• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen..! EPI - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்.....

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... நான் எப்பவும் சொல்லுறது தான் இப்பவும் சொல்லுறேன்... இது ஒரு ஜாலி கதை... ஜாலியா சிரிச்சிட்டே படிப்போம்... நோ சென்டிமென்ட்... வாங்க இன்னைக்கு வாத்தி என்ன முடிவெடுத்திருக்கான் என்று பாப்போம்... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே... நன்றிப்பா...

காதல் – 1௦

நித்தமும் நினைவில் நீ வேண்டும்...

நிழலாயினும் நிரந்தரமாய்ப் போகவேண்டும்...

உன் அகத்திலும் என் முகமே வேண்டும்...

உறக்கத்திலும் என் பெயரை உளற என் அருகினில் நீ வேண்டும்...

வருவாயா என்னவளே..?

இந்தர் வருகைக்காய் வீட்டு முன்னறையில் காத்திருந்தாள் மதி. இந்தருக்காகக் காத்திருந்த, நாகுவை தூங்க அனுப்பியவள் ஹால் ஷோபாவில் அமர்ந்துக் கொண்டாள். கையில் டிவி ரிமோட் படாதப்பாடுபட்டுக் கொண்டிருந்தது.

மனம் ஏதோ சிந்தனையைச் சுமந்து வெறுமையாய் இருந்தது. ஏதோ ஒரு உணர்வு மனதை பலமாகத் தாக்க அப்படியே அமர்ந்திருந்தாள்.

கண்களோ கிச்சாவின் அழைப்பை எதிர் பார்த்திருந்தது. அன்று பிறகு அவன் இன்னும் அழைக்கவே இல்லை... ஒரு கரையில் மனம் கிச்சாவை தேடினாலும், இன்னொரு கரையில் அவன் கட்டிய தாலி உறுத்தியது. அவளுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை என்று வீட்டில் எல்லாரும் கூறியிருந்தாலும், அவளால் அந்தத் தாலியை மட்டும் கழட்டவே மனம் வரவில்லை.

அவன், அன்று போனவன் இன்னும் வரவில்லை. திடீரென அவன் வந்துவிட்டால்? மனம் விரும்பிய கிச்சா? யோசிக்கவே அவளால் முடியவில்லை.

அந்த அழைப்புக்கு சொந்தக்காரன் பேசிய இரண்டு நாளில் அவள் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தான். அவனிடம் பேசிய இரண்டு நாளில் அவள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதாய்... அதே சமயம் ‘அவன் யார்?’ என்று அடையாளம் காண துடிக்கிறது மனம். திருமணத்திற்குப் பிறகான அந்த உறவை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கிச்சாவை மனம் விரும்புகிறதே!

கிச்சா அவளைத் தேடி வராமல் இருந்திருந்தால் எப்படியோ, ஆனால் இப்பொழுது சிறு வயது நினைவுகளே மனதை சுற்றி வருகிறது.

விதி ஏன் இப்படி என் வாழ்கையில் விளையாடுகிறது நொந்துக் கொண்டாள். கனவையும் உணர்த்தி, அந்தக் கனவுக்குச் சொந்தகாரனையும் கண் முன் வரவைத்து ஏன் இப்படி விளையாடுகிறான்? முதல் முறையாக வாழ்கையைப் பற்றிய பயம் எழுந்தது.

இன்னும் பத்து நாளில் முதல் பரீட்சை வருகிறது. அவளால் அதைச் சரியாகச் செய்ய முடியுமா? என்ற பயமும் எழுந்தது. மனதின் ஓரத்தில் அந்தப் போட்டோவும், அவனின் குரலும் அவளைத் துரத்தியது.

யோசனையோடு இருந்தவளை, ஹாலிங் பெல் கலைக்க, ஓடி வந்து கதவை திறந்து அவனுக்கு வழி விட்டு நின்றாள்.

“நீ இன்னுமா தூங்காம இருக்க?” கேட்டப்படியே வீட்டின் உள் நுழைந்தான் இந்தர்.

