• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen..! EPI - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்.....

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு தான் வாத்தியோட லாஸ்ட் விளையாட்டு... அதுக்கு பிறகு மதி விளையாட்டு. வாங்க பார்க்கலாம். இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே...


காதல் – 12

உன் சின்ன சின்ன ஆசைகள் எல்லாம்...

நான் மட்டும் நிறைவேற்றவேண்டும்...

என்று பேராசைக் கொள்கிறேன்...

காலையிலேயே புத்தம் புது மலராக குளித்து முடித்து வெளியில் வந்த மதியை ஆதூரமாகப் பார்த்தான் இந்தர். அவள் முகத்தில் தனி பொலிவு தெரிய, அவன் முகம் மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொண்டது.

காரணம் கிச்சா. அவன் பேசியதை, அவள் கவனித்தாளோ இல்லையோ ஆனால் அவன் பேசியதை நேற்றில் இருந்தே செல்லில் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டாள். எப்படியும் கூடிய சீக்கிரம் அவனை நேரில் காண்போம் என்று பொலிவு முகத்தில் இப்பொழுதே தோன்ற ஆரம்பித்தது.

அறையை விட்டு வெளியில் வரவும், அவள் கையில் நாகு காபியை திணிக்க, மெல்லிய சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் மதி. அவள் முகத்தை கண்ட நாகு “ம்கும்” என கழுத்தை நொடித்து சென்றார்.

“ஏய் கிழவி? என்னாச்சு உனக்கு, காலம் காத்தாலே, கழுத்து ஒரு திணிசா போகுது” சிரிப்புடனே வினவினாள்.

அவளின் சிரித்த முகத்தை அப்படியே பார்த்திருந்தார். கொஞ்ச நாட்களாகவே ஒரு மாதிரியாக இருந்தவள் முகம் இன்று அதிக பொலிவைக் காட்ட, ஒரு தினுசாக பார்த்தார்.

“நான் ஊருக்கு போகணும்” முகத்தை எங்கேயோ வைத்தபடிக் கூறினார் நாகு.

“ஏன், இங்கு உனக்கு என்ன குறை?” கடுப்புடன் கேட்டாள் மதி.

“எனக்கு என் பையனைப் பார்க்கணும்?” கண்கள் சிறிது கலங்கியபடிக் கூறினார்.

“ஏன், என்னை பார்த்தா உன் பையனை பார்த்தமாதிரின்னு எப்பவும் சொல்லுவ? நீ பார்க்க முடியாதபடிக்கு இப்போ என்ன ஆச்சு இந்த முகத்துக்கு” அவரைப் பார்த்தபடியே வினவினாள்.

இவர்களின் உரையாடலை முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தான் இந்தர். வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் சுவாரஸ்யமாக பார்த்திருந்தான்.

“அடுத்த வாரம், உன் அப்பனுக்கும், உன் அம்மாவுக்கும் இறந்த நாள், கோவிலுக்கு போக ஏற்பாடு பண்ணணும்” இப்பொழுது அவளை நேராகப் பார்த்துக் கூறினார் நாகு.

‘இதை எப்படி மறந்துப் போனேன்? கிச்சா எல்லாத்தையும் மறக்கடித்து விட்டானா?’ அவளையே அவளால் மன்னிக்க முடியவில்லை.

இந்தர், ஆபிஸ் வேலையில் மறந்துவிட்டான். அதிலும் அவன் ஒரு மாதத்தில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. இப்படி எல்லாம் அவனை சுற்ற அவனின் மாமாவின் விசேஷ நாளை சுத்தமாக மறந்துப் போனான்.

அதே நேரம் திருவாரூரில் இருந்து சத்தியநாதன் அழைத்தார்.

“மதிம்மா”

“சொல்லுங்கப்பா”

“அண்ணனுக்கு திதி குடுக்கணும், பூசாரிக்கு சொல்லணும், எங்க பண்ணலாம், மதுரையிலா? திருவாரூரிலா?” மதியின் ஆலோசனையை கேட்டார் அவளின் அப்பா.

சிறு வயதில் இருந்தே அப்பா, என அழைத்துப் பழகியதில், அதுவே இப்பொழுதும் தொடர்கிறது.

