• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
வணக்கம் மக்களே,
ஜூன் 14 தான் தேடல் போட்டிக்கான கடைசி தினம்.. அதுக்குள்ள கதையை முடிக்கணும். அவசரமா எபிஸ் போடுறேன். படிச்சு பார்த்திட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க...

29

“ரதி உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்! இப்படி ஒரு பாவச் செயலை செய்ய எப்படி மா உனக்கு தோணுது! அந்த விழியன் பையன் பாவம், அவனை விட்டிடு! ஒரு குருவி கூட்டை கலைக்கிறதே பாவ காரியம்னு சொல்ற மதத்தில் பிறந்திட்டு இப்படி அடுத்தவங்க குடும்பத்தை கலைக்கிறது மகா பாவம் ரதி!”
கண்களில் கண்ணீருடன் அவள் தலையை வருடிக்கொடுத்தார் சங்கர நாராயணன்.
“பிரகாஷ் நல்லவன். அவன் கூட வாழ்க்கையை வாழ பாரு. சாரதி உனக்கு ஒரு அப்பாவா எப்பவும் துணை இருப்பான். உன்னை சுற்றி இத்தனை நல்லவங்களை விட்டுச் சென்றும், இப்படி எதிர்வாத எண்ணம் எப்படி உன் மனசில்?”
குழுங்கி குழுங்கி அழுதார். “அப்பா அப்பா அழாதீங்க பா” என்றபடி தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தாள் அன்று…! இன்றும் அதை நினைத்து பார்க்க அதே அழுகை வந்தது. கனவில் சங்கர நாராயணன் சொன்னது இப்போதும் காதில் எதிரொலித்தது…
தன்னை ஆசையாய் பெற்று வளர்த்த அவரை அவர் இறந்த பின்பும் இப்படி சோதிக்க தான் வேண்டுமா?விழியன் சொன்னது சரி தானே! அவளை சுற்றி அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கிறாளே!
ரதி அறையில் அடைந்து கொண்டு அந்த கனவையும் , சற்று முன் நடந்தவைகளை யோசித்துக் கொண்டிருந்தாள். அதிகம் இதை பற்றி யோசிக்க தலை வலிப்பதை போல் இருந்தது, அப்படியே தரையில் படுத்தவள் உறங்கி போனாள்.அறைக்குள் சென்றவள் அதன் பின் எந்த சத்தமுமின்றி இருக்கவும், பிரகாஷ் சந்தேகமாய் கதவை தட்டி பார்ர்தான். எந்த பதிலும் இல்லாது என்னவோ ஏதோ என்று அறைக்குள் வந்தான்.
அவள் இங்கு வந்த நாள் முதல் அவன் வந்திடாத அறை அது. மின்விசிறி கூட ஓடாமல், அத்தனை புழுக்கத்தில் தரையில் படுத்திருந்தாள். ஊரில் எல்லார் நிம்மதியும் கெடுத்திட்டு என்ன செய்றா? அவனுக்கு எரிச்சலின் அளவு இன்னமும் குறையவில்லை! ‘ரதி’ என்றழைத்தான், அவளிடம் அசைவே இல்லை. அவளை நெருங்கி பார்க்க, கன்னத்தில் கண்ணீர் தடங்கள்.
‘அழுதிருக்கிறாளா?இவளா?’
தூங்கிவிட்டிருந்தாள். தூங்கும் அவளை பார்த்துக் கொண்டு சற்று நேரம் அங்கு நின்றான்.இன்று விழியன் பேசிய பேச்சுக்கள் அவளையும் பாதித்ததா? அவள் மேல் இருந்த எரிச்சலின் அளவு அப்படியே இல்லை இப்போது. பாவம் தான். சிறுபிள்ளை போல் செய்த தவறின் வீரியம் புரியாது நடந்து கொண்டிருக்கிறாள். இனியாவது மாறுவாளா? அவளின் மாற்றம் மற்றுமே நன்மை பயக்கும்!