“உனக்காகத் தான் வெயிட்டிங், போ, போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” அவனிடம் உரைத்தவள் சமையலறை நோக்கி சென்றாள்.

செல்லும் அவளையே யோசனையாகப் பார்த்திருந்தான் இந்தர். ‘மதிக்குட்டி முகத்தில் எதுவோ குறையுதே?’ யோசித்தவன், தன் அறைக்குச் சென்று லேப்டாப் பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, ரெப்ரெஷ் ஆகி, ஒரு டிராக்சூட் அணிந்து டைனிங் டேபிள் நோக்கி வந்தான்.

அவனுக்குத் தோசையைப் பரிமாற, அவள் முகத்தையே பார்த்திருந்தான். “என்ன என் முகத்தையே பாக்குற? தின்னு” அவள் முறைக்க...

“என்ன ரொம்பக் கடுப்பா இருக்குற மாதிரி தெரிது?” சிரித்தப்படியே சீண்டினான் அவன்.

முறைத்தவள், தட்டில் சட்டினியை வைக்க, அவள் கையைப் பிடித்தவன் “சொல்லு? ஏன் ஒரு மாதிரியாவே இருக்க?”

“நான் நல்லா தான் இருக்கிறேன்” உரைத்தவள் அமைதியாக ஷோபாவில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

தட்டோடு அவள் அருகில் வந்து அமர்ந்தவன், அவளுக்கு ஊட்டியபடியே “சொல்லு மதிக்குட்டி, கொஞ்ச நாளாவே ஒருமாதிரியாவே இருக்க ஏன்?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா?” கூறியவள் அப்படியே சரிந்து அவன் மடியில் படுத்துக் கொண்டாள். ஏதோ ஒரு வகையில் மனம் ஆறுதலை தேட, தாயாகவும், தந்தையாகவும், தமையனாகவும் இருக்கும் இந்தர் மடியை நாடியது அவள் மனம்.

அவளைப் பார்த்தபடியே உண்டவன், அவளை எழுந்து அமர செய்து கையைக் கழுவி வந்தவன், தன் அறைக்குச் சென்று பைக் சாவியை எடுத்து வந்து, அவளைக் கையோடு அழைத்து வெளியில் வந்தான்.

“இந்த ராத்திரி நேரம் எங்க அழைச்சுட்டு போற?” கேட்டபடியே அவன் கூடவே நடந்தாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே “பேசாம ஏறு?” எனக் கூற, அமைதியாக அவன் பின்னே ஏறிக் கொண்டாள்.

பைக் அமைதியாகச் சென்றது. மெல்லிய குளிர் காற்று வீச அதை ஆழ்ந்து அனுபவித்தாள். கடற்கரை சாலையில் பைக்கை நிறுத்தியவன் அங்கு நிறுத்தபட்டிருந்த குல்பி காரனிடம் இரு குல்பி வாங்கியவன் ஒன்றே மதி கையில் கொடுத்து, இன்னொன்றை தான் சுவைத்தைபடியே மணலில் நடந்து சென்றான்.

கொஞ்ச தூரம் சென்று அப்படியே அந்த மணலில் அமர, அவன் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள் மதி. காற்றுச் சுகமாக வீச, அலைகளின் ஓசை மட்டுமே அங்கு!

இந்தர் முகத்தை இருமுறை பார்த்தாள் மதி. அவன், அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. கேட்டாலும் இப்பொழுது அவள் கூறுவாளா? கேள்விக் குறியே?

அவனுக்கு நன்கு தெரியும் ‘என்னிடம் கூற வேண்டிய விஷயமாக இருந்தால், கண்டிப்பாக அவளே கூறுவாள், அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது பல குழப்பத்தில் இருக்கிறாள் என்று. அதனால் தான் இங்கு அழைத்து வந்தான்.

சிறிது நேரம் மணலில் அமர்ந்தவள், எழுந்து சென்று நீரில் கால் வைத்து, அதன் குளிரை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். கொஞ்சமாக மனம் அமைதியடைவது போல் இருந்தது.

மனதறிந்து நடக்கும் ஒரு உறவு கிடைக்கத் தான் தவம் செய்திருக்க வேண்டும், மனம் இந்தரை நினைத்துப் பெருமிதம் கொண்டது.

