• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
“ரதிக்காக ஒருத்தர் உருகுகிறாரா. அவர் ரொம்ப நல்லா இருக்கணும்!அவ வாயை திறக்காத வரைக்கும் ரொம்ப நல்லது வெண்பா, ஃபீல் பண்ணாதே! என் கிட்ட அவ பேசின பேச்சுக்கு தான் இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முட்டிட்டு நிக்கிது பார்த்துக்கோ”

ரதி வெண்பாவின் வீட்டின் அருகே குடி வருகிறேன் என்று சொன்ன விஷயம் மறந்து போனது இருவருக்கும். மதிவதனிக்கு அது நினைவில் வரும்போது காலம் கடந்து போயிருக்கும்.

மதிவதனியின் பெற்றோரை அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது வெண்பாவுக்கு…பிரசாத் அன்பாய் வரவேற்க, மோகனாவோ கவலையில் இருந்தார்.
“எப்படி தான் இந்த பொண்ணு அங்க தனியா சமாளிக்க போகுதோ வெண்பா, நீ அங்க இருக்கிற வரை கொஞ்சம் இவளையும் பார்த்துக்கோ மா”
மதிவதனிக்கு கடுப்படித்தது,
“மா, அவளுக்கும் அங்க எல்லாம் புதுசு தான். ஏன் இப்படி புலம்புறீங்க? அக்கா சமாளிச்சிட்டா இல்லையா, அதை போல் நானும் பார்த்துப்பேன்”
தன் அன்னையை கட்டிக்கொண்டு அவள் சொல்ல அப்போதும் மோகனாவின் முகத்தில் தெளிவில்லை…
“நீங்க கவலை படாதீங்க ஆன்டி. நாங்க ரெண்டு பேரும் சமாளிச்சிடுவோம்! அதான் இப்ப ஸ்கைப், வீடியோ கால் எல்லாம் இருக்கே, ஏதாவதுன்ன உங்களையும் கேட்டுக்குறோம்”
தன் அன்னையிடம் இந்த கரிசன பேச்சு இறாது வெண்பாவுக்கு, ஆனால் தோழியின் அன்னையிடம் தானாகவே வந்தது!


ஒரு வழியாய் அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது!
ரதி ஏர்போர்ட் வருகிறேன் என்றிருந்தாள், ஆனால் அதை அறிந்து கொண்ட பிரகாஷ் அவளுக்கு அன்று வேண்டுமென்றே ஏகப்பட்ட மீட்டிங்கை செட்டப் செய்து வைத்திருந்தான்… கடைசி நிமிடம் வரை வேலைகள் இருக்க கிளம்ப முடியாமல் போயிற்று! தொலைபேசியில் வழியனுப்பி வைத்தாள் வெண்பாவை!



சபாபதி, இலக்கியன் , தமிழ் , பொற்பாவை , ரேணுகா என்று வெண்பாவின் பக்கம் வந்த ஆட்களும், மதிவதனியின் பெற்றோரும் சேர்ந்து தங்கள் வீட்டு பெண்களை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தனர்! அத்தனை வாய் பேசிய மதிவதனி, கிளம்பும் நேரம் தன் தாயை கட்டிக் கொண்டு அழுதாள். இந்த புதிய கூட்டணியை பிரசாத் பாவம் போல் பார்த்துக் கொண்டு நின்றார்.
“வதனி குட்டி , இப்படி ஏர்போர்டுக்கு வரும் போதெல்லாம் அழணும்னு ஏதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா மா?”
நேரம் காலம் தெரியாமல் மகளை சீண்டியவரை அவள் கண்டுகொள்ள கூட இல்லை.அன்னையை கட்டிக்கொண்டு நின்றாள். வெண்பா எல்லாவற்றியும் வேடிக்கை பார்த்த படி நிற்க, பொற்பாவை இலக்கியனிடம்,
“நம்ம ஆளு எப்படி கன் மாதிரி அசராம நிக்கிறா பார்த்தியா மாமா? எல்லாம் தாத்தா வளர்ப்பு. டிஎம்டி கம்பி மாதிரி வளர்த்து வச்சியிருக்கார்.எங்க மம்மியை இப்படி தனியா போக சொல்லியிருந்தா, ஓ காட், என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை!”


