• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuppu rojakkal (part-5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
கருப்பு ரோஜாக்கள் (part_5)
மகேஷ் மருத்துவமனையை அடையும்போது இருட்ட தொடங்கியிருந்தது...
பரபரப்பாய் டாக்டரின் அறைக்குள் நுழைய போனவனை நர்ஸ்ன் குரல் தடுத்தது!
"என்ன மகேஸ் சார் இப்படி பண்ணிட்டிங்களே...
ரெண்டு நாளா எங்க போனீங்க டாக்டர் உங்களை தேடிக்கிட்டிருந்தார்! "
" அது.. அது அவசரமா வேலை இருந்துச்சி அதான் சிஸ்டர்...
"சரி போய் டாக்டரை பாருங்க.. " சொல்லிவிட்டு தன் உயரத்தை மூன்று அங்குலம் உயர்த்தியிருந்த ஹீல்ஸ் துணையோடு நடந்தாள் நர்ஸ்!
" may I come in sir "
" வாங்க மிஸ்டர் மகேஷ்... ரெண்டு நாளா எங்க போய்ட்டிங்க... உங்களை கான்டாக்ட் பண்ண நீங்க கொடுத்திருந்த மொபைல்போன் ரீச் ஆகல... அதான் வேற வழி தெரியாம பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறாப்போல காவடிச்சிந்து மன்னிச்சிடுங்க... "
" பரவாயில்லை டாக்டர் கொஞ்சம் அவசர வேலையா அவுட் ஆப் சிட்டி நான்... "
" உங்க மனைவிக்கு ஸ்கல்ல அடிபட்டதால அவங்க பழைய நினைவெல்லாம் இழந்துட்டாங்க... கண் விழித்ததும் தான் யாருனு கூட அவங்களுக்கு தெரியல...
நாங்கதான் எல்லாம் சொல்லி புரிய வச்சோம்... உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஏங்கினாங்க அதான் பேப்பர்ல விளம்பரம் கொடுத்தோம்... போய் பாருங்க சார் உங்க மனைவியை அதிகமா பழசை பத்தியெல்லாம் பேசாதீங்க அவங்க நிறைய யோசிச்சா ப்ரைன் கொலாப்ஸ் ஆகி அவங்க மென்டலி டிஸ்டர்ப் ஆக நிறைய சான்ஸ் இருக்கு... "
மகேசிற்கு இப்பொழுதே தான் அவள் கணவனில்லை என்று சொல்ல மனம் துடித்தது!
அந்த பொண்ணுகிட்டயே சொல்லிவிடுவதென தீர்மானித்து மகா இருக்கும் அறை நோக்கி நடந்தான் மகேஷ்!
அவன் சென்ற நேரம் மகா உறங்கிக் கொண்டிருந்தாள்!
இறைவன் படைப்பில் அரியவள் அவள்...
இருமாப்புக் கொள்ளும் பேரழகு...
இரு விண்மீன்களாய் விழிகள்_அதை
இரு கிரங்களாய் இமைகள் மூடியிருந்தது!
'என்ன அழகுடா இவ... இவளை நாம கல்யாணம் பண்ணலைனாலும் இந்த மூன்று நாட்கள் பெயரளவிலாவது அவள் கணவனாய் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொண்டான் மகேஷ்!
மகா விழித்துக்கொண்டு மகேசை யார் என்பதுபோல் பார்த்தாள்!
"என்னம்மா அப்படி பார்க்குற... இவர்தான் உன் புருசன் மகேஷ் "பக்கத்திலிருந்த நர்ஸ் விளக்கினாள்!
சிரமப்பட்டு எழ முயன்ற மகாவை மகேஷ் தடுத்தான்...
" பரவாயில்ல படுத்துக்குங்க "
மகாவின் கண்கள் தானாய் கண்ணீரை இறைத்தது!
" நான்.... நீங்க.... "
மகாவின் வார்த்தைகள் முழுமை பெறாமல் ஒலித்தது!
" நீங்க யாருன்னே எனக்கு நியாபகமில்லை... நான் யாருன்னே தெரியல... கடவுள் எனக்கு இப்படியொரு நிலமையை ஏன் கொடுத்தான்... "
" மகா நீங்க எதைப்பத்தியும் யோசிக்காதிங்க... போகப்போக எல்லாம் உங்களுக்கு புரிய வரும்... "
மகாவின் பக்கத்தில் அமர்ந்தவாறே கூறினான் மகேஷ்!
" எனக்கு எப்படி அடிப்பட்டுச்சி... எதுவுமே நியாபகத்துக்கு வரல...
என் பேரு உங்க பேரு எல்லாமே டாக்டர் சொல்லித்தான் எனக்கே தெரிஞ்சது... 21 வயசுல முதல்முறையா தன்னோட பேரே தானே தெரிஞ்சிக்குற பொண்ணு நானாதான் இருப்பேன்... "
" ப்ளீஸ் நீங்க எதையும் நினைச்சி வருத்தப்படாதிங்க மகா... "
" நான் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிங்கனு இங்க எல்லோரும் சொன்னாங்கங்க... நான் ரொம்ப கொடுத்துவச்சவ... "
என்றவாறே அவன் தோளில் சாய்ந்தவளை விலக்கி விட மனமில்லாமல் மகேசின் கரங்கள் அவளை தன்னிச்சையாய் அணைத்துக் கொண்டன
இனி வரும் விபரீதங்களை அறியாமல்!
(தொடரும்)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sago:):):):)
இவளை நாம கல்யாணம் பண்ணலைனாலும் இந்த மூன்று நாட்கள் பெயரளவிலாவது அவள் கணவனாய் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொண்டான் மகேஷ்!
aval appidi ninaika mattale:unsure::unsure::unsure::unsure::unsure:ini enna viparitham:unsure::unsure::unsure::unsure:waiting eagerly
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top