• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen..! EPI - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்.....

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... ரெண்டு பேரும் பயங்கர பீலிங்க்ல இருக்காங்க? அவங்க மனநிலையை சரியா சொல்லிருக்கானா? படிச்சு சொல்லுங்க நண்பர்களே... அடுத்த எபில சேர்த்து வைப்போமா?... இன்னும் மூணு எபில கதை முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்? பாப்போம்.... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே... யாருமே லைக் பண்ணல...;);) மன்னிச்சுக்கோங்கப்பா... இந்த வாரம் ரெண்டு எபி தான் தரமுடியும் போல.

காதல் – 13

மரக்கிளையில் வந்து அமரும் பறவையாய்

அவ்வப்போது வந்து செல்கிறது அவள் நினைவு...

ஆசைதீர அவள் முகத்தை காண துடிக்கிறது என் நெஞ்சம்...

ஆயிற்று இன்றுடன் கெளதம், மதியை தொடர்புக் கொண்டு ஒரு மாதம், கடந்து விட்டிருந்தது. அவர்கள் இருந்த வீட்டிலும் சென்று பார்த்து விட்டான்.

“வெளியூர் சென்று பல நாட்கள் ஆகிவிட்டது, எப்பொழுது வருவார்கள் என்று தெரியவில்லை, அந்த பையனுக்கு ஏதோ வெளிநாட்டுல வேலை கிடைத்து விட்டதாம்” என்று கூற அவளை காணமுடியாமல் திகைத்தான். காலேஜ் திறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அவள் எங்கு போனாள்.

மதுரையில் கூட சென்று பார்த்து விட்டான். ஆனால் அவர்கள் அங்கு வரவே இல்லை என்று கூறி விட்டார்கள்.

அப்பொழுது தான் மதியின் பெற்றோர் இறந்த விஷயத்தை ஒரு பெரியவர் கூற அறிந்துக் கொண்டான். அவனால் தாங்கவே முடியவில்லை.

‘ஆன்ட்டியும், அங்கிளும் எத்தனை அற்புதமான ஜோடிகள். அங்கிளோட மனசறிந்து நடந்துப்பாங்க ஆன்ட்டி, அவங்களுக்கா இப்படி ஒரு நிலை வரணும், அவனால் தாங்கவே முடியவில்லை...

சிறுவயதில் அவன் கண்ணார கண்ட அற்புதமான ஜோடிகள். மகள், மனைவி மேல் அத்தனை பாசத்தை பொழிவார் அவர். மாலை ஆனாலே மதியுடன் தான் நேரத்தைக் கழிப்பார். சில நேரம் இவனையும் கூட்டு சேர்ப்பாள் மதி.

‘ஹும்... என்னாலயே அவங்க இழப்பை தாங்கமுடியலை, என் நிலாக்குட்டி எப்படி தாங்கினாள், கடவுளே! அந்த நேரம் அவளை ஆறுதல் செய்ய, என் தோளில் சாய்க்க அவள் அருகில் நான் இல்லாமல் போனேனே? என் கண்ணம்மா எப்படி அவர்கள் இழப்பை தாங்கினாள்.’ கௌதமின், ஒவ்வொரு நொடி மூச்சுக்காற்றும் அவன், நிலா பேரை உச்சரித்தது.

சிறு வயதிலேயே, அவளை எல்லாரும் மதி என்றழைக்க, அவன் மட்டுமே நிலாக்குட்டி என்று அவளுக்கு புதுப் பெயர் வைத்தான்.

நிலவின் பளிங்கு முகமும், அவளின் நிலா முகமும் ஒன்றாம், அவனே விளக்கம் கூறிக் கொள்வான்.

அவளை கண்டு பிடித்த சந்தோஷத்தில், எத்தனை எத்தனை சந்தோசமாக இருந்தான், அதை விட பல மடங்கு வருத்தத்தில் இப்பொழுது அலைந்தான்.

அவளை கண்ணால் காண்பதற்கு முன் எப்படி இரவு நேரம் பார் நோக்கி செல்வானோ, அதே போல் மீண்டும் பார் நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அவனின் நிலைக் கண்டு கருதபாண்டியோ “நான் அவங்க வீட்டில் பேசவா?” என்று கூட கேட்டார்.

“எங்க போய் தேடுவீங்கப்பா, கையில் வந்த அவளை நான் மறுபடியும் தொலைச்சுட்டேன், என்னை விட்டு எங்கேயோ போயிட்டா? இந்த கிச்சா வேண்டாம்ன்னு போயிட்டா” புலம்பி தள்ளினான்.

