Karuppu rojakkal... (part-33)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி - 33)
கேர் அண்ட் க்யூர் மருத்துவமணை அந்த காலை வேளையிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது!
மகேஷ் தவிப்பாய் ICU அறைக்கு முன் நின்றிருந்தான்!
'அடக் கடவுளே என் மகாவுக்கு ஏன் இப்படி நடக்கணும்...
சந்தோசமா இருக்க வந்த இடத்துல இப்படி என் மகாவை சடல....
ச்சே என் மகா சாக மாட்டா...
என் மகா என்னை விட்டு போக மாட்டா... '
"எக்ஸ்க்யூஸ் மீ சார்... "
நர்ஸ்சின் குரல் மகேசின் சிந்தனையை கலைத்தது!
வந்து நின்ற நர்ஸ்க்கு நிச்சயம் வயது முப்பதை தாண்டி இருக்காது என்பதை அவள் தோலின் மினுமினுப்பு எடுத்துக் கூறியது...
அளவாய் செய்து வைத்த மூக்கு... அதான் நுனியில் கருப்பு மூக்குத்தியாய் மச்சம்...
அமுல் பால் பவுடரின் குழந்தை மாடலாய் இருந்தது இவள்தான் என்ரால் யாராயிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பவைக்கும் வெண்ணையை பூசினால் போல நிறம்...
நைட் ஷிப்ட் செய்தவள் என்பதை சிவந்து போயிருந்த அவள் கண்கள் உணர்த்தியது!
இவை அத்தனை அழகையும் ரசிக்கும் மனநிலையில் மகேஷ் இல்லாததால் அவன் வாழ்வின் அற்புதமான ஐம்பது நொடிகளை வீணாக்கியிருந்தான்!
"யெஸ் மேடம்... "
" பேஷண்ட்க்கு நீங்க யாரு சார்??? "
" நான்.... அவ.... என் வொய்ப் மேடம்... "
" அவங்க பேரு டீடெய்ல்ஸ் எல்லாம் இதுல எழுதி சைன் பண்ணுங்க சார்... "
மகேசிற்கு நடப்பதெல்லாம் ஏற்கனவே நடந்ததை போலவே இருக்க மகேசின் மனம் பயத்தை உணர்ந்தது!
'மகாவுக்கு என்னாகும்???
மகா திரும்ப உயிரோட கிடைப்பாளா???
உயிரோட கிடைச்சாலும் மகாவுக்கு என்னோட நியாபகம் இருக்குமா???
அய்யோ கடவுளே என் மகாவை என்னோட மகாவாகவே திருப்பிக் கொடுத்துடு கடவுளே... "
" மேடம் என் ஓய்ப் எப்படியிருக்காங்க??? "
" ட்ரீட்மெண்ட் நடக்குது சார் இப்போ எதுவும் சொல்ல முடியாது சார்...
வெயிட் பணணுங்க டாக்டர் வந்து சொல்லுவார்... "
மகேசின் அரைமணி நேர தவிப்பிற்கு பின் டாக்டர் வெளியே வந்தார்...
" டாக்டர் என் மகாவுக்கு என்னாச்சி... எப்படியாவது அவளை காப்பாத்திடுங்க டாக்டர் ப்ளீஸ்... எப்படியாவது அவளை காப்பாத்திடுங்க... "
கதறி அழுதான் மகேஷ்...
" ப்ளிஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்...
உங்க மனைவிக்கு எங்களால முடிஞ்ச உச்சகட்ட சிகிச்சை கொடுத்துகிட்டுத
ான் இருக்கோம்...
அவங்க உயிரும் எங்க சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்துகிட்டுதான் இருக்கு...
அந்த உயிர் இந்த உலகத்துல வாழ ஆசைப்படுது...
ஆறு மணி நேரம் பொறுத்துதான் எதையும் சொல்ல முடியும் சார்...
அவங்க பக்கவாட்டுல அடி பட்டதால இடது பக்கம் முழுக்க பலத்த சேதமாகியிருக்கு ஹார்ட்ல ப்ளட் ட்ராப் ஆகியிருக்கு...
இப்போ நாங்க பண்ண ட்ரீட்மெண்ட்ல அந்த ப்ளட் ட்ராப் கரையணும் அதர்வைஸ் அப்படி நடக்கலைனா.... சாரி..."
"டாக்டர் என் மகா வேணும் எனக்கு என் மகா வேணும் டாக்டர்... "
கதறினான் மகேஷ்!
" ப்ளீஸ் அழாதீங்க சார்... நீங்க தைரியமா இருங்க... கடவுளை நம்புங்க அவங்க உங்க மனைவியை மீட்டு கொடுப்பாங்க"
டாக்டர் சொல்லிவிட்டு செல்ல மகேஷ் உறைந்து போனான்!
மகேசின் செல்போன் ஒலிக்கவே அதை தன் நடுங்கும் கைகளோடு எடுத்து உயிர்பித்து காதில் வைத்தான்!
" ஹலோ.... "
" ஹலோ புது மாப்ள... என்ன கோவா போனதுல இருந்து எங்களை கண்டுகவே மாட்டேங்குறிங்க ஒரே ரொமான்ஸ்தான் போல.... "
காவ்யா கிண்டலடிக்க கதறி அழுதான் மகேஷ்...
" ஹே மகேஷ் ஏன்டா அழறே... ப்ளீஸ் என்னாச்சி சொல்லுடா... "
" காவ்யா மகா... என் மகா என்னை விட்டு போய்டுவா போல இருக்கு காவ்யா...
அவ போய்ட்டா நானும் இருக்க மாட்டேன் என் உயிரும் இந்த கோவாவுலயே போய்டும்... "
" மகேஷ் அழாதேடா... மகாவுக்கு என்னாச்சி மகேஷ்??? "
மகேஷ் அனைத்தும் சொல்லி முடிக்க கதறி அழுதாள் காவ்யா!
" மகேஷ் நீ தைரியமா இரு... நான் ஜெய்யை கூட்டிகிட்டு அங்க வர்றேன் ப்ளீஸ்டா நீ தைரியத்தை விட்டுடாதே மகேஷ் "
காவ்யாவும், ஜெய்யும் விமானம் மூலம் கோவா செல்ல விரைந்தனர்!
*********************************************
***************************************
பாளையங்கோட்டை சிறைச்சாலை...
ஜெயில் கம்பியை தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் ரூபாவின் தந்தை மாரி!
"மாரி உனக்கு அடுத்த வாரம் தூக்கு... உனக்குனு எதாச்சும் கடைசி ஆசை இருக்கா...
இது எல்லா தூக்கு கைதி கிட்டேயும் கேட்குற கேள்விதான்...
உனக்கு கடைசியா யாரையாச்சும் பார்க்கணுமா???
யார் கூடவாவது பேசணுமா???
உன் சடலத்தை யார்கிட்ட கொடுக்கணும்??? "
கேள்விகளை அடுக்கி கொண்டே போனார் ஜெயில் சூப்பிரண்ட்!
" ஐயா எனக்கு யாரையும் பார்க்க ஆசையில்லை... எனக்கு யாருமில்லை....
என் பிணத்தை நீங்களே எரிச்சிடுங்க... "
மாரியை பரிதாபம் கலந்த விசித்திரமாய் பார்த்து சென்றார் சூப்பிரண்ட்!
மாரியின் மனதில் ரூபா வந்து சிரித்தாள்!
'நான் யாருனே உனக்கு தெரியாம இருக்கறதுதான் நல்லது ரூபா... என்னை மன்னிச்சுடு!
_தொடரும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top