• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
21


“என்னையும் கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்க, சும்மா சொன்னதா அது!”

மதி லண்டன் கிளம்புகிறாள் என்பது தெரிந்ததும் தானும் விழியன் இருக்கும் இடம் போக வேண்டும் என்று தவிப்பானது வெண்பாவுக்கு!

அன்று விழியனுடன் போனில் பேசுகையில் இப்படியாக கொஞ்சிக் கொண்டிருந்தாள் அவன் ஆசை மனைவி வெண்பா.

மதி இப்போதெல்லாம் ஆபிஸ் வரவில்லை என்றாலும் தினமும் அவளிடம் பேசும் வாய்ப்பும், வாரம் ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் இருந்து வந்தது. அவளும் இப்போது வெளிநாடு சென்றுவிட்டால் தன் நிலைமை தான் என்ன?!

அவளின் இந்த பேச்சில் நகைத்துக் கொண்டான் விழியன்.
“ஹலோ ஹலோ, இது என் மாமா பொண்ணு வெண்பா வா?”
“இல்லை, நீ தாலி கட்டி கூட வச்சியிருக்கிற உன் பொண்டாட்டி”
“அப்படியா , பேசுற பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கே!”

அவளுக்கும் சேர்த்து தான் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடும் நடக்கிறது.அதனை பற்றி முடிந்த வரை தாமதமாக சொல்ல எண்ணியிருந்தான். மதி ஷாப்பிங் என்று அழைத்துப் போகையில் இவளையும் சேர்த்து வாங்க சொல்லியிருந்தான்.கணவன் தன்னையும் அழைத்தான் என்றால் தேவைப்படலாம் என்று எண்ணி அதையும் செய்தாள் வெண்பா!

ரதியை அழைக்க எப்போது செல்ல வேண்டும் என்று கேட்க எத்தனித்து அவளுக்கு பல முறை போன் செய்து பார்த்தான் பிரகாஷ் , எடுத்தாளில்லை.பல நாட்கள் முயன்றும் இதே நிலை தொடர சாரதியை அழைத்தான்,

“அவ கிளம்பி மூணு நாள் ஆச்சே பா ! நீ வர சொன்னதா தானே சொன்னா!உன் வீட்டுக்கும் வராமா எங்கே போயிருப்பா?”
பதட்டம் அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
“நீங்க பதட்டபடாதீங்க .ஹாஸ்டல் திடீர்னு காலி பண்றதில் எதுவும் சிக்கலோ என்னவோ!அங்க தான் போயிருப்பா, நான் போய் பார்க்குறேன்!”
ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு. அப்படி என்ன என் மேல் தவறு போல் செய்கிறாள். பேச இஷ்டமில்லையெனில் மெஸேஜில் சொல்லியிருக்கலாமே!

யோசனையில் மூழ்கியிருந்தாலும் ,கால் போன போக்கில் ஆபிஸ் வரை வந்துவிட்டான். எதேச்சையாய் அவள் இருக்கை பக்கம் கண் போக அங்கே அமர்ந்திருந்தாள் அவனின் மனைவி!
இத்தனை நேரம் இருந்த குழப்பம் போய் , இனிமை படரத்தான் செய்தது! அவளிடம் போனவன் இன்முகமாய்,
“எப்போ வந்தே ரதி?ஐ வாஸ் வரீட் . ஏன் என் போன் கால் அட்டெண்ட் செய்யலை?”
அந்த கேள்வியே காதில் விழாதது போல், நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“குட் மார்னிங் பிரகாஷ்,லீவில் உள்ள பெண்டிங் வர்க்ஸ் எல்லாம் முடிக்கணும்! கொஞ்சம் ஹெல்ப் தேவை!”
ஆபிஸில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடிக்கு அவள் தொடர நினைத்து இப்படி சொல்ல, அவனுக்கு எப்படியிருந்ததாம் !

யோசனையாய் அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க, பேசி முடித்தாயிற்று என்பதாய் திரும்பி தன் வேலைகளை கவனிக்கலானாள்.அப்படி அங்கேயே எத்தனை நேரம் நிற்பது?விலகிக்கொண்டான் பிரகாஷ்!

ரதி வந்ததில் பிரகாஷ் எப்படி மகிழ்ந்தானோ அதே நிலை தான் வெண்பாவுக்கும். தோழியை ஆதரவாய் கை பற்றியவள்,
“சாரி ஃபார் யுவர் லாஸ் ரதி. எனக்கு தாமதமா தான் தெரிய வந்தது”
அவள் தந்தையின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தாள்.
ஆனால் அது ரதிக்கு அவள் துக்கத்தை நியாபகப்படுத்தியது போல் ஆகிவிட்டது. ஒரு மூச்சு அழுதவள், வெண்பாவின் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். வெண்பாவுக்கு பாவமாய் போனது… இனி எப்படி இந்த பெண் தனியாய் தன் வாழ்க்கையை வாழ போகிறாள்? எல்லா பெண்களுக்கும் தோன்றும் உணர்வு அவளுக்கும் வந்து போனது. அதை சொல்லி அவள் தைரியத்தை குறைக்க மனமில்லாது,
“எல்லாம் சரியா போகும் ரதி. நான் இருக்கேன் உனக்கு . கவலை படாதே”
ரதி கேட்க நினைத்த வார்த்தைகள்!
‘ஆமாம் எனக்கு நீ உடன் இருக்கணும் வெண்பா, உன்னால் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது’. ரதியின் மனதில் ஓடின எண்ணங்கள்.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
கணவனுடன் தொலைபேசியில் பேசுகையில் ரதியை பார்த்து பேசிக்கொண்டதை பற்றி சொன்னாள் வெண்பா. விழியனுக்கு சலிப்பாயிருந்தது . அவள் பெயரை கேட்டாளே பிடிப்பதில்லை. இவளானால் அவளை பற்றியே நிதமும் பேசுகிறாள்!
“கொஞ்சம் நம்ம விஷயத்தை பேசு வெண்பா.எப்பவும் யாரையாவது பத்தி பேசாதே!”
சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,
“வாழ்க்கை எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்கிறது இல்லையில்ல விழியன்!”
ஆமாம் உண்மை தான்! ஆனால் ஏன் சொல்கிறாள்?
“எப்படி சொல்றே?”
“மெளன ராகத்தில் கார்த்தி கேரக்டர் தான் சூப்பர்னு சொல்லிட்டிருந்த நானே,கல்யாணத்துக்கு அப்புறம் மோகனை மாதிரி வருமான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!?”
“இப்படியே பார்த்த படத்தையே பார்த்திட்டு இரு , பைத்தியம் தான் பிடிக்க போகுது!!”
“அதான் உங்களை பிடிச்சிருக்கே! தனியா வேற பிடிக்கணுமா?”
“பைத்தியமா நானா?நேரில் வா, உன்னை வச்சிக்கிறேன்!”
அதன் பின்னும் பல ஸ்வீட் நத்திங்ஸ் பேசிய பின் போனை வைத்தனர்! பிரிவு அவர்களை மனதளவில் நெருக்கமாக்கிவிட்டிருந்தது!
ரேணுகா ரதிக்கு தருவதாக இருந்த வீட்டை வேறு ஆளுக்கு வாடகைக்கு விட்டிருந்தாள். புதிதாய் குடிவந்த அந்த வீட்டு பெண்மணி ரேணுகாவை ஒரு காரியத்துக்காக தேடி வரவும் தான் வெண்பாவுக்கு இந்த வீடு விஷயமே தெரிய வந்தது. வீட்டை வாடகைக்கு கொடுப்பதாய் சொல்லியிருந்தால், ரதியையே கேட்டிருக்களாமே!
என்றும் தன் அத்தையிடம் எதையும் தவராய் பார்த்திறாதவளுக்கு அன்று அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது!

வெளியில் இருந்து ரேணுகா வீடு திரும்ப,
“அத்தை அந்த வீடு அதுக்குள்ள வாடகைக்கு போயிடிச்சா?எனக்கு தெரியாதே”
ரேணுகாவுக்கு தெரியும் இது மறைக்க கூடிய விஷயம் இல்லை என்பது. அதனால் வெண்பாவிடம் சொல்லவேண்டிய பதில்களை தயாரித்தே வைத்திருந்தாள்!
“ஆமா மா. இதே தெருவில் இருந்தவங்க தான் வாடகைக்கு கேட்டாங்க, உடனே தந்துட்டேன்” அடுப்பாங்கறையில் தன் காரியங்களை கவனித்த படி அவள் சொல்ல, வெண்பாவுக்கு இப்போது கோவம் ஏற தொடங்கியது!
“ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல அத்தை? ரதி தான் முன்னமே கேட்டாளே”