ஒவ்வொரு நொடியும் மகன் முகத்தை கண்டு கமலா, மிகவும் நொந்துப் போனார். அவர் கோபம் எல்லாம் கணவர் மேல் பாய்ந்தது. “அவனுக்கு கல்யாணம் முடிந்த விஷயத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லிருந்தால், எப்படியாவது அவளை இவன் கூட சேர்த்து வைத்திருப்பேன், இவனும் அவளிடம் விளையாடி இருக்கமாட்டான், அவளும் சென்றிருக்கமாட்டாள்” காய்ச்சி எடுத்து விட்டார். பாவம் அவர் என்ன செய்வார் ‘மகன் இப்படி சொதப்புவான் என்று கனவாக் கண்டார்’ அவரின் திட்டை அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

இந்தருக்கு அழைக்க, அவன், இவன் அழைப்பை ஏற்கவே இல்லை. தினமும் அவள் வீட்டு தெருவையே சுற்றி வருவான் கெளதம். ‘இன்று வருவாள், நாளை வருவாள்... அவன் என் கண்ணில் தென்படுவாள்’ என அவன் சுற்றி வந்தது மட்டுமே மிச்சம். அவளை காணவே இல்லை.

‘எங்கிருக்கிறாய் நிலா, உன் கிச்சா உன் முன்னே வர ஆசை கொள்கிறேன்’ மனதோடு பேசிக் கொள்வான்.

‘உன்னை நான் தவிக்க வைத்ததை விட, அதிகமாய் என்னை தவிக்க விடுகிறாயே இது நியாயமா கண்ணம்மா?’ மனதோடு புலம்பிக் கொள்வான்.

‘பிரிந்து சென்ற காதலியின் நினைவும், வேண்டாம் என்று சென்ற மனைவியின் நினைவும் ஒரு சேர அவனை வாட்டியது. தாலிகட்டிய அன்றே அவளை அழைத்து வந்திருந்தால், இத்தனை வேதனை வேண்டாமே?’ தலையிலேயே அடித்துக் கொண்டான்.

கெளதம் நிலையை கண்ட அஷோக், சுபியை அழைத்து விசாரிக்க எண்ணினான். இதுவரை மதியை பற்றி அவளிடம் கூறாதவன். தன் நண்பனின் நிலையறிந்து அவளிடம் விசாரிக்க அவளை அருகில் உள்ள பார்க் வரக் கூறினான்.

“மதி, எங்க சுபி”

“மதியா? எதுக்கு அஷோக் கேட்கிற?”

“சொல்லு, அவளை எங்க?”

“தெரிலையே, நானும் அவளுக்கு கால் பண்ணிட்டே இருக்கேன், ஸ்விட்ச்ஆப்னு வருது, அவ வீட்டுக்கும் போயிட்டேன், ஆளையே காணும், நீ எங்கயாவது பார்த்தியா அவளை?” அவனையே கேள்விக் கேட்டாள் சுபி.

“ஒஹ்... அப்படியா?”

“எதுக்கு கேக்குற?”

“சும்மா தான், வா?” என அவளை அழைத்துக் கொண்டு ஐஸ் கிரீம் பார்லர் சென்றவன் அப்படியே அவளை வீட்டில் விட்டு வந்தான். யோசனையோடு அவனை தொடர்ந்தாள் சுபி.

இதற்கிடையில் ரதியும், இந்தியா வந்துவிட்டாள். அவளை பார்க்கும் நேரம் எல்லாம் கெளதம் உள்ளுக்குள் புழுங்கினான். தன்னால் தான் தன் தங்கையின் வாழ்வு அப்படியே இருக்கிறதென்று.

ரதி இந்தியா வரும் நாளை, இந்தரிடம் அறிவித்திருந்தாள். பிளைட் விட்டு இறங்கும் வரை அவனை ரொம்பவே எதிர் பார்த்திருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை. அவன் மேல் கோபம் அதிகரிக்க, இங்கு வந்த பின்னும், அவனுக்கு அழைக்கவே இல்லை.

அன்று கோவில் விட்டு வீட்டுக்கு வந்த மதி, உடனே திருவாரூர் கிளம்பி விட்டாள். பாட்டி வேறு அவர் மகனை பார்க்க வேண்டும் என்றுக் கூறியதால், அதை சாக்காக வைத்து இந்தரையும் கையோடு அழைத்து சென்றுவிட்டாள்.

அங்கு சென்றதில் இருந்து, எதையோ இழந்ததைப் போல் சுற்ற, ‘பெற்றோர் நினைவு அவளை வாட்டுகிறது’ என எண்ணி அவளை நன்கு கவனித்துக் கொண்டனர்.

மதியின் மனதில், ஈரம் உலரா மரக்கிளையில் சொட்டும் சாரல் மழையாய் அவன் நினைவுகள் மட்டுமே!

வெகுநேரம் இளைப்பாறாமல் சிறகு விரித்திருந்த பறவை, ஓய்ந்து மரக்கிளையில் அமர்ந்திருந்து, தன் அலகால் சிறகை கோதுவதைப் போல் அவன் நினைவை மீண்டும் மீண்டும் மீட்டிக் கொண்டாள் மதி.

இரண்டாம் முறையும் காதல் வருமா? அந்த இரண்டு காதலனும் ஒருவனாக இருக்க முடியுமா? அவளால் நம்பமுடியவில்லை.

நெஞ்சம் முழுவதும் அவனே நிறைந்து இருந்தான். ஒவ்வொரு முறையும் அவனின் நினைவை தனக்களித்து மொத்தமாய் ஏமாற்றி சென்று விட்டான்.

