• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
23

விழியனா?
அது வெண்பாவின் கணவன் தானே?
இவளுக்கு என்ன பைத்தியமா?
“அவர் வெண்பா வீட்டுக்காரர் தானே?”
அதிர்ச்சியாய் பிரகாஷ் கேட்க , பதிலில்லை அவளிடம்,
“ஏற்கனவே கல்யாணம் ஆனவரையா இன்னமும் காதலிக்கிறேன்னு சொல்றே, ரதி?!”
‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தவளின் செவிட்டில் நாலு அப்பு அப்பலாம் என்றிருந்தது அவனுக்கு! என்ன பெண் இவள்? வாழ்க்கை நெறி என்று ஒன்று இல்லையா?

“இதை சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா ?ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட் ரதி! சந்தோஷமா இருக்கிற அவங்க குடும்பத்தில் குழப்பம் செய்யாதே!”
அவனை சீண்டி விட்டது போல் இருந்தது அவனின் பேச்சுக்கள்.பதிலுக்கு முறைத்தவள்,
“என்னை சொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கு பிரகாஷ்?
இந்த கயிற்றை என் கழுத்தில் கட்டிட்டா என்னை அடக்கணும்னு உனக்கு தோணுதா? அந்த உரிமை எல்லாம் உனக்கு கிடையாது!”
என்ன சொல்வான் ?அவள் மேல் வைத்திருந்த அத்தனை காதலையும் ஒன்றும் இல்லாததை போல் சொல்கிறாளே!

தன் டென்ஷன் நிலைகளை அளவுக்குள் கொண்டு வர, அவளுக்கு எதிர்புறம் திரும்பி தலைக்கோதி நின்றவன், இவள் விஷயத்தில் இனியும் என்ன தான் செய்வது என்றும் யோசித்தான். இப்போது இருக்கும் மனநிலையில் ஒரு உருப்படியான வழியும் மூளைக்கு எட்டிய தூரம் வரையில் புலப்படவில்லை.

இதற்கு மேலும் அவளிடம் வாக்குவாதம் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை. அது அவனின் குணமும் இல்லை.
“ரதி கிளம்பு போகலாம்”
தான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று நினைத்து வந்ததற்கும் இப்போது இங்கு நடந்து கொண்டிருப்பவைகளுக்கும் சற்றும் சமந்தம் இல்லை. அவள் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருந்தாள்.இருவரின் வாழ்க்கையில் இனி நன்மைகளுக்கு இடம் இராதா என்ற ஐயம் கூட தோன்றியது பிரகாஷுக்கு! இருக்கும் பிரச்சனை பத்தாது என்பது போல் ,

“இல்லை பிரகாஷ் , நீ மட்டும் கிளம்பு .நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கணும்னு நினைக்கிறேன்!” ஆள் இல்லாத இந்த இடத்தில் தனியே இருக்க போகிறாளாம்… கட்டுப்படுத்தி வைத்த கோபம் எல்லாம் அவனின் மன தடுப்பை தாண்டி விட்டது! இவள் திமிரை அடக்க தனியே விட்டுவிட்டு போனால் தான் என்ன என்ற எண்ணம் கூட வந்து போனது!ரதியை நெருங்கி முரட்டுத்தனமாய் அவள் தோள்களை பற்றியவன் ,
“வார்டன் கிட்ட சொல்லி உன்னை வெளியே கூப்பிட்டு வந்தது நான், மரியாதையா இப்ப கிளம்பு ரதி”
சொல்லியவன் வண்டியை நோக்கி சென்று வேக வேகமாய் அதை ரிவர்ஸ் எடுக்க, அவனின் கோபத்தை உணர்ந்தவள் தாமதிக்காது ஏறிக் கொண்டாள்!

திரும்பும் வழியில் இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. இன்று பிரகாஷிடம் அனைத்தையும் சொல்லிவிட்டது சரி என்று பட்டது ரதிக்கு! இனி என் விஷயத்தில் தலையிட மாட்டான் என தப்பாக கணக்கு போட்டாள், எப்போதும் போல்!