‘ஐயோ இந்த பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே முடியாது போல! டேய் விழியா நான் என்ன தான் டா செய்யணும்!?
அன்னைக்கே சொன்னேன் இவளுக்கு சொல்லிடுன்னு , கேட்டியா?
இப்ப என்னை தனியா மாட்டி விட்டிட்டு நீ பாட்டுக்கு போயிட்டே!’
“வெண்பா, அதுக்கென்ன மா, வேற எதுவும் வீடு காலியான உன் பிரண்டுக்கு கொடுத்திடலாம்.இதுக்காக அத்தை கிட்ட கோவிப்பியா? உனக்கு என்னை விட அவ அத்தனை முக்கியமாக ஆகிட்டாளா?”

கோவம் அடங்கி, “அத்தை அவ பாவம். அவங்க அப்பா வேற இப்ப தவறிட்டாங்க. யாரும் இல்லை அவளுக்கு”

‘மனசு மூளை எதை எது செய்யணும்னு ஒரு வரைமுறை இருக்கு. மூளை செய்ய வேண்டிய விஷயத்தில் மனசின் பேச்சை கேட்க கூடாது!இப்படி பட்டவார்த்தனமா எல்லாரையும் நம்பிட்டு இருக்கிறது இவ வாழ்க்கைக்கு நல்லது இல்லை’

இதையெல்லாம் வெளிப்படையாய் தன் மருமகளிடம் சொல்ல ரேணுகாவுக்கும் ஆசை தான். ஆனால் வெண்பா இப்போது சொல்வதை போல் எல்லா விஷயத்தையும் தன்னிடம் சொல்ல வேண்டுமானால், ரதியை பற்றி எதிர்மறையாக சொல்லாமல் இருப்பது நலம்!

மகனிடம் இதை பற்றியும் தொலைபேசியில் பேசுகிறாள்.
“விழியா வெண்பா கிட்ட நீ ரதி பற்றி சொல்லிடுறது நல்லது பா. அந்த சண்டாளி ஊரில் வேறு எவளும் கிடைக்காம உன் பொண்டாட்டிய பிடிச்சு தொங்கிட்டு இருக்கா. அவ எதையாவது வத்தி வைக்கிறதுக்குள்ள நீயே சொல்லிடு. வெண்பா உன் நிலையை புரிஞ்சிப்பா”

அவன் வேரிடத்தில் இருந்ததால் இங்கு வெண்பா செய்து கொண்டிருக்கும் கூத்து எதுவும் அவனுக்கு முழுவதுமாய் தெரியவில்லை. அம்மா தான் தேவையில்லாமல் கவலை படுகிறாளோ என்ற எண்ணத்தில்,
“சரி மா . பார்க்குறேன்” என்றவன் அதை பற்றிய யோசனையை கொண்டு வரவே இல்லை.

அவன் அதை பற்றி சிந்திக்கும் சமயம் வெண்பா அவனை விட்டு விலக போகிறாள் என்பது அவனுக்கு தெரிய வந்திருந்தால் இப்படி செய்திருப்பானா?

ரதி பிரகாஷிடம் பேசிவிட முடிவெடுக்கிறாள்...அன்று ஹாஸ்டல் திரும்பியவள் அவன் நம்பருக்கு அழைக்க, உடனே எடுத்தான்..
“ ரதி என்ன மா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”
அவன் அக்கறை இனிமையை தருவதற்கு பதில் எரிச்சலையே தந்தது… ஆபிஸில் அவனை உதாசினப்படுத்தியதை போல் இப்போது செய்ய முடியவில்லை.
“ ஏன் பிரகாஷ் இப்படி செஞ்சே?”
அவனிடம் பதில் இல்லை.
“நான் தான் ஒருத்தரை காதலிக்கிறேன் என்னை தொந்திரவு செய்யாதேன்னு சொல்லியிருந்தேனே. திரும்ப ஏன் எங்க அப்பா கிட்ட பேசினே?”
சங்கர நாராயணன் இதை எல்லாம மகளிடம் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. எப்படி சொல்கிறாள் பின்னே?
“நானா அவர் கிட்ட பேசலை ரதி. அவரே …”
“பொய் சொல்லாதே பிரகாஷ், ஐ நோ…”
அமைதியாகிவிட்டான்…இப்போது புரிய வைக்க முயல்வது வீண்! “ரதி, ஐ லைக் யூ ரதி… என் லைஃபில் எனக்குன்னு அன்பு காட்ட யாரும் இருந்தது இல்லை. நீ அப்படி இருக்கும்னு நினைச்சேன், அது தப்பா?”
நிதானமாய் அவன் சொல்ல, வேறு எந்த பெண் ரதியின் இடத்தில் இருந்திருந்தாலும் கொஞ்சமேனும் இளகி போயிருப்பாள், ஆனால் ரதிக்கு அவள் விஷயமே பிரதானமாக இருக்க, அவனின் உணர்வுகள் புரியுமா?

