• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
28

ஒரு பெண்ணின் மனதில் உள்ளதை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாய் பேச முயலும் குடும்பங்கள் எந்த நாட்டிலும் மிக மிக குறைவு. சபாபதி தம்பதியினர் ஏற்கனவே தங்கள் மூத்த மகளின் வாழ்க்கையில் சில இன்னல்கலை கண்டிருக்கின்றனர். அதனால் ஆதரவு பேச்சு அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.வெண்பாவும் தமிழை போல் எல்லா பிரச்சனையும் சமாளித்து கொண்டு சென்றுவிடுவாள் என்று எண்ணியிருந்தனர். மற்றொன்று வெண்பாவை விட விழியனை அதிகம் நம்பினர்.அவனை ஒரு நாளும் தவறாக நினைக்க அவர்களால் முடியவில்லை.ஆனால் இப்போது அந்த பிள்ளைகளின் வாழ்வில் நடப்பது எதுவும் சரியாக படவில்லை.
வெண்பா இத்தனை சீக்கிரத்தில் ஒரு பிரச்சனையுடன் வருவாள் என்று அவள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை.அதுவும் போன மாதம் வரைக்கும்
மகிழ்ச்சியாக தன் கணவனுடன் லண்டனில் இருந்துவிட்டு வந்த பெண் திடீரென்று இப்படி ஒதுங்குவது என்றால்!? பல முறை அவளிடம் கேட்டு பார்த்தும் பொய் சொல்லிவிட்டான் என்ற ஒற்றை வார்த்தையை தவிர ஒன்றும் வாங்க முடியவில்லை.
தமிழும் வந்திருந்தாள் அங்கு,எப்படியாவது தங்கையை பேசி சரிகட்டிவிடலாம் என்ற ஆசையில்.பொற்பாவையும் பள்ளி விடுமுறை என்பதால் உடன் இருந்தாள்! அக்காளிடம் கூட எதுவும் சொல்லவில்லை வெண்பா.
சுற்றியுள்ள அனைவருக்கும் பிடித்தமில்லாததை போல் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை முடிவெடுப்பது லேசு பட்ட காரியம் இல்லையே!தன் குடும்பத்தினர் தன்னை சூழ இருந்தாலும்,வெண்பா மனதளவில் தனிமையில் கரைந்துக் கொண்டிருந்தாள். அவன் பக்கம் என்ன சொல்ல வருகிறான் என்பதை கேட்க கூட இல்லையே!
‘ஆமா கேட்டாலும் ஏதாவது பொய் சொல்வான்! அதான் சொன்னானே இரண்டு பேருக்கும் ஒத்து வரலையாம்!’ சந்தேகத்தை தீர்த்து வைக்க சொன்னது போல் இல்லை அவன் சொன்னது! மேலும் சந்தேகத்தை கிளப்பிவிட்டிருந்தது அவனின் பேச்சு! ‘பிரண்டுன்னா எந்த அளவுக்கு?’
‘ஆனா ரதி, அவன் கல்யாணம் பண்ண மாட்டேங்கிறான்னு தானே சொன்னா?’
குழப்பத்தில் உளன்று கொண்டிருக்க , மதி அழைத்தாள்…
வெண்பா ஊர் திரும்பிய பிறகு பல முறை அழைத்துவிட்டாள்.வெண்பா அவளின் அழைப்பை எடுக்கவே இல்லை.

இப்போது அவள் பேச,மதி தான் ரதியை பற்றி மதன் மூலம் அறிந்தவற்றை வெண்பாவிடம் சொல்ல முயன்றாள். வெண்பாவுக்கு தான் கிரக நிலை ஆயிற்றே. தோழி சொன்ன எதையும் நம்பவில்லை. அவள் மறுபடியும் எதையோ விளக்கமாய் சொல்ல ஆரம்பிக்க, கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆத்திரம் அத்தனையும் மதியின் மீது கொட்டினாள்.
“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? எப்போ பார்த்தாலும் என்ன விழியனுக்கு வக்காலத்து வாங்குறே?”
அவள் கேட்ட தொணியில் வாயை முழுவதுமாய் மூடிக் கொண்டாள் மதி.
எங்கேடும் கெட்டு போ என்று அவள் தோழியை விட முடியவில்லை.கிடைத்த இனிய வாழ்க்கையை வீணாக்கி கொள்ள கூடாதே என்ற பதட்டம் மட்டுமே!
ஆனால் இப்போது சொல்வது எதுவும் இவள் மண்டையில் ஏறாது…
“சரி வெண்பா நான் வைக்கிறேன்” சரண்டரே துணை என்று போனை வைத்துவிட்டாள் மதிவதனி!
கெட்ட நேரம் வந்தால் நல்லது சொல்கிறவர்கள் கூட எதிரியாக தெரிவார்களாம், வெண்பா விஷயத்தில் இது உண்மை!யாரும் அவள் நினைப்பை மாற்றமுடியவில்லை. அவள் எண்ணத்தை திசை திருப்ப வேண்டும் என்று நினைத்த ஆண்டவன் அவளுக்காக தமிழ், மதி, அவள் பெற்றோர் எல்லாரையும் தூது அனுப்ப எதுவும் உபயோகப்படவில்லை. கடைசி முயற்சியாய் அவளுக்காக இன்னுமொரு குட்டி ஜீவனை அனுப்பிவைத்தார். அது யாருக்கும் இன்னும் தன் வரவை தெரிவிக்காமல் சமர்த்தாக வளர்ந்து கொண்டிருந்தது.