“வா இந்தர் கிளம்பலாம்?” அழைக்க,

“ரிலாக்ஸ் ஆகிட்டியா?”

“எஸ்...” மெதுவாகச் சிரிக்க,

“யாஹ்... தட்ஸ் மை கேர்ள்” அவளின் கன்னத்தில் மெதுவாகத் தட்டியவன் அவளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான்.

பறவைகள் மிக உற்சாகமாய் அந்த நாளின் விடியலை கொண்டாட சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த காலை நேரம் கௌதமும், அஷோக்கும் தன் ஜாகிங்கை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

வீட்டின் அருகில் உள்ள ஒரு பார்க்கில் தினமும் அவர்களின் ஓட்டம் தொடரும், எட்டு மணிவரை அங்கிருந்து விட்டு மெதுவாக வீட்டை நோக்கி வந்து, அதன் பிறகு காலேஜ் கிளம்புவார்கள்.

மெதுவாக ஓடிவந்த கெளதம், களைப்பாக அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கண்களைச் சுழல விட, தூரத்தில் ஒரு பெண்ணுடன் கடலை வறுத்துக் கொண்டிருந்த அஷோக் கண்ணில் பட, அவனை நோக்கி சென்றான்.

அப்பொழுது தான் வாசலில் வந்து நின்ற சுபியை கண்டவன், அசோக்கை நோக்கி சென்றான்.

“டேய்... அஷோக் பார்க் வாசலில் ஒரு பொண்ணு, கையில் குழந்தையோடு உன்னைப் பார்க்கணும்னு தேடிட்டு நிக்குது. நீ இங்க என்ன பண்ணுற? போ போய் அவளுக்குக் கொஞ்சம் தரிசனம் குடு”

இவ்வளவு நேரம் அசோக்கிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த மங்கை அசோக்கிடம் ‘யார் அந்தப் பொண்ணு’ என்று கண்களால் கேட்டு அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.

அவள் முறைப்பதை பார்த்து “அட ! பேபி இவன் பொய் சொல்றான் நீ நம்பாதே... மீ கிரீன் சாண்ட் ” என்றவன்… கௌதமிடம் திரும்பி ‘துரோகி’ என்று முறைத்தான்...


“இல்லடா நான் சொல்லுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறேதும் இல்லை” என்று வசனம் பேசியவன், “ஆனாலும் பாவம் டா அந்தக் குழந்தை அப்பா அப்பானு ஒரே அழுகை... சாக்கி வாங்கிக் குடுடா” என்று கொளுத்தி போட்டுவிட்டு மீண்டும் அந்தப் பெஞ்சில் வந்து அமர்ந்துக்கொண்டான்…

கெளதம் சென்றதும் பெண்ணிடம் திரும்பி, “பேபி அவன் ச்சும்மா சொல்றான் நம்பாதே” என்று அஷோக் இழுக்க…

நம்பிக்கை இல்லா பார்வையை அவன் மேல் செலுத்தியவள் அவனை முறைக்க,

“பேபி” என்று அஷோக் ஏதோ சொல்ல வர…


“சொல்லுங்கண்ணா” என்று பாசப்பறவையை பறக்க விட்டவள், 'இனி இங்க வா பாத்துக்கிறேன்?' என்னும் விதமாக முறைத்து சென்றாள்.


நொந்து போன அஷோக், “டேய் கெளதம் இன்னைக்கு உன்னைக் கொல்லாம விடப் போறது இல்லடா” என்று கௌதமை நோக்கி ஓடினான்.