“நீ என்ன சொன்னாலும் அது தப்பு தான் பிரகாஷ். எனக்கு இஷ்டம் இல்லைன்ன விட்டிருக்கணும். தேவையில்லாம் நம்ம இரண்டு பேரின் வாழ்க்கையையும் காம்பிளிகேட் செய்திட்டே”

இந்த பேச்சு போகும் போக்கு அவனுக்கு பிடித்தமில்லை!
“எப்போ நம்ம வீட்டுக்கு வரே ரதி?” என்றான்…
அத்தனை ஆத்திரம் அவளுக்கு. நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன், இவன் என்ன லூசா?
“பிராகாஷ் ஸ்டாப் இட்… இந்த மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டால் உன் பின்னாடி நான் வந்திடணுமா? நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்கே?”
ரதி இப்படி எல்லாம் பேசி அவன் கேட்டதில்லை. இத்தனை நேரமும் இருந்த இறுக்கமான நிலை மாறி அவள் திட்டுவது கூட அவனுக்கு இன்பம் தந்தது…அவளை வேண்டுமென்றே சீண்ட!

“ஓகே நீயா வருவேன்னு பார்த்தேன்… நாளைக்கு நம்ம மேரேஜ் செர்டிபிகேட் போட்டோஸோட உன் ஹாஸ்டல் வார்டன் கிட்ட பேசிக்கிறேன். பை டார்லிங்” என்று போனை வைத்தான்.
போனை வைத்தவனுக்கு அத்தனை சிரிப்பு. ரதியின் முகம் மாறி இருக்கும் விதத்தை நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டான்...
திருமணம் எவரையும் மாற்றுமாம்!நன்றாக இருந்த பிரகாஷை இப்படி மறை கழண்டவன் போல் ஆக்கி விட்டிருந்தது, சங்கர நாரயணன் செய்து வைத்த திடீர் திருமணம்!
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
[
நாளைக்கு நம்ம மேரேஜ் செர்டிபிகேட் போட்டோஸோட உன் ஹாஸ்டல் வார்டன் கிட்ட பேசிக்கிறேன். பை டார்லிங்” என்று போனை வைத்தான்.
ippidi ethavathu athiradi seithathan undu.............. illai thirumanathai aval yaarukum solla povathilai:):):):)
QUOTE="anisiva, post: 19930, member: 29"]திருமணம் எவரையும் மாற்றுமாம்!நன்றாக இருந்த பிரகாஷை இப்படி மறை கழண்டவன் போல் ஆக்கி விட்டிருந்தது,[/QUOTE]
:D:D:D:):):):)nalla matram thane sis. ithe mathiri rathi eppo maruva prakashai ninithu:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: interesting epi sis:love::love::love::love::love:
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Nice update dear
Prakash H kothu viteengale pa
Mulusa mara kaladama irunda sari
Ena loose madri pesura kadaisila yarum ila ma nikarapa unarvalo..
Hoom venba vizhiyana priyara naal varapoda
 




Haridharani

நாட்டாமை
Joined
Feb 11, 2018
Messages
92
Reaction score
89
Location
Coimbatore
Aaga unga plan radhiyai vachu venbavai vizhiyankita irnthu pirikarathu..

Apde onnu nadanthaa Japan vanthurven..
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
இந்ந கேடி ரதிக்கு கூட இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதும் அவளுக்கு சாதகமே.அடுத்து என்ன?வெய்ட்டிங்.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ரதிக்கு வாழ்க்கையின் நிதர்சனம் எப்போது தான் புரியும்.
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
ரதி பிரகாஷ்க்கு கூறும் கருத்தை தானும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top