மதி சொன்னதை யோசித்து கொண்டிருந்த நொடி வெண்பாவுக்கு ஒரு புது நம்பரிலிருந்து வந்தது, ஒரு புகைப்படம்! அதில் ரதி விழியனை கட்டிக் கொண்டிருந்தாள், அவனும் அவளை பற்றியிருந்தான்.
நம்ப முடியாமல் அதை மறுபடி மறுபடி பார்த்தாள்… சந்தேகமே இல்லை. இவர்கள் கண்டிப்பாக காதலித்தவர்களாக தான் இருக்க வேண்டும்,ரதி சொன்னது உண்மைதானா?!அவனை நம்பியிருக்கலாமோ என்று சற்றுமுன் தோன்றிய நினைப்பு இப்போது முலையில் வெட்டி எறியபட்டுவிட்டது!

அன்று சபாபதி விழியனை அழைத்திருந்தார்.
“என்ன தான் விழியா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ள? நீயும் அவளை வந்து கூப்பிட மாட்ற ? அவளும் எப்போவும் தனியா அழுதிட்டு இருக்கா!”
தன் மாமன் மனம் என்ன பாடு படும்? எப்படி அவர்களை மகிழ வைக்க வேண்டும் என்றிருந்தேன்… எல்லாவற்றையும் கெடுத்து விட்டாள் அந்த பாதகி!

அவரிடம் தான் நேரில் வந்து பேசுகிறேன் என்று சமாளிக்க மட்டுமே முடிந்தது! விழியன் அன்று அவள் மொபைலுக்கு பல முறை தொடர்பு கொள்ள அவள் எடுக்கவே இல்லை…பதிலுக்கு அவளுக்கு வந்த அந்த படத்தை இவனுக்கும் அனுப்பி வைத்தாள். ஒன்றுமே புரியவில்லை விழியனுக்கு. தன்னிடம் நயமாக சண்டை பிடித்து அந்த ரதி சாதித்துக் கொண்டது இதுதான் என்பது மெதுவாய் புரிந்தது. என் வாழ்க்கையை குழி தோண்டி புகைக்கவே இருக்கிறாள் அந்த ரதி. இதற்கு மேலும் இவளை சும்மா விடக் கூடாது!
வாழ்க்கையில் உணவே கிடைக்காதவனுக்கு பழைய சோறு கூட அமிர்தம். எல்லா நேரமும் நினைத்து பார்க்காத அளவுக்கு உணவு கிடைப்பவனுக்கு உப்பு கம்மி, காரம் இல்லை என்பது கூட பிரச்சனை.
ரதிமீனா தான் இதில் எந்த பிரிவு என்பதை நினைத்து பார்ப்பாளா? வேண்டாம் என்று ஒதுங்கி போன் ஒருவனுக்காக தன் மீது உயிரையே வைத்திருக்கும் இன்னொருவனை எத்தனை உதாசினப்படுத்துகிறாள்!

