• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்...

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... இன்னும் ரெண்டு எபியில் கதை முடிந்து விடும் நண்பர்களே...இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாப்போம்...

காதல் – 17

என் இதய கள்ளியே..

உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை

உன் கண்களை கொண்டு காதல் வலை வீசி

காலம் முழுக்க சிறையிட்டாயே...!

ஆபிஸ் விட்டு வந்ததிலிருந்தே இந்தர் ஏதோ கவலையாக இருந்ததுப் போல் தெரிந்தது நாகுவுக்கு. கடந்த ஒரு வாரமாக அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தனர் இருவரும்.

சில நேரம் மதி அறைக்குள் தான் அவனது தூக்கமே, இல்லையென்றால் ஹாலில் அமர்ந்திருந்து அவளின் அறையையே பார்த்துக் கொண்டிருப்பான்.

அப்படியும் இல்லையென்றால், மொட்டை மாடிக்கு சென்று அவளிடம் பேசியதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான். அவளிடம் சீரியஸ் என்பதே கிடையாது. எல்லாமே விளையாட்டாக எடுப்பாள். கொஞ்சம் முகம் வருத்தத்தை காட்டினால் கூட சிரிக்க வைத்து விடுவாள்.

தூரல் தூறும் மழையைப் போல எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் அவள் வாய்.

அவளை பேச விட்டு இருவரும் ரசித்து பார்த்திருப்பார். ஆனால் இப்பொழுது வீடே பெரும் அமைதியில் கழிந்தது. நாகுவிடம் சண்டை போட கூட ஆள் இல்லாமல் மிகவும் வருந்தினார்.

அவரின் சாப்பாட்டை குறை கூற ஆளில்லை, டிவி ரிமோட்டுக்கு சண்டை போட ஆளில்லை, கடுப்புடன் ஷாப்பிங் அழைத்து செல்ல ஆளிலில்லை.

முக்கியமாக அவருடன் பைக் ரவுண்ட் போக ஆளில்லை. அவள் இல்லாமல் அவர் பைக் பக்கம் கூட செல்லவில்லை. இப்பொழுது அவருக்கு புரிந்தது அவரை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருந்தது மதியின் உற்சாகம் என்று.

ஒரு வாரதிலேயே அவளை ரொம்பவே மிஸ் செய்தனர் மூவரும்.

“ஏன்டாப்பா இப்படி எதையோ இழந்தது போல் இருக்க?” அவன் அருகில் வந்தமர்ந்து அவன் தலையை மெதுவாக வருடியபடி வினவினார் நாகு.

“தெரியலை பாட்டி, மதி இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு, அவள் கூடவே இருந்துட்டு இப்போ திடீர்னு அவள் இல்லாம ஒரு மாதிரியாவே இருக்கு” அவளின் அறையை பார்த்துக் கொண்டே கூறினான்.

அவனின் தலையை மெதுவாக வருடியபடி, “எங்க போயிருக்கா அவ வீட்டுக்கு தானே, எப்போ பாக்கணும் என்றாலும் ஓடி போய் பார்த்துட்டு வர தூரத்தில் தானே இருக்கிறாள், அதுக்கு ஏன் இப்படி மூஞ்சை ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிருக்க?”

“போ பாட்டி இந்த ஃபீலிங் எல்லாம் உனக்கு புரியாது. இதெல்லாம் உறவையும், நட்பையும் தாண்டியது” முகத்தில் தோன்றிய மென்னகையுடன் கூறினான்.

“ஓகேடா கிழவா, எனக்கு புரியாது தான் ஒத்துகிறேன், ஆனா மதிக்கு புரியும் தானே, நீ இங்க ஃபீல் பண்ணுனா அவளும் தானே ஃபீல் பண்ணுவா? நீ அடிக்கடி சந்தோசமா அவளை பார்த்துட்டு வா, அப்போ தானே அவளும் சந்தோஷமா இருப்பா”

“அதெல்லாம் என் மதி ரொம்ப சந்தோசமா இருப்பா, அதை விட கெளதம் அவளை ரொம்ப சந்தோசமா வச்சுப்பான்... அவனுக்கு, அவள் மேல கொள்ளை இஷ்டம் உனக்கு தெரியுமா பாட்டி”

“அவன் பாசம் நீ சொல்லியாடா எனக்கு தெரியணும்? மதி மனசுக்கு எப்பவும் சந்தோசமா தான்டா இருப்பா... அவளுக்கென்ன ராணி மாதிரி வாழுவா என் பேத்தி” சிலாகித்து கூறினார் அந்த பாசக்கார பாட்டி.

சில நிமிடங்கள் அப்படியே கழிய, “காபி குடிச்சீங்களா ரெண்டு பேரும்? விட்டா இப்படியே இருப்பீங்க, எழும்புங்க நான் காபி போட்டு தாரேன்” இருவர் கையை பிடித்தபடி சமயலறைக்கு அழைத்து சென்றான் இந்தர்.

அங்கு இருவருக்கும் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர வைத்தவன், மூவருக்குமாக காபியை கலந்தான்.

இருவரும் அவன் பாசத்துடன், கலந்து தந்த காபியை ரசித்து குடிக்க ஏதேதோ பேசியபடி அந்த மழை நேர மாலை பொழுதை சுகமாக களித்தனர்.

“பாட்டி இன்னைக்கு நைட் என்ன சமையல் பண்ணலாம்?” பாட்டியிடம் தன் கேள்வியை வைத்தான் இந்தர்.

“நீ போடா, நான் ஏதாவது செய்து தாரேன்?” கூறியபடி மெதுவாக எழுந்தார் நாகு.

“அட... நீ உட்காரு பாட்டி” அவரின் கையை பிடித்து அமர்த்தியபடியே, “ மாமா, வாங்க இன்னைக்கு நம்ம சமையல் பாட்டி அப்படியே அசந்து போகணும், தினமும் ஏதோ ஒன்னை தந்து கிழவி நம்மளை ஏமாத்துது, இன்னைக்கு நாம சொல்லி கொடுப்போம்”

இருவரையும் கண்டