Karuppu rojakkal... (part-31)

Sri Sathya

Active member
#1
'பானாஜி' யில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மகேசின் அலுவலகம் சார்பாக ரூம் புக் செய்யப்பட்டதால் பரபரப்பான கோவாவில் ரூம் தேடி அலையும் அவலம் அவர்களுக்கு ஏற்படவில்லை!
பயண கலைப்பு தீர இருவரும் குளித்து முடித்தனர்!
"மகா டிபன் சாப்பிட்டுட்டு பீச் க்கு போகலாம்...
"பாகா "பீச் பார்த்துட்டு அப்படியே ஈவ்னிங் பஜார்ல பர்சேஸ்லாம் முடிச்சிடலாம்...
நேரம் நமக்கு ரொம்ப கம்மியாத்தான் இருக்கு...
கோவாவ முழுசா சுத்தணும்னா நாலு நாள் கண்டிப்பா பத்தாது"
"ம்ம்ம் சரி மகேஷ்... இதுக்கு முன்ன நீங்க கோவா வந்திருக்கிங்கள
ா மகேஷ்... "
" ப்ரண்ட்ஸ் கூட ரெண்டு முறை வந்திருக்கேன் மகா...
கோவா இளைஞர்களின் உல்லாச பூமி... இது தெரிஞ்சதாலதான் ஆபிஸ்ல நம்மை இங்கே அனுப்பியிருக்காங்க போல... "
மகாவும் மகேசும் கேண்டலின் கடற்கரையை அடையும் பொழுது மணி பன்னிரண்டை கடந்திருந்தது!
முதமான சூரிய தாக்கத்தில் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ப அங்கே சூரிய குளியலில் திளைத்திருந்தனர்!
" மகா இந்த கேண்டலின் பீச் ஒரு சொர்க்கம்னே செல்லலாம்..."
"ஏன் சொல்ல மாட்டிங்க...
அரைகுறையா படுத்து கிடக்குதுங்க கண்றாவி... "
" இதுதான் மகா கேண்டலின் பீச்சோட ஸ்பெஷாலிட்டி... என்னதான் அரைகுறையா படித்திருந்தாலும் யார் பார்வையும் யார் மேலயும் விழாது... ஏன் தெரியுமா??? "
" ஏன்??? "
" ஏன்னா வந்கிருக்குற ஒவ்வொருத்தர் பார்வையும் தன் துணை மேலத்தான் இருக்கும்... சோ... "
" சோ..... "
" சோ... என் பார்வை இப்போ என் மகா மேலத்தான் " என்று அவளை நெருங்கிச் செல்ல...
" ச்சீ போடா... "என்று செல்லமாய் மகா அவனை தள்ளிவிட்டு ஓடி சென்று மணலில் கால் தடுக்கி விழ அலை வந்து அவளை அணைத்து சென்றதில் மகா முழுதாய் நனைந்திருந்தாள்!
மதிய உணவை கேண்டலின் கடற்கரையின் குடிலில் முடித்துக் கொண்டு" பாகா " கடற்கரையை நோக்கி சென்றனர் இருவரும்!
" மகேஷ் அது என்ன??? "
" இது ஜெட்ஸ்கை மகா... இங்கே ஜெட்ஸ்கை, பனானா ரைட் ரெண்டும் ரொம்ப பேமஸ்... "
" நாமளும் போகலாம் மகேஷ் ப்ளீஸ்... ப்ளீஸ்... " குழந்தையை போல் கெஞ்சினாள் மகா!
" பாகா பீச் வந்துட்டு ரைட் போகாமலா நிச்சயம் போகலாம் வா மகா... "
மகாவிற்கு புது அனுபவமாய் இருந்தது...
தன் மன பாரங்கள் அனைத்தும் நீங்கியதைப் போல் உணர்ந்தாள்!
கிட்டத்தட்ட இருட்டும் நேரம் வரை பாகா பீச்சில் ரைட் முடித்துக் கொண்டு கிளம்பினர் மகாவும், மகேசும்!
" ரூமுக்கு போகலாமா மகேஷ்.... "
" போகலாம் மகா... அதுக்கு முன்னாடி பக்கத்துல இருக்க அஞ்சுனா பீச்சுக்கு போய்ட்டு போயிடலாம்... "
