Karuppu rojakkal (part-35) climax

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (35_இறுதிப் பகுதி)
மகேஷ் தன்னை கொல்ல வந்தவனை விரட்டி சென்று பிடித்து அவன் முகமூடியை விலக்கியவன் அதிர்ந்தான்...
"நீயா????? "
" நான்தான்... நானேதான்... " ரூபாவின் தந்தை மாரி கர்ஜித்தார்...
" நீங்க... நீங்க எதுக்கு என்னை கொல்லணும்??? "
" என் மகா ரூபாவை என்னடா பண்ண???
நீ நல்லா பார்த்துப்பேனு நம்பித்தானடா உன் கூட அனுப்பி வெச்சேன்...
ஒரு கொலையும் பண்ணிட்டு இப்போ தூக்கு மேடையில நிக்குறேன்டா...
ஆனா நீ.... எவளோ ஒருத்திக் கூட இங்கே கூத்தடிச்சிகிட்டு இருக்கே...
உன்னை கொல்லாம விடமாட்டேன்டா... "
கத்திக் கொண்டே பாய்ந்து வந்து மகேசின் குரல்வளையை பிடித்து நெருங்கினான் மாரி!
மகேஷ் மூச்சு திணற திணற அவரை பிடித்து தள்ளிவிட்டான்!
" ஒரு நிமிடம் நான் சொல்றதை கேளுங்க..."
"நீ எதுவும் சொல்ல வேணாம்டா துரோகி... " மகேசை பிடித்து அவன் கைகளை முறுக்கி அவனை செயல்பட விடாமல் தடுத்தான் மாரி!
" ஐய்யோ இது மகாதான்.... " மகேஷ் கத்த மாரியின் பிடி தளர்ந்தது!
" என்னடா சொல்ற??? "
" ஆமாம் இது மகாதான்... "என்று அனைத்தும் சொல்லி முடித்தான் மகேஷ்!
" இதை நான் நம்பணுமா??? "
" மகாவே சொன்னா நம்புவீங்கல... இந்தாங்க இந்த செல்போனை பிடிங்க நான் மகாகிட்ட போய் அவ போன்ல இருந்து உங்களுக்கு கால் பண்றேன்... அவளே சொல்வா பாருங்க... "
மகேஷ் அவனிடம் தன் மொபைலை கொடுத்துவிட்டு மகாவை நோக்கி ஓடினான்!
" மகேஷ் என்னாச்சி??? யாரு உங்களை கொலை பண்ண வந்தாங்க??? "
" அது யாரோ ஆள் தெரியாம மாத்தி என்னை கொலை பண்ண வந்திருக்கான் மகா... பிடிச்சி போலிஸ்ல கொடுத்துட்டுதான் வந்தேன்! " என சொல்லிக் கொண்டே மகாவின் செல்போன் எடுத்து தன் எண்ணிற்கு டயல் செய்ய மறுமுனையில் மாரி இணைப்பில் இணைந்தான்!
" மகா.... "
" ம்ம்ம்... சொல்லுங்க மகேஷ்... "
" உனக்கு இந்த முகம் பிடிச்சிருக்கா??? "
" முகம் பிடிச்சிருக்கோ இல்லையோ ரூபாவோட சாயல் மொத்தமா அழிஞ்சு போனது எனக்கு ரொம்ப சந்தோசம் மகேஷ்...
நான் இப்போ மகா... என் மகேசுக்காக புதுசா பொறந்த மகா.... "
மகாவை அணைத்துக் கொண்டான் மகேஷ்!
" மகா போலிஸ் ஸ்டேசன்ல சில பார்மாலிட்டி இருக்கு நான் அதை முடிச்சிட்டு வர்றேன் நீ ஆட்டோவுல போய்டு... "
மகா சரி என்பதைப் போல் தலையாட்ட மகேஷ் அவளை ஆட்டோவில் அனுப்பி விட்டு மாரியிடம் சென்றான்!
மாரி ஓடி வந்து மகேசின் காலில் விழ பதறிப்போனான் மகேஷ்!
" ஐய்யோ மாமா என்ன பண்றீங்க??? "
" உங்க செருப்பா இருக்கக் கூட அருகதையில்லை மாப்ள எனக்கு...
நாளை மறுநாள் எனக்கு தூக்கு... அதுக்கு முன்ன ரூபா..... இல்ல மகா உங்க கூட வாழுறதை தூரமா இருந்து பார்த்துட்டு போயிடலாம்னு தான் ஜெயில்ல இருந்து தப்பிச்சு கோயம்பத்தூர்ல நீங்க தங்கியிருந்த ஓட்டல்ல உங்க அட்ரஸை தெரிஞ்சவர் மூலமா வாங்கிகிட்டு இங்கே வந்தேன்...
வந்த இடத்துல நீங்க ஏதோ ஒரு பொண்ணு கூட நெருக்கமா இருக்கறதை பார்த்ததும் உங்களை கொல்லணும்னு வெறி வந்து தப்பு பண்ணிட்டேன் மாப்ள...
இப்போ நான் நிம்மதியா சாவேன்... " என்று சொல்லி சென்ற மாரியை கலங்கும் கண்களோடு பார்த்தான் மகேஷ்!
*********************************************, ****, **************************
பாளையங்கோட்டை சிறைச்சாலை...
காலை ஆறுமணிக்கே மகாவும் மகேசும் வந்துவிட மாரியின் சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!
மகேஷ் மாரியை நல்லடக்கம் செய்து விட்டு திரும்பினான்!
"யாரு மகேஷ் அவர்??? " மகா இதை கேட்பது நூறாவது முறையாய் இருக்கலாம்!
" அதான் சொன்னனே மகா... நீ நல்லபடியா உயிர் பிழைத்து வந்தா ஒரு அநாதை பிணத்தை எடுத்து அடக்கம் பண்றதா வேண்டிக்கிட்டேன் அதான்... "
மகேசின் தோள்மேல் சாய்த்துக் கொண்டாள் மகா...
" மகேஷ் இவருக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருக்காப்போல மனசை பிசையுது மகேஷ்... "
மகேஷ் ஆறுதலாய் அவள் தலையை வருடினான்!
மகாவின் வயிற்றில் கரு முளைத்திருப்பது இன்னும் இருபது நாட்களுக்கு அவர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை!
அன்று டாக்டர் சொன்னது மட்டும் மகேஷ் மனதில் அடிக்கடி வந்து செல்லும்...
'மகாவுக்கு பழைய நினைவு திரும்பலாம்... திரும்பாமலும் போகலாம்... '
_முற்றும்
_சத்யா ஸ்ரீராம்
(என் கருப்பு ரோஜாக்களை அழகு படுத்திய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top