ரேணுகாவுக்கு அத்தனை வருத்தம். தன் ஒற்றை மகனின் வாழ்க்கை
இப்படி அல்லோல் பட்டுக் கொண்டிருப்பதை ஏந்த தாயால் தான் தாங்கிக் கொள்ள முடியும்? இந்த உலகத்தில் அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒருவன் அவன் தானே! மனதில் ஆயிரம் பாரம் ஏறியிருந்தாலும் அழுது கரையாமல் அழுத்தமாகவே இருந்தாள்.
“ நாம போய் வெண்பாவை கூப்பிட்டு வரலாம் விழியன். யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து தான் போகணும். அவ சொன்னா கேட்க மாட்டேங்கிறா, நீயாவது அம்மா சொல்றதை கேளு பா”
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை இந்த அளவுக்கு கூட அவளால் நம்ப முடியவில்லையா? ஒரு வார்த்தை கேட்க கூட அவள் முனையவில்லை.அவன் போன் செய்தாலும் எடுப்பதில்லை. இப்போதும் நானே இறங்கி போகத்தான் வேண்டுமா?
எப்போதும் போல் ரேணுகா சொன்னதை சாதித்தாள்.அன்றும் பேசி பேசி அவள் தான் மகனை கிளப்பியது! விழியன் ரேணுகாவுடன் திருச்சிக்கு பயணப்பட்டு கொண்டிருந்தான். அலுவலகத்தில் பல வேலைகள். அவர்கள் எந்த காரியத்துக்காக வெளிநாடு அனுப்பினார்களோ அதனை சரியாய் முடிக்காமல் லீவ் கேட்க முடியாது. அதன்படி இந்த பிரச்சனைகளின் ஊடே தன் பணியையும் முடித்தவன் அடுத்த ஒரு வாரத்திற்கு லீவும் போட்டு விட்டு இப்போது தன் காரில் பயணப் பட்டுக் கொண்டிருந்தான்.
தன் கண்வனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் வெண்பா. ‘எதுக்கு அவனையே நினைக்கிறேன்?!’
அதை சிரமபட்டு திசை திருப்பினாலும் பயனில்லை. ம்ம்ச்… ‘அவனும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறானோ?’
‘எப்படி இன்னமும் ஏமாற்றலாம்னு திட்டம் போடுவானோ என்னவோ?’
‘எதுக்கு டா எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் கெடுத்தே? அவளுக்கு என்ன குறை? அவளையே திருமணம் செய்திருக்கலாம் தானே?’
‘அதை அவன் கிட்ட பேசினா தானெ புரியும் உனக்கு?’ மனசாட்சி எடுத்து தந்தது!எல்லார் வாயையும் அடைத்தது போல் அதனையும் அடக்கியவள்,
‘என்னை கல்யாணம் செஞ்சிட்டு அவளை ஏமாத்துறே! இப்ப நமக்குள்ள பிரச்சனைன்னு பழைய உறவை புதுப்பிக்கிறியா?’
கொஞ்சம் கூடியிருந்தாலும் முத்திபோயிருக்கும் வெண்பாவுக்கு!எத்தனை குழப்ப முடியுமோ அத்தனை சிக்கலாக்கி கொண்டிருந்தாள் அந்த பிரச்சனையை!
அவன் மாமன் வீடு வந்ததும் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மனைவியை காண சென்றான். எல்லாரும் அவனுக்கு வழிவிட்டு அவன் செயலை பார்த்தபடி நின்றனர். அவள் அறையில் சென்று பார்க்க அங்கில்லை.பின்கட்டில் சென்று அவன் பார்க்க பொற்பாவைக்கு முடி பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள்.இவனை கண்டுவிட்ட தமிழ்,
“வா விழியன்” என்க, திரும்பி அவனை பார்த்த வெண்பாவின் கண்ணில் தெரிந்தது என்னவென்பது இவனுக்கு புரியவில்லை.