காரில் ஓடிக் கொண்டிருந்த ரேடியோவை நிறுத்தி விட்டான். அதில் வரும் பாடல்களை கேட்டு அவள் செய்துவிடக்கூடும் இன்னொரு டிராமாவை அவன் பார்க்க இஷ்டப்படவில்லை.ஹாஸ்டல் வாசலில் அவளை இறக்கி விட்டவன், ஒன்றும் சொல்லாது விருட்டென்று போய் விட்டான்.

பழைய ரதி ,மனிதர்களின் உணர்வுகளை கொஞ்சமாவது மதிப்பவள். இப்போது அப்படி இல்லை!என்று தன் மனம் கவர்ந்தவனின் மனதை புரிந்துக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாளோ, அன்றே மற்ற அனைவரும் இரண்டாம் பட்சம் தான். அதில் பிரகாஷை ‘கன்சிடர்’ கூட செய்வதில்லை என்பது தான் உண்மை.

பழைய ரதியாய் இருந்திருந்தால், அவளுக்கு தாலி கட்டியவனின் உதாசினத்தை அவமானமாய் கருதியிருப்பாள், ஆனால் இப்போது அவளை எந்த செய்கையும் பாதிக்கவில்லை! தவறு செய்கிறோமோ என்ற சந்தேகம் எல்லாம் அவளுக்கு இல்லை. தான் செய்வது தவறு என்பதை தெரிந்தே செய்து கொண்டிருக்கிறாள்… மேலும் பலவற்றை செய்யும் துணிச்சலையும் வளர்த்தாயிற்று!

மதிவதனியுடன் அரட்டை கச்சேரி ஆரம்பமானது,
“நீ கூட இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டியே டீ!”
வெண்பா செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தன் தோழியிடம்!
“சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் தங்கம்! பிகாஸ், ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் யா!” வெண்பாவிடம் மொத்து வாங்கியவள்,
“ரெண்டு பேரும் ஒண்ணா லண்டன் போறோம், என்ஜாய் பண்றோம்” என முடிக்க…
அதன்படி அடுத்தகட்ட பணிகள் வேகவேகமாய் நடந்தது! ஆபிஸில் லீவுக்கான மனுவை அனுப்புகையில் தான் ரதிக்கு வெண்பாவின் டிரிப் விஷயம் தெரிய வந்தது!

ஆரம்பத்திலேயே விழியனின் விஷயத்தில் ஏதாவது செய்யலாம் என்றிருந்த ரதியை அவள் தந்தையும் பிரகாஷும் வந்து திசை திருப்பி, கெடுத்துவிட்டிருந்தனர். இப்போது விஷயம் கைமீறி போனது போல் இருந்தது…ஆனால் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பதாக சரியான ஒரு சந்தர்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள் ரதி!

இன்று வெண்பா தன் பிரயாணத்தை பற்றி சொல்கையில் ரதிக்கு ஏக வருத்தம், அதே யோசனையில்,
“நான் இப்படி கேட்க கூடாது, ஆனாலும் நீ இப்ப போய் தான் ஆகணுமா வெண்பா? ஏற்கனவே கல்யாணத்துக்காக எடுத்திருந்த லீவே லாஸ் ஆஃப் பே தானே!”
அவள் கேள்வியில் வெண்பாவே திடுக்கிட்டு பார்க்க,
“…உன்னை விட்டிட்டு இந்த ஆபிஸில் தனியா இருக்கிறது எனக்கும் போர் வெண்பா…அதான்…”
ரதிக்கு வெண்பாவிடம் பேசும் போது மட்டும் இருக்கும் மொத்த திறமையும் வெளிவந்துவிடும்.வெண்பாவுக்கோ ரதியிடம் பேசுகையில் யோசிக்க வேண்டிய மூளை வேலையே செய்யாது!இப்போதும் அவள் பேச்சில் அப்படியே உருகிவிட்டாள் வெண்பா.
“சீக்கிரம் வந்திடுவேன் ரதி. எனக்கும் உன்னை தனியா விட கஷ்டமா தான் இருக்கு!”