அங்கிருந்த பெஞ்சில் இருகைகளையும் நீட்டி போட்டு அமர்ந்திருந்த கௌதமிடம் சென்றவன் “டேய் இது உனக்கே நியாயமா இருக்கா, கடவுளுக்கே அடுக்காதுடா நீயும் பார்க்க மாட்டேன்கிறே, என்னையும் சைட் அடிக்க விட மாட்டேன்கிறே, உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கே...” என்று பொரிந்து தள்ளியவன்…
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“டேய்... ஒருவாரமா என்னையே பார்த்துட்டே இருந்திச்சி, சரி போய்ப் பேச்சு கொடுக்கலாமேன்னு நினைச்சு போனா, ஒரே ஒரு வார்த்தையில் என் வாழ்கையில் பால்டாயில் ஊத்திடிட்யேடா? ஒத்த வார்த்தையில் என்னை அண்ணான்னு சொல்ல வச்சிட்டியே பாவி...” என்று அஷோக் சோக கீதம் வாசித்தான்….



“டேய் விடுடா... விடுடா... இந்தப் பொண்ணு இல்லன்னா, இன்னொன்னு இதுக்கெல்லாம் கலங்கலாமா?”

அவனை வெட்டவா இல்ல குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தான் அஷோக்... இவர்களின் பேச்சையும், அஷோக் ஜொள்ளையும் பார்க் வாசலில் பார்த்துக் கொண்டிருந்த சுபியோ ‘வாடா... வச்சிக்கிறேன் உன்னை’ கறுவியபடி சென்றதை பாவம் அந்த நேரம் அவன் அறியாமல் போனான்.

இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த குப்பையை வெளியில் கொட்டாமல் இருந்த கமலா, அவற்றை ஒரு கவரில் போட்டு, ஐந்து வீடு தள்ளியிருந்த குப்பை தொட்டியில் போடுவதற்காகக் கருத்தபாண்டி கையில் கொடுத்து விட்டார்.

அவற்றைக் கொண்டு குப்பை தொட்டி நோக்கி சென்றார் கருத்தபாண்டி. செல்லும் வழியில் அவரின் நண்பர் போனில் அழைக்கவே, அவரிடம் பேசியபடியே அந்தக் கவரை நான்காவது வீட்டு வாசலில் வைத்தபடி பேசியவர், பேச்சு வாக்கில் அப்படியே மறந்து வீட்டை நோக்கி சென்று விட்டார்.

பார்க் விட்டு அப்பொழுது தான் வீட்டை நோக்கி கடுப்புடன் வந்த சுபிக்ஷா கண்ணில் இந்தக் குப்பை கவர் தெரிய கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். பைக்கை அப்படியே திருப்பியவள் நேராக அஷோக் வீட்டின் முன் நிறுத்தியவள் கோபமாக வீட்டின் உள்ளே சென்றாள்.

“யோவ் வீட்ல யாருய்யா... வாய்யா வெளியே” என்று ஒரு இளம் பெண்ணின் அதிகார குரல் வீட்டின் வாசலில் கேட்க... ‘எவடா அது நம்ம வீட்டுல சவுண்ட் விடுறது’ எண்ணிய கருத்தபாண்டி மீசையை முறுக்கிப்படி வெளியில் வர,

அஷோக்கோ “யாரு எங்க மாமாவை மரியாதை இல்லாம கூப்பிடுறது?” என்று வரிந்து கட்டிக் கொண்டு வெளியில் வரவும்,

“டேய் நீ இருடா, நான் போய்ப் பார்க்கிறேன்” என்றவர் வேகமாக வாசலுக்கு வந்தார்…

அங்குக் கோபத்தில் மூச்சு வாங்க நின்ற பெண்ணைக் கண்டு நெற்றி சுருக்கினார். ஆனால் அந்தப் பெண்ணோ அவரின் முன் சொடக்கு போட்டு “ஹலோ நீ யாரு மேன்... இங்க போன் பேசிட்டு நடந்து வந்த பெருசை வர சொல்” என்று அலட்சியமாகச் சொல்ல..



அந்தப் பெண்ணை மேலும் கீழும் பார்த்தவர், “நீ யாருமா” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது…

‘வெளியே சென்ற மாமாவை காணுமே’ என எண்ணியபடியே அஷோக் வெளியில் வர, அங்கு நின்றவளை பார்த்து அப்படியே நின்று விட்டான்.

“என்னாச்சுங்க எதுக்கு இந்தப் பொண்ணு இப்படி எட்டூருக்கு கேக்குற மாதிரி இந்தக் கத்து கத்துது” எனக் கேட்டபடியே வெளியில் வந்தார் கமலா.



