னா நான் இவ்வளவு தூரம் வர முடியுமா?”

“ம்ம் சரி தான். நீயும் அப்பப்ப கொஞ்சம் ஸ்மார்ட்னு நிரூபிக்கற"

“ஒ… நான் முட்டாள்னு நினைப்போ உங்களுக்கு?”

“இல்ல.. அந்த அளவு நினைக்கல"

“உங்கள…..” கோபம் கொண்டு அவன் மேல் பாய…

“ரிலாக்ஸ்… நாம் இப்ப இலுப்பை மரத்தை தேடனும்" என்றான்.

“இலுப்பை மரமா… இங்க இருக்குமா? ஏன் என்ன செய்யப்போறீங்க?”

“ஒரு மரப்பெட்டி செய்யணும்" என்றவன் கூடவே அவன் படித்த மீதி ஓலையைப் பற்றி அவளிடம் கூறினான்.

“ஓ! அப்போ நாம அந்த நட்சத்திரத்தோட சூட்டை தாங்க கூடிய தன்மை உடைய மரத்தை பார்க்கணும். இலுப்பை மரத்தை மட்டும் ஏன் ஃபிக்ஸ் பண்றீங்க..?” சிந்தித்த படி அவனிடம் கேட்க,

“இல்ல அது தான முதலில் பத்மநாப சுவாமி உருவானது. அதுனால இதுவும் தாங்கும் னு ஒரு கெஸ் தான்.” ஆனாலும் அவனுக்கும் இன்னும் யோசனை தான்.

"அத்தி மரத்துல கூட விஷ்ணு உருவாகி இருக்காரு, காஞ்சீபுரத்துல, அதுனால நாம ஒரு மரத்தை மட்டும் மைன்ட்ல வச்சுக்க வேண்டாம். தேடுவோம். எது சரியா வரும்னு பார்க்கலாம்.” வேகமாக அவனோடு சேர்ந்து காட்டை நோக்கி விரைந்தாள்.

“சரி அதுவும் கரெக்ட் தான்.” அவளோடு ஆமோதித்து நடந்தான்.

இவர்கள் இங்கு வந்த நேரம் தன்னால் அவர்களோடு செல்ல முடியவில்லையே, ஒரு வேளை இந்த முயற்சியில் தான் தோற்றுவிடுவோமோ என்று நினைத்த கிருஷ்ணன், தன்னிடம் இருந்த ஒரே ஆயுதமாக, தன் தங்கையை நோக்கி விரைந்தார்.

இன்றும் சித்தம் தடுமாறி இருந்த அவரது தங்கையை அங்கிருந்து அழைத்து வந்து, அரவிந்தனிடம் நிறுத்தினார்.

“இது தான் உன் அம்மா.. இவ கூட நீ நினைவு தெரிஞ்சு வாழல. அவளையும் வாழவைக்கல. இனிமேயாவது அவளை நீ கூட வச்சு காப்பாத்தணும்னு நினைச்சா, உடனே உன் அருமை மாமாவுக்கு போன் செஞ்சு இங்க வர சொல்லு...ம்ம்ம் சீக்கிரம்" அவனை ஏகத்திற்கும் மிரட்ட,

அரவிந்துக்கு தாயைக் கண்ட மகிழ்ச்சி, ஆனால் அது நிலைக்குமா இல்லை கிருஷ்ணன் கெடுப்பானா என்ற பயம் இரண்டும் வர, குழம்பியபடியே அனந்துவிற்கு போன் செய்தான்.

“மாமா..” அவன் ஆரம்பிக்கும் போதே,

“என்ன அரவிந்தா, உன் அம்மாவை பாத்துட்டியா?” கிருஷ்ணனின் அடுத்த ஆயுதத்தை எதிர்ப்பார்த்தே இருந்தார் அனந்து.

“ஆமா மாமா...ஆனா… இங்க..” அவன் சொல்லவரும்முன்,

“நீ பயப்படாத… நான் எப்பவோ கிளம்பிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்.” என்றவர் சொன்னபடி வந்தும் விட்டார்.

பித்துப் பிடித்த நிலையில் தன் தாய் இருப்பதை நினைத்து அழுவதா அல்லது, இன்றாவது தன் தாயைப் பார்க்க முடிந்ததே என்று மகிழ்வதா , தன் நிலையை நினைத்து அரவிந்தன் வருந்தினான்.

விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த தாயைக் காண நெஞ்சு கனத்தது. தனக்கு எதுவும் செய்யாவிட்டாலும் அவள் தாய் தான் என்ற தத்துவம் அவனை உலுக்கியது. இத்தனை வருடம் கழித்துத் தன் ரத்தம் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அதே நேரம் தங்கை மீது பாசத்தைக் காட்டினாலும் இன்று அவளை வைத்தே தன் சுயநலத்துக்காக போராடும் கிருஷ்ணனை நினைத்து கோபம் வந்தது.