“நான் ரதியை பத்திரமா பார்த்துக்குறேன் வெண்பா! நீங்க லண்டன் போய் நல்லா என்ஜாய் பண்ணுங்க” இவர்கள் பேச்சில் இடைபுகுந்து சொன்னான் பிரகாஷ்! கணவனாய் ரதியை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல ஆசை தான் . ஆனால் அதை இங்கே இப்போது சொல்லத் தோன்றவில்லை . எல்லாரிடமும் தானே போய் சொல்ல வேண்டுமா! அன்று கடற்கறையில் நடந்த விஷயங்களுக்கு பிறகு ரதியிடம் இன்று வரை முகம் கொடுத்து கூட பேசவில்லை அவன்!இன்று தான் அவள் இருக்கும் இடம் வந்திருக்கிறான்.ரதியை நேரே பார்ப்பதை தவிர்த்து, வெண்பாவை மட்டுமே பார்த்து பேசினான்!

பிரகாஷ் இப்படி சொன்னது சற்று வித்தியாசமாக பட்டது வெண்பாவுக்கு. ஆனாலும் ஆமோதிப்பதை போல் சிரித்து விட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டாள்!

மதிவதனியுடன் பழையபடி நிறைய நேரம் கிடைத்தது வெண்பாவுக்கு.விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தோழிகள் இருவரும் பயணத்துக்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர்.
“ஆபிஸ் எப்படி போகுது வெண்பா?அந்த மேல்மாடி காலி எப்படி இருக்கா? இப்பவாவது மாடியில் எதையாவது காய வச்சாளா இல்லையா”
அவள் சொன்ன உவமைக்கு சிரித்தாலும்,
“யாரு அந்த லக்‌ஷ்மி தானே!ஏன் டீ அவளையே சீண்டுறே! அவ பாட்டுக்கு அவ வேலையை பார்க்குறா! உனக்கென்ன?”
“அவ அப்படி பார்த்திருந்தா , நான் ஏன் டீ இன்னும் அவளை நியாபகம் வச்சி கேட்க போறேன், சரி அவளை விடு, ரதிதேவி எப்படி இருக்காங்க”
“ரதிதேவி இல்லை, ரதி மீனா”
“ஏதோ ஒண்ணு! இப்பவும் உன்னை ஆக்டோபஸ் மாதிரி கெட்டியா பிடிச்சிட்டு இருக்காளா?விழியனுக்கு இது தெரிஞ்சா கோவிச்சுக்க போறார் டீ!”

“சும்மா இரு மதி.உனக்கு அவளை கண்டாளே ஆகாது அதுக்காக இப்படி சொல்லாதே! பாவம் அவ, இப்ப தான் அவங்க அப்பா வேற தவறிட்டார்”
மதிவதனி அமைதியாய் இருக்க,
“ஆனா நம்ம பிரகாஷ் இருக்காரே , இப்ப ரொம்ப க்ளோஸா பழகுறார் ரதி கிட்ட. பார்த்தாலே தெரியுது டீ. ஆபிஸில் வேற எல்லாரும் பேசிக்கிறாங்க.ஸ்ம்திங் நடக்குது டீ ரெண்டு பேருக்கு நடுவில். இவ எதையும் பத்தி என் கிட்ட வாயை திறக்க மாட்றா.”
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
“ரதிக்காக ஒருத்தர் உருகுகிறாரா. அவர் ரொம்ப நல்லா இருக்கணும்!அவ வாயை திறக்காத வரைக்கும் ரொம்ப நல்லது வெண்பா, ஃபீல் பண்ணாதே! என் கிட்ட அவ பேசின பேச்சுக்கு தான் இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முட்டிட்டு நிக்கிது பார்த்துக்கோ”

ரதி வெண்பாவின் வீட்டின் அருகே குடி வருகிறேன் என்று சொன்ன விஷயம் மறந்து போனது இருவருக்கும். மதிவதனிக்கு அது நினைவில் வரும்போது காலம் கடந்து போயிருக்கும்.

