• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
10.கதை ஒன்று ஆரம்பம்



இரவு வீடு திரும்பியவன், கிட்சன் மேடையில் அமர்ந்துக் கொண்டு,தன் அன்னை சுட்டுத் தந்த தோசையை உண்டபடி எதையோ பேசிக்கொண்டிருக்க, வீட்டினுள் ஒன்றாய் வந்தனர் வெண்பாவும் மதியும்!

“வா மதி” என்று அவனும், “வாங்க மா மதி, வெண்பா, சாப்பிடுங்க” என்று ரேணுகாவும் அப்பெண்களை வரவேற்றனர்.

“உன் அம்மா அவசரமா வந்து உன் பேகை கொடுத்திட்டு போனாங்க மதி. வெண்பா ரூமில் இருக்கு பாரு” என்றாள் ரேணுகா!

அவளுக்கு மதியை மிகவும் பிடித்து விட்டது!

பெரியவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்கிறாள்.வெண்பாவும் இப்படித்தான் இருந்தாள். இப்போது ஏனோ ஒரு மாற்றம்!

பெண்கள் இருவரும் அங்கிருந்து அகலவும், தனது அன்னையிடம் “வெளிநாடு போற வேலை இருக்கு! என் பாஸ்போர்டை உங்க ரூம் லாக்கரில் இருந்து எடுத்து கொடுங்க மா!” என்றான் போகிற போக்கில்!

“என்ன விழியா, கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு,இப்ப போய் இப்படி சொல்றே!”

“போனால் ஆறு மாசத்தில் வந்துடுவேன் மா” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை!

ரேணுகா யோசனையில் ஆழ்ந்து விட்டாள்.

ரேணுகா இதை பற்றி சபாபதியிடம் சொல்ல, சபாபதி வெண்பாவிடம் சொல்லிய ஆறு மாத ‘கிரேஸ் பீரியடை’ ஈவு இறக்கமின்றி தள்ளுபடி செய்தார்.

இந்த கூத்துக்கள் எதையும் அறியாத வெண்பா அடுத்த நாள் பணி முடித்து மதியுடன் வீடு திரும்ப , ரேணுகா கேசரி கிண்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன அத்தை இன்னிக்கு ஸ்பெஷல்?” அடுப்பாங்கறைக்கு நேரே வந்துவிட்டாள் மதி.

“எல்லாம் நல்ல விஷயம் தான் , இன்னும் ஒரு போன் வந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் அது என்னன்னு சொல்றேன்!”

மதியை நன்கு கவனித்தார் ரேணுகா!அந்த பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது.வெண்பாவை விழியனுக்கு நிச்சயம் செய்தாச்சு என்றதும் , அவனிடம் அதிகமாய் பழகுவதை குறைத்துக் கொண்டாளே.

இப்படியும் பொண்ணுங்க இருக்காங்க . ரெண்டு வருஷம் முன்னாடி விழியனை பாடா படுத்தினாளே ஒரு மகராசி, அவளும் பொண்ணு தான்! இப்ப எவன் உசிர வாங்குறாளோ!

‘உங்க மகன் உசிருக்காக தான் அவ வெயிட்டிங்’

விழியன், இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ மதி” வெண்பாவுக்கும் உணவை வைத்தவள், போன் அடிக்கவும் ஓடினாள்.

“அண்ணே சொல்லுங்க . ஆங்…இருங்க எழுதிக்கிறேன்! ம்ம், இந்த மூணு தேதியா? சரி.இதோ அவனும் வந்துட்டான்.பேசிட்டு போன் பண்றேன்!”

“என்ன மா விஷயம்” என்றபடியே உள்ளே வந்தான் அவரின் மைந்தன்!

“உங்க கல்யாணத்துக்கு நாள் பார்த்தாச்சுன்னு அண்ணே போன் செய்தார்! இந்த மூணு தேதியில் உங்க ரெண்டு பேருக்கு எது ஒத்துவரும்னு சொல்லுங்க.அடுத்த வாரம் நேரில் வருவாராம்!”

இருவர் முகத்திலும் சந்தோஷமில்லை!

