Karuppu rojakkal (part-15)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (part_15)
மகேஷ் பேருந்து நோக்கி சென்றான்...
தன் மனதின் பாரம் லேசாய் குறைந்தது போல் உணர்ந்தான் மகேஷ்!
அவன் பேருந்தை அடைவதற்குள் டிரைவர் அடித்த ஹாரன் சத்தம் கேட்கவே சற்று வேகமாய் ஓடி ஏறினான் மகேஷ்!
"என்னங்க எங்க போயிட்டிங்க... "
தன் கையில் வாங்கி வந்திருந்த 'பொவன்டோ' பாட்டிலை அவளிடம் தந்தான் மகேஷ்!
" இதை வாங்கவா போனிங்க??? "
" ம்ம்ம் உனக்கு பொவன்டோ ரொம்ப பிடிக்குமே மகா அதான் வாங்கி வந்தேன்! "
" ஓ... அப்படியா??? "
பேருந்து கிளம்பியது சென்னையை நோக்கி!
........................................... ............................... *************************************************,,, *****
சென்னை...
மகேசும், மகாவும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடையும் பொழுது மணி இரவு பதினொன்றை தொட்டிருந்தது!
மகேசின் மனதில் பயம் தொற்றிக்கொண்டது!
'இப்போ என்ன செய்யப்போகிறேன்... மகாவை ஏதாச்சும் ஹாஸ்டல்ல தங்க வெச்சிடலாம், ...
பொழுது விடிஞ்சா மலருக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் இதை எப்படி தடுக்கப் போகிறேன்???
அம்மா இதை எப்படி ஒத்துப்பாங்க... இன்னைக்கு நான் வரலைனாவே செத்துடுவேன்னு சொன்னாங்களே...
இந்த கல்யாணமே எனக்கு வேணாம்னு சொன்னா எப்படி தாங்கிக்க போறங்கனு தெரியலையே...
மலர் இந்த ஏமாற்றத்தை எப்படி தாங்கிக்க போறா...
என் ஒருவனுக்காக... என் ஒருத்தன் சுயநலத்திற்காக எத்தனை பேரை கஷ்டப்படுத்தறேன்!
இது எல்லாம் என் மகாவுக்காக ... என் மகா வேணும் எனக்கு... '
மகாவின் குரல் மகேசின் சிந்தனையை கலைத்தது!
"என்ன மகேஷ் நான் கூப்பிட்டுகிட்ட
ே இருக்கேன் நீங்க ஏதோ யோசனைல இருக்கிங்க... "
" மகா அது வந்து... எங்க வீட்ல இன்னும் நம்ம லவ் மேட்டர் தெரியாது அதான் உன்னை இப்போ ஹாஸ்டல்ல விட்டுட்டு போகவும் மனசு வரல வீட்டுக்கு கூட்டிட்டு போகவும் தைரியம் வரல மகா... "
" பரவாயில்ல மகேஷ்... நீங்க நான் தங்கியிருந்த ஹாஸ்ட்டல்லயே விட்டுட்டு போங்க... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அத்தைகிட்ட பேசிட்டு கல்யாணம் பண்ணிக்குங்க மகேஷ்! எனக்கு இந்த உலகமே புதுசு மகேஷ்... இந்த உலகத்துல எனக்கு தெரிந்த... எனக்குனு இருக்குற ஒரே ஜீவன் நீ மட்டும்தான் மகேஷ்! " மகா கண் கலங்க மகேசின் கரங்களை பிடித்துக் கொண்டாள்...
அரை மணி நேர பயணத்தில் மகாவும் மகேசும் 'குயின்ஸ் நெஸ்ட்...' ஹாஸ்டலை அடைந்தனர்...
" ஹே மகா எப்படி இருக்கடி ரொம்ப இளைத்தாப் போல தெரியுது... " நலம் விசாரித்தாள் காவ்யா...
" நீ... நீங்க யாருனு எனக்கு தெரியலையே??? " மகா குழப்பமாய் கூறினாள்!
" ஹே மகா... நான் காவ்யா டி... உன் ரூம் மேட்... மகேஷ் எல்லா விசயமும் சொன்னார்டி நான் புரிய வைக்கிறேன் மகா உனக்கு ஒவ்வொண்ணும்!"
மகேஷ் முன் கூட்டியே காவ்யாவிடம் போனில் கூறியதை அச்சு பிசகாமல் அப்படியே கூறினாள் காவ்யா!
