• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 34-final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
வணக்கம் மக்களே, என் கதையை இத்தனை நாள் படித்து likes comments மூலம் உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.
இது தான் ஃபைனல் எபி.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

34

என்ன சொல்கிறாள்? மனதை கூறு போட்டு அறுத்துவிட்டு , தவறாக செய்தேன் என்கிறாள்?இவள் மனுஷி தானா?
‘உனக்கு எங்கே போச்சு டி புத்தி’மனசாட்சி சமையம் பார்த்து கேள்வி கேட்டது!இத்தனை எண்ணங்கள் மனதில் ஓட,இறுக்கமாய் தன் முகத்தை வைத்திருந்தாள் வெண்பா.
மறுபடியும் ரதி “வெண்பா” என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க,
“நான் உனக்கு என்ன டி பாவம் செய்தேன்?இப்படி இல்லாத பொய்யை சொல்லி என் வாழ்க்கையை கெடுத்திட்டியே ரதி! உன்னை எல்லாம் பிரண்டுன்னு நினைச்சு விழியன் மட்டும் ஏமாறலை, நானும் தான் சீரழிஞ்சிட்டேன்!ஏன் இப்படி செஞ்சே ரதி?!”
எதையோ சொல்ல வாயெடுத்தவளை கையால் தடுத்து,
“இப்போ உன்னை மன்னிச்சிட்டா நான் இழந்த சந்தோஷம் எல்லாம் திரும்ப வந்திடுமா?! ச்சே உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு” சொன்னவள் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
ரதியின் மனதை கொன்றது அவள் சொன்ன வார்த்தைகள்.அவர்கள் வாழ்க்கையை கெடுத்தே தீர வேண்டும் என்றபோது தோன்றாத குற்ற உணர்வு இப்போது அதிகமாய் தோன்றியது.
“வெண்பா…வெண்பா கொஞ்சம் நில்லு” ரதி சொன்னது எதுவும் அவள் செவிக்கு எட்டியிருந்தாலும், கேட்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை.தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் வெண்பா.
ரேணுகாவும் இவளுடன் சேர்ந்து பல முறை மருமகளை அழைத்து பார்க்க, அவள் இவர்கள் இருந்த பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ரேணுகா இதற்கு மேல் என்ன என்பதாய் செய்வதறியாது நிற்க,
“ரதி செய்தது எல்லாம் தப்பு தான்,அதுக்கு பிராயச்சித்தம் கிடையாது. ஆனா இப்ப சத்தியமா செய்த தப்பை அவ உணர்ந்திட்டா மா. நீங்க அவளை மன்னிக்கணும்”
ரதியின் கையை பற்றி ரேணுகாவிடம் மன்னிப்பு வேண்டுவதை போல் அவள் காலில் சட்டென்று விழுந்துவிட்டான் பிரகாஷ்.பெரியவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரதி செய்துவிட்ட விஷயங்கள் எவராலும் மன்னிக்க முடியாதவை என்பது தெரியும் பிரகாஷுக்கும்,கஷ்டமான காரியம் என்பதையும் அவன் அறிவான்.ஆனாலும் வெண்பாவின் தாய்மை நிலையை கண்ட பின் அவனுள் ஒரு சிறு நம்பிக்கை.வெண்பா விழியனுக்கிடையே எந்த பெரிய பிரச்சனையும் இனியும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான்.
“தம்பி எழுந்திரு பா…”
“எங்களை மன்னிச்சிடுங்க மா”
“அந்த பேச்சை விடு பா…நல்லா இருங்க இரண்டு பேரும்”
ஆசி வழங்குவதை போல அறிவுரையும் சொன்னாள்.
“பிரகாஷோட நல்லபடியா குடும்பம் நடத்துற வழியை பாரு டி ரதி”
அத்தனை நேரமும் இருந்த மனக்குமுறல் நொடியில் அகன்றுவிட்டதை போல் தோன்றியது ரேணுகாவுக்கு.இந்த ரதி இப்போவாவது வந்து உண்மையை சொன்னாலே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.மனதில் ஆயிரம் எண்ணங்கள் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும்.
வாய் இவர்களுக்கு அறிவுரை சொன்னாலும், மனம் தன் மருமகளை வசை பாடிக் கொண்டிருந்தது.
‘உனக்கு நல்லா வேணும்டி, நானும் அவனும் எத்தனை தூரம் சொன்னோம் ? நம்பத் தோன்றியதா?இதுக்கு தான் குடும்பத்தில் இருக்கிறவங்க பேச்சையும் அப்பப்ப கேட்கணும்!’
கனத்த மெளனம் அவ்விடத்தில். பிரகாஷ் அதை கலைப்பதை போல்,
“அப்போ நாங்க கிளம்புறோம் மா”
“கொஞ்சம் இருங்க” என்று உள்ளே சென்றாள் ரேணுகா. திரும்பி வருகையில் ஒரு தாம்பாளம்.அதில் பழம், பூ குங்குமம் எல்லாம் எடுத்து கொண்டு வந்தாள்.
ரேணுகா குங்குமத்தை எடுத்து ரதியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்து விட்டாள். ‘இந்த பெண்ணிற்கு வந்த நல்ல புத்தி நிலைக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு! ஆனது ஆகிப்போனது , இனியும் பகைமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது ரேணுகாவின் எண்ணம்.அவள் வயதுக்கும் அனுபவத்துக்கும் அது சாத்தியமும் ஆனது.ஆனால் வெண்பாவிடம் அதை எதிர்பார்க்க முடியாதே! அவர்கள் இருவரும் புறப்பட்டதும்,மேலே பூட்டியிருந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவிலுக்கு கிளம்பி போனாள் ரேணுகா.