“மா , இப்ப என்ன அவசரம்?நான் தான் சொன்னேனே எனக்கு வேலை இருக்குன்னு!” அவள் பக்கம் கூட அவன் பார்வை செல்லவில்லை.

அவளை அவன் உதாசினப்படுத்த ஆரம்பித்து பல நாட்கள் ஆகி விட்டது. அது இருவருக்கு மட்டுமன்றி அவர்களை சுற்றி இருந்த மற்ற இருவருக்கும் கூட நன்றாக தெரிந்தது!

“என்ன டா பேசுறே நீ? ஏற்கனவே தமிழ் மாமியார் வாயை திறந்துட்டா! இன்னும் ஊரில் இருக்குறவங்க எல்லாரும் கேள்வி கேட்குற வரை எங்களால் காலம் கடத்த முடியாது”

தான் சொல்வதே சரி என்பாள். இதற்கு மேல் பேசமுடியாது!

“மா, கொஞ்சம் தலைவலியா இருக்கு. எனக்கு நைட் சாப்பாடு வேண்டாம்!” அவனறைக்கு சென்றுவிட்டான்.

கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டாங்களான்னு எத்தனை பெயர் காத்துகிட்டு இருக்காங்க! நாமளா எல்லாம் பார்த்து செய்து வைக்க நினைச்சா, மூஞ்சிய தூக்குறானே! இவளும் தான்!

இதுகளை வச்சிகிட்டு!

இதே எண்ணப்போக்கில் அவள் பணிகளை முடித்தவள்,வெண்பாவின் அறைக்கு சென்று,கட்டிலில் அவள் பக்கம் அமர்ந்தார்.

“வெண்பா , இந்த மூணு தேதியில் ஒரு தேதியை செலக்ட் பண்ணு மா, அண்ணே கேட்பார்”

காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு முழித்தவள்,

“அத்தை,அப்பா கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டிருந்தேன்” என்றாள் தயக்கமாய்!

“இல்லம்மா, இப்போ விட்டா நேரம் நல்லா இல்லையாம். அவனுக்கும் ஏதோ வெளிநாட்டுக்கு போற வேலை இருக்காம். அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்!”

“அவர் திரும்ப வந்ததுக்கு அப்புறம் வைக்கலாமே அத்தை!”

நிறுத்துவது தான் சிரமம்!எப்படியாவது இதை ஒத்தியாவது போடலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது!

இவள் பேசியதை கேட்க,பக்கத்தில் இருந்த மதிக்கு கோவமாக வந்தது. ஓங்கி தட்டலாம் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இப்படி ஒருத்தி எங்கையாவது இருப்பாளா?

ரேணுகாவுக்கும் அதே நிலை தான்.

“அப்படி பண்ண முடியாது வெண்பா, இதுவே கால தாமதம். நீயே வேணும்ன அண்ணன் கிட்ட பேசி பாரு” எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் பின்னோடு போன மதி,

“கவலை படாதீங்க அதை.அந்த பொண்ணை சரி கட்ட வேண்டியது என் வேலை” என்ற பிறகு தான் நிம்மதியானது ரேணுகாவுக்கு!

வெண்பாவிடம் வந்ததும்,

“ஏன் டீ பெரியவங்க மனசை நோகடிக்கிற? இப்ப என்னத்துக்கு வேணாங்கிற?”

“என்னவோ இதெல்லாம் பிடிக்கலை மதி.என்னை கல்யாணம் பண்ணா அவனுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்!”

“அது என்ன டீ என்னவோ ஏதோன்னு? நீ காரணத்தை சொல்லு. சரியா தவறான்னு நான் சொல்றேன்!” மதி அவளை இன்று விடுவதாக இல்லை.

வெண்பா ஆரம்பித்தாள். தன் அக்காள் திருமண சமையத்தில் அவள் விழியன் வீட்டுக்கு வந்ததும், யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து விழியன் அவளை முத்தமிட்டதும், அதற்காக அவனை அடித்ததும், அதன் பின் அவனை ஒதுக்கியது எல்லாம் சொன்னாள்.

“அப்புறம்?” மதியின் குரல் கர்ஜனையானது!

