Karuppu rojakkal... (part-34)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி_34)
கிட்டத்தட்ட பத்து மணிநேர போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்திருந்தாள் மகா!
"மகேஷ் கடவுளுக்கு உங்க பிரார்த்தனை கேட்டுடுச்சி...
உங்க மனைவி ஹார்ட்ல ட்ராப் ஆகியிருந்த ப்ளட் ரிமீவ் ஆகிடுச்சி இனி அவங்க உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை... "
" தேங்க்யூ... தேங்க்யூ சோ மச் டாக்டர்... "
டாக்டரின் கையை இறுக்க பற்றிக் கொண்டான் மகேஷ்!
" ஆனா ஒரு விசயம் மகேஷ்... "
'ஐய்யோ என்ன சொல்லப் போகிறார்???
முன்பு நடந்ததை போல மகாவுக்கு பழைய நினைவு மறைந்திருக்குமோ???
அடக்கடவுளே அவ உயிர் பிழைச்சிட்டானு நினைச்சி நான் சந்தோசப் படுவேனா இல்லை என்னை மறந்திருப்பாளே இதை நினைச்சி நான் வருத்தப் படுவேனா???'
" என்... என்ன டாக்டர்??? "
கடவுளே இவர் வாய்ல இருந்து அந்த வார்த்தை வரக்கூடாது...
" மகாவுக்கு இடது பக்கம் முழுக்க அடிப்பட்டு சேதமானதால அவங்க இடது பக்கம் முகம் கடுமையா அடிபட்டிருக்கு... அவங்க முகத்துல அடி பலமா பட்டதால முகத்துல இருக்க ஸ்கின் செல்ஸ் பலமா பாதிக்கப் பட்டிருக்கு...
இதை இப்படியே விட்டா ஸ்கின் செல்ஸ் எல்லாம் இறந்து முகத்துல இருக்க எலும்புகள்ல புழுக்கள் ஊடுருவி கேன்சர் லெவலுக்கு போக சாத்தியம் அதிகம் இருக்கு... "
" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க??? "
" ஆமாம் மகேஷ்... பதறாதீங்க இதுக்கு ஒரு வழி இருக்கு... "
" சொல்லுங்க டாக்டர் என்ன வழி... எதுவானாலும் பரவாயில்லை என் மகா எனக்கு வேணும் டாக்டர்... "
" அவங்க முகத்துல இருக்க ஸ்கின்ஸ் டோட்டலா ரிமீவ் பண்ணிட்டு உள்ளே இருக்க எலும்புகளின் பாதிப்புகளை சரி பண்ணி சர்ஜரி பண்ணனும்.... "
" டாக்டர் ப்ளீஸ் பண்ணிடலாம் டாக்டர் இப்பவே பண்ணிடலாம்... "
" அது கொஞ்சம் டிபிகல்ட் மிஸ்டர் மகேஷ்...
அந்த சர்ஜரி பண்ண லைவ் செல் ஸ்கின் இம்போர்ட் பண்ணனும் அதுக்கான செலவு அதிகமாகும்....
அப்படியே பண்ணாலும் அவங்க முகம் பழையபடி திரும்ப வாய்ப்பேயில்லை...
இம்பாக்ட்... டோட்டலா அவங்க முக சாயல் இருக்காது..."
"பரவாயில்ல டாக்டர் என் மகா அழகா இல்லனாலும் பரவாயில்லை அவ உயிரோட இருந்தா அதுவே போதும்...
நீங்க ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்.... "
" ஓகே மகேஷ் நெக்ஸ்ட் ப்ளைட்லயே லைவ் செல் ஸ்கின் வரவழைச்சி ஆபரேசன் பண்ணிடலாம்... "
காவ்யாவும், ஜெய்யும் அதற்குள் அங்கு வந்து சேர மகேஷ் டாக்டர் கூறிய அத்தனையும் சொல்லி அழுதான்!
" மகேஷ் அழாதேடா... கடவுள் கெட்டதுலயும் உனக்கொரு நல்லது பண்ணியிருக்கார்னு நினைச்சி சந்தோசப்படு.... "
காவ்யா சொல்ல சொல்ல மகேஷ் காவ்யாவின் முகத்தை புரியாமல் பார்த்தான்!
" ஆமாம் மகேஷ் மகாவுக்கு இந்த ஆபரேசன் முடிஞ்சா உங்க வாழ்க்கைக்கு பெரிய தலைவலியா இருந்த ரூபா அடியோட மறைஞ்சி போவா....
உனக்கும் மகாவுக்குமான புது வாழ்க்கை தொடங்கப்பட்டு நீங்க சந்தோசமா இருப்பீங்க... "
காவ்யா சொல்வதின் அர்த்தம் புரிய சற்றே நிம்மதி அடைந்தான் மகேஷ்!
