Karuppu rojakkal... (part-27)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி_27)
"எந்த மூஞ்சை வெச்சிகிட்டு என் வாசல் படியேறி வந்திருப்ப அதுவும் அந்த ஓடுகாலிக்கு கல்யாணம்னு பத்திரிக்கை எடுத்துகிட்டு... " கணேசனை எரித்து விடுவதைப்போல் பார்த்தவாறே கூறினாள் கமலம்!
" கமலா நான் என்ன பண்ணட்டும் சொல்லு... அந்த பாவி முண்ட இப்படி பண்ணுவானு யார் பார்த்தா...
வர்ற கோவத்துல அவளை கொண்ணுட்டு ஜெயிலுக்கு போயிடலாம்னு தோணுது... ஆனா பெத்த மனசு தடுக்குது கமலா...
உனக்கு மட்டும்தான் அசிங்கம் நினைக்குறயா... அத்தனை பேர் இருக்க சபைல அவ மசக்கையா இருக்கானு மருத்துவச்சி சொல்லும்போது அங்க இருந்தவங்க என்னையும் என் வளர்ப்பையும் பத்தி பேசினது காது கொடுத்து கேட்க முடியலமா...
அப்பவே செத்து ஒழியணும்னு தான் நினைச்சேன்... ஆனா ஆசை ஆசையா வளர்த்த பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்னு தோணுச்சி...
அந்த நரேஷ் நல்லவனோ கெட்டவனோ அவனுக்கே என் பொண்ணை கட்டி கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...
எங்களுக்கு சொந்தம்னு உங்களவிட்டா யாரு இருக்கா கமலம்...
நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்... என்னை அநாதையா நிக்க வெச்சிடாதேமா... " கண்களில் வழிந்த கண்ணீரை தோளில் அணிந்திருந்த துண்டால் துடைத்துக் கொண்டே பத்திரிக்கையை மேஜை மேல் வைத்து சென்றார் கணேசன்!
*********************************************
***************************,, ***,, *, ***
" என்னம்மா மாமா எப்போ வந்தார்... பத்திரிக்கை பார்த்தேன் மலருக்கு கல்யாணமாமே... ரொம்ப சந்தோசமா இருக்குமா... "
" வந்தான்... கொஞ்ச நேரம் முன்னாலதான் வந்தான்... அந்த ஓடுகாலி கல்யாண பத்திரிக்கைய எடுத்துகிட்டு எந்த தைரியம் இருந்தா இங்க வருவான்...
என் ஆத்திரம் தீர திட்டி தீர்த்தேன்..
பத்திரிக்கைய கையில கூட வாங்கல டேபிள்ல வெச்சுட்டு போய்ட்டான்... "
" தப்பு பண்றமா... மாமா ஏற்கனவே மனசு ஒடிஞ்சி போயிருக்கார் அவரை மேல மேல கஷ்டப்படுத்தற... "
" அந்த தரங்கெட்டவள வளர்க்க தெரியாம வளர்த்துட்டு என்னையும் என் பிள்ளையையும் சபையில அசிங்க படுத்தினவனை மாலை மரியாதையோட நான் வரவேற்கலைனு சொல்றியாடா... "
" அம்மா மலரை இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க அவ ஒண்ணும்...... " மலர் உண்மையை யாருக்கும் சொல்லகூடாதுனு சத்தியம் வாங்கியது நினைவில் வர பேச்சை பாதியில் நிறுத்தினான் மகேஷ்...
" அவ ஒண்ணும்... சொல்லுடா ஏன் பாதிலயே நிறுத்திட்ட... அவ ஒண்ணும் கேவலமானவ இல்லைனு சொல்லப் போறியா...
கழுத்துல தாலிய சுமக்கறதுக்கு முன்னயே வயித்துல பிள்ளைய சுமக்கறவளுக்கு பேர் என்னடா...
பச்சையா சொல்லணும்னா தெ...... யா"
"அம்மா...."கத்தியே விட்டான் மகேஷ்.
நடப்பவைகளை மூலையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மகாவுக்கு கண்களில் நீர் சுரந்தது!
'தான் யாரென்று தெரிந்தாள் அத்தை என்ன செய்வாங்க... ஐயோ இந்த நரக வேதனையை இன்னும் எத்தனை நாளுக்கு நான் சுமக்க போகிறேன் கடவுளே! ' மகா மனதில் பயம் வலுபெற்றது!
"சரிம்மா இப்போ நீ என்ன சொல்ற???
மலர் கல்யாணத்துக்கு வருவியா??? வரமாட்டியா??? "
" வரமாட்டேன்... நீயும் போக வேணாம்... "
" சாரிம்மா நானும், மகாவும் நிச்சயம் மலர் கல்யாணத்துக்கு போவோம்... "என்று சொல்லி மாடிப்படியேறி சென்றான் மகேஷ்!
**************,, ******************************
*************************
மகேசும், மகாவும் மண்டபத்தின் வாசலில் காரை நிறுத்தி இறங்கியதை கண்ட கணேசன் ஓடி வந்து வரவேற்றார்...
" வாங்க மாப்ள... வாம்மா மகா... "என்று வரவேற்றவர் காரின் பின் இருக்கையில் எதையோ தேடினார்!
" மாப்ள... அம்மா வரலையா??? "
" அது... வந்து.... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாமா...
அதான் நீங்க போய் வாங்கனு எங்களை அனுப்பினாங்க... "
" ஏன் மாப்ள பொய் சொல்ற???
அவளுக்கு வர விருப்பமில்ல...
உங்களையும் போக வேணாம்னு சொல்லியிருப்பா நீங்க அவ பேச்சை மீறிதான் இங்க வந்திருப்பிங்க... " நடந்ததை நேரில் பார்த்ததைப் போல் சொன்னார் கணேசன்!
மகேஷ் அவர் கரங்களை ஆதரவாய் பற்றிக் கொண்டான்!
" நீங்க கவலைப் படாதீங்க மாமா... எல்லாம் சரியாகிடும்! "
என்று சொல்லிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்தார்கள் மகேசும் மகாவும்!
ஓர் இரண்டு நிமிட காத்திருப்புக்குப் பின் மலர் மணமேடை நோக்கி அழைத்து வரப்பட்டாள்!
மலர் ஓர் முறை மணமேடையை சுற்றி வந்து அமர்ந்தாள்!
மகேசை பார்த்தவளின் முகம் பிரகாசமானது...
யாரோ ஒரு குழந்தை விட்ட 'பபுள்ஸ்' தற்காலிகமாய் அந்த அரங்கம் முழுக்க நிறைந்து அழகூட்டியது!
தேங்காயில் முடியப்பட்டிருந்த தாலிக் கயிறு அட்சதை அரிசியில் வைத்து மண்டபம் முழுக்க வலம் வந்தது!
கெட்டி மேளம்...
கெட்டி மேளம்...
புரோகிதர் நாதஸ்வர தவில் வித்வான்களுக்கு தற்காலிக இயக்குனராய் மாற அவர்கள் இசைக்க துவங்க மாங்கல்யத்தை நரேசிடம் கொடுத்து மந்திரத்தை ஓதிய புரோகிதர்
"நிறுத்துங்க.... " என்ற குரல் கேட்க மேள தாள இசையும் புரோகிதரும் அந்த குரலுக்கு கட்டுபட்டவர்களாய் நிறுத்தினர்!
_தொடரும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top