பல்லை காட்டி சிரித்து கொண்டிருந்த அக்காள் மகளிடம் வந்த வெண்பாவை,
“சித்தப்பா பாவம் நிம்மதியா இருந்தார், அங்கேயும் போக போறியா வெண்பா? சரி பத்திரமா போயிட்டு வா”
பொற்பாவை பேச்சை ரசிக்கும் கூட்டம் அதையும் ரசித்து சிரித்தது…
“சரி டீ பெரிய மனுஷி. எங்க அக்காவை உங்க பாட்டிகிட்ட இருந்து பத்திரமா பார்த்துக்கோ!”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ அந்த மேக் அப் கிட்டை வாங்கிட்டு வர மறந்திடாதே”


விமானத்தில் ஏறி அமர்ந்தவள் , இன்னும் சில மணி நேரத்தில் விழியனை நேரில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷ கனவிலே தன் பயணத்தை தொடங்கினாள்.

அடுத்த நாள் அதிகாலையில் பிரகாஷுக்கு சாரதியிடமிருந்து போன் வந்தது.
“தம்பி, சென்னை வரேன் ஒரு வேலை விஷயமா. உங்க முகவரி அனுப்புங்க. உங்களையும் ரதியையும் அப்படியே பார்க்க வரேன்”
தூக்க கலக்கத்தில் போனை எடுத்தவனுக்கு அவர் சொன்னது உடனே விளங்கவில்லை.
“சரிங்க, இப்ப அனுப்புறேன்” என்றபடி போனை வைத்தவன் போன முறை சாரதி பேசுகையில் ரதி அவனுடன் வந்து இருப்பதாக அவரிடம் பொய் உறைத்த கதை நினைவுக்கு வந்தது…இப்போது தான் கோவையில் கிளம்புகிறார் என்றால் இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில் இங்கிருப்பார்…தனியாக சமாளிக்க முடியுமா?ம்ம்ஹும்!


ரதிக்கு போன் செய்தான், எடுக்கவில்லை. இவனும் விடாது பல முறை அழைக்க, எப்போதும் கேட்கும் அதே எரிச்சல் குரலில் பேசினாள், இப்போது தூக்க கலக்கத்தில்!
“எத்தனை தடவை கட் பண்ணேன் , எதுக்கு இப்ப டிஸ்டர்ப் பண்றே?”
‘நீ தான் என் வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்றே!’
நினைத்ததை பேச முடியாது!
“ரதி , வி ஆர் இன் டிரபில்.உங்க சாரதி மாமா நம்ம ரெண்டு பேரையும் பார்க்க வீட்டுக்கு வராராம்.இப்ப தான் போன் செய்தார்.”
“அதுக்கு”
“உனக்கு புரியுதா ? இல்லையா? நீயும் நானும் ஒரே வீட்டில் வாழ்ந்திட்டு இருக்கோம்னு நினைச்சிட்டு இருக்கார், வந்து பார்த்தா தெரிஞ்சிடும்…”
“அவர் பார்த்தா என்ன? எனக்கு யார் கிட்டையும் பயம் கிடையாது. அவர் கிட்ட இப்படி பொய் சொன்னது நீ தானே?என்னை கேட்டா சொன்னே? நீயே சமாளி” பட்டென்று போனை வைத்துவிட்டாள்.


பாதகி!

‘இவளுக்கு கொஞ்சமேனும் என் மீது அக்கறை இருக்கிறதா? அவளை ஒரு இக்கட்டில் இருந்து காத்தமைக்கு என்னை இப்படி மாட்டி வைத்துவிட்டாளே! எப்படி அவரிடம் சமாளிக்க போகிறேன்!’
enna seirathu ... ipdi oruthiya kalyanam panni
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top