தமிழ் பொற்பாவையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் இவனுக்கு எதிர் பக்கம் திரும்பிக் கொண்டாள் வெண்பா, அவனை உதாசினப்படுத்துவது போல்.
“வெண்பா”
பதிலில்லை.
“ஏன் டீ,எவளோ எதையோ சொன்னா நம்பிடுவியா!அவ்வளவுதான் நீ என் மேல் வச்சியிருக்கும் நம்பிக்கையா?
அதற்கும் மெளனமே பதில்.
“முதலில் என்னை பாரு.திரும்பு டி”
அவள் தோளை பற்றி தன்புறம் திருப்ப, அவன் கையை தட்டிவிட்டாள். அவனை முறைத்தபடி,
“அவ சொன்னதை மட்டும் நம்ப நான் என்ன லூசா? நீயும் தானே பொய் சொன்னே! நான் உங்க ரெண்டு பேர் போட்டோவையும் பார்த்து தான் முழுசா நம்பினேன்!”
கண்கள் கலங்க ஆரம்பித்தது.எதிர்மறை எண்ணம் உடலை பலகீனம் ஆக்கும் வல்லமையுடையது. மூளை சொல்வதை உடம்பு உணர்த்தும்.மூளை என்னும் எஜமானியை மனம் என்னும் வேலைக்காரன் அடிக்கடி மீறும்.வெண்பாவுக்கு இதெல்லாமே நடந்து கொண்டிருந்தது.விழியனை வேண்டாம் என்று இத்தனை நாளும் ஒதுக்கி வைத்தவளுக்கு இப்போது அவனை நேரில் காணவும் அதே போல் நினைக்க முடியவில்லை.ஆனால் அவனை மன்னிக்கவும் முடியவில்லை.
மனநிலை ஒரு நிலையாய் இல்லை வெண்பாவுக்கு. ‘மூட் ஸ்விங்’பலன்கள் தான் அவை.அவள் மிகவும் விரும்பும் அவளின் அன்னை வீடு கூட இப்போது அன்னியமாக பட்டது.உள்ளத்தில் உள்ள குழப்பமும் உடலில் திடீரென்று தோன்றிய எதேதோ மாற்றங்கள் எல்லாமும் சேர்ந்து அவளை படுத்தியெடுத்து.
“அதை பத்தி நீ என்கிட்ட கேட்க வேண்டாமா வெண்பா?”
“எதுக்கு கேட்கணும் விழியன் ? அதான் என் கண்ணால் பார்த்தேனே!”
அவன் எதுவோ சொல்ல வர ,
“உன் கிட்ட பேச இஷ்டமில்லைன்னு தானே உன் போனை எடுக்காம விட்டேன்.இப்ப எதுக்கு இப்படி நேரில் வந்து என்னை டார்சர் பண்றே?சே…”
திரும்பி வேகமாய் வீட்டினுள் செல்ல அந்த பின்கட்டு வாசல் படியில் காலை வைக்க, நிலை தடுமாறி கீழே விழப் போனாள். தலை சுற்றியதோ! முடியிருந்த தன் கண்களை திறந்து,எங்கே இருக்கிறேன் என்று அவள் பார்க்க, அவன் அவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தான்…
 




Last edited:

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
இவள் அவனிடமிருந்து விலக நினைக்க, அசைய கூட முடியவில்லை.
“என்ன ஆச்சு வெண்பா?” என்று அவன் பதற அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். தலை பாரமாய் தோன்றியது.அவள் நிதானத்திற்கு வரும் வரை அவள் தோளை பற்றியிருந்தவன்,
“வெண்பா என் மேல உள்ள கோபத்தில் உடம்பை கவனிக்காம விடாதே! பார்க்கவே என்னவோ வித்தியாசமா தெரியுறே!”