" சரி பணத்துக்கு என்ன செய்யப்போற மகேஷ்... "
" அதான் தெரியல காவ்யா... 50 இலட்சத்துக்கும் மேல செலவாகும்னு சொல்றாங்க...
வீட்டை வித்துடலாம்னு நினைக்கிறேன்...
அம்மா.... அம்மாவுக்கு விசயம் தெரியுமாடா??? "
ஜெய்யை பார்த்து கேட்டான் மகேஷ்!
" ம்ம்ம் சொல்லிட்டுதான் வந்தேன் மகேஷ்... அவங்களும் வர்றேன்னு சொல்லி அழுதாங்க... இங்க நிலமை எப்படியிருக்குமோனு நான்தான் டிக்கெட் கிடைக்கலமானு பொய் சொல்லிட்டு வந்தேன்...
நீ போன் பண்ணி அம்மாகிட்ட பேசுடா...
பாவம் அவங்க தவிச்சிகிட்டு இருப்பாங்க... "
மகேஷ் தன் மொபைலை எடுத்து கமலம்மாவிற்கு போன் செய்து விசயத்தை சொல்லி முடித்தான்!
" நீ கவலையே படாதே மகேஷ் இந்த வீட்டை வித்தாவது என் மருமகளை காப்பாத்திடலாம்...
சொத்து என்னடா சொத்து என் மருமகளோட உயிருக்கு முன்னால இதெல்லாம் தூசுடா...
நான் புரோக்கர்கிட்ட சொல்லி வீட்டை விற்க சொல்லி பணத்தை ஏற்பாடு பண்ணிகிட்டு வந்துடறேன் நீ என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோடா.... "
கமலம்மா அழுது கொண்டே போனை வைத்தாள்!
கமலம்மா சொன்னதைப்போலவே மறுநாளே பணத்துடன் வந்தாள்!
" அம்மா எப்படிமா இதுக்குள்ள பணத்தை புரட்டின??? "
" நம்ம அவசரம் தெரிஞ்சி புரோக்கர் கூட்டி வந்த ஆள் வீட்டை அடிமாட்டு விலைக்கு கேட்டான் மகேஷ்...
அவன் கிட்ட பேரம் பேசி என் மருமகளை இழக்க நான் தயாராயில்லை...
அதனால அவங்க கேட்ட விலைக்கே கொடுத்துறதா சொல்லி பணத்தை வாங்கி வந்தேன்...
ரிஜிஸ்ட்ரேசன் கூட அப்புறமா பார்த்துகலாம்னு சொல்லி ஒரு டெம்பரவரி பவர் அவர் பேர்ல எழுதி கொடுத்துட்டு வந்தேன் மகேஷ்....
என் மருமக எப்படியிருக்கா???
நான் அவளை பார்க்கணும் மகேஷ்...
கடவுளே என் வீட்டு குல விளக்கை அழிச்சிடாதே... " தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கமலம்!
" அம்மா அழாதேம்மா... மகா ICU ல இருக்கா இப்போ நம்ம யாரும் பார்க்க முடியாதுமா...
பணம் எவ்வளவு கொண்டு வந்தீங்கமா??? "
" நாற்பது இலட்சம் இதுல இருக்கு மகேஷ்... "என்று மகேஷ் ஏற்கனவே சொன்னதைப்போல் ஹாஸ்பிட்டல் பெயரில் எடுக்கப்பட்ட ஒரு டிடி யை மகேசிடம் கொடுத்தாள் கமலம்!
மகேஷ் அதை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிட்டல் பில்லிங் பிரிவு கேபினை நோக்கி நடந்தான் மகேஷ்...
" எக்ஸ் க்யூஸ் மீ மேடம்... "
கேபினிள் அமர்ந்திருந்த யுவதி நிமிர்ந்து மகேசை பார்த்து
" யெஸ் " என்றாள்!
" பேஷண்ட் மகாவுக்கு ஆபரேசன் பில்லிங் அமவுண்ட் பே பண்ணனும் மேடம்...
எவ்வளவு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்... "
அவள் தன் பிஞ்சு விரல்களை கணினியின் பட்டன்கள் நடனமாட விட
" ஆபரேசன் மெட்டீரியல் 37 லட்சம்...
ஆபரேசன் சார்ஜ் 10 இலட்சம்...
டெஸ்ட் அண்ட் பார்மஸி பேமண்ட் டியூ எல்லாம் சேர்த்து 60 இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று எட்டு ரூபாய் சார்... " என்றாள்!
மகேசிற்கு இடியே விழுந்ததை போல் உணர்ந்தான்!
