• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuppu rojakkal (part-6)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
கருப்பு ரோஜாக்கள்... (part_6)
'மகா கேட்கும் கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்???
இவள் உண்மையான பெயர் என்ன???
இவளை தேடி யாரும் வரவில்லையே இதுவரை...
ஒருவேளை அநாதையா இருப்பாளோ???
வெளியூர்க்காரியோ??? "
அடுக்கடுக்காய் மகேசின் மனம் கேள்வி எழுப்பியது!
'மருத்துவமனையில் இருக்கும்வரை சரி... டிஸ்சார்ஜ் பண்ணால் இவளை கூட்டிகிட்டு எங்கே போவேன்??? '
' அம்மா கேட்டால் என்ன சொல்வேன்??? '
' பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துவிடலாமா??? அது சரியா வருமா???
பெண்ணாய் இருக்கிறாள் அழகாய் வேறு இருக்கிறாள் தவறான ஆட்களிடம் சிக்கிக் கொண்டால் காப்பாற்றி இவளை நாமே காவு கொடுத்தது போலகிவிடுமே!
கடவுளே என்ன செய்ய போகிறேன்! '
"என்னங்க எதையோ யோசிக்குறிங்க? " மகா அவன் தோளில் சாய்ந்தவாறே கேட்டாள்!
" ஒண்... ஒண்ணுமில்ல மகா... "
" எனக்கு இங்க இருக்கவே ஒருமாதிரி இருக்குங்க...
எப்போ நம்ம வீட்டுக்கு போகலாம்...
எனக்கு அப்பா அம்மா...
நம்ம வீட்ல மாமா அத்தையெல்லாம் இருப்பாங்களா???
அப்புறம் நமக்கு கல்யாணமாகி எத்தனை வருசமாச்சிங்க...
குழந்தை இருக்கா???
ஏன் யாரும் என்னை வந்து பார்க்கல??? "
கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் மகா!
" மகா அதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ நல்லா ரெஸ்ட் எடு... டாக்டர் கூப்பிட்டார்னு நர்ஸ் சொன்னாங்க நான் போய் என்னனு பார்த்துட்டு வர்றேன்! " தற்காலிகமாய் மகாவின் கேள்விக் கணைகளிலிருந்து தப்பித்து சென்றான் மகேஷ்!
*********************************************
***************************************
சென்னை...
" ஹலோ கமலா... "
" சொல்லுங்கண்ணே... வீட்டுக்கு போய் சேர்ந்துட்டிங்களா? மலர் எப்படியிருக்கா அண்ணே! "
" நல்லாயிருக்காமா... மலர்கிட்ட நீ சென்னதெல்லாம் சொன்னேன் அவளுக்கு இருப்பு கொள்ளல... ரொம்ப சந்தோசம்மா...
மாப்பிள்ளை ஊர்ல இருந்து வந்துட்டாரா... என்ன சொன்னார்மா மலரை கட்டிக்க சம்மதம்தானே! "
" அதையேன் கேட்குறனே... ஊர்ல இருந்து வந்தான் ரெண்டு நாள் கூட ஆகல திரும்ப போய்ட்டான்...
மலரை கட்டிக்க சம்மதமானு கேட்டேன் உங்க விரும்பம் தான் என் விருப்பம்னு சொல்லிட்டான்ணே!
நீங்க நல்ல நாள் பாருங்க தட்டு மாத்தி நிச்சயம் பண்ணிக்கலாம் "
" ரொம்ப சந்தோசம்மா... ரொம்ப சந்தோசம். நான் நாளைக்கே ஐய்யர்கிட்ட போய் நாள் குறிச்சிகிட்டு வந்துடுறேன்! "
" சரிண்ணே... என் மருமகன் பக்கத்துல இருக்காளா??? இருந்தா போனை அவகிட்ட கொடுண்ணே! "
" இல்லமா மலர் கோவிலுக்கு போயிருக்கா...
வந்ததும் போன் பண்ண சொல்றேன்மா... "
போனை கட் பண்ண கணேசன் அறையின் ஓரம் சுருண்டு படுத்திருந்த மலரின் தலைமுடியை கொத்தாய் பற்றி இழுத்து...
" பொட்டக்கழுத உனக்கு காதல் கேட்குதா காதல்... உனக்கும் கமலா த்தை மகன் மகேசுக்கும் அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம்... எதுனா எடக்கு முடக்கு வேலை காட்டின ரெண்டு பேரையும் வைக்கப்போர்ல வெச்சி எரிச்சிப்புடுவேன் ஜாக்கிரதை! "
மலர் அழுது அழுது வற்றிப்போன கண்களோடு கணேசனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள்!
*********************,, ***************
****************************************
கோயம்புத்தூர்...
" என்னங்க டாக்டர் என்ன சொன்னார்??? "
" இன்னும் ரெண்டு மூணு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னார் "
" ம்ம்ம் சரிங்க... ஆபரேசன் பண்ணும்போது தாலியை கழட்டிட்டாங்க போல... நீங்க கடைக்கு போகும்போது மஞ்சள் கயிறு வாங்கிகிட்டு வாங்க வெறும் கழுத்தோட இருக்க ஒருமாதிரியிருக்
கு... "
மகா சொல்ல சொல்ல அந்த ஏசி அறையிலும் மகேசிற்கு வியர்த்துக் கொட்டியது!
_(தொடரும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top