Kathai Ondru Aarambam epi 34-final

#85
Hai Ani Mam!

உங்க கதையதான் மூணு நாளா முழு மூச்சா பரிட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிகிட்டிருந்தேன்! செம்ம கதை! விழியனும் வெண்பாவும் என் விழிகளுக்குள்ளேயே நிற்கிறார்கள்! மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள்! பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு! அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை! அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம்! அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது! இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது! அழகான காதல் கதை! எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது! வாழ்த்துக்கள் அனி மேம்!
 

anisiva

Moderator
Author
#86
Hai Ani Mam!

உங்க கதையதான் மூணு நாளா முழு மூச்சா பரிட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிகிட்டிருந்தேன்! செம்ம கதை! விழியனும் வெண்பாவும் என் விழிகளுக்குள்ளேயே நிற்கிறார்கள்! மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள்! பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு! அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை! அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம்! அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது! இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது! அழகான காதல் கதை! எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது! வாழ்த்துக்கள் அனி மேம்!
Thanks a lot ma❤️?
 

SAROJINI

Well-known member
#89
தன் கைகளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.எத்தனை நேரம் இதே நிலையில் இருந்தாளோ தெரியாது. அழுதவள் கண்ணை துடைத்துக் கொண்டு விழியனுக்கு போனில் அழைக்க அவன் எடுக்கவே இல்லை. அவன் முகத்தில் இனி எப்படி விழிப்பது.காலம் முழுவதற்கும் இப்படி ஒன்றை சொல்லிக் காட்டும் படி செய்து விட்டாளே.

அவனை உடனே இப்போதே பார்க்க வேண்டும் போலிருந்தது.கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது.ரேணுகா பல முறை கீழே இருந்து அந்த அழைப்பு மணியை அடித்து விட்டாள், வெண்பா எட்டியும் பார்க்கவில்லை. இப்போதும் விடாமல் அடிக்க, அறையிலிருந்து வெளி வந்தவள்,
“அத்தை எனக்கு சாப்பாடு வேண்டாம்”என்க,
“என் பிள்ளைக்கு பசிக்கும் , இறங்கி வாடி” சொன்னது விழியனே தான்.
அவன் குரலை கேட்டதும், தான் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து படிகளில் ஓடி வந்தாள் வெண்பா!
“வெண்பா மெதுவா…விழுந்துடாதே”
அவனும் ரேணுகாவும் சொன்னது எதுவும் வழக்கம் போல் அவள் காதில் விழவில்லை.
அவனிடம் ஓடி வந்தவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.அவள் வயிற்றின் அளவு இருவரையும் ஒன்ற விடாமல் சற்று தள்ளி நிற்க வைத்தது.
“வெண்பா என்ன மா ஆச்சு ஏன் அழுறே!அம்மா என்ன மா ஆச்சு?
என்ன மா பண்ணீங்க அவளை?”பதட்டமானான்!


மகனின் கேள்விக்கு பதிலளிப்பதை போல்,
“அவ கிட்டையே கேளு டா. இவளுக்கு எப்போதும் எல்லாத்துலையும் அவசரம். இப்ப தானே வீட்டுக்கு வந்தே!விஷயத்தை அப்புறமா சொன்னாதான் என்னவாம். இன்னிக்கி இவ புலம்புறதை கேட்டு நீ தூங்கினாப்ல தான்… நான் படுக்க போறேன்.எனக்கு இப்பவே கண்ணை கட்டுது” என்று தன் அறைக்குள் போனவள் கதவடைத்துக் கொண்டாள்.
கதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டு அவள் தான் கும்பிடும் தெய்வத்துக்கு நன்றி சொன்னதை இவர்கள் இருவரும் அறியவில்லை.