" மேடம் இப்போ என்கிட்ட 40 இலட்சம்தான் இருக்கு... மீதியை அப்புறம் கட்டலாமா??? "
" கட்டலாம் சார் ஆபரேசன் மெட்டீரியலுக்கான காஸ்ட் மட்டும் ஆபரேசனுக்கு முன்னால பே பண்ணா போதும். மத்த பில்லிங்லாம் நீங்க டிஸ்சார்ஜ் ஆகும் போது பே பண்ணாலும் ஓகே தான்! "
" ஓகே தேங்க்யூ மேடம்"
மகேஷ் கொண்டுவந்திருந்த 40 இலட்சத்திற்கான டிடி யை அவளிடம் நீட்ட அதை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவேற்ற தொடங்கினாள் அவள்!
"என்ன மச்சி பணம் கட்டிட்டியா??? "
ஜெய் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் மகேஷ்.
" என்னடா என்னாச்சி??? "
" மச்சி பணம் பத்தலடா... இருபது இலட்சம் கம்மியா இருக்கு... எனக்கு என்ன பண்றதுனே தெரியல ஜெய்... "
" எவ்ளோடா கம்மியா இருக்கு... "
" ஒரு இருபதுல இருந்து இருபத்திரண்டு இலட்சம் வரை இன்னும் தேவைப்படும்னு நினைக்கிறேன் ஜெய்...
எனக்குனு இருந்தது அந்த ஒரு வீடுதான் அதையும் வித்தாச்சி இனி பைசாவுக்கு என்ன பணண போறேன்னு தெரியலடா...
மச்சி உன் சைடுல எதாச்சும் அரேஞ்ச் பண்ண முடியுமாடா... "
" மச்சி இப்போதான் அம்மாவுக்கு ஹார்ட் ஆபரேசன் பண்றதுக்காக இருந்த சேவிங்ஸ்லாம் எடுத்து காலி பண்ணிட்டேன்... ட்ரை பண்றேன் மச்சி பட் இவ்ளோ அமவுண்ட் கிடைக்கிறது கஷ்டம்தான் வேணும்னா ஒரு அஞ்சி இலட்சம் என் சைடுல அரேஞ்ச் பண்ண முடியும் மகேஷ் சாரி அதுக்கு மேல முடியாதுடா... "
" ஏன் என்கிட்டலாம் கேட்க மாட்டியா மகேஷ்... "
காவ்யாவின் குரல் கேட்டு திரும்பினான் மகேஷ்!
" காவ்யா... உன்கிட்ட... எப்படி??? "
" என் கல்யாணத்துக்காக நான் சேவ் பண்ண பணம் இருபது இலட்சம் இருக்கு மகேஷ்... அதை வச்சி மகாவை காப்பாத்திடலாம்... "
" இல்ல காவ்யா அது சரியா வராது... "
" ஏன் சரியா வராது மகேஷ்... ஜெய்கிட்ட உரிமையா கேட்குற என்கிட்ட வாங்க இப்படி தயங்குற...
எனக்கு அந்த உரிமை இல்லையா??? "
" காவ்யா உன் கல்யாணத்துக்குன
ு சேர்த்த பணத்தை போய்.... வேணாம் காவ்யா... "
" மகேஷ் என் கல்யாணத்துக்கு இப்போ ஒண்ணும் அவசரமில்லை...
ரெண்டு வருடம் தள்ளிப்போனா ஒண்ணும் கெட்டு போய்டாடு...
ஆனா மகா உயிரை காப்பதலனா அது திரும்ப வராது மகேஷ்...
நீ எதுவும் பேசாதே நான் அக்கவுண்ட்ல இருக்க பணத்தை ஹாஸ்பிட்டல் அக்கவுண்ட்க்கு மாத்த சொல்லிடுறேன் " சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்து யாரிடமோ காவ்யா பேச அடுத்த மூன்று மணி நேரத்தில் பணம் ஹாஸ்பிட்டல் அக்கவுண்டை வந்தடைந்தது!
*********************************************
***************************************
அடுத்த மூன்று நாட்களில் மகாவிற்கு ஆபரேசன் செய்யப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்!
"மகேஷ் என்னை மன்னிசிடுங்க நீங்க சொல்ல சொல்ல உங்க பேச்சை கேட்காம போனதாலதான் இப்படி ஆகிடுச்சி...
நிம்மதியில்லை வாழ்க்கை என் கூட வாழத்தானா திரும்ப என்னை காப்பாத்தியிருக்கீங்க... "
" மகா லூசுப் போல பேசாதேடி...
நீ இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு நரகம்டி... அந்த நரகத்துல நான் வாழ்வேன்னு நினைச்சியா... "
" சாரி மகேஷ் காலத்துக்கும் என்னால உங்களுக்கு நிம்மதி கிடைக்காது...