திருமணமே வேண்டாம் என்று இருந்தவரை, திருமணம் செய்ய கட்டாயப்படுத்த, அதே நேரம், இந்தர் பெற்றோர் இறக்க, அவனை வளர்க்கும் பொறுப்பை எடுத்து, திருமணத்தை செய்யாமலே வாழ்ந்துவருகிறார். சொல்லபோனால் அவனுக்காக மட்டுமே வாழ்ந்தவர்.

அதன் பிறகு மதியின் தாய்க்கு மதுரையில் இருந்து வேலை மாற்றல் கிடைக்க, வெளியூர் சென்றனர். ஒரு முறை குடும்பத்தோடு ஏற்காடு சுற்றுலா சென்றனர்.

அப்பொழுது மதிக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். மதியின் பெற்றோர் இந்தரை தன்னுடன் அழைக்க, சத்தியநாதன் ஒரு வேலையை முடித்துக் கொண்டு இடையில் வந்து சேர்வதாக கூறியிருந்தார். நாகு தோட்டத்தை விட்டு என்னால் வரமுடியாது என்று கூறிவிட்டார்.

நான்கு நாட்கள் நன்றாக ஏற்காட்டை சுற்றி வந்தவர்கள், திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இருவரும் தனி தனி காரில் வந்தனர். வரும் பொழுது மதி சத்தியநாதன் காரிலும், இந்தர் அன்னலெட்சுமி காரிலும் பயணம் செய்தனர்.

திடீரென அவர்களுக்கு பின்னே வந்த லாரி தறிகெட்டு வர, சத்தியநாதன், காரை வாகாக திருப்பி ஓரமாக நிறுத்தி, தன் அண்ணனுக்கு கார் ஹாரனை அழுத்தி எச்சரிக்கை செய்தார்.

அதை கவனித்த மதியின் பெற்றோர், காரை ஓரமாக திருப்ப, வேகமாக வந்த வண்டி அவர்களை உரசி சென்றது. அதில் கார் ஒரு பாறையில் மோதி நின்றது.

உடனே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க, மதியின் அப்பா அந்த இடத்திலேயே மரணத்தை தழுவினார். மதியின் தாய்க்கு தலையில் அடிபட்ட நிலையில் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்தவர், அடுத்த வாரத்தில் நினைவு திரும்பாமலே அப்படியே சென்றுவிட்டார்.

அதன் பிறகு மதிக்கு எல்லாமே, அவளின் அப்பா சத்தியநாதனும், இந்தரும் தான்.

அதனால் தான் மதிக்கு தாலி கட்டிய அன்று கெளதம் அவளை அறியாமல் போனான். ஒரு வேளை மதியின் பெற்றோர் இருந்திருந்தால் கண்டுப்பிடித்திருப்பானோ என்னவோ?

இப்பொழுது அவர்களின் இறந்தநாள் வருவதால், எல்லாரும் திருவாவூர் செல்ல முடிவெடுத்தனர். எப்பொழுதும் மதுரையில் பூஜை நடக்கும்.

எப்பொழுது அங்கு சென்றாலும், மதி முகம் ஒரு வாரம் வரை எதையோ இழந்ததைப் போல் இருக்கும், அதனால் ‘இந்த வருடம் திருவாவூரில் வைத்துக் கொள்ளலாம்’ என இந்தர் கூறினான்.

சாப்பாட்டு அறையில் காலை உணவை அருந்திக் கொண்டிருந்தான் கெளதம். என்றும் இல்லாத திருநாளாக முகம் பிளீச் போட்டதை போல் பளப்பளக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த அஷோக் அவன் முகத்தை பார்ப்பதும், மீண்டுமாக தன் உணவில் கவனம் செலுத்துவதுமாக, தன் உணவை உண்ணாமலே அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் அவனை நிமிர்ந்து பார்த்த அஷோக், சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, கௌதம் அவனை ஏறிட்டுப் பார்த்தான். கௌதமிடம் பிடிபட்ட உணர்வில் திருதிருவென முழித்தான் அஷோக்.

“இப்போ எதுக்குடா என்னவோ காதலன், காதலியை திருட்டு தனமா சைட் அடிக்கிற மாதிரியே பார்த்துட்டு இருக்க, உன் முன்னாடி தானே இருக்கேன், நேரடியாவே சைட் அடி? என்ன கேட்கணுமோ கேட்டு தொலை” கூறியவன் தட்டில் இருந்த புட்டில் கவனமானான்.