“ஏன் டீ கோவப் படுறே?”

“புரியாத வயசில் செஞ்ச தப்பை இன்னும் பிடிச்சிட்டு இருப்பியா நீ”

“என்ன மதி இப்படி சாதாரணமா சொல்லிட்ட?”

“எதுவும் பேசாதே! சில விஷயங்கள் நடக்காம இருந்தா நல்லது. நடந்துட்டா அதை விட்டு ஒழிச்சிட்டு போயிட்டே இருக்கணும். அந்த சுழலில் சிக்கி சின்னா பின்னமாகக் கூடாது!”

தன் இடத்தில் போய் படுத்தவள் , சற்றி நேரத்தில் உறங்கியும் விட்டாள்.

‘இவள் என்ன சொல்கிறாள்?’

குழப்பமாய் இருந்தது வெண்பாவுக்கு.

அவன் செய்தது ஒன்னுமே இல்லை என்பது போலல்லவா பேசுகிறாள்.

அன்று அவனின் செயலுக்கு பின் அவனை அறைந்தவள் தன் பாட்டி பக்கம் போய் அமர்ந்துக் கொண்டாள். கை காலெல்லாம் நடுங்கி போய்விட்டது. யாரிடம் இதை போய் சொல்வது என்ற குழப்பம் வேறு.

‘பிசிகல் அப்பியூஸ்’ எத்தனை கொடுமையானது!

வெண்பாவின் குணாதிசயங்களே மாறிவிட்டது! எந்த பையன்களிடமும் பேசக் கூட யோசிப்பாள். ஆண்களில் நல்லவர்களே கிடையாது என்று எண்ணம் கொண்டவளாக மாறிப் போனாள்.இவள் நடந்து கொண்டதைப் பார்த்து தலைக்கணம் பிடித்தவள் என்ற பெயர் கிடைத்தது தான் மிச்சம்!

விழியன் தன் அன்பை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று செய்த சிறு பிழை ஒரு பெண்ணை எந்த அளவிற்கு பாதித்து இருக்கிறது என்பதை அவன் அறியாமல் அதையே திரும்ப திரும்பச் செய்தது அவனை வெறுக்க ஒரு காரணியாகிப் போனது!
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அடுத்த நாள் ஆபிஸ் செல்லும் வழியில் மதி,

“பழைய சிந்தனையில் காலத்தை ஓட்டி உன் வருங்கால வாழ்க்கையை பிரச்சனை ஆக்காதே வெண்பா. அவன் செய்தது தவறு தான். நான் அதை நியாயப்படுத்தலை. ஆனா அவனை நோகடிக்காதே!”

“உளராதே, எல்லாம் நடிப்பு. அவனை நம்பாதே!”

“ஓங்கி தட்டிபுடுவேன் பார்த்துக்கோ”

சற்று அமைதியாய் இருந்தவள்,

“நான் சொல்ற மாதிரி செய். அந்த பழைய விஷயத்தை இதில் எழுது” ஒரு காகிதத்தில் அதை எழுத செய்தவள், அதை கசக்கி ரோட்டில் எரியப் போனாள்,

“வேணாம் , அப்புறம் இதை சுத்தம் பண்றேன், ஸ்வட்ச் பாரத்னு நம்ம காசு தான் வரியா போகும்” குப்பையை தன் கைப்பைக்குள் போட்டவள்,

“இந்த விஷயம் உன் மெமரியில் இருந்து எடுத்தாச்சுன்னு வச்சிக்கோ! இனி நீ விழியனை உன் வருங்கால கணவனா மட்டும் பார்! குறைந்தது ஆறு வித்தியாசங்கள் தெரிய வரும்!”

வெண்பாவுக்கு நம்பிக்கை இல்லை.எப்படி முடியும்?ஆனால் மதியிடம் வாதாடாமல் சரி என்றாள். வெண்பாவுக்கு விழியனை பிடிக்குமா?