அவன் கரிசனம் உள்ளுக்குள் இதமாய் இருந்தாலும், வெளியே தன் எரிச்சல் முகத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து விலகி நின்றவள் இன்னமும் தடுமாற,
“வெண்பா உனக்கு என்ன பண்ணுது? வா டாக்டர் கிட்ட போகலாம்”
அவளுக்கு என்னென்னவோ உடல் உபாதைகள் இருந்தது தான்.ஆனால் இந்த மயக்கம் இன்றைக்கு தான். “வா மா ஹாஸ்பிட்டல் போலாம்”
‘இவன் மூலம் போவதா!’
“வேண்டாம்”என்று திரும்பியவளை தன் இரு கைகளில் ஏந்தியவன் அவள் எதிர்ப்பை சட்டை செய்யாது தன் காருக்கு தூக்கிச் சென்றான்.
“விழியன் அடாவடி செய்யாதே.என்னை கீழே விடு.சொல்றதை கேளு. எனக்கு என்னவோ போல இருக்கு…”அவள் சொன்னதை எதுவும் அவன் கேட்கவில்லை. வீட்டின் ஹால் வழியே அவன் அவளை தூக்கிக் கொண்டு போக தன் குடும்பத்தினரின் பார்வையை சந்திக்க தயங்கி கண்களை மூடிக் கொண்டாள் வெண்பா.
அவளை தன் காரின் முன் சீட்டில் அமர வைத்தவன், தன் பக்கம் வந்த ரேணுகாவிடம்,
“அம்மா அவளை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போறேன்.இப்போ வந்திடுறேன்” “டேய் விழியா அவளுக்கு என்ன டா? என்ன டா செய்தே அவளை?சொல்லிட்டு போ”
“நான் ஒண்ணும் செய்யலை மா!எனக்கும் என்னன்னு தெரியலை.வந்து சொல்றேன்”
கார் சீறிப் பாய்ந்தது.
அதிரடியாய் வந்தான். என்ன பேசினார்களோ தெரியாது , ஆனால் இப்போது மகளை தூக்கிக் கொண்டு போகிறானே என்று தோன்றியது தான் பெண்ணை பெற்றவர்களுக்கு. காரில் அவன் போகும் போது போன் செய்து விஷயம் என்னவென்று கேட்டனர், அவன் அவள் மயங்கிவிட்டாள் என்று சொல்ல, எந்த மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னதே சபாபதி தான்.
டோக்கன் எடுத்துக்கொண்டு காத்திருக்க, சிஸ்டர் வந்து சில சம்பிரதாய கேள்விகளை கேட்டாள். அந்த கேள்விக் கணைகளில் திணறிப் போனாள் வெண்பா. இவன் முன்பு வைத்து என்னவெல்லாம் கேட்கிறாள். அவளின் கடமை கூட வெண்பாவுக்கு தவறாக பட்டது.
“உங்க எல்.எம்.பி என்ன” என்று அடுத்த கேள்வி பாய, அப்போது தான் அவளுக்கும் உறைத்தது !
இருந்த குழப்பத்தில் இதை பற்றி யோசிக்க கூட இல்லை.
அவள் முழிப்பதை பார்த்தவன் “சிஸ்டர் நீங்க அடுத்த பேஷண்டுக்கு முடிச்சிட்டு வாங்களேன்” என்று அனுப்பி வைத்தவன்,
“எல்.எம்.பி ன என்னன்னு தெரியுமா தெரியாதா?” என்றான்.
அவனை முறைத்தவள், “நானும் படிச்சவ தான் விழியன், ஓவரா போறே நீ”
அவள் முறைப்பில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“சரி அப்போ சொல்லு”
யோசிக்க ஆரம்பித்தாள்.ஒன்றுமே புலப்படவில்லை.
அவன் போனில் மூழ்கியிருந்தான். இங்க நான் ஒருத்தி குழம்பிட்டு இருக்கேன், இவன் என்னடான்ன…அவள் நினைத்து முடிக்கவில்லை.