“மச்சான்... அதான்... நம்ம இந்தர் மாமா பொண்ணு..” என ஆரம்பிக்க,

“ம்ம்ம்... என்ன சொன்ன?” கெளதம் கோபத்துடன் உறுத்து விழிக்க,

“அதில்லை மச்சான்... அதான் உன் பொண்டாட்டியை எப்போ இங்க அழைச்சிட்டு வர போற?”

அஷோக் ‘பொண்டாட்டி’ என்று கூறியதில் முகத்தில் கொஞ்சம் புன்னகையை படரவிட்டவன் “ஏன் அவளை இங்க அழைச்சிட்டு வரதுல உனக்கு என்ன லாபம்?”

“அதில்ல மச்சான்...” அவன் இழுக்க, அவனை முறைத்த கெளதம்,

“என் வீட்டிலையே யாரும், இன்னும் அதை பத்தி பேசல, உனக்கு மட்டும் என்ன?” கையை நாடியில் வைத்து யோசிக்க,

“எனக்கும் அது தான்டா புரியல, மீசை எப்பவும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற நேரம் எல்லாம், உன்னை கல்யாணம் பண்ண சொல்லி ஆங்கிரி பேர்ட்டா மாறி உன்னை கோபப்படுத்தும், ஆனா இப்போ எல்லாம் தெரிஞ்ச பிறகும், உனக்கு அந்த பொண்ணை கட்டி வச்சு உன்னை கூல் பண்ணலாம் தானே?” மீசை வருகிறதா என கண்களை எங்கும் சுழற்றியபடி வினவினான் அஷோக்.

“கூல் பண்ணுற வேலையெல்லாம், அவர் அப்பவே பண்ணிட்டார், ஆனா, நீ எதுக்கு என்னை இப்போ கூல் பண்ணுற, அதை சொல்லு மச்சான்”

“அதில்லை மச்சான், வந்து இன்னைக்கு நைட் சுபி ஊர் கோவில் கொடையாம், என்னை கூப்டிருக்கா, போகணும், அது தான் உன்னை துணைக்கு கூப்டலாம்னு இருக்கேன்?”

“என்னால் எல்லாம் வரமுடியாதுடா?” எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு.

இன்று இரவு மதியின் பதிலை அறிய இருக்கிறான். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை அழைத்து விட்டான் அவள் பதில் கூறவே இல்லை. பெரும்பாலும் அவள் பகல் நேரங்களில் அவன் அழைப்பை ஏற்கமாட்டாள். அதனால் இரவில் அவள் பதிலை காண காத்திருக்க வேண்டுமே?

‘உன் லவ்க்கு மட்டும் என்னை அலைய வச்ச, எனக்கு வரமாட்டேங்கறயா? உன்னை எப்படி வர வைக்கிறேன் பார்’ மனதில் சூளுரைத்தவன் “உன் ஆளும் வருகிறாளாம்?” ஒரு பிட்டைப் போட்டான் அஷோக்.

வாய்க்கு போன புட்டு கை தானாக கீழிறங்க “என்ன அவளும் வருகிறாளா?” ஆவலாக கேட்டான் கெளதம்.

‘காதலில் பொய் சொல்லுவதெல்லாம் சகஜம்’ எண்ணியவன் “ஆமா வருகிறாளாம், சுபி இன்வைட் பண்ணிருக்கா?” என்று உரைக்க, அப்பொழுதிலிருந்தே கிளம்ப ஆயத்தம் ஆனான் கெளதம்.

சுபி, மதியை வீட்டுக்கே வந்து அழைத்து சென்றாள். கெளதம் என்றும் இல்லாத திருநாளாக இன்று வெள்ளை நிற வேஷ்டி, சிகப்பு கலர் சர்ட், கழுத்தில் ஒரு மைனர் செயின், கண்ணுக்கு ஒரு கலர் கண்ணாடி என ஆளே அட்டகாசமாக மாறியிருந்தான். இப்பொழுது அவனை பார்க்கும் பொழுது சட்டென்று கெளதம் தான் என அடையாளம் காண்பதரிது.

மாலையில் கோவில் வளாகத்தில் நுழைய, அத்தனை கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் அவளைக் கண்டுக் கொண்டான் கெளதம்.