எதுவும் செய்யமுடியாமல் இருக்கும் அவனது நிலை அவனுக்கே பிடிக்கவில்லை.

அனந்து வீட்டிற்குள் நுழைந்தார். வயதானாலும் உடல் வலுவிழந்த நிலையில் உயிர் இருந்தும் உணர்வில்லாமல் வாழும் தங்கையைக் கண்டு கண் கலங்கினார். அவரின் அருகில் செல்ல முற்படும் நேரம் அவரைத் தடுத்தார் கிருஷ்ணன்.

“உன் தங்கை பாசம் ஒரு ஓரத்தில் இருக்கட்டும். எனக்கு நீ வழி சொல்லாமல் போனால் அவங்க ரெண்டு பெரும் உயிரோடு இருக்க மாட்டாங்க. அதை நியாபகம் வெச்சுக்கோ.” உறுமிக்கொண்டு முன்னே வந்தார் கிருஷ்ணன்.

“என்ன டா வேணும் உனக்கு. கொஞ்சம் கூட பாசம் இல்லாம, கூடப் பிறந்தவளை கொன்னுடுவேன்னு சொல்ற. இது தான் உன்னை நம்பின அவளுக்கு நீ செய்யற உபகாரமா? உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா?” கிருஷ்ணனை சற்று உலுக்கிய கேள்வி தான் கேட்டார் அனந்து.

உண்மையில் தன் தங்கையின் இந்த நிலைக்கு கிருஷ்ணன் ஒரு காரணம் தான். அது வலித்தது. இருந்தாலும் இன்று இருக்கும் நிலையில் உபயோகம் இல்லாத தங்கையை விட நாளை தனக்கு கிடைக்கப்போகும் பெறமுடியாத சக்தி தான் அவருக்கு முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

“எனக்கு மனசாட்சி இல்ல. உனக்கு இருக்கு தானே. அப்போ நான் எப்படி அந்த ரகசிய அறையை அடையறதுன்னு வழி சொல்லு. உன் தங்கை உயிரைக் காப்பாத்து.” அவருக்கு முன்னே மிடுக்காக நடந்தார் கிருஷ்ணன்.

அனந்து பேசாமல் அரவிந்தனைப் பார்த்தார். அவன் செய்வதறியாது நிற்பதைக் கண்டு,

“உள்ள கூட்டிட்டு போய், அம்மாக்கு சாப்பாடு குடு" அவனிடம் சொல்ல, அரவிந்த் தாயை அழைத்துக் கொண்டு சென்றான்.

“உனக்கு ரகசிய அறையோட வாசலை அடையக் கூட ப்ராப்தம் இல்ல கிருஷ்ணா, வீணா போராடாத. நீ சேர்ந்திருக்கற கூட்டம், உலகத்தை அழிவுப் பாதையில் எடுத்துட்டு போற கூட்டம். அவங்க கூட போனா நீயும் அழிஞ்சிடுவ. கூடப் பிறந்த பாசம் இருக்கறதுனால சொல்றேன். இந்த முயற்சியை விட்டுட்டு வேற வேலையைப் பாரு.” தன்னால் முடிந்த வரை அவனை திருத்த முடியுமா என்று முயற்சி செய்தார்.

ஒருவனுக்கு அழிவு நெருங்கிவிட்டால், அவனுக்கு நல்லது காதில் விழாது , அறிவில் பதியாது என்பது சரியாக இருந்தது. கிருஷ்ணன் கேட்பதாக இல்லை.

“எனக்கு அறிவுறை சொன்னது போதும். நீ சொல்லி கேட்கவேண்டிய நிலை எனக்கு எப்பவுமே கிடையாது. உன் தங்கை, அவளோட மகன் இரண்டு பேரும் வேணுமா, வேண்டாமா..? நீ அவளுக்குப் போட்ட கட்டை நொடில நான் கலைச்சுட்டு அவளை இங்க அழச்சிட்டு வந்திருக்கேன். அப்போ அவளை என் கட்டுப்பாட்டுல வைக்கறது சுலபம்னு உனக்குத் தெரிஞ்சிருக்குமே….” மீண்டும் மெல்ல மிரட்டினான்.

“இதை நான் எப்பவோ எதிர்ப்பார்த்தது தான். ஒன்னு தெரிஞ்சுக்கோ, நீ அவளையோ என்னையா கொன்னாலும், உனக்கு எதுவும் ஆதாயம் இல்லை. ஏன்னா நீ அந்த இடத்தை அடைய முடியாது.” பொறுமை பறந்து கொண்டிருந்தது அனந்துவிற்கு.

“நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காத. நான் எதையும் செய்யும் துணிவோட இருக்கேன்.” கிருஷ்ணன் இறுதியாக எச்சரிக்க,

“உன்னால ஆனத செய்" என்று சொல்லிவிட்டு தங்கையைப் பார்க்கச் சென்றார்.

அரவிந்த் கொடுத்த உணவை உண்டு கொண்டிருந்தவள், திடீரென அரவிந்தின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பிக்க,

“அம்மா.. விடுங்க…” அவரின் கையைப் பிடித்து அசைத்தான் அரவிந்த் ஆனால், அவளின் பிடி கடுமையாக இருந்தது.

அனந்துவின் மந்திரக் கட்டுகள் வேலை செய்யவில்லை. அனந்து அவளை பிடித்து இழுக்க, ஒரு ராட்சசனின் பலம் அவளிடம் இருப்பதை உணர்ந்தார்.
தன் தளர்ந்த வலிமையால் அவளைப் பிடிக்க முடியாது என்றுணர்ந்து, தன் மனவலிமையை உபயோகிக்க நினைக்க, அனந்துவின் சக்திகள் முடக்கப் பட்டு இருந்தது. கிருஷ்ணன் அந்த இடத்தை தன் வசப் படுத்தி இருப்பது புரிந்தது.

உள்ளே வந்த கிருஷ்ணன், அவர்கள் நிலை கண்டு சிரிக்க,

“எனக்கு வழி சொல்லு, இதுல இருந்து நீ தப்பிக்கலாம்.” என்றார்.

அரவிந்தன் கண்கள் பிதுங்கி நின்றான். அவனைக் கண்டு கலங்க,

“சரி. சொல்றேன் அவங்களை விடு" என்றார்.

தாயின் பிடி விலக, உயிர்க் காற்றை சுவாசித்து தப்பித்தான் அரவிந்தன். திடீரென ஏற்பட்ட பலத்தை தாங்காத உடல் தளர்ந்து ஒரு ஓரத்தில் மடிந்து அமர்ந்தாள் அவன் தாய்.

இருவரையும் காப்பாற்ற வேறு வழி இல்லாமல், விஜயின் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து கிருஷ்ணனிடம் வழி சொன்னார்.

“விஜய் கொண்டு வரும் பெட்டியை உன் வசமாக்கிக் கொண்டால், நீ அந்த ரகசிய அறையை அடையலாம்.” பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லிவிட்டு, இப்ப நீ அவங்கள விட்டுட்டு. இங்கிருந்து போ. உன் லட்ச்சியதை அடைஞ்சுக்க முயற்சி பண்ணு. ஆனா இனி ஒரு முறை இவங்கள நீ காயப் படுத்த நினச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.” கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவர்களை விட்டுவிட்டு கிருஷ்ணன் மகிழ்ச்சியாக தன் அழிவை நோக்கிச் சென்றார்.

விஜயும் ஜானவியும் காட்டில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் தேடும் இல்லுப்பை மரமோ அல்லது அத்தி மரமோ எதுவும் கண்களுக்குப் புலப்பட வில்லை. இருட்டும் நேரம் வேறு நெருங்கிவிடுமோ என்று மனம் துடித்தது.

“இப்ப என்ன பண்றது விஜய்?” ஜானவி தவிக்க,

“ஒன்னு செய்யலாம். நாம நினைப்பது தான் கடவுள். நம்ம மனம் தூய்மையா இருந்தா அவர் எதுலையும் இருப்பார். அதுனால, இங்க இருக்கறதுல எஹு வலிமையான மரமோ, அதை தேர்ந்தெடுப்போம்.” மனதில் வந்த யோசனையைக் கூற,

அவளுக்கும் அது சரியெனப் பட்டது.

இருவரும் சேர்ந்து ஒரு உறுதியான அடர்த்தியான மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். அதில் இருக்கும் மரப்பட்டைகளையும், அங்கிருந்த கற்களை கூராக்கி சிறுது மரத் துண்டுகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டனர். விரைந்து தங்கள் குடிலுக்கு வந்து அவற்றை தங்களுக்குத் தெரிந்த வகையில் தீட்டி இணைத்து கையளவு பெட்டி ஒன்றை தயாரித்தனர்.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,370
Reaction score
43,451
Age
38
Location
Tirunelveli
பெரியவரே அனந்து,

இனி நீர் வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️,

இதுவரைக்கும் செய்யாத அந்த பொங்கல இனிமேல் மட்டும் 😤😤😤😤

Nalla irukku sister update 👍 👍
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top