Karuppu rojakkal... (part-32)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள் (பகுதி_32)
பேரர் சொல்ல சொல்ல மகாவுக்கு மயக்கமே வருவது போல் ஆகிவிட அங்கிருந்து அவசர அவசரமாய் கிளம்பினாள் மகா...
"மகா நில்லு... எதுக்கு இப்போ கிளம்பி வந்துட்ட சாப்பிட்டு போயிருக்கலாம்ல... "
" எதை சாப்பிட சொல்ற மகேஷ்... பேரர் கொண்டுவந்து வெச்ச விஸ்கியையா???
அவன் பேசினதே எனக்கு இன்னும் ஜீரணமாகல நீங்க போய் சாப்பிட்டு வாங்க நான் வெளியே வெயிட் பண்றேன்... "
" மகா... எவனோ எதுவோ சொல்றான்றதுக்காக காலம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கப் போறியா...
உன் மனசளவுல நீ இப்போ அப்படி இல்லைதானே அப்புறம் ஏன் இப்படி கண்டவன் சொல்றதுக்கெல்லாம் கவலை பட்டு கவலை பட்டு நீ சாகறதும் இல்லாம என்னையும் சாகடிக்குற... "
" என்ன... என்ன சொன்ன மகேஷ் இப்போ??? "
" ஒண்.. ஒண்ணுமில்ல... "
" நான் உங்களை சாகடிக்குறனா...
இதுக்காகத்தான் மகேஷ் எனக்கு கல்யாணம், குழந்தை, குட்டியெல்லாம் வேணாம் அதெல்லாம் எனக்கு சரிபட்டு வராதுனு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்...
கேட்டியா... நீ கேட்டியா???
நான் ஊரு உலகத்துல இல்லாத அழகிப்போல என்னைத்தான் கட்டிபேனு சாகற வரைப் போய் கட்டிக்கிட்ட...
கட்டிகிட்ட நாள்ல இருந்து நிம்மதியாவா இருந்தே நீ...
தினம் தினம் நான் யாருனு யாருக்காவது தெரிஞ்சிருமோ???
நான் யாருனு அத்தைக்கு தெரிஞ்சிடுமோனு அணு அணுவா செத்துக்கிட்டு தானேடா இருக்கே நீ...
இப்போ... இப்போ அது வார்த்தையா வெளியே வந்துருச்சேடா... "
கண்கலங்கினாள் மகா!
" மகா ப்ளீஸ் அழாதே மகா... நான் தெரியாம சொல்லிட்டேன் மகா...
சாரி மகா ப்ளீஸ் டி சாரி டி... "
கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டான் மகேஷ்!
" மகேஷ் நீங்க தெரிஞ்சி சொன்னீங்களோ...
தெரியாம சொன்னீங்களோ ஆனா நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை மகேஷ்...
நான் ரூபானு எனக்கு இப்போலாம் நினைவு கூட தோண மாட்டேங்குது மகேஷ்...
நீ என்னை மகாவா மாத்திட்ட...
உன் காதல் என்னை மனசளவுல மகாவா வாழ வெச்சிகிட்டிருக்கு...
நானும் மகாவாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்...
ஆனா இதுப்போல சிலர் திரும்ப திரும்ப நான் ரூபானு நியாபகப் படுத்திகிட்டே இருக்காங்க...
நான் எத்தனை காலத்துக்குத்தான் இந்த சமுதாயத்துல இந்த பேரை வச்சிகிட்டு வாழுறது...
பத்து பேர் கூட படுத்தவ தானே நான் பதினொன்னாவதா உன் கூட படுத்தேன்னு நினைச்சுக்குறேன்...
என்னை இத்தோட விட்டுட்டுப் போய் நல்ல பொண்ணா பார்த்து கட்டிகிட்டு சந்தோசமா இரு மகேஷ்...
நான் நல்ல பொண்ணுனு சொல்றது மனசால மட்டுமில்ல உடம்பாலையும் தான்... "
மகா சொல்லி முடிக்க மகேஷ் 'பளார்' என்று மகாவின் கண்ணத்தில் அறை விட மகா வாங்கி வைத்திருந்த பொருட்கள் சாலையில் உருண்டோட அதிலிருந்த டாக்கிங் க்ளாக் எட்டு மணியென்று சொல்லியது!
" என்னடி விட்டா பேசிக்கிட்டே போறே...
ஊருல வேற பொண்ணு கிடைக்காம நான் உன்னை கட்டிக்கலைடி...
மனசு... மனசு சொல்லும் இவ.. இவதான் உனக்கானவனு
அந்த மனசுக்கு கருப்பா, செகப்பா...
ஒல்லியா, கட்டையா...
பணக்காரியா, ஏழையா???
இது எதுவும் தெரியாதுடி...
எனக்குனு சில ஆசைகள் இருக்கும்ல...
என் மனைவி கூட நான் சந்தோசமா இருக்கணும்னு ஆசை எனக்கும் இருக்கும்ல...