“இந்த போட்டோ பார், அன்னைக்கு சாயங்காலம் வெளியே போயிட்டு வந்ததும் வயிறு வலின்னு கஷ்டப்பட்டியே. அது தானே?”
அவன் காட்டியது லண்டனில் வைத்து எடுத்த போட்டோ!ஆமாம் அவன் சொன்னதே தான்!எதையெல்லாம் நியாபகம் வைத்திருக்கிறான்!அவளே மறந்துவிட்டதை அவன் நியாபகம் வைத்திருந்தான்.
“அன்னைக்கு தான் கடைசியா?”
தயக்கத்துடன் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
“வீட்டில் டெஸ்ட் செஞ்சு பார்த்தியா?”
அவன் கேட்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால் வாயை திறக்கவில்லை. “கேட்குறேனில்ல!”
அதற்குள் அவர்களிடம் வந்த சிஸ்டர், அதே கேள்வியை திரும்ப கேட்க,
விழியன் பதில் சொன்னான். சிஸ்டர் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த பின் அகன்றாள், ஒரு சின்ன சிரிப்பினூடே! அதன் பின் டெஸ்ட் ஸ்கேன் எல்லாம் முடித்து , கர்ப்பம் என்பதை உறுதிசெய்தார் டாக்டர்!
விழியன் இன்று காலை இருந்த மனநிலைக்கும் இப்போதைக்கும் சமந்தமே இல்லை. ஓரளவுக்கு இதுதான் விஷயம் என்று யூகித்திருந்தாலும், இப்போது மருத்துவர் மூலம் அதை கேட்டதும் மனம் துள்ளல் போட்டுக் கொண்டிருந்தது! டாக்டர் விஷயத்தை சொன்ன பின் திரும்பி தன் மனைவியின் முகத்தை ஆவளாய் பார்க்க அப்படியே அமர்ந்திருந்தாள் ஒரு துறவியை போல்.
அவர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டி,
“நீ காருக்கு போ வெண்பா, இதையெல்லாம் வாங்கிட்டு வந்திடுறேன்”
அவன் வரும் வரை காரில் அமர்ந்திருந்தவள் தன் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து தான் வாங்கி வந்திருந்த மிட்டாயில் ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். முதலில் வாயை திறக்காமல் இருந்தவள் பின் அவன் ஏக்க பார்வையை பார்த்து எதிர்பில்லாமல் வாங்கிக் கொண்டாள்…
“ஐயம் சோ ஹாப்பி வெண்பா, நமக்குன்னு ஒரு குட்டி ஜீவன் வர போகுது” அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட எந்த ரியாக்‌ஷனும் இல்லை வெண்பாவிடம். அவனுக்கு அவள் ஒதுக்கம் புரிந்தாலும், இப்போது அவன் அடைந்த இந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை…
வீட்டில் போய் விஷயத்தை சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சி. சரஸ்வதி மகளுக்கு திருஷ்டி கழித்தாள். தமிழ் தங்கைக்கு பழச்சாறு கொண்டு வந்து தர, பொற்பாவை சித்தியின் பக்கம் அமர்ந்து கொண்டு ஸ்கேன் போட்டோக்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
தன் குடும்பத்தினர் அனைவரின் சந்தோஷமும் வெண்பாவின் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்த தான் செய்தது. ஆனால்,
‘என் பிரச்சனை இன்னும் அப்படியே தானே இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
வெண்பா கொஞ்சம் மரத்த விட்டு கீழ எறங்குமா.ஓவரா பண்ற.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
வெண்பா கொஞ்சம் மரத்த விட்டு கீழ எறங்குமா.ஓவரா பண்ற.
ha ha.. avalukku innum unmai theriyadhu la ma
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis. junior varathala senior manam mattram erpatuma .......... rathi konjam manam thirunthi iukira thane sis
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
nice epi sis. junior varathala senior manam mattram erpatuma .......... rathi konjam manam thirunthi iukira thane sis
aama ma.. ethirpaarkalam...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top