எங்கையாவது... யாரவது ரூபாவை எனக்கு நியாபகப் படுத்திகிட்டேதான் இருப்பாங்க... "
" மகா நாம ஒரு செல்பி எடுத்துப்போமா??? "
" என்ன மகேஷ் நான் எவ்ளோ சீரியசா பேசிட்டிக்கிட்டிருக்கேன் நீங்க விளையாடிகிட்டு இருக்கிங்க... "
மகேஷ் தன் மொபைலை எடுத்து செல்பி எடுக்க இருவரின் முகத்திற்கு நேராய் வைக்க அதிர்ந்து போய் தனக்கு பின்னால் யாரோ நிற்பதைப் போல் தோன்ற திரும்பி பார்த்தாள்!
பின்னால் யாரும் இல்லாததை கண்டு திரும்ப மொபைலை பார்க்க மகேஷ் பக்கத்தில் ஏதோ ஒரு பெண் நின்றிருப்பதைப் போல் உணர...
"மகேஷ் கேமிரால உங்க பக்கத்துல யாரோ தெரியறாங்க மகேஷ்... "
" யாரோ இல்லை மகா...
என் மகாதான்...
ரூபாவை கொல்ல தன் மரணம் வரை சென்று வந்த என் ரூபாதான்....
என் மகா எனக்காக புதுசா பொரிந்து வந்திருக்கா... "
நடந்த அத்தனையும் மகேஷ் சொல்ல மகா மகேசை கட்டியணைத்துக் கொண்டாள்!
காவ்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க... காவ்யா பணம் தந்து உதவியதை மகேஷ் மகாவிடம் கூற காவ்யாவை கையெடுத்து கும்பிட்டாள் மகா!
" ஐய்யோ என்ன பண்ற மகா நீ... இதுக்கெல்லாமா இப்படி எமோஷன் ஆடுவாங்க...
இப்போ எனக்கு இருக்க சந்தோசத்தை எந்த பணமும், சொத்தும் கொடுக்க முடியாது மகா...
இதை நான் சும்மா கொடுத்ததாய் நினைக்க வேணாம்... சீக்கிரம் ஒரு பையன் பெத்து வைங்க.. என் பொண்ணுக்காக... அவளுக்கு நான் கொடுத்த சீதனமா இருக்கட்டும் இந்த பணம்... " காவ்யா சொல்லி சிரிக்க அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்!
" காவ்யா நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கலாமா??? "
" கேளுங்க மகேஷ்... "
" நீ ஏன் நம்ம ஜெய்யை கட்டிக்க கூடாது காவ்யா...
ஜெய் ரொம்ப நல்ல பையன் இது நான் சொல்லிதான் உனக்கு தெரியணும்னு இல்லை.... "
" மகேஷ் அது சரியா வராது... "
" ஏன் சரியா வராது மகேஷ்??? "
" இல்லை மகேஷ் நான் உங்கலை லவ் பண்ணது ஜெய்க்கு தெரியும்... இப்போ நான் அவரை கட்டிகிட்டா அது ரெண்டு பேருக்குமே நிம்மதியை கொடுக்காது...
ஜெய்க்கு என்னை விட நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பா... "
காவ்யா சொல்வது சரியாய் படவே மகேஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை!
*********************************************
************************************
அடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்!
" மகேஷ் நாம பீச்சுக்கு போலாமா??? "
" என்ன மகா திடீர்னு கேட்குற.... "
" எனக்கு முழுசா உங்க மகாவா எந்த பயமும் இல்லாம வெளியே போகணும்.... உங்க கையை பிடிச்சிகிட்டு நடக்கணும்... "
" சரி போகலாம் மகா... "
இருவரும் கடற்கரை மணலில் மனம் முழுக்க நிம்மதியாய் அமர்ந்திருக்க மகாவின் மடியில் படுத்தான்!
" மகா... "
" ம்ம்ம்... "
" ஐ லவ் யூ டி... "
" மீ டூ மகேஷ் "
மகேஷ் மகாவின் கன்னத்தில் முத்தமிட அவள் முகத்தருகே செல்ல யாரோ வீசிய கத்தி மகேசின் தலைக்கு மேல் நூலிழை தூரத்தில் சென்றது...
மகேஷ் சுதாகரீத்து எழுந்து பார்க்க முகமூடி அணிந்த ஆசாமி ஒருவன் கொலை வெறியோடு மகேசை தாக்க கத்தியை எடுத்து ஓடி வர மகேஷ் லாவகமாய் கத்தியை பிடுங்கி அவனை ஓங்கி உதைக்க அவன் கரையில் விழுந்து எழுந்து ஓடினான்!
மகேஷ் அவனை துரத்திக் கொண்டு ஓடி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியவன் அதற்குமேல் ஓட முடியாமல் நிற்க...
மகேஷ் பாய்ந்து அவனை பிடித்து அவன் முகமூடியை விலக்கியவன் அதிர்ந்தான்!
"நீயா????????..... "
_தொடரும்
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top