வர்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் , தன் அறையில் அடைந்து கிடந்தாள் ரதி. தனியறை அவளது! அவளுக்கு இந்தக் கூட்டுச் சேர்வதே ஆகாது. பழைய கம்பெனியில் விழியனை தவிர எவரையும் உடன் வைத்திருந்தது கிடையாது. அவனுக்கும் தன்னை தவிர யாரும் உடன் இருக்கக் கூடாது என்று எண்ணம் மட்டும் பலிக்கவில்லை. அவன் வாலை பிடித்துக் கொண்டு அந்த மதன் இருந்தான் எப்போதும்!

அவனை பற்றிய எண்ணத்தில் நேரம் போனதே தெரியவில்லை.மணியாகிவிட்டது , கீழே போய் சாப்பிட வேண்டும். நேரம் கழித்து போனால் சாம்பார் ரசமாய் மாறிவிடும்!

பைஜாமைவை மாற்றிக் கொண்டவள் உணவு அருந்தும் அறைக்கு போனாள்.மனமெல்லாம் வெண்பா விழியனை சுற்றி வந்தது.வாட்ஸ் ஆப்பில் “ உன் நிச்சய ஆல்பம் கொண்டு வா ஆபிஸுக்கு” என்று மெசேஜ் செய்தாள் வெண்பாவுக்கு.

“சாரி மா, வெரி ஹெவி. கம் ஹோம் சம்டைம், வில் ஷோ யூ” என்று பதில் வந்தது அவளிடமிருந்து.

விழியனின் அன்னைக்கு இவளை நன்றாகத் தெரியும்.வீட்டுக்குப் போவது நடக்காத காரியம் ! என்ன செய்யலாம் என்ற யோசனையில் அந்த ருசியில்லாத உணவை உண்டாள்.

வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் விழியன். இன்று பேட்மிண்டன் கிளப்பில் மேட்ச் என்றிருந்தார்கள்,அதற்காக கிளம்பி இருக்க கடைசி நிமிடத்தில் கான்சல் என்று விட்டனர்! மொபைல் வேறு விடாமல் அழைத்தது. சிக்னலில் வைத்து அதை எடுக்க ரேணுகா விரைவில் வீடு திரும்பும் படி கூறினார்.

“வந்துட்டேன் மா, இன்னும் பத்து நிமிஷத்தில் இருப்பேன்”

வீட்டில் நுழைந்தவனை வரவேற்றது அவன் நண்பன் மதன்!

மதன் ஆன்சைட் போய் சில மாதங்கள் ஆகியிருந்தது. போனிலும் சேட்டிலும் பேசியிருந்தாலும் நேரில் பார்த்துக் கொண்டது இருவருக்கும் ஏக மகிழ்ச்சி! “எப்படி இருக்கீங்க கல்யாண மாப்பிள்ளை?அம்மா இப்ப தான் சொன்னாங்க. நாள் கூட பார்த்தாச்சாமே…சொல்லவே இல்லையே!”

அத்தனை நேரம் இருந்த சிரித்த முகம் மாறிவிட, “என் ரூமுக்கு போய் பேசலாம். அம்மா இன்னிக்கி மதனுக்கு நம்ம வீட்டில் ஸ்பெஷல் டின்னர் செய்ங்க ப்ளீஸ்”

தனிமை கிடைத்ததும் நண்பனிடம் தன் பிரச்சனைகளை சொன்னான்…

“என்ன மச்சான் எப்பவுமே உனக்கு ஏதாவது ஓடிட்டு இருக்கு. முதலில் அந்த ரதிமீனா. இப்ப உன் மாமா பொண்ணா?”

“ம்ம்ச்.. ஆபிஸ்ல வேற உன் இடத்துக்கு தான் அனுப்புறேன்னு சொல்லிட்டு இருக்கானுங்க. தப்பிக்கலாமான்னு பார்க்குறேன்!”

“அப்ப கல்யாணம்?”

“ம்ம்…அதை விடு. உன் கதையை சொல்லு. என்ன திடீர்னு வந்திருக்கே!”

“எல்லாம் எங்க வீட்டாளுங்க செய்ற வேலை. பொண்ணு பார்த்திருக்காங்களாம், நீ வந்தா தான் ஆச்சுன்னு சொல்லிட்டாங்க. எனக்கும் பொண்ணை பிடிச்சது.அதான் ஆஜராகிட்டேன்!”

