Karuppu rojakkal... (patt-24)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள்... (பகுதி_24)
மகேஷ் பெண்ணை தான் பார்த்துவிட்டதாய் சொன்னவுடன் கமலம் நிமிர்ந்து மகேசை பார்த்தாள்!
"ஏம்மா அப்படி பார்க்குறீங்க??? "
.....................
மவுனமே விடையாய் கிடைக்க மகேசின் மனதில் லேசாய் பயம் தொற்றிக் கொண்டது!
" ஏம்மா அப்படி பார்க்குற???" கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டான் இம்முறை நிச்சயம் பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையில்!
"ஹாஹாஹாஹா.... " கமலம் சிரித்தது அங்கிருந்த சுவர்களில் பட்டு எதிரொலித்தது!
" ஏம்மா சிரிக்குற??? "
" இல்ல உனக்கு லவ் எல்லாம் பண்ணத் தெரியுமாடா...
நீயா... லவ்வா??? "
மகேசின் முகம் லேசாய் மலர்ந்தது...
அது நிம்மதியாலா??? இல்லை வெட்கத்தாலா என்று தெரியவில்லை!
" ஏம்மா நான் லவ் பண்ணக்கூடாதா??? "
" இல்ல நீ அப்பிராணிப் போல நான் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடுவ... நீ ஒரு பொண்ணை லவ் பண்றியானு ஆச்சர்யமா இருக்குடா... "
" என்ன கிண்டலாம்மா??? "
" கிண்டலாமே... பொண்ணு யாருனு சொல்லு கிண்டிடலாம்... "சொல்லி விட்டு சிரித்தாள் கமலம்.
" அவ பேரு மகா... "
" மகேஷ் மகா பெயர் பொருத்தம் அருமையா இருக்குடா... அப்புறம் உன் மனச திருடிய திருடி எங்க இருக்கா... என்ன பண்றா...? "
" அம்மா கிண்டலடிச்சது போதும்மா... "
" அதுசரி ஒரு பொண்ணை லவ் பண்ணிகிட்டுதான் வேற பொண்ணு கூட நிச்சயம் வரை போனியாடா??? "
" அது... அது அப்போலாம் லவ் இல்லமா??? " ஏதோ சொல்லி சமாளிக்க முயன்றான் மகேஷ்!
" என்னடா இது இந்த நாலு நாள்ல முளைச்ச லவ்வா இது??? "
" முளைச்சி ரொம்ப நாள் ஆச்சிமா... மலர்தான் எனக்குனு நீ சொல்லி சொல்லி வளர்த்ததால என் ஆசைய நான் வளர்த்துக்கலமா...
இப்பதான் மலர் இல்லனு ஆகிடுச்சே அதான்...
நீ என்னமா சொல்ற??? "
" நான் சொல்ல என்னடா இருக்கு... அம்மா சொன்னானு உன் மனசுல இருந்த காதலை கூட மூடி மறைச்சிட்டு மலரை கட்டிக்க சம்மதிச்சிருக்க...
எனக்காக என் மகன் இவ்ளோ பண்ணும்போது அவனுக்காக அவனுக்கு பிடிச்ச வாழ்க்கைய கூட நான் அமைச்சி கொடுக்கலனா நான் மனுசியே இல்ல...
அது சரி அந்த பொண்ணுகிட்ட உன் காதலை சொல்லிட்டியா??? "
" ம்ம்ம் சொல்லிட்டேன்மா... "
" சரி பொண்ணு வீட்ல இருந்து வந்து பேச சொல்லு.... இல்ல இல்ல அது முறையாகாது நாம அவங்க வீட்டுக்கு போய் பேசலாம் என்னைக்கு வரட்டும்னு அவங்ககிட்ட கேட்டு சொல்லு மகேஷ்! "
" அம்மா... பொண்ணுக்கு அம்மா அப்பானு யாருமில்லை... நம்ம காவ்யா தெரியும்ல அவக்கூடத்தான் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா... மகா ஒரு அநாதைமா... " அரைநொடியில் மகாவின் தந்தையை மறைத்து மகாவை அநாதையாக்கினான் மகேஷ்!