மதிவதனியின் பெற்றோரை அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது வெண்பாவுக்கு…பிரசாத் அன்பாய் வரவேற்க, மோகனாவோ கவலையில் இருந்தார்.
“எப்படி தான் இந்த பொண்ணு அங்க தனியா சமாளிக்க போகுதோ வெண்பா, நீ அங்க இருக்கிற வரை கொஞ்சம் இவளையும் பார்த்துக்கோ மா”
மதிவதனிக்கு கடுப்படித்தது,
“மா, அவளுக்கும் அங்க எல்லாம் புதுசு தான். ஏன் இப்படி புலம்புறீங்க? அக்கா சமாளிச்சிட்டா இல்லையா, அதை போல் நானும் பார்த்துப்பேன்”
தன் அன்னையை கட்டிக்கொண்டு அவள் சொல்ல அப்போதும் மோகனாவின் முகத்தில் தெளிவில்லை…
“நீங்க கவலை படாதீங்க ஆன்டி. நாங்க ரெண்டு பேரும் சமாளிச்சிடுவோம்! அதான் இப்ப ஸ்கைப், வீடியோ கால் எல்லாம் இருக்கே, ஏதாவதுன்ன உங்களையும் கேட்டுக்குறோம்”
தன் அன்னையிடம் இந்த கரிசன பேச்சு இறாது வெண்பாவுக்கு, ஆனால் தோழியின் அன்னையிடம் தானாகவே வந்தது!

ஒரு வழியாய் அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது!
ரதி ஏர்போர்ட் வருகிறேன் என்றிருந்தாள், ஆனால் அதை அறிந்து கொண்ட பிரகாஷ் அவளுக்கு அன்று வேண்டுமென்றே ஏகப்பட்ட மீட்டிங்கை செட்டப் செய்து வைத்திருந்தான்… கடைசி நிமிடம் வரை வேலைகள் இருக்க கிளம்ப முடியாமல் போயிற்று! தொலைபேசியில் வழியனுப்பி வைத்தாள் வெண்பாவை!


சபாபதி, இலக்கியன் , தமிழ் , பொற்பாவை , ரேணுகா என்று வெண்பாவின் பக்கம் வந்த ஆட்களும், மதிவதனியின் பெற்றோரும் சேர்ந்து தங்கள் வீட்டு பெண்களை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தனர்! அத்தனை வாய் பேசிய மதிவதனி, கிளம்பும் நேரம் தன் தாயை கட்டிக் கொண்டு அழுதாள். இந்த புதிய கூட்டணியை பிரசாத் பாவம் போல் பார்த்துக் கொண்டு நின்றார்.
“வதனி குட்டி , இப்படி ஏர்போர்டுக்கு வரும் போதெல்லாம் அழணும்னு ஏதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா மா?”
நேரம் காலம் தெரியாமல் மகளை சீண்டியவரை அவள் கண்டுகொள்ள கூட இல்லை.அன்னையை கட்டிக்கொண்டு நின்றாள். வெண்பா எல்லாவற்றியும் வேடிக்கை பார்த்த படி நிற்க, பொற்பாவை இலக்கியனிடம்,
“நம்ம ஆளு எப்படி கன் மாதிரி அசராம நிக்கிறா பார்த்தியா மாமா? எல்லாம் தாத்தா வளர்ப்பு. டிஎம்டி கம்பி மாதிரி வளர்த்து வச்சியிருக்கார்.எங்க மம்மியை இப்படி தனியா போக சொல்லியிருந்தா, ஓ காட், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை!”

பல்லை காட்டி சிரித்து கொண்டிருந்த அக்காள் மகளிடம் வந்த வெண்பாவை,
“சித்தப்பா பாவம் நிம்மதியா இருந்தார், அங்கேயும் போக போறியா வெண்பா? சரி பத்திரமா போயிட்டு வா”
பொற்பாவை பேச்சை ரசிக்கும் கூட்டம் அதையும் ரசித்து சிரித்தது…
“சரி டீ பெரிய மனுஷி. எங்க அக்காவை உங்க பாட்டிகிட்ட இருந்து பத்திரமா பார்த்துக்கோ!”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ அந்த மேக் அப் கிட்டை வாங்கிட்டு வர மறந்திடாதே”

விமானத்தில் ஏறி அமர்ந்தவள் , இன்னும் சில மணி நேரத்தில் விழியனை நேரில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷ கனவிலே தன் பயணத்தை தொடங்கினாள்.