“சூப்பர் . பொண்ணு பேர் என்ன? போட்டோ இருக்கா?”

“என்னவோ பேர் சொன்னாங்க, போட்டோ போனில் இருக்கு” தேடி இவனிடம் தந்தவன் , விழியனின் ரியக்‌ஷனை கவனிக்காது அந்தப் பெண்ணின் பெயரை யோசித்துக் கொண்டிருந்தான்.

உணவருந்த கீழே செல்கையில் அங்கிருந்த பெண்களை பார்த்து மதன் விழித்தான். அத்னைப் பார்க்க கண் கோடி வேண்டியிருந்தது விழியனுக்கு!

“மதி இது என் ஃபிரண்ட் மதன், மதன் இவங்க வெண்பா, என் அம்மாவோட அண்ணன் பொண்ணு, இது மதிவதனி,அவங்க கலீங்”

சாதாரணமாய் அறிமுகம் ஒற்றை வரியில் இருக்கும்! ஆனால் இன்று விழியனின் மனதில் இருந்தது மதனை தவிர யாருக்கும் புரியவில்லை.

“மதி, மதன் ரொம்ப நல்ல பையன்.அம்மா அப்பாவுக்கு வீடு நிலம்னு வாங்கித் தந்து எல்லாம் செட்டில் செய்து விட்டான். கூட பிறந்தது ஒரு அண்ணன், அவரும் வெளிநாட்டில் இருக்கார். சென்னை கிண்டியில் சொந்தமா பிளாட் வச்சியிருக்கான்… இப்ப ஐயா இருக்கிறது லண்டனில். எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பையன். எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்.”

மதனுக்கு நண்பன் எதற்காக இப்படி சொல்கிறான் என்பது புரிந்தது தான்.

மனசுக்குள் நண்பேண்டா என்று மெச்சிக் கொண்டான்!

மதியும் வெண்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்! வெண்பாவுக்கோ ‘இந்த விழியனுக்கு என்ன ஆச்சு’ என்ற சிந்தனை.

மதனின் உடல் பொருள் ஆவி எல்லாம் மதியை சுற்றியே வந்தது. போட்டோவை விட நேரில் இன்னும் லட்சணமாய் இருந்தாள். அந்த புதியவன் முன் அவள் அதிகம் பேசவில்லை என்பதால் அமைதியான பெண் என்று முடிவு கட்டிவிட்டான்.

பிறகு ஏதேதோ அரட்டைகளுடன் அந்த உணவிடம் கலகலப்பாக மாறிப் போனது . ரேணுகாவும் அவர்களுடன் கலந்துக் கொள்ள,வெண்பா மாத்திரம் பாத்திரம் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கிட்சனில் புகுந்து கொண்டாள்.

மதன் கிளம்பும் சமயம் விழியனை தனியே தள்ளிக் கொண்டு போய்,

“என்னடா பெண் பார்க்கும் படலத்தை இங்கையே நடத்திட்டே? இன்னும் எந்த பேச்சு வார்த்தையும் ஆரம்பிக்காமலே அவளை என் ஹார்ட்டில் ஃபிக்ஸ் பண்ணிட்டேனே” நண்பனின் ஆக்‌ஷனில் நகைத்தாலும், ‘கனவு காணுங்கள்’ என்று வாழ்த்தி அனுப்பிவைத்தான்!
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
wow nice epi ani... madhi madhan... per poruththam super. intha rathi vera enaththa plan panraalo... venbaa pls ma avanai purushana paaka arambi....
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
wow nice epi ani... madhi madhan... per poruththam super. intha rathi vera enaththa plan panraalo... venbaa pls ma avanai purushana paaka arambi....
nandri ma thendral... intha venbavai rendu vaikkanum
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
wow nice epi. anikka... venba yenma ippadi iruka?? vera yaravathu kothurathuku munadi pulaichukko....:)
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
avaluku puriyura mathiri eduthu sollunka anikka...
இதுக்கும் மேல ஸ்பூன் வச்சி தான் ஊட்டணும் அந்த புள்ளைக்கு ஹ ஹ
! ;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top