வீடு போகிற வழி முழுவதும் ரதி எதுவும் பேசவில்லை. நடந்து முடிந்த விஷயங்களில் மிகவும் ரணப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது பிரகாஷுக்கு! வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அறைக்குள் தனியே முடங்கி கொண்டாள்.இருவருக்கும் இரவு உணவு தயாரித்தவன் அவள் அறை வாசலிலிருந்து பல முறை அழைத்தும் அவள் வெளி வரவில்லை.இவனே அவள் அறைக்குள் போக அங்கு அவள் கால்களை மடித்து அதில் தலை கவிழ்ந்திருந்தாள்.அந்த காட்சியே பிரகாஷின் மனதை பிசைந்தது.இப்படி ஒரு துன்பத்தில் வலிய போய் மாட்டிக் கொண்டாளே! அவள் பக்கம் முட்டி போட்டவன் அவள் தலையை ஆதரவாய் வருடி விட்டு “ரதி” என்றழைக்க,
நிமிர்ந்தவளின் கண்களில் கண்ணீர்.
“ரதி என்னம்மா?”
“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரகாஷ்.அப்பாவை பார்க்கணும் போலிருக்கு” விக்கி விக்கி அழுதாள். அவனுக்கும் அவள் நிலையை பார்க்க இப்போது கஷ்டமாக இருந்தது.
அவள் பக்கம் அமர்ந்தவன் ஒரு கையால் அவளை தன் தோளில் ஆதரவாய் சாய்த்துக் கொண்டு,
“அவர் எப்பவும் உன்னை சுற்றி தான் இருக்கார்!”
மறுகையால் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“ரதி இந்த அழுகை உனக்கு செட் ஆகவே இல்லை!சின்னபுள்ளயா நீ!”
அமைதியாய் மறுபடியும் கண்ணீர் வடித்தாள்.
“வெண்பா கிட்ட மன்னிப்பு கேட்டாலும் அவள் அனுபவிச்ச வலியை என்னால் சரி செய்ய முடியாது பிரகாஷ்.ரொம்ப வருத்தப்படுறேன்.!”
‘ஆமாம் சரிதானே’
“அப்பா கிட்ட இந்த மன்னிப்பை கூட என்னால் இப்ப கேட்க முடியலை பிரகாஷ்.என்னை பத்தி ரொம்ப கவலைபட வச்சிட்டேன் அவரை”
குலுங்கி குலுங்கி அழுதவளை தேற்ற முடியவில்லை.
அவளை தோளோடு அணைத்திருந்தவன் அவள் முதுகை ஆதரவாய் தடவி விட
“அவர் கிட்ட நீ மன்னிப்பு கேட்கணும் அவ்வளவுதானே.எனக்கு அதுக்கு ஒரு வழி தெரியும்,சொல்லவா?சொன்னா கேட்பியா?”
“என்ன சொல்லு பிரகாஷ், செய்றேன்”
கலைந்திருந்த அவள் முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு அவள் கண்களுக்குள் பார்த்தவன்,
“அவர் எப்போதும் நினைச்சது நீ சந்தோஷமா இருக்கணும்னு தான்.உங்க அப்பா ஏற்படுத்தி தந்த நம்ம வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சி செய் ரதி.அதுவே நீ அவருக்கும் செய்ற பரிகாரம்”
இருவர் பார்வையும் சந்தித்து கொண்டது. அவன் சொன்னது உண்மை தானே!ரதியின் மனம் அவன் பேச்சால் கொஞ்சம் அமைதிபட ஆரம்பித்தது!அவன் சொன்னது அத்தனையும் நிஜம்.அவன் தரும் இந்த அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும் . பழைய மாதிரி அவன் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் ரதி.அவள் மனம் இப்போது முழுவதுமாய் பிரகாஷின் வசம்.
எவ்வளவு பெரிய தவறு நடந்தாலும் அவசரப்படாமல் கோபப்படாமல் அதை ஆராயும் பொறுமை பிரகாஷிற்கு இயற்கையாகவே அமைந்து விட்டிருந்தது. அவன் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும், ரதியின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறியிருக்கும்!
வெண்பா மிகவும் சோர்ந்து போனாள், அவள் செய்தது எத்தனை பெரிய தவறு!விழியனை படுத்திய பாட்டை நினைத்தால் அவளுக்கே தன் மேல் ஆத்திரம் பொங்கியது.அவள் அறையில் அடைந்துக் கொண்டிருந்தவளின் மனமெல்லாம் ரணமாகி போயிருந்தது.யோசனையில் அந்த அறையின் குறுக்கே நடை பயில ஆரம்பித்தாள்.
வயிற்றின் அளவு கீழே இருப்பதை பார்க்க முடியாதபடி செய்திருந்தது. அங்கே தரையில் கிடத்தியிருந்த சாமான்களில் அவள் கால் இடறி விழப் போனாள். ஒருவாராய் சமாளித்து நிமிர்ந்தவளின் கண்ணில் பட்டது சற்று முன் அவளை தடுக்கி விட்ட பெட்டியிலிருந்த டைரி!
‘பெங்களூர் செல்லும் போது கூட அவனதை நியாபகமாய் எடுத்து வைத்திருந்ததை பார்த்தாளே.பின்னே இது?’
அதை கையில் எடுத்து புரட்டி பார்க்க, அவனின் பழைய டைரி என்று புரிந்தது!அதில் பல இடங்களில் இவளின் பெயரை கிறுக்கி வைத்திருந்தான்.தேதி எல்லாம் இவள் கல்லூரியில் படித்த காலம்.நெஞ்சு படபடக்க திறந்து கிடந்த அந்த அட்டை பெட்டியை பார்த்தாள்.அதில் இன்னமும் பல டைரிகள். யோசனையாய் அதை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, கையில் இருந்ததை புரட்ட ஆரம்பித்தாள். அந்த டைரியும் விழியனின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை எந்த ஒளிவு மறைவுமின்றி வெண்பாவிடம் காண்பித்துக் கொண்டிருந்தது!

‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! என்னை அவள் படுத்தும் பாட்டில் வேலையை விட்டுவிட்டு வீட்டில் கூட இருந்துவிடலாமென்று இருந்தது!’
“உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்லை! கையை விடு ரதி!”
அவள் கையைத் தட்டிவிட்டேன்!அருவருப்பாய் இருந்தது. எத்தனை நல்ல பெண் ! அவளா இப்படியெல்லாம் செய்கிறாள் ! என் மூளை அதை கிரகித்து கொள்ள மறுத்தது!
அவளை தோழி என்பதை தவிர வேற எந்த விதமாகவும் நினைக்க என்னால் முடியவில்லை.
“நான் உன்னை அப்படி நினைக்கலைன்னு தான் இவ்வளவு நேரம் சொல்லிகிட்டு இருக்கேன் ரதி! உனக்கு அதை புரிஞ்சிக்க முடியலையா?”
“அது எப்படி நினைக்காம இருப்பே?! என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நினைக்க வைக்கிறேன்!”
“நான் சொன்னா கேட்க மாட்டியா?” மென்மையாய் அவளை கேட்க, உச்சி குளிர்ந்து போனாள்.
“நீ சொன்னா எதுனாலும் கேட்பேன் , இந்த விஷயத்தை தவிர!”