"காவ்யா மகாவை பார்த்துக்க பத்து நாளா நான் வீட்ல இல்லைனு அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க... நான் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வந்து பார்க்குறேன்...
மகா டேக் கேர் யுவர் செல்ப்... "
மகா மவுனமாய் தலையாட்டினாள் அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து!
" மகா என்னாச்சி மகா... "
" மகேஷ் நீங்க கிளம்புங்க... "
" ஏன் மகா ஒருமாதிரி இருக்க... "
மகேஷ் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் மடை திறந்த ஏரிப்போல் கண்ணீர் வழிந்தோடி அவள் தொண்டையில் இறங்கியது!
" ஏய் மகா எதுக்கு இப்போ நீ அழுகுற...? "
" மகேஷ் இதுக்கு முன்னால எப்படியோ தெரியல... இந்த பத்து நாளா எனக்கு தெரிஞ்சி எனக்குனு இருந்த ஒரே சொந்தம் நீதான்...
இப்போ... இப்போ நீயும் என்னை விட்டு போகும் போது என்னால தாங்கிக்க முடியல மகேஷ்...
ப்ளீஸ் நீங்க கிளம்புங்க என்னால அழாம உங்களை பார்க்க முடியல... "
மகேசின் கண்களிலும் கண்ணீர் துளிகள் பிரசவமானது!
" மகா நீ இப்படி அழுதுகிட்டு இருந்தா என்னால எப்படி போக முடியும் மகா...
போனாலும் நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்...
நான் காலையில வந்துடறேன் மகா புரிஞ்சிக்க ப்ளீஸ்... "
" சாரி மகேஷ் நீங்க கிளம்புங்க... "
" மகா நான் அம்மாகிட்ட நம்ம விசயத்தை சீக்கிரமா பேசிட்டு உன்னை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன் மகா... "
" சரி மகேஷ் டைம் ஆகுது கிளம்புங்க நீங்க... "
மகேஷ் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி திரும்பி நடக்க...
" மகேஷ்... "மகா குரல் கேட்டு திரும்பியவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் மகா!
மகேசின் அத்தனை பாரங்களும் அந்த சில நொடிப் பொழுதுகள் விடுப்பெடுத்துக் கொண்டன!
" ஐ லவ் யூ மகேஷ்... "
" லவ் யூ டூ மகா... "
மகாவின் முகத்தில் சற்றே புன்னகை பூத்திருக்க அழகு தேவதையாய் தெரிந்தாள் மகா!
மகேஷ் போகும் போது காவ்யாவிடம் கண்களால் ஜாடை காட்ட...
'நான் பார்த்துக் கொள்கிறேன் 'என்பதை போல் தலையசைத்தாள் காவ்யா!
*********************************************
**************************************
மகேஷ் அவன் வீட்டை அடையும் பொழுது மணி நள்ளிரவை கடந்திருந்தது!
டாக்ஸிக்கு பணம் கொடுத்துவிட்டு கேட்டை திறந்தான் மகேஷ்!
வீட்டு வாசலில் வாழை மரம் கட்டப்பட்டு வீடு முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது!
மகேஷ் மனதிற்குள் பயம் மிக வேகமாகவே வந்து குடியேறியது!
இப்போ என்ன செய்யப் போகிறேன் நான்...
அம்மாவிடம் நிச்சயத்தை தள்ளி வைக்க சொன்னதற்கே தான் இறந்து போவதாய் சொன்னவள் நிச்சயமே வேண்டாமென்றால்???
கடவுளே நினைக்கவே பயமாயிருக்கே...
மெல்ல யோசித்துக் கொண்டே மகேஷ் நடக்க மகேசின் மாமா கணேசன் வாயில் துணியை வைத்து அழுதபடியே ஓடி வந்து மாப்ள பாவி இப்படிப் பண்ணிட்டாளே என்று கதற மகேஷ் எடுத்து வந்திருந்த பையை கீழே போட்டுவிட்டு...
"அம்மா..... "என்று அலறிக் கொண்டே ஓடியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது!
(தொடரும்)
 

sakthipriya

SM Exclusive
Author
#2
என்ன பொண்ணூ ஒடி போயிடுச்சா சகோ மகாவுக்கும் உனக்கும் இனி நோ ப்ராபளம்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top