வெறியுடன் அவள் இருப்பிடத்துக்கு சென்றான் விழியன்.பிரகாஷ் தான் கதவை திறந்தது.அவள் இருக்கும் இடத்தில் எப்படி இவன் என்று எண்ணிபார்க்கும் நிலையில் எல்லாம் விழியன் இல்லை!
வீட்டினுள் வந்தவன்,
“ரதி…ஏய் ரதிமீனா” என்று அலற, இவன் குரலை கேட்டு தன் அறையில் இருந்து வெளிப்பட்டாள் ரதி! பிரகாஷ் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தன் முன் நடக்க போவதை வேடிக்கை பார்க்க போகும் பார்வையாளனாய் மாறிவிட்டான். விழியன் தன் கண்களை சந்தித்தவளை,
“உன்னை பார்த்த நாளில் இருந்து நீ ஒரு நல்ல பொண்ணுன்னு நினைச்சேன், அப்புறம் எனக்கு ஒரு நல்ல பிரண்டா நினைச்சேன்! அப்படி எதுவுமே இல்லைன்னு நிருபிச்சிட்டே ரதி!”
“ஏன் டீ? நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்? உன்னை ஃபிரண்டா தானே நினைச்சேன், நீ என்னை அப்படி கூட நினைக்கலையே? இதில் காதலனா நீ நினைச்ச நினைப்பு மட்டும் உண்மையா இருக்குமா?”
“வெண்பா கிட்ட ஏன் டீ இப்படி நாடகம் ஆடின? அவ இல்லாம என்னால் வாழ முடியாது, அது தெரியுமா உனக்கு!”
“இனி இதையெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? நான் உன்னை தோழியா நினைச்சா மட்டும் போதுமா? நீ என் மனசை பத்தி கொஞ்சமும் கவலை படலையே! நான் விருப்பமில்லைன்னு சொன்ன பிறகும் என் வாழ்க்கையை நிம்மதியில்லாம செய்றியே! பரவாயில்லை ரதி. உனக்கு நான் தானே வேணும், என் மனசு தேவையில்லை”
“நீ சொன்ன மாதிரி நீ ஜெயிச்சிட்டே ரதி…சந்தோஷம் தானே!”
மென்னகை சிந்தினாள் ரதி… தன் முயற்சி இத்தனை சீக்கிரம் பலனளிக்கும் என்று அவள் நினைத்தே பார்க்கவில்லை. முன்னமே இதனை செய்திருக்கலாமோ!
“நான் தோத்துட்டேன் ரதி. ஒரு நண்பனா உன் கிட்ட, ஒரு புருஷனா என் வெண்பா கிட்ட. ம்ம்ச்… பரவாயில்லை இப்ப உனக்கு உபயோகப்படுறேனா பாரு.வா போலாம்”
இவன் நிஜமாலுமே என்னை அழைக்கிறானா?

“ஏன் நிக்கிற ? கிளம்பு”
விழியன் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல,
பிரகாஷ் அவள் அறையில் இருந்து அவளது பையை கொண்டு வந்து வைத்தான்.விழியன் தன்னை கேவலமாய் நினைத்திருப்பான் என்பது தெரியும்! ஆனாலும் இந்த வாய்ப்பை விட அவன் நினைக்கவில்லை…ரதியால் இப்போது நடப்பதை நம்ப முடியவில்லை.அவளும் தன் பங்குக்கு தன் அறைக்குள் சென்று தன் லேப்டாப் பேகை எடுத்துக் கொண்டு வந்தாள்.
எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அவள் இப்படி உடனே தயாரானதை பார்த்துக் கொண்டு நின்ற விழியன், தாங்க மாட்டாது,
“வெரி குட் ரதி ! இப்படி தான் இருக்கணும்! யாரை பத்தியும் எதை பத்தியும் கவலை படக் கூடாது...நினைச்சது நடக்குதா , அதுதான் நமக்கு முக்கியம், இல்ல?”
அவன் பேசியதில் வித்தியாசத்தை உணர்ந்தாள்!
“நீ ரொம்ப கிரேட் ரதி. உன்னை சுத்தியிருக்கும் எல்லாரையும் அழ வைக்கிற! முதலில் உன் அப்பா, இப்ப நான்! இனி யாரோ!”
விழியன் தன் கலங்கிய கண்களை அவளுக்கு எதிர்புறம் திரும்பி துடைத்துக் கொண்டான்…
அவன் சொன்ன நொடி அவளின் தந்தை அவள் கனவில் வந்து அழுதது நியாபகம் வந்தது. இவன் என்ன சொல்கிறான்!?
அவளை யோசிக்க விடாத விழியன்,
“ஏன் இன்னும் நிக்கிறே? போகலாம் வா…” அவள் எண்ணப்போக்கை அறியாமல் சொன்னான்.

பிரகாஷ் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றான். ரதியின் மனசை விழியனின் வார்த்தைகள் கூனி குறுக வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“இதெல்லாம் எதுக்கு நான் உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்? உனக்கு நான், இல்லை என் உடம்பு வேணும் அவ்வளவு தானே? ஐயம் ரெடி நவ்!வா எங்க வீட்டுக்கு போகலாம். என் மனசை கொன்னுட்ட, ஆனா என் உடம்பு இன்னும் அப்படியே தான் இருக்கு…”