மயில் வண்ண பட்டு புடவையில், அதற்கேற்ற நகைகளோடு, தலையில் மல்லிப்பூ சூடி அவள் ஜொலிக்க, அவள் அருகே செல்லச் சொல்லி அவன் கால்கள் பரப்பரத்தது.

தூரத்தில், சுபியை கண்ட அஷோக் கால்கள் அவளை நோக்கி பயணிக்க, அவனை தடுத்து நிறுத்தினான் கெளதம்.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“ஏன்டா?” பாவமாக முகத்தை வைத்தபடி கௌதமை பார்த்தான் அஷோக்.

“நீ மட்டும், உன் ஆள் கூட நிற்ப, நான் உனக்கு காவல் காக்கணுமா?” முறைக்க,

“நீயும் உன் ஆள் கூட நில்லு, உன்னை யாரு பிடிச்சு வச்சிருக்கா?” கடுப்புடன் மொழிந்தான் அஷோக்.

கெளதம் பார்வை மதியையே சுற்றி சுழல, அஷோக்கோ டாமை போல் சுபியையே பார்த்திருந்தான்.

மதி, செல்லும் வழியெல்லாம் அசோக்கை இழுத்து சென்றான் கெளதம். அங்கு ஒரு இடத்தில், சிறு குழந்தைகளுக்கான பொம்மை மாஸ்க் இருக்க, அதன் அருகில் சென்ற மதி, ஒரு குரங்கு மாஸ்க் எடுத்து முகத்தில் மாட்டியபடி, கையில் பலூன் பிடித்து விளையாடிய சிறுகுழந்தைகளுடன் இணைந்து, அவர்களுக்கும் மாஸ்க் அணிவித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடும், மதியை ரசித்துப் பார்த்திருந்தாள் சுபி. இன்று அத்தனை அழகாக ஜொலித்தாள் மதி, அதிலும் அந்த விளக்கொளியில், அவளின் சந்தன தேகம் மின்னியது. அத்தனை திருஷ்டியையும் கழிப்பதுப் போல் அவள் கன்னத்தில் ஒற்றை மச்சம் பளிச்சென தெரிய, ரசித்துப் பார்த்திருந்தாள்.

கெளதம், முகம் திடீரென பிரைட் ஆகவும், யோசனையாக அவனைப் பார்த்தான் அஷோக்.

“டேய்... அஷோக், நான் போய் ஒரு குரங்கு மாஸ்க் வாங்கிட்டு வாரேன்” அவன் கிளம்பி செல்ல, ‘எலி ஏன் இப்போ வேஷ்டி கட்டிட்டு ஓடுது?’ அவனையே பார்த்திருந்தான் அஷோக்.

அதே கடையில் அவளைப் போலவே மாஸ்க் வாங்கி, கண்களில் கட்டியவன் அந்த சிறுவர் கூட்டத்தில் அவளை நோக்கி நகர்ந்தான்.

‘அவனுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லையே’ எண்ணிய அஷோக் அதே மாஸ்க் கடையை நோக்கி ஓடினான். மாஸ்க் ஒன்றை வாங்கி, சுபி அருகில் நின்று அவளிடம் கடலை போட ஆரம்பித்திருந்தான்.

அவள் முன் சென்று நி‌ன்றான் கௌதம், தன் முன்னால் யாரோ நிற்பதை உணர்ந்த மதி, கண்களில் இருந்த மாஸ்க்கை கையில் எடுத்தப்படி அவனைப் பார்க்க, “ஐ லவ் யூ நிலா” ஆழ்ந்த குரலில் முடிந்திருந்தான்.

“யூ மேன்...” அவள், அவன் கண்களில் இருந்த மாஸ்க்கை எடுக்க முற்பட, அதே நேரம் அதிர்ஷ்ட வசமாக கரண்ட் கட் ஆக, அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான் அவன்.

அடுத்த நிமிடம் கரண்ட் வரவும், அவள் கைகளில் அவன் கட்டியிருந்த மாஸ்க் மட்டுமே இருந்தது. அவன் மீண்டும் தன்னிடம் காதலை கூறிய விதத்தை எண்ணி அதிர்ந்து நின்றிருந்தாள்.

‘அவன் இங்கே இருக்கிறான், அவனை நான் மிஸ் செய்துவிட்டேன்’ மனம் உளறிக் கொண்டிருந்தது.

‘அவன் என்ன டிரஸ் போட்டிருந்தான்?’ அந்த நேரம், அது கூட அவள் நினைவில் வர மறுத்தது.

