Karuppu rojakkal... (part-29)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி_29)
"மகா... "
" ம்ம்ம்... "
" இப்போ நான் எவ்வளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா... "
" நான்... நான் சந்தோசப் படுறதா இல்லை சங்கடப்படுறதானு தெரியாத நிலமையில இருக்கேன் மகேஷ்...
உன் கூட தாம்பத்யத்தை தொடங்கியதுக்காக சந்தோசப் படுறதா...
இல்ல...
எவன் எவனோ மேய்ந்து மிச்சம் வைத்த இந்த உடம்பை உனக்கு கொடுத்ததுக்காக வெட்கப்படுறதானு புரியல மகேஷ்... "
" மகா உனக்கு நான் எத்தனை முறை சொல்றது... நீ ரூபா இல்ல மகா... என் மகா டி... "
" மகேஷ் நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் மனசுல பட்டதை மறைக்காம சொல்லணும் சரியா... "
" ம்ம்ம்... கேளு மகா... "
" என்னை இப்போ தொடும்போது இந்த உடம்பு பல பேரால தொடப்பட்டதுனு உனக்கு தோணலையா... "
" சத்தியமா தோணல மகா... சொல்லப் போனா நீ ரூபான்ற ஒரு நினைப்பே எனக்கு எப்பவுமே தோணுறது கூட இல்ல நீ சொல்ற வரை... "
மகா மகேசை அணைத்துக் கொண்ட அந்த நொடி இரண்டாம் அத்தியாயத்திற்கு அடிகோலியது!
*****************,,,,,,, ******************************
**************************
"என்ன சார் கூப்பிட்டிங்களா???" தன் அலுவலக நிர்வாகி முன் நின்றான் மகேஷ்!
"ஆமாம் மகேஷ்... வாங்க ப்ளீஸ் டேக் யுவர் சீட்... "
சொல்லிக்கொண்டே ஓர் கவரை மகேசிடம் நீட்டினார் அவர்!
" என்ன சார் இது??? "
" ப்ளீஸ் பிரிச்சி பாருங்க மகேஷ்... "
மகேஷ் பிரிக்க அதனுள் கோவா செல்வதற்கான ப்ளைட் டிக்கெட் இரண்டு இருக்க புரியாமல் அவரை பார்த்தான் மகேஷ்!
" என்ன மகேஷ் அப்படி பார்க்குறீங்க... நீங்களும் உங்க ஒய்ப் ம் கோவா போறதுக்கான ரெண்டு டிக்கெட்தான் இது...
ஆறு நாள் ட்ரிப்... டிக்கெட்ஸ்... ஹோட்டல் புக்கிங் வவுச்சர் எல்லாம் இதுல இருக்கு... இது என்னோட ஸ்மால் கிப்ட் பார் யூ... "
" தேங்க்ஸ் யூ சார்... பட்... என் ஒய்ப்க்கு இதுல இஷ்டம் இருக்கானு தெரியலை சார்... நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றனே... "
" மகேஷ் வாழ்க்கையில இந்த பிரீயட் திரும்ப வராது... இன்னும் கொஞ்ச நாள் போனா குழந்தை குட்டினு பாரம் அதிகமாகும் அப்போ இதை பத்தியெல்லாம் நினைச்சி கூட பார்க்க முடியாது மகேஷ்...
கண்டிப்பா நீங்க இந்த ட்ரிப் போய்தான் ஆகணும் இது என்னோட ரிக்வ்யஸ்ட் இல்ல ஆர்டர் ஓகே!
"ஓ.... ஓகே சார்... "
தனது கேபினுக்கு திரும்பிய மகேசிடம் காவ்யா வந்தாள்!
" என்ன மகேஷ் பாசை பார்த்துட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்கே... "
மகேஷ் விசயத்தை சொல்ல துள்ளி குதித்தாள் காவ்யா!
" வாவ்... சூப்பர்... அதுக்கேன் மகேஷ் இப்படி டல்லா உட்கார்ந்திருக்க... "
" மகா இதுக்கு ஒத்துப்பாளானு தெரியல காவ்யா... அவ வெளியில எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறா...
யாரை பார்த்தாலும் பயப்படுறா...
நான் ரூபானு அவங்களுக்கு தெரியும் போலனு பயந்து பயந்து சாகுறா காவ்யா! "
" மகேஷ் ஊருக்கு பயந்தா நாம வாழ முடியாது...
நீ கிளம்பறதுக்கான ஏற்பாடு பண்ணு நான் மகாகிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்!
**********************,,,,, ***************
*****************************************
மகேஷ் வழக்கத்தை விட சற்று முன்பாகவே ஆபிஸ் விட்டு கிளம்பினான்!
போகும் வழியில் மல்லிகைப் பூவையும் மகாவிற்கு பிடித்த குலாப்ஜாமூனும் வாங்கிக் கொண்டு வீட்டின் அழைப்பு மணியை அடிக்க காலம்தான் வந்து கதவை திறந்தாள்!
"அம்மா மகா எங்கே??? "
" ஏன் நானெல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியலையாடா... "
" ஏம்மா இப்படி பேசறே??? "
" வேற எப்படி பேச சொல்றே???
எங்கடா பிடிச்ச அவளை...
இன்னும் என்னவெல்லாம் எனக்கு தெரியாம மறைச்சிருக்கானு தெரியல.... "
மகேஷ் பயத்தில் கையிலிருந்த கவரை நழுவ விட குலோப்ஜாமுன் மல்லிகையோடு கலந்து நிறத்தை மாற்றியது!
(தொடரும்)
 

sakthipriya

SM Exclusive
Author
#6
மகாவுக்கு என்ன ஆச்சு இன்னும் தெரியலை ஸ்ரீசத்யா நாங்க வெயிட்டிங
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top