" நாளைக்கு போகலாமே மகேஷ் இந்த நேரத்துல போகணுமா இருட்டிடுச்சி மகேஷ்... "
" அஞ்சுனா பீச்சுக்கு இரவு நேரத்துலதான் போகணும் மகா... கண்ணை கவரும் லைட் செட்டிங்கலாம் பண்ணி செமையா இருக்கும்...
அஞ்சுனா பீச் வேற உலகம் மகா... "
" ம்ம்ம் சரி மகேஷ்... "
இருவரும் அஞ்சுனா கடற்கரையை அடையும் பொழுது மணி ஏழு என்று அங்கிருந்த மணிக்கூண்டு உணர்த்தியது!
வண்ண விளக்குகளால் ஜொலித்தது அஞ்சுனா கடற்கரை...
அன்று சனிக்கிழமை என்பதால்" செகண்ட் ஹேண்ட் " எனப்படும் வியாபார சந்தை நடந்துக் கொண்டிருந்தது!
சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே நடக்கும் இந்த செகண்ட் ஹேண்ட் சந்தை கோவாவில் பிரசித்தம்!
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்காக வெளிநாட்டவர்களா
லே தொடங்கப்பட்ட இந்த சந்தை நாளடைவில் கோவாவில் புகழ்பெற்று விளங்கியது!
வெளிநாட்டு பொருட்கள் அது எதுவாயினும் இங்கு
சுலபமாக அதே சமயம் விலை மலிவாகவும் கிடைக்கும்!
மகாவும் மகேசும் பொருட்களை வாங்கிக் கொண்டு 'ஜாயிண்ட் கார்லிஸ்' ஹோட்டலில் நுழைந்தனர்!
உலகப் புகழ்பெற்ற ஜாயிண்ட் கார்லிஸ் ஓட்டல் மங்கிய வெளிச்சத்தை அறை முழுவதும் பரவ விட்டிருந்தது!
எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் பாப் பாடலின் ஒலி சன்னமாய் கேட்டுக் கொண்டிருந்தது!
மகாவும், மகேசும் ஒரு இருக்கையில் அமர்ந்தனர்!
மகா மகேசின் கையை அழுத்தமாய் பற்றினாள்!
"மகேஷ்... "
" ம்ம்ம்... "
" ரொம்ப தேங்க்ஸ் மகேஷ் என் வாழ்க்கையில இவ்வளவு சந்தோசமான ஒரு நாள் இதுக்கு முன்ன இருந்துச்சானு தெரியல... இனிமேலும் இருக்குமானு தெரியல மகேஷ்... ரொம்ப தேங்க்ஸ் மகேஷ்! "
" லூசு எதுக்கு தேங்க்ஸ்லாம் சொல்ற... கண்டிப்பா உனக்கு இனி ஒவ்வொரு நாளும் இப்படி சந்தோசமான நாள்தான் மகா... Because you are my sweet heart... "
" I love you mahesh... "
மகா சொல்லி முடிக்கவும் அவர்கள் டேபிளில் பேரர் மதுக்கோப்பையை வைக்கவும் சரியாய் இருந்தது!
" ஹலோ பேரர் நாங்க இதை ஆர்டர் பண்ணவே இல்லையே... வீ நீட் எனி சைனீஸ் புட் ஆர் இத்தாலியன் புட்... "
" சாரி சார்... ரூபா மேடம் எப்போ வந்தாலும் இந்த பிராண்ட் விஸ்கிதான் குடிப்பாங்க அதான் ஆர்டர் எடுக்காமலே நானே எடுத்து வந்தேன்... "
பேரர் சொல்ல சொல்ல மகேஷ் அதிர்ந்தான்!
மகேசை விட இரண்டு மடங்கு மகா அதிர்ந்தது அவள் கையின் நடுக்கமும் விழியின் மரட்சியும் உணர்த்தியது!
(கோவாவின் கோரம் தொடரும்)
 

sakthipriya

SM Exclusive
Author
#3
அருமை கொஞ்சம் பெரிய எபியா போட்டு கதையை முடிங்க பாஸ் ஏன்னா போட்டி முடிய12 நாள்தான் இன்னும் இருக்கு
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top