“யாரும்மா நீ சொல்லு உனக்கு என்ன வேணும்” என்று அமைதியாகக் கேட்டார் கமலா.

“ம்ம்ம்... உங்க வீட்டுக்கு மருமகளாகனும்? அதுக்குத் தான் காலையிலையே வந்திருக்கேன்” நக்கல் குரலில் கூறினாள் அவள்.



அதைக் கேட்ட கமலா “என்னடா அஷோக், இந்தப் புள்ள இப்படிப் பேசுது?” என வாயை பிளந்தார். இப்பொழுது அஷோக்கை பார்த்து முறைத்தார் பாண்டி.



“ஹலோ ஓல்ட் லேடி கொஞ்சம் அந்த டோரை குளோஸ் பண்ணுங்க”

“டேய்... அஷோக் எந்தக் கதவுடா திறந்திருக்கு” என அஷோக் பார்த்து குரல் கொடுத்தார் கமலா.

தன்னைத் தானே, தலையில் அடித்த அஷோக் ‘அவள் எதற்கு இப்பொழுது வந்திருக்கிறாள்?’ என்பதாகப் பார்த்திருந்தான்.

அவளோ, கருத்தபாண்டியை நோக்கி “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அது வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்“ என்றவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு நின்ற மூவரையும் பார்த்து முறைத்தாள்.



“என்னம்மா உண்மை தெரியணும், அதை முதலில் சொல்லு” என்று பொறுமையாகவே கேட்டார் கருத்தபாண்டி.



“இங்க என்ன சத்தம்... அம்மா டிபன் எடுத்து வைங்க?” என்றபடி மாடியை விட்டு இறங்கி வந்தான் கெளதம்.

அங்கு நின்றிருந்த சுபியை பார்த்தவன் ‘ஆகா பயபுள்ள நல்லா மாட்டிகிச்சே?’ எண்ணியவன் எதுவும் அறியாததது போல் அவளின் எதிரே அமர்ந்து கொண்டான்.

‘ஒரு ப்ரொபசர் என்று மரியாதை இருக்கா?’ மனதில் கருவியபடியே அவளைப் பார்க்க, அவன் எண்ணவோட்டத்தை அறிந்தவள் போல் “ப்ரின்சி, ப்ரோபசர் எல்லாம் காலேஜ்ல மட்டும் தான்” அவனுக்கு உரைத்தவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள்.

தன் கணவரின் அருகில் வந்த கமலா, அவர் காதில் “என்னங்க அந்தப் பொண்ணு இப்படிக் கத்துது நீங்க இப்படிப் பொறுமையா பேசிட்டு இருக்கிங்க”



“கொஞ்சம் இரு கமலா, அந்தப் பொண்ணு என்ன தான் சொல்லுது பார்ப்போமே” அவரிடம் மெதுவாக உரைத்தவர் “அந்த உண்மையைச் சொல்லுமா?” என அவளைப் பார்த்துக் கேட்க,

“நீங்க தான் அந்த உண்மையைச் சொல்லணும்?”

“சரி சொல்லு?”

“என்கூட வாங்க?” அவர்களை வெளியே அழைக்க, அவள் பின்னே பாண்டியும், கமலாவும் சென்றனர்.

“இந்தக் கவரை, இந்த வீட்டில் இருந்து தான் ஒரு கறுப்பு ஆடு எங்க வீட்டு முன்னாடி கொண்டு வச்சது, எங்க வீடு என்ன குப்பை தொட்டியா?” என்று எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்ற ரேஞ்சில் முறைத்து நின்றாள்...



“அடடா... நான் தான் குப்பை தொட்டில போட வந்தேன்மா, ஆனா மறந்து அப்படியே அங்கேயே வச்சுட்டு வந்துட்டேன்... சாரிம்மா?” என்றபடி அந்தக் கவரை கையில் எடுத்துக் கொண்டார் கருத்தபாண்டி.