‘நொடிகளுக்குள் எல்லாம் மாயமாகிப் போன உணர்வு, நேற்று தான் எல்லாம் தெளிவாக மூளையில் பதிந்திருக்க, இன்று எல்லாம் மரத்துப் போன உணர்வு, கண்கள் கலங்குவதை போல் இருந்தது.

அவள் மெதுவாக அங்கிருந்து கிளம்ப முயல, “ஆன்ட்டி” என அவள் கையை பிடித்தது ஒரு சிறு குழந்தை.

தன் கையை பிடித்திருந்த, குழந்தையின் முன் மண்டியிட்டவள் அந்த குழந்தையையே பார்க்க, அந்த குழந்தையோ தனது குட்டிக் கண்களால், அவளை குறுகுறுவென பார்த்தது.

மெதுவாக அவளைப் பார்த்து சிரித்து விட்டு, அவள் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “ஐ லவ் யூ ஆன்ட்டி” கூறி சிரித்தபடியே, தன் கையில் இருந்த சிவப்பு ரோஜாவை அவளை நோக்கி நீட்டியது குழந்தை. அந்த சின்ன சிட்டின் செயலில் அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது.

அத்தனை நேரம் இருந்த மனநிலை மாற, குழந்தையை மார்போடு அணைத்து, அந்த குழந்தையின் பட்டுக் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள் மதி.

“உங்களுக்கு கேம் விளையாட புடிக்காதா? இந்தாங்க?” அவள் கையில் சாக்கியை கொடுத்த குழந்தை ஓட, அவள் பின்னே ‘ஐயோ பாப்பா?” என்றபடி அவள் ஓட, “எங்க போன செல்லம்” கேட்படியே அந்த குழந்தையின் தாய் தூக்கி சென்றார்.

‘நான் கவலைப் பட்டால் உன்னால் தாங்கமுடியவில்லையா? ஏன் இப்படி என்னிடம் விளையாடி பார்க்கிறாய். ஒரு முறை என் முன்னே வா கிச்சா’ மனதோடுக் கூறிக் கொண்டாள்.

அதே நேரம் கையில் இருந்த போன் இசைக்கவே, ‘கண்டிப்பாக அவனாக தான் இருக்கும்?’ இருவரும் கண்டிப்பாக ஒருவராக தான் இருக்கும் என்ற எண்ணம் நேற்று அவன் கூறிய பொய்களில் அறிந்துக் கொண்டாள். ஆனாலும் இருவரும் ஒருவராக இருக்க முடியுமா? என்ற எண்ணம் வலுவாக இருந்தது. பல விதத்தில் குழம்பி இருந்தாள்.

“ஹலோ...” அவனுக்கு முன்னே இவள் குரல் கொடுத்தாள்.

“ஹாய் நிலாக்குட்டி... உன் முன்னால் வந்த பிறகும் இன்னைக்கும் மிஸ் பண்ணிட்டியே?” மெல்லிய குரலில் அவன் கேட்கவே, தவிப்புடன் கண்களை எங்கும் சுழல விட்டு அவனைத் தேடினாள்.

“ஹே... ஹே... பியூட்டி ரிலாக்ஸ்... ஏன் இப்படி டென்ஷன் ஆகுற, அந்த லிப்ஸ் அப்படி என்ன பாவம் பண்ணிச்சு, இப்படி போட்டு கடிக்கிற?” அவன் உரைக்கவே, சட்டென தான் கடித்திருந்த கீழுதட்டை விடுவித்தபடி கண்களை எங்கும் சுழல விட்டாள்.

“எங்கே இருக்க...?” உடனே அவனை காணும் ஆவல் எழுந்தது. அவனின் அந்த நிலாக்குட்டி என்ற அழைப்பு, அவளின் அடிமனது வரை சென்று தாக்கியது.

அவளின் கிச்சா மட்டுமே அவளை அப்படி அழைப்பான். தன்னிடம், பேசிக் கொண்டிருப்பது கிச்சாவே தான்...

“கிச்சா..?” அதே அவளின் தவிப்பு குரல் அவன் செவியை தீண்ட, இப்பொழுதே அவளின் முன் நிற்க மனம் ஆசைக் கொண்டது. அவளை அப்படியே கட்டியணைக்க கைகள் தவித்தது.