தாலிக் கட்டியவன் மீதிருந்த, கோபத்துடன் கூடிய அன்பை, கிச்சாவின் அன்பு மீட்டிருந்தது. அவனின்றி எதுவும் இல்லை, என தன்னை ஏமாற்றி நிம்மதியை மொத்தமாய் களவாடி சென்று விட்டான்!

மனதில் பெரும் குற்றவுணர்வு அவளை தாக்கியது. தாலிக் கட்டியவன் இப்படி இருப்பானோ? அப்படி இருப்பானோ என பல விதமாக மனதில் உருவேற்றி வைத்தவனை, ஒரே அழைப்பில் அழித்துவிட்டான் கிச்சா! தாலி கட்டியவனை மறக்கடிக்கும் அழைப்பு! மனதில் வரைந்து வைத்திருந்த உயிரற்ற ஓவியத்தை அடித்து வீழ்த்திய பெயர்!

வெண்பனி புகை மூட்டமாய், மங்கலாய் இருந்த அவன் உருவத்தை மொத்தமாய் அழித்து, பனி சிற்பமாய் வந்தமர்ந்தவன் கிச்சா.

அவளுக்கு தாலி கட்டிய மங்கலான கற்பனை உருவம், மனதில் அங்கும், இங்கும் அசைந்தாட, அந்த உருவத்துக்கு துரோகம் செய்த உணர்வு அவளை அலைக்கழிக்க, கிச்சாவை வெறுத்தாள்.

ஆனாலும் மனதின் ஓரத்தில் பாசியாக படிந்திருந்த பால்ய உறவு, மென்மையாய், அனுமதியின்றியே தன் இதயத்தை திருடிய உணர்வு!

அவளின் கற்பனை உருவம், அடிபட்ட பட்டாம் பூச்சியாய் படப்படக்க, கிச்சா உருவம் வண்ண பட்டாம்பூச்சியாய் மனதில் இடம் பிடிக்க, அதிர்வாய் இதயம் ஏற்ற உணர்வு!

இருதலை கொள்ளி எறும்பாய் துடித்தவள், அவனின் அழைப்பில் ஒரு நிலையான முடிவெடுக்க எண்ணி தான் அவனின் விளையாட்டில் கலந்துக் கொண்டாள். ஆனால் அந்த விளையாட்டே அவளின் இருகாதலையும், ஒன்றாக இணைக்கும் விளையாட்டாய் இருக்கும் என கனவிலும் எண்ணவில்லை.

கொஞ்சம், கொஞ்சமாய் மனதில் இருந்த கற்பனை உருவத்தை உடைத்து, ஆழ்மன உருவம் மொத்தமாய் மனதை ஆக்கிரமித்திருக்கும் நேரம், இரு உருவமும் ஓன்று என கண் முன்னால் வர துடித்துப் போனாள்.

தான் சிறுவயதில், ஆடி மகிழ்ந்திருந்த இனிய தோழன், தன் உயிர் மூச்சாய் இருந்த தோழன், பல நேரம் தன் தாயின் அடியில் இருந்து காத்த குட்டி இளவரசன். எல்லாவற்றிலும் மேலாக இன்றும் பொக்கிஷமாய் ஆழ் மனதில் ஒழிந்திருக்கும் ரகசிய காதலன். ஆனால் இப்பொழுதோ தன்னை ஏமாற்றிய காதலன்.

இன்னும் அவளால், அவன் செய்ததை ஏற்க முடியவில்லை. இன்னும் அங்கிருந்தால், அவன் நினைவு வாட்டும் என்று தான் உடனே கிளம்பிவிட்டாள்.

யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம். அவன் தாலி கட்டி இப்படி தானே விட்டான், இப்பொழுது காதலை தந்து ஏமாற்றி விட்டான். என்னை இப்படி பாதியில் விடுவதே அவனின் பழக்கம் போல். கோபமாக எண்ணியவள் அலைபேசியையும் அணைத்து வைத்து விட்டாள். நான் அவனை எண்ணி துடிப்பது போல் அவனும் துடிக்கட்டும் கோபமான மனம் எண்ண, காதல் மனதோ அவனுக்காய் துடித்தது. அவளின் கிச்சாவுக்காய் துடித்தது.

ஆனாலும் மனதில் சிறு நம்பிக்கை, இந்த பரந்த உலகில், சிறு வயதில் தொலைத்த என்னை, அவன் தேடி வந்ததுப் போல், தன் காதலியாகவும், தன் மனைவியாகவும் தொலைத்த, அவனின் நிலாக்குட்டியை அவன் தேடி வருவான் என அவள் மனம் நம்பியது.

தாலி கட்டிய அவனை விட, அவளை காதலித்த, காதலிக்கும் கிச்சாவை அவள் மனம் மிகவும் நம்பியது! அவன் வருவான், தன்னை தேடி வருவான், ‘காதல் சொல்லி என்னை மீட்பான்’ என்று.


அடுத்த எபி சனிக்கிழமை ;)....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top