தன் அத்தை கண்ணில் இருந்து மறையவும், கணவனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தவள்,
“ஐயம் சாரி விழியன். நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு.நான் உன்னை நம்பாதது தப்பு தான்”
ஏங்கி போய் இருந்தவனுக்கு பேரின்பம்.’என்ன நடக்குது இங்கே என்பது போல் அவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க,
“நீ தங்கம் விழியன்.உன்னை போய் சந்தேகப்பட்டுடேனே”என்று சொன்னதையே சொன்னாள்.
“என்ன டி ஆச்சு உனக்கு?அதுக்குள்ள என்னை நம்பிட்டியா? என்ன திடீர்னு இப்படி எல்லாம் செய்றே?”
ரதி அங்கு வந்தது,சொன்னது,அதன் பின் அவன் டைரியை படித்தது எல்லாமே சொன்னாள். சமநிலையற்ற உறவு எப்போதும் துன்பத்திற்கு வழிவகுக்கும். வெண்பா மட்டும் விழியனை முழுமையாய் நம்பியிருந்தாளானால் இத்தனை பெரிய பிரச்சனைக்கு வழியே இருந்திருக்காது.அவள் அவனிடம் நடந்த விஷயத்தை ஒப்பிக்கையில் அவன் மனதில் ஓடின இவ்வெண்ணங்கள்.
“ச்சே, உனக்கு மூளையே இல்ல டா விழியா !அந்த டைரியை முதலிலேயே எடுத்து அவள் கையில் தந்திருக்கலாம். உன்னை சொல்லி குற்றமில்லை.மூளை இல்லாதவ கூட சேர்ந்து நீயும் அப்படி ஆகிட்ட”
அவனின் கிண்டலில் மீண்டும் சிணுங்கினாள் அவள்.
செய்துவிட்ட தவறுக்கு இத்தனை எளிதாக ஒருவன் மன்னிக்க முடியாது.விழியனுக்கு வேறு வழியில்லை. தன்மானம் முக்கியமா மனைவி முக்கியமா என்ற கேள்விக்கு அவன் மனம்,மனைவி தான் என்று ரூபாய் வாங்காமல் வோட் போட்டது! அடுத்த நாளிலிருந்து அவன் பின்னோடு வால் பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருந்தாள் வெண்பா.வெண்பாவை பற்றி என்ன சொல்ல, அவள் பாதிக்க பட்டவள். அத்தை மகள் தான் என்றாலும் அவளுக்கென்று இருக்கும் உரிமையை பறித்தது போல் சிறு வயதில் விழியன் செய்த சில செயல் அவளுக்கு அவன் மேல் முழு நம்பிக்கையை உண்டாக்கவில்லை. இது யாரின் தவறு!
ரதி அவன் மேல் பழி போடவும், இவன் இப்படிபட்டவன் தானோ, இத்தனை நாள் தன்னிடம் நடித்தானோ, அதுதான் பொய் சொல்கிறானோ என்று தப்பு தப்பாகவே அவனை பற்றி எண்ண வைத்து விட்டது!அவன் மோசமானவன் என்ற முடிவே கட்டிவிட்டாள்.


விழியன் அனுபவ பட்டுவிட்டான், அத்தை மகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, பெண் தோழியிடம் எந்த வரைமுறை வைத்துக் கொள்ள வேண்டுமென்று!அவன் செய்த ஒரே நல்ல விஷயம் வெண்பா அவள் வழிக்கு விட்டு விடாமல் தன்னுடன் வைத்திருந்தது மட்டுமே!குழந்தை என்று ஒன்று வந்ததால் அது சாத்தியமும் ஆனது!
ரதி இன்று கொஞ்சமேனும் மாறினாள் என்றால்,அவளை சுற்றியிருந்த பிரகாஷ், சாரதி, இறந்தும் அவள் கூடவே இருந்த சங்கர நாராயணன் எல்லாருமே தான் காரணம். மங்காவும் அவள் பேச்சும் அவளுக்கு ஒரு சாட்டையடி!சங்கர நாராயணன் மகளுக்கு கேட்டதை தர வேண்டும், தாயில்லா மகளின் மனம் நோக கூடாது என்று பரிவு காட்டி செய்தது, அவள் பலர் மனதை நோகடிக்க வைப்பதற்கு ஒரு பாதை உருவாக்கி தந்துவிட்டது. சங்கர நாராயணனை பொறுத்த வரை அந்த இடத்தில் ஒரு தந்தையாய் தவறி விட்டார்.
மதி மதனுடனான இல்வாழ்க்கையில் நன்றாக பொருந்தி போனாள்.அவளை போல் இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனை என்றாலும் எளிதாய் சமாளிக்க முடியும். அதற்கு முக்கிய காரணம் அவள் பெற்றோரின் வளர்ப்பு. சங்கர நாரயணன் போல் கேட்டதை எல்லாம் செய்து தரவில்லை என்றாலும், மகிழ்ச்சிக்கு பொருளுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்! அதனால் அவளுக்கு எந்த நிராகரிப்புகளையும் ஏற்றுக் கொண்டு போய்விடும் பக்குவம் அமைந்து விட்டது!
அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது .ஒவ்வொன்றையும் அனுபவித்து பாடம் கற்று கொண்டு வாழ்க்கை நடத்த, நூறு வருடங்கள் கூட போதாது!வெண்பா விழியன், பிரகாஷ் ரதிமீனாவின் இல்வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துவோம்!
வாழ்க வளமுடன்!


epilogue padikka maranthudadheenga makkale... ;)
Sure ani ma
 

Latest updates

Latest Episodes

Top