‘தான் இப்பொழுது அவள் முன் கிச்சாவாக போய் நின்றால், அவளின் கணவன் என்ற முறையில் அறிமுகமாகுவது மிகவும் கடினமே... மனத்தை கஷ்டப்பட்டு, மாற்றியவன் “என்னை கண்டுபிடிக்க முடியலன்னா சொல்லு, இப்பொழுதே உன் முன் வருகிறேன்?” அவளை சீண்ட,

“ஒன்னும் தேவையில்லை” கத்தியவள் அழைப்பை அணைத்திருந்தாள். அதனை கோபமாக வந்தது... அவன் கிச்சா என்று அறிந்தும், தன் கண் முன்னால் வந்தும் அறியாமல் போனேனே?

பேசிக் கொண்டிருந்த சுபியும், அஷோக்கும் அவளின் திடீர் கத்தலில் அவளை நோக்கி, திரும்பியபடி “என்னாச்சு மதி?” கேட்க,

“ஒன்னும் இல்ல வா, எல்லாரும் சாமி கும்மிடப் போறாங்க, வா, போயிட்டு வீட்டுக்கு போகலாம், தலைவலிக்குது” கையோடு அவளை அழைத்து சென்றாள்.

சாமி தரிசனத்துக்காக எல்லாரும் வரிசையில் நின்றனர். மதியையே கவனித்துக் கொண்டிருந்த கௌதமும் ஆண்கள் வரிசையில் நின்றுக் கொண்டான்.

சாமிக்கு பூஜைகள் ஆரம்பம் ஆக, எல்லாரும் கண்கள் மூடி நின்றனர்... ‘இருவரும் ஒருவரா? இல்லை என்னிடம் பேசுவது கிச்சாவா? நான் எப்படி அறிவது? எனக்கு ஏதாவது காட்டு” குழம்பியடி கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தாள் மதி.

அவளி வேண்டுதலுக்கு பதில் கிடைப்பதுப் போல், மெதுவாக அவள் அருகில் வந்தவன், அங்கு தூணில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து அவள் கண்விழிக்கும் முன் நகர்ந்து விட்டான்.

தன்னை ஏதோ மெலிதாக தீண்டிய உணர்வில் கண்களை திறந்துப் பார்க்க, எதிரில் இருந்த கண்ணாடியில் குங்குமம் பளிச்சிட்ட முகம் தெரிய, அப்படியே அதிர்ந்து பார்த்திருக்க, தூரத்தில் அதே குரங்கு மாஸ்க் வரிசையில் ஒரு நொடி நின்று சென்றது.

எல்லா கேள்விக்கும் விடைகள் தெரிந்தது. இத்தனை நாள் தன்னுடன் கிச்சாவாக விளையாடியது, தன் வாழ்கையை தாலி என்ற ஒன்றைக் கட்டி அழித்தவன். இத்தனை நேரம் அவனில் மயங்கி இருந்த மனம் விழித்துக் கொண்டது.

‘தன்னை பற்றி முழுதாக அறிந்து தன்னிடம் விளையாடி இருக்கிறான். தன்னை பற்றி ஒவ்வொன்றையும் கவனித்திருக்கிறான். என் கிச்சா என்னை ஏமாற்றமாட்டான், இது யாரோ?’ மனதில் அழுந்த பதித்துக் கொண்டாள். பேசியது கிச்சா என அறிந்தும், தன்னை தானே ஏமாற்றிக் கொண்டாள் ‘இது அவன் இல்லை’ என்று...

ஏமாற்றத்தின் வலி அதனை கொடியதாக அவளை தாக்கியது. தாலி கட்டி அனாதையாக விட்டு சென்றவன், நான், என்ன ஆனேன், உயிருடன் இருக்கிறேனா? இல்லையா? எதையும் அறியாமல் இருந்தவன், இத்தனை வருடம் மனதில் வைத்து பூட்டிய ரகசிய காதலனா? அவளால் தாங்கமுடியவில்லை. கோவில் என அறிந்தும் கண்களில் நீர் வழிய அப்படியே மண்டியிட்டாள். ஏமாற்றதின் வலி, அவள் கண்களில் அப்பட்டமாக வழிந்தோடியது.

அன்பு இரண்டு விதமானது...

ஏற்றுக் கொண்டாலும் அழும், நிராகரித்தாலும் அழும்...

அடுத்த எபி செவ்வாய்கிழமை. :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top