அடுத்த நாள் அதிகாலையில் பிரகாஷுக்கு சாரதியிடமிருந்து போன் வந்தது.
“தம்பி, சென்னை வரேன் ஒரு வேலை விஷயமா. உங்க முகவரி அனுப்புங்க. உங்களையும் ரதியையும் அப்படியே பார்க்க வரேன்”
தூக்க கலக்கத்தில் போனை எடுத்தவனுக்கு அவர் சொன்னது உடனே விளங்கவில்லை.
“சரிங்க, இப்ப அனுப்புறேன்” என்றபடி போனை வைத்தவன் போன முறை சாரதி பேசுகையில் ரதி அவனுடன் வந்து இருப்பதாக அவரிடம் பொய் உறைத்த கதை நினைவுக்கு வந்தது…இப்போது தான் கோவையில் கிளம்புகிறார் என்றால் இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில் இங்கிருப்பார்…தனியாக சமாளிக்க முடியுமா?ம்ம்ஹும்!

ரதிக்கு போன் செய்தான், எடுக்கவில்லை. இவனும் விடாது பல முறை அழைக்க, எப்போதும் கேட்கும் அதே எரிச்சல் குரலில் பேசினாள், இப்போது தூக்க கலக்கத்தில்!
“எத்தனை தடவை கட் பண்ணேன் , எதுக்கு இப்ப டிஸ்டர்ப் பண்றே?”
‘நீ தான் என் வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்றே!’
நினைத்ததை பேச முடியாது!
“ரதி , வி ஆர் இன் டிரபில்.உங்க சாரதி மாமா நம்ம ரெண்டு பேரையும் பார்க்க வீட்டுக்கு வராராம்.இப்ப தான் போன் செய்தார்.”
“அதுக்கு”
“உனக்கு புரியுதா ? இல்லையா? நீயும் நானும் ஒரே வீட்டில் வாழ்ந்திட்டு இருக்கோம்னு நினைச்சிட்டு இருக்கார், வந்து பார்த்தா தெரிஞ்சிடும்…”
“அவர் பார்த்தா என்ன? எனக்கு யார் கிட்டையும் பயம் கிடையாது. அவர் கிட்ட இப்படி பொய் சொன்னது நீ தானே?என்னை கேட்டா சொன்னே? நீயே சமாளி” பட்டென்று போனை வைத்துவிட்டாள்.

பாதகி!

‘இவளுக்கு கொஞ்சமேனும் என் மீது அக்கறை இருக்கிறதா? அவளை ஒரு இக்கட்டில் இருந்து காத்தமைக்கு என்னை இப்படி மாட்டி வைத்துவிட்டாளே! எப்படி அவரிடம் சமாளிக்க போகிறேன்!’
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Nice update
Venbha ku epdi visayam trinjada
Inda madhi pulla um matter H suthama . Aranduduchi
Viliyan solliduvano
Aavaludan waiting dear
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,535
Unmaiyil romba kevalamana pen.prakash ennathan parantha manam udaivan endralum yetho oru samayathil solli kattum padi irukkum ival nadavadikkai.melum melum tharam irangi pogindral.
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Why are you created such a bad charater????..but..stereo type story ah illama different ah irukku..good try.??
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice update.. Epadi o ippathikki venba safe a London poi serinthuta.. Enna mathiri ana pen intha rathi.. Suyabuthi illa sollarathum ketkarathilla..
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
அடங்காபிடாரிய அடக்க பிரகாஷை ஏதாவது மாத்தி யோசிக்க சொல்லுங்கப்பா.படிக்கிறவங்களுக்கு பிரஷர் ஏறுது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top