அவள் கை பற்றி விழியன் இழுக்க முதன் முதலாய் மிரண்டு போனாள் ரதி…
“விழியன் கையை விடு”
“எதுக்கு விடணும்? இதுக்கு தானே நீ எல்லாத்தையும் செய்தே? உன் கிட்ட பேச எனக்கு நேரம் இல்லை… கிளம்பு என் கூட”
அவன் அவளின் கரம் பற்றி இழுக்க, அவனிடமிருந்து பின் வாங்கினாள்.
“வா ரதி, எனக்கு நேரமாகுது. வீட்டுக்கு போய் நிறைய வேலை இருக்குல்ல!”
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அவன் சொன்ன தொணியில் தலை குனிந்தாள்.அவளுக்கு இதையெல்லாம் இப்படி வெளிப்படையாய் விழியனின் வாயால் கேட்க நிஜமாலுமே அசிங்கமாய் இருந்தது. அவன் கையை தன்னிடமிருந்து பிரித்தவள்,
“நீ…நீ முதலில் போ விழியன். நான் அப்புறமா வரேன்”
அவள் கால்கள் நகர மறுத்தன. என்னவோ எதுவோ அவளை தடுத்தது.
அவன் நினைத்தது போல் இப்போது எல்லாமே நடந்தாலும் அதை தாமதபடுத்திக் கொண்டிருந்தாள். விழியனை இப்படி அழ வைக்க வேண்டுமா? நான் மனதார காதலித்தவன் இப்படி வருத்தப்பட்டு தான் ஆக வேண்டுமா?’
முதல் முறையாய் தப்பு செய்கிறேனோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது! ரதிக்கு எல்லா பக்கமும் நெருக்கி விட்டது போல் இருந்தது…இத்தனை நாளும் இல்லாத ஏதோ…தன்னை குற்றவாளி போல் உணர்ந்தாள்.
அந்த இடத்தில் மயான அமைதி, அதை கலைப்பதை போல்,
“விழியன் நீ கிளம்பு” என்றாள்.
“நீ இல்லாம நான் போறதா இல்லை ரதி”
பிரகாஷை நிமிர்ந்து இவள் பார்க்க , அவன் இதில் எந்த சமந்தமும் இல்லை என்பதாக மறுபார்வை பார்த்தான்.
“விழியன் நீ போ, நான் வரேன். எனக்கு உன் வீடு தெரியும்”

அவள் குழப்ப முகத்தை பார்த்தவன்.
“எப்போ வேணும்னாலும் வா ரதி. உனக்காக என் வீட்டுக் கதவு எப்போதும் திறந்து இருக்கும்”
முகத்தை அத்தனை உக்கிரமாக வைத்துக் கொண்டு இவ்வாறாக சொல்லிவிட்டு எழுந்தவன் மட மடவென்று அந்த இடத்தை விட்டு போய்விட்டான்.
போகிறவனை சற்று நேரம் பார்த்திருந்தவள் திரும்பி பிரகாஷின் பார்வையை சந்திக்க, அத்தனை கேவலமாக அவளை ஒரு அற்ப புழு போல் பார்த்தான்!பிரகாஷின் பார்வையில் முன்பு அவள் எப்போதும் பார்த்திருக்கும் கனிவோ காதலோ எதுவும் இப்போது அந்த கண்ணில் இல்லை.
சட்டென்று என்ன தோன்றியதொ, அவள் அறைக்குள் திரும்பி போய் கதவடைத்துக் கொண்டாள் ரதிமீனா. அவளுக்கு இப்போது தனிமை தேவைப்பட்டது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அலச வேண்டியிருந்தது!
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
எது நடந்தாலும் உறவுகளின் மீது நம்பிக்கை வேண்டாம் வெண்பா மாதிரி சட்டென்று முடிவெடுத்தால் ரதி மாதிரி பெண்கள் ஜெயிக்கதான் செய்வார்கள்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
rathiyoda nilamai ivalo kevalama aayituche ini avale unmaiyai venbavitam solvala........:unsure::unsure::unsure:nice epi sis:):):):):)venba sariyana avasara kudukai
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
இனி யோசித்து என்ன பலன்
நல்ல நட்பு அன்பான தந்தையின் உறவு காதல் கணவனின் அன்பு இனி இழந்தாய்சு
விழியன் இப்படி அதிரடி செயலால் நல்லது நடந்தால் சரி
வெண்பா ஏன் இப்படி முட்டாளாக தன் வாழ்க்கையை பழக்கிறாள்
அடுத்த அத்தியாயம் நாளையே போடுங்கள்
தினமும் அத்தியாயம் போடுவீர்களா
 




vanathi

நாட்டாமை
Joined
Feb 7, 2018
Messages
21
Reaction score
138
Location
thiruvallur
ரதி இது தேவை யா..என்ன மாதிரி வார்த்தைகள் ..உடல் ஆசை தீர மட்டுமே ....இதில் காதல் என்ற வார்த்தை வரவே இல்லை..என்ன ஒரு அவமானம்? இனி அவள் மனம் திருந்தி வாழ வேண்டும்..அப்பவும் அந்த வார்த்தை அவளால் மறக்க முடியும் மா?? பிரகாஷ் முகத்தில் அவள் எப்படி விழிக்க முடியும்??... இனி எல்லாம் சுப முடிவு தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top