இது போல நீ சமூகத்துக்கு பயந்து ஓடிக்கிட்டே இருந்தா நான் எப்போ வாழுறது என் மகாக்கூட... "
" ஏன்டா என்னை வாழவும் விடமாட்றே சாகவும் விட மாட்டேங்குற... "
மகேசின் தோள்மேல் சாய்ந்து அழுதாள் மகா...
" மகா அழாதேடி ப்ளீஸ்...
எல்லோரும் ஒரு மாதிரி நம்மையே பார்க்குறாங்கடி வா ரூமுக்குப் போய் பேசிக்கலாம்!
************************************, ************,, ******************, *, ****,, *
மகேசும், மகாவும் ஹோட்டல் ரூமை அடையும் பொழுது மணி கிட்டத்தட்ட பதினொன்றை நெருங்கியது!
"மகா நீ ரூமுக்குப் போ... நான் சாப்பிட ஏதாச்சும் வாங்கி வர்றேன்...
ரூம் சர்வீஸ் கூட பதினோரு மணி வரைக்கும்தான்"
" இல்ல எனக்கு பசிக்கல மகேஷ்... நீங்க போய் சாப்பிட்டு வாங்க... "
" அப்போ எனக்கும் வேணாம் மகா...
வா ரூமுக்கு போகலாம்... "
" ஏன் மகேஷ் இப்படி பண்ற???
சரி எனக்கு ரெண்டு இட்லி மட்டும்... "
" ம்ம்ம்... தட்ஸ் குட்... " மகேஷ் சொல்லிக் கொண்டே மகாவை அறையில் விட்டுவிட்டு கீழே இறங்கி சென்றான்!
மகேஷ் பத்து நிமிடங்களில் திரும்பி வர இருவரும் சாப்பிட்டு படுத்தனர்...
இருவருக்குள்ளும் ஓர் இருக்கமான சூழ்நிலை நிலவ யார் எப்போது தூங்கினார்கள் என்பதை கூட அறியாமல் உறங்கி விட பொழுது புலர்ந்தது!
கண் விழித்து பார்த்த மகேஷ் அருகில் மகா இல்லாததை கண்டு அதிர்ந்தான்!
ரெஸ்ட் ரூம் வாசலிலிருந்து குரல் கொடுத்தான்...
"மகா... "
" ம்ம்ம் வர்றேன் மகேஷ் வெய்ட் பண்ணுங்க... "
உள்ளிருந்து மகாவின் குரல் வரவே நிம்மதி பெருமூச்சு விட்டான் மகேஷ்!
கதவை திறந்து வந்தாள் மகா!
" என்ன மகா காலையிலேயே குளிச்சிட்டு ரெடியாகிட்ட...
அதுவும் சரிதான் இன்னைக்கு பாகா பீச்ல ஒரு குடில் எடுக்கணும் மகா...
குடிலுக்குள்ள இருந்து அந்த கடற்கரை காற்றை சுவாசிக்குற சுகமே தனிதான்!
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற...
குடில் அவ்ளோ ஈசியா கிடைக்காது..
இதோ நான் 15 நிமிசத்துல கிளம்பிடுறேன் மகா.... "
" ம்ம்ம்... கிளம்புங்க மகேஷ்...
ஆனா நாம பீச்சுக்கு போகல...
சென்னைக்குப் போறோம்... "
" மகா உனக்கென்ன பைத்தியமா நேத்துதான் வந்தோம் இன்னைக்கு திரும்பி போயிடலாம்னு சொல்ற...
ஒரு வாரம் ட்ரிப் இது... இப்போ நாம திரும்பி போனா நம்மள அனுப்பி வெச்ச MD சங்கடப்படுவார்... "
" அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை மகேஷ்...
இங்க ஒவ்வொரு நிமிசமும் செத்து செத்து பிழைக்க என்னால முடியாது...
யாரை பார்த்தாலும் பயமா இருக்கு...
யார் எப்போ வந்து நீ ரூபாதானே... படுக்க வர்றியானு கூப்பிடுவான்னு நினைச்சி அணு அணுவா சாக என்னால முடியாது...
நீங்க வேணும்னா இருந்து வாங்க நான் கிளம்பறேன்... "
மகேசின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கிளம்பினாள் மகா!
" மகா நில்லு.... "
'............................ '
' மகா.....'
'................. '
மகேஷ் கட்டிலிலிருந்து எழுந்து கதவை திறந்து மாடிப்படிகளை இறங்குவதற்குள் மகா ஹோட்டலை விட்டு வெளியே சென்றிருந்தாள்!
ஹோட்டலை விட்டு வெளியே ஓடிய மகேஷ் முகத்தில் ' பளிச் ' என்று இரத்தம் தெறிக்க மகா பறந்து வந்து அவன் காலடியில் அரைகுறை உயிரை தாங்கி துடிக்க துடிக்க விழ ஒரு லாரி மின்னல் வேகத்தில் பறந்து சென்றது...
"மகாாாா....."
மகேஷ் கத்தியது மகாவிற்கு கேட்டிருக்க வாய்ப்பேயில்லை!
_தொடரும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top