இதை எதையும் கவனிக்காத அஷோக் சும்மா இல்லாமல் “இது என்ன சந்தை கடைன்னு நினைச்சீங்களா, இப்படிச் சத்தம் போடுறீங்க... என்ன பிரச்சனை உங்களுக்கு, என் மாமா கையில வச்சிருக்கக் கவர் தானே அதை, இங்க தாங்க மாமா?" என்றபடி அவர் கையில் இருந்து அதை வாங்கி கொண்டான்.



‘வாடா வா’ கருவியவள் “ஆமா..., அந்தக் கவர் தான் பிரச்சனை” எனக் கூற,

“ம்ம்... அதுக்குக் கால் முளைத்து வந்திருக்கும்... சும்மா போவியா” என்று நக்கல் செய்தவன், “அடிக்கிற காத்துக்கு, உனக்கு சிறகு முளைச்சு பறந்து நீயே எங்க வீட்டுக்குள்ள வந்தாலும் வந்திருவ, இதுல இந்தக் கவர் பத்தி பேசுறியா?”



‘ஏன்டா... ஓரமா போற புள்ளை கையைப் பிடிச்சு இழுக்கிற’ என்னும் விதமாக அவனையே பார்த்திருந்தார்.



“என்னது நான் உங்க வீட்ல வந்து உக்காருவேனா, எனக்கு வேற வேலை, சோலி இல்லை பாருங்க, வேணும்ன்னா அங்க உங்களை ஒருத்தி ஜொள்ளினாளே அவளை அடிக்கிற காத்துல பறந்து வரவைங்க” முறைக்க, காரணம் தெரிந்தது அவனுக்கு.



வெளியில் வந்த கெளதம் “நான் தான் சொன்னேன்ல அஷோக், வெளிய உன் ஆள் நிற்கிறான்னு, நீ தான் கண்டுக்காம அவளைப் பார்த்து ஜொள்ளின” மீண்டும் அவளிடம் மாட்டி விட்டவன், தன் தாயை பார்த்து “இங்க என்ன பொங்கலா போடுறாங்க, இப்படி வாயை பிளந்து பார்த்துட்டு இருக்கீங்க, இது இவன் பிரச்சனை அவன் பார்த்துப்பான், போங்க போய் டிபன் எடுத்து வைங்க” என்று சத்தம் போட்டவன் திரும்பி வீட்டின் உள்ளே சென்றான்.

‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்றபடி செல்லும் கௌதமையே பார்த்திருந்தான் அஷோக்.

சொடக்கு போட்டு, அஷோக்கை அழைத்தவள் “எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தேன்”

“என்ன பார்த்த நீ?”

“இங்க பார், ஜாக்கிங் வந்தியா, ஓடுனியான்னு இருக்கணும், சும்மா, அங்க இங்க பல்லை காட்டின பாத்துக்க?” ஒற்றைக் கை நீட்டி முறைத்து சென்றாள் சுபி.

'இவ பக்கத்துல தான் இருக்கிறாளா? இத்தனை நாள் இவளை கவனிக்காமல் போனேனே?' மனத்தில் எண்ணியபடியே அவளையே பெருமை பொங்க பார்த்திருந்தான் அஷோக். ‘எனக்கும் ஆள் இருக்கு’ என்ற பெருமை அது.

மதியின் மனநிலையைச் சரியாகக் கணித்தான் கௌதம். ‘சிறுவயதில் விரும்பிய கிச்சாவை ஏற்பதா? ‘தாலி’ என்ற ஒன்றை கட்டிய என்னை ஏற்பதா?’ இது தான் அவளின் இப்பொழுதுள்ள குழப்பம் என எண்ணிக்கொண்டான்.

‘அவள் தன்னைக் காதலனாகவோ? கணவனாகவோ? ஏற்கும் பொழுது அவளுக்கு எந்த வருத்தமும் இருக்கக் கூடாது’ எண்ணியவன், அவள் மனநிலையை மாற்றும் வழியைத் தேடினான். அவளின் முதல் செமஸ்டர் முடியும் நாளுக்காய் காத்திருந்தான்.

அடுத்த பதிவு வியாழக்கிழமை...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top