Karuppu rojakkal... (part-28)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி - 28)
தாலி கட்டும் நேரத்தில் 'நிறுத்துங்க' என்று குரல் வந்ததும் மண்டபமே பரபரப்பானது...
யாரது குரல் கொடுத்தது என்று குழம்பியவர்களின் குழப்பத்தை இம்முறை மீண்டும் அந்த குரல் வந்து தெளிவுபடுத்தியது!
"நிறுத்துங்க... "
மலர் மணமேடையில் எழுந்து நின்று கத்தினாள்!
நரேஷ் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்!
" ஏ மலர் என்ன பண்ணிகிட்டு இருக்கே நீ...
பேசாம உட்காரு... " அதட்டினார் கணேசன்!
" இல்ல நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லல...
நிச்சயம் இந்த கல்யாணம் நடக்கும் அதுக்கு முன்ன நான் கொஞ்சம் பேசணும்! "
" ஏய் மலர் சொன்னா கேட்கமாட்டியா... ஒழுங்கு மரியாதையா உட்கார் நல்ல நேரம் போய்கிட்டிருக்கு... எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்... " கணேசன் இம்முறை கொஞ்சம் பணிவாகவே பேசினார்!
" இல்ல நான் இப்போ பேசணும்...
இதோ முதல் வரிசையில உட்கார்ந்திருக்காரே என் மாமா மகேஷ்... அவருக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு பண்ணி நிச்சயம் பாதியிலேயே நின்னு போனது உங்க எல்லோருக்குமே தெரியும்னு நினைக்கிறேன்...
அதுக்கான காரணமும் தெரியும்னு நினைக்கிறேன்...
இதோ இப்போ மணையில என் பக்கத்துல உட்கார்ந்திருக்காரே நரேஷ்... இவர் பிள்ளை என் வயித்துல வளருதுனு தெரிஞ்சதாலதான் நிச்சயமே நின்னு போச்சி... "
" ஏய் மலர் ஏன் திரும்ப திரும்ப என்னை அசிங்கப் படுத்தற... " மலரின் காதில் நரேஷ் கிசுகிசுக்க... ஓர் புன்னகையை பதிலாய் உதிர்த்துவிட்டு தொடர்ந்தாள் மலர்!
" உண்மையில அது காரணமில்லை....
நான் இந்த நொடி வரை கன்னி கழியாத பொண்ணாதான் இருக்கேன்"
மலர் சொல்ல கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது!
கணேசன் அதிர்ச்சியில் மலரை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்!
"இதோ இருக்காரே நரேஷ்...
இவரை நான் லவ் பண்ணேன் இந்த விசயம் தெரிஞ்ச எங்கப்பா அவசர அவசரமா எனக்கும் என் அத்தை பையன் மகேசுக்கும் கல்யாண ஏற்பாடு செஞ்சார்...
அந்த கல்யாணத்தை நிறுத்ததான் நான் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்...
செய்யாத தப்புக்கு பழியை நரேஷ் மேல போட்டாலும் அவர் என்னை ஏத்துப்பார்னு நம்பிக்கையில அப்படி செஞ்சேன்...
என் நம்பிக்கை வீண் போகல...
எந்த சபையில நான் நரேஷ் மேல பழியை போட்டு அவருக்கு கலங்கத்தை உண்டு பண்ணேனோ அதே சபையில அவர் கலங்கம் இல்லாதவர்னு நிரூபிக்கத்தான் நான் தாலி கட்ற கடைசி நிமிசம் வரை காத்திருந்தேன்....
இதே கலங்கத்தோட அவர் என் கணவனாகுறதை என் மனசு ஏத்துக்கல... சாரி நரேஷ்... "
நரேஷ் மலரை ஆதரவாய் அணைத்துக் கொண்டான்!
" பெத்த பொண்ணு ஒருத்தன் கூட படுத்து கெட்டுபோய் வந்தா இந்த சமூகம் பெத்தவன என்ன என்ன வார்த்தைகளால சாகடிக்கும்னு எனக்கு தெரியும்... அந்த நிலைக்கு உங்கலை தள்ளிட்டதுக்கு என்னை மன்னிசிடுங்கப்பா...
அப்புறம் மகேஷ் மாமா...
மகேஷ் மாமாவுக்கு ஏற்கனவே இந்த விசயம் தெரியும்... என் காதலுக்காக அவரையும் சபையில வச்சி அசிங்கப் படுத்தியிருக்கேன் அவரும் என்னை மன்னிக்கணும்...
சாரி மகேஷ் மாமா... "
மகேஷ் மலரை பார்த்து புன்னகைத்தான்!
அவமானத்தாலும், ஏமாற்றத்தாலும் கண்கள் சிவக்க நின்றார் கணேசன்!
" இப்ப சொல்லுங்க கெட்டிமேளம்... "என்று கூறிக் கொண்டே மலர் மணையில் அமர நரேஷ் அவள் கழுத்தில் தாலி கட்டினான்!
கணேசன் கைகளிலிருந்து விடுபட்ட அட்சதை பறந்து வந்து மணமக்களை வாழ்த்தியது!
*********************************************
***************************************
" மகா... "
" ம்ம்ம்... "
" ஏன் மகா ஒரு மாதிரி இருக்கே... "
" ஒண்... ஒண்ணுமில்லையே... "
திரும்பி படுத்திருந்த மகாவை தன் பக்கம் திருப்பிய மகேஷ் அதிர்ந்தான்!
" ஏய் என்னாச்சி மகா... ஏன் அழறே??? "
" எனக்கு வாழ்க்கைய நினைச்சா ரொம்ப பயமாயிருக்கு மகேஷ்...
அன்னைக்கு ஒருத்தங்க என்கிட்ட வந்து உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கேனு சொல்லும்போது கற்பனைகள் எங்கெங்கோ போய் என்னை சாகடிக்குது மகேஷ்...
அந்த அதிர்ச்சி விலகறதுக்குள்ள அத்தை வந்து அந்த பொம்பள ஒரு மாதிரினு சொல்லும்போது எனக்கு செருப்பால அடிச்சாப்போல இருந்துச்சி மகேஷ்...
நான்... நானும் அந்த ஒரு மாதிரி தானே... "
" மகா பழசையெல்லாம் மறந்துடு ப்ளீஸ்... "
" நானும் மறக்கணும்னுதான் நினைக்கிறேன் மகேஷ் ஆனா முடியலையே...
எனக்கு உன் கூட வாழணும்... ஒரு மனைவியா உனக்கு என்னென்ன சுகம் தரணுமோ அதெல்லாம் தரணும்னு என் ஒரு மனசு தவிக்குது...
ஆனா ஒரு மனசு எச்ச இலையிலயாடி விருந்து வைக்கப் போறேனு என்னைக் கேள்விக் கேட்டு கொல்லுது மகேஷ்... "
" மகா.... "
" ம்ம்ம்... "
" இங்க பாரேன்... "
மகா திரும்பி மகேஷ் முகத்தை பார்க்க மகேஷ் அவளை இழுத்தணைத்து தன் இரு உதடுகளுக்கும் துணை தேடி வைத்தான்!
மகா முதன் முதலாய் தன் உடம்பில் மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்தாள்...
மனம் விலகிச் செல் என்று உரக்க கத்தி கொண்டிருக்க காமன் மகாவின் காதுகளை அழுத்தமாய் அடைத்து வைத்தான்!
_(தொடரும்)
 
Top