" டேய் மகேஷ் அப்படியெல்லாம் சொல்லாதேடா... இந்த உலகத்துல யாருமே அனாதையில்லை... சொல்லப்போனா உலகத்துல வாழுற ஒவ்வொரு ஜீவனும் இன்னொரு ஜீவனுக்கு ஏதோ ஒரு வகையில சொந்தம்தான்டா... "
மகேசின் மனதிற்குள் இருந்த பாரம் மெல்ல மெல்ல கரைந்துக் கொண்டிருந்தது!
************************** ***********************,,, *************** ***** ****
கடற்கரைக் காற்றில் மகாவின் காதோரத்து முடி மெல்ல பறந்து அவளை சிலிர்ப்படைய செய்தது!
மகேசின் கரம் பிடித்து கடலலையை ரசித்துக் கொண்டிருந்தவளின் நினைவலைகளை மகேசின் குரல் கலைத்தது!
" மகா.... "
" ம்ம்ம்.... "
" நம்ம விசயத்தை அம்மாகிட்ட பேசிட்டேன் மகா... "
" ரியலி.... வாவ் சூப்பர் மகேஷ் அதுக்கு அத்தை என்ன சொன்னாங்க??? "
" அம்மாவுக்கு சம்மதம்தான் மகா...
உன்னை வீட்டுக்கு அழைச்சிகிட்டு வர சொன்னாங்க... "
" உன்னைப் போலவே உங்க அம்மாவுக்கும் ரொம்ப பெரிய மனசு மகேஷ்...
ஒரு விபச்சாரியை அவங்க மருமகளா ஏத்துக்க பெரிய மனசு வேணும் she is really great.... "
மகா சொன்னவுடன் கலவரமானான் மகேஷ்!
" மகா உன்னைப்பத்தி முழுசா அம்மாக்கு தெரியாது... தெரியவும் வேண்டாம்... "
" சாரி மகேஷ் தெரியணும்...
அத்தைக்கு முழுசா என்னைப்பத்தி தெரியணும்...
இன்னைக்கு மூடி மறைச்சி கல்யாணம் பண்ணிட்டு பின்னால தெரிய வரும்போது அதோட பாதிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்...
அதைவிட இப்பவே விசயத்தை அத்தைகிட்ட சொல்லிட்டு அவங்களுக்கு விருப்பம் இருந்தா என்னைக் கட்டிக்குங்க... "
" மகா பைத்தியக்காரிப் போல பேசாதே... எந்த பெத்தவளாவது தன் பிள்ளைக்கு மனைவியா ஒரு..... " பாதியில் நிறுத்தினான் மகேஷ்!
" சொல்லுங்க மகேஷ் ஏன் பாதியிலேயே நிறுத்திட்டிங்க.... ஒரு... ஒரு விபச்சாரியை கட்டிவைப்பாளானுதானே கேட்குறிங்க...
கண்டிப்பா மாட்டாங்க...
அவ்ளோ ஏன் இப்போ காதல் மயக்கத்துல இருக்க உங்களுக்கே கொஞ்ச காலம் போனதும் நான் விபச்சாரின்ற எண்ணம் மெல்ல மெல்ல உங்க மனசுலயும் வரும்...
இவ்ளோ ஏன் என்கூட படுக்கும்போது கூட இது மத்தவன்கூட படுத்த உடம்புதானேனு உனக்கே தோணும் மகேஷ்...
நான் உன்னை குறை சொல்லல...
எந்த மனுசனா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பான்...
சரி உனக்கு என்மேலே அளவு கடந்த காதல்... அதனால உனக்கு அப்படி ஒரு எண்ணம் தோணாதுனே வெச்சிப்போம்...
தன் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுக்கணும்னு கனவுகளோட இருக்க உங்கம்மா இதை ஏத்துப்பாங்களா??? "
" இப்போ என்னை என்னதான் பணண சொல்ற மகா... " தலையில் கைவைத்தவாறே கேட்டான் மகேஷ்!
" சிம்பிள் மகேஷ்... உங்கம்மாகிட்ட என்னைப்பத்தி முழுசா சொல்லிட்டு அவங்க ஏத்துகிட்டா வா... வந்து என்னை கூட்டிப்போ... " சொல்லிவிட்டு எழுந்த மகாவை கலங்கும் கண்களோடு பார்த்தான் மகேஷ்!
(தொடரும்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top