Karuppu rojakkal... (part-30)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி_30)
"எங்க இருந்துடா பிடிச்ச இவளை... இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட இருந்து மறைச்சிருக்கானு தெரியலையே.... "
கமலம் சொன்னது கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தான் மகேஷ்...
" அம்...அம்மா நீ எதை சொல்ற??? "
" எதைச் சொல்ல...
என் மருமக வெச்ச வத்தக் குழம்பை சொல்லவா???
அவ செஞ்ச பாகற்காய் பொரியலை சொல்லவா...
பாகற்காய் கசக்கத்தானே செய்யும் ஆனா என் மருமக கை பட்டதும் இருக்குதுடா... "
கமலம் சொல்லிக்கொண்டே போக மகேசின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பியது!
" நீ ஏன்டா ஒரு மாதிரி இருக்கே... "
" அது... அது வந்து மகா எதுவோ.... " மென்று விழுங்கினான் மகேஷ்!
" என்ன மாமியார் மருமக சண்டைய ஆரம்பிச்சிட்டோம்னு நினைச்சியா...
மகா போல ஒரு பொண்ணு எல்லோர் வீட்டுக்கும் மருமகளா போய்ட்டா மாமியார் மருமக சண்டையே அந்த வீட்ல இருக்காது மகேஷ்!
நானா பார்த்து கட்டி வச்சிருந்தா கூட உனக்கு இப்படியொரு பொண்ணை கட்டி வெச்சிருப்பனானு சந்தேகம்தான் மகேஷ்... "
புகழ்ந்து தள்ளினாள் கமலம்!
" அம்மா மகா எங்க இருக்கா??? "
" கிச்சன்லதான்டா இருக்கா...
போய் ப்ரஷ் ஆகிட்டு வா... இன்னைக்கு நாள் மட்டும் உன் டயட் மண்ணாங்கட்டியெல்லாம் ஓரங்கட்டி வெச்சிட்டு என் மருமக சமையல வயிறு முட்ட சாப்பிடு... "
" ஹாஹாஹா... சரிமா... சரிமா... "
" வாங்கிட்டு வந்த பூ ஸ்வீட் எல்லாம் வீணாக்கிட்ட பாரு... ப்ரிட்ஜ்ல பூ வாங்கி வெச்சிருக்கேன் கொண்டுபோய் மகாகிட்ட கொடு.. "
" சரிம்மா... "
மகேஷ் சமையலறையை நோக்கி நடந்தான்!
சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த மகாவை பின்னாலிருந்து கட்டியணைத்ததில் மகா பயத்தில் கத்தியே விட்டாள்!"
"என்னமா மகா என்னாச்சி...
என்ன அங்க சத்தம்??? "
கமலத்தின் குரல் ஹாலிலிருந்து கேட்டது!
" ஒ.... ஒண்ணுமில்ல அத்தை பூனை... "
" ஓ... பூனையா... ஏம்மா அந்த பூனைக்கு ஒரு 26 வயசு இருக்குமா??? "
மகாவும், மகேசும் வாய்விட்டு சிரித்தே விட்டார்கள்!
" என் மகா எப்பவும் இதேப் போல சிரிச்சிகிட்டே இருக்கணும்... "என்று அவள் முகவாயை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்தவாறே கூறினான் மகேஷ்!
" அது சரி சமையல்லாம் சூப்பரா சமைக்கிறயாம்???
அம்மா புகழ்ந்து தள்ளறாங்க! "
" எனக்கு சமைக்கத் தெரியும்னு எனக்கே இன்னைக்குதான் தெரியும் மகேஷ்...
ஒரு வேளை ரூபா நல்லா சமைப்பாளோ??? "
மகா அப்படி சொன்னதும் மகேசின் முகம் மாறியது!
" நான் சும்மாதான் சொன்னேன் எதுக்கு இப்படி மூஞ்சை தூக்கி வெச்சிருக்கிங்க... "
" மகா நீ என்னை வார்த்தையால காயப்படுத்தணும்னு இப்படி பண்றியா...
நீ ரூபா இல்ல மகானு உனக்கு எத்தனை முறைதான் நான் சொல்றது??? "
" சாரி மகேஷ் நான் உங்களை காயப் படுத்தணும்னு அப்படி சொல்லல...
நான் சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னேன்"
மகா கண்களில் நீர் சுரந்தது!
"ஏய் லூசு நானும் சும்மா விளையாட்டுக்குதான் கோவப்பட்டா போல நடிச்சேன்... சீ கண்ண துடை லூசு... "
" இல்ல நீ பொய் சொல்ற... நீ உண்மையிலேயேதான் கோவப்பட்ட போ... "
" என் அம்முக் குட்டி மேல நான் கோவப்படுவேனா... லூசு...
இது என்ன சொல்லு??? "
கையிலிருந்த கவரை காட்டினான் மகேஷ்!
" கோவாக்கு போக டிக்கெட்... சரிதானே??? "
" அதுக்குள்ள காவ்யா தலைப்பு செய்தி வாசி்ச்சிட்டாளா???
போலாமா ப்ளீஸ்... "
" ம்ம்ம் போகலாம்... "
" ஐய்யோ.... ஜாலி... ஜாலி... "
சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான் மகேஷ்!
*********************************************
***************************************
அடுத்த இரண்டு நாட்களில் மகாவும், மகேசும் கோவா புறப்பட்டு சென்றனர்!
கோவாவில் இருவரும் வந்திறங்க அங்கிருந்த கட்டிடங்களின் அழகில் திளைத்திருந்தனர்!
போர்த்துகீசியர்களின் கலை நயத்தை இருவரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்...
'கோவா அன்புடன் அழைக்கிறது 'என்ற வாசகம் தாக்கிய பலகை அவர்களை ஆபத்துடன் அழைப்பதை பாவம் இருவரும் அந்த நொடிப்பொழுதில் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை!
கோவாவில் குழப்பம் தொடரும்...
 

Sponsored

Advertisements

Top