ரதியை பற்றி அவன் எழுதியிருந்த அனைத்தையும் படித்து விட்டாள். ரதியின் செயல்களை படிக்க படிக்க வெண்பாவுக்கு அவள் மேல் இன்னமும் அத்தனை ஆத்திரம்.ஆங்காங்கே இவளை பற்றியும் எழுதியிருந்தான். தன்னின் பாராமுகம் அவனை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதும் சில இடங்களில் இருந்தது. விழியன் பாவம்.எத்தனை முறை சொன்னான், தன்னை நம்பித்தான் ஆக வேண்டுமென்று.கேட்டேனா?
 
anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
தன் கைகளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.எத்தனை நேரம் இதே நிலையில் இருந்தாளோ தெரியாது. அழுதவள் கண்ணை துடைத்துக் கொண்டு விழியனுக்கு போனில் அழைக்க அவன் எடுக்கவே இல்லை. அவன் முகத்தில் இனி எப்படி விழிப்பது.காலம் முழுவதற்கும் இப்படி ஒன்றை சொல்லிக் காட்டும் படி செய்து விட்டாளே.

அவனை உடனே இப்போதே பார்க்க வேண்டும் போலிருந்தது.கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது.ரேணுகா பல முறை கீழே இருந்து அந்த அழைப்பு மணியை அடித்து விட்டாள், வெண்பா எட்டியும் பார்க்கவில்லை. இப்போதும் விடாமல் அடிக்க, அறையிலிருந்து வெளி வந்தவள்,
“அத்தை எனக்கு சாப்பாடு வேண்டாம்”என்க,
“என் பிள்ளைக்கு பசிக்கும் , இறங்கி வாடி” சொன்னது விழியனே தான்.
அவன் குரலை கேட்டதும், தான் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து படிகளில் ஓடி வந்தாள் வெண்பா!
“வெண்பா மெதுவா…விழுந்துடாதே”
அவனும் ரேணுகாவும் சொன்னது எதுவும் வழக்கம் போல் அவள் காதில் விழவில்லை.
அவனிடம் ஓடி வந்தவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.அவள் வயிற்றின் அளவு இருவரையும் ஒன்ற விடாமல் சற்று தள்ளி நிற்க வைத்தது.
“வெண்பா என்ன மா ஆச்சு ஏன் அழுறே!அம்மா என்ன மா ஆச்சு?
என்ன மா பண்ணீங்க அவளை?”பதட்டமானான்!

மகனின் கேள்விக்கு பதிலளிப்பதை போல்,
“அவ கிட்டையே கேளு டா. இவளுக்கு எப்போதும் எல்லாத்துலையும் அவசரம். இப்ப தானே வீட்டுக்கு வந்தே!விஷயத்தை அப்புறமா சொன்னாதான் என்னவாம். இன்னிக்கி இவ புலம்புறதை கேட்டு நீ தூங்கினாப்ல தான்… நான் படுக்க போறேன்.எனக்கு இப்பவே கண்ணை கட்டுது” என்று தன் அறைக்குள் போனவள் கதவடைத்துக் கொண்டாள்.
கதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டு அவள் தான் கும்பிடும் தெய்வத்துக்கு நன்றி சொன்னதை இவர்கள் இருவரும் அறியவில்லை.

தன் அத்தை கண்ணில் இருந்து மறையவும், கணவனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தவள்,
“ஐயம் சாரி விழியன். நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு.நான் உன்னை நம்பாதது தப்பு தான்”
ஏங்கி போய் இருந்தவனுக்கு பேரின்பம்.’என்ன நடக்குது இங்கே என்பது போல் அவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க,
“நீ தங்கம் விழியன்.உன்னை போய் சந்தேகப்பட்டுடேனே”என்று சொன்னதையே சொன்னாள்.
“என்ன டி ஆச்சு உனக்கு?அதுக்குள்ள என்னை நம்பிட்டியா? என்ன திடீர்னு இப்படி எல்லாம் செய்றே?”
ரதி அங்கு வந்தது,சொன்னது,அதன் பின் அவன் டைரியை படித்தது எல்லாமே சொன்னாள். சமநிலையற்ற உறவு எப்போதும் துன்பத்திற்கு வழிவகுக்கும். வெண்பா மட்டும் விழியனை முழுமையாய் நம்பியிருந்தாளானால் இத்தனை பெரிய பிரச்சனைக்கு வழியே இருந்திருக்காது.அவள் அவனிடம் நடந்த விஷயத்தை ஒப்பிக்கையில் அவன் மனதில் ஓடின இவ்வெண்ணங்கள்.
“ச்சே, உனக்கு மூளையே இல்ல டா விழியா !அந்த டைரியை முதலிலேயே எடுத்து அவள் கையில் தந்திருக்கலாம். உன்னை சொல்லி குற்றமில்லை.மூளை இல்லாதவ கூட சேர்ந்து நீயும் அப்படி ஆகிட்ட”
அவனின் கிண்டலில் மீண்டும் சிணுங்கினாள் அவள்.
செய்துவிட்ட தவறுக்கு இத்தனை எளிதாக ஒருவன் மன்னிக்க முடியாது.விழியனுக்கு வேறு வழியில்லை. தன்மானம் முக்கியமா மனைவி முக்கியமா என்ற கேள்விக்கு அவன் மனம்,மனைவி தான் என்று ரூபாய் வாங்காமல் வோட் போட்டது! அடுத்த நாளிலிருந்து அவன் பின்னோடு வால் பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருந்தாள் வெண்பா.வெண்பாவை பற்றி என்ன சொல்ல, அவள் பாதிக்க பட்டவள். அத்தை மகள் தான் என்றாலும் அவளுக்கென்று இருக்கும் உரிமையை பறித்தது போல் சிறு வயதில் விழியன் செய்த சில செயல் அவளுக்கு அவன் மேல் முழு நம்பிக்கையை உண்டாக்கவில்லை. இது யாரின் தவறு!
ரதி அவன் மேல் பழி போடவும், இவன் இப்படிபட்டவன் தானோ, இத்தனை நாள் தன்னிடம் நடித்தானோ, அதுதான் பொய் சொல்கிறானோ என்று தப்பு தப்பாகவே அவனை பற்றி எண்ண வைத்து விட்டது!அவன் மோசமானவன் என்ற முடிவே கட்டிவிட்டாள்.

விழியன் அனுபவ பட்டுவிட்டான், அத்தை மகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, பெண் தோழியிடம் எந்த வரைமுறை வைத்துக் கொள்ள வேண்டுமென்று!அவன் செய்த ஒரே நல்ல விஷயம் வெண்பா அவள் வழிக்கு விட்டு விடாமல் தன்னுடன் வைத்திருந்தது மட்டுமே!குழந்தை என்று ஒன்று வந்ததால் அது சாத்தியமும் ஆனது!
ரதி இன்று கொஞ்சமேனும் மாறினாள் என்றால்,அவளை சுற்றியிருந்த பிரகாஷ், சாரதி, இறந்தும் அவள் கூடவே இருந்த சங்கர நாராயணன் எல்லாருமே தான் காரணம். மங்காவும் அவள் பேச்சும் அவளுக்கு ஒரு சாட்டையடி!சங்கர நாராயணன் மகளுக்கு கேட்டதை தர வேண்டும், தாயில்லா மகளின் மனம் நோக கூடாது என்று பரிவு காட்டி செய்தது, அவள் பலர் மனதை நோகடிக்க வைப்பதற்கு ஒரு பாதை உருவாக்கி தந்துவிட்டது. சங்கர நாராயணனை பொறுத்த வரை அந்த இடத்தில் ஒரு தந்தையாய் தவறி விட்டார்.
மதி மதனுடனான இல்வாழ்க்கையில் நன்றாக பொருந்தி போனாள்.அவளை போல் இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனை என்றாலும் எளிதாய் சமாளிக்க முடியும். அதற்கு முக்கிய காரணம் அவள் பெற்றோரின் வளர்ப்பு. சங்கர நாரயணன் போல் கேட்டதை எல்லாம் செய்து தரவில்லை என்றாலும், மகிழ்ச்சிக்கு பொருளுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்! அதனால் அவளுக்கு எந்த நிராகரிப்புகளையும் ஏற்றுக் கொண்டு போய்விடும் பக்குவம் அமைந்து விட்டது!
அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது .ஒவ்வொன்றையும் அனுபவித்து பாடம் கற்று கொண்டு வாழ்க்கை நடத்த, நூறு வருடங்கள் கூட போதாது!வெண்பா விழியன், பிரகாஷ் ரதிமீனாவின் இல்வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துவோம்!
வாழ்க வளமுடன்!

epilogue padikka maranthudadheenga makkale... ;)
 
Last edited:

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu

Nice ending
 
Sudha Ravvi

நாட்டாமை
Joined
Mar 20, 2018
Messages
64
Reaction score
171
Location
chennai
சூப்பர் அனிதா..அழகான முடிவு....விழியன், வெண்பா வாழ்க்கை வளமுடன் இருக்க வாழ்த்தி விடை பெறுவோம்....நல்ல கருத்து அதை நீங்க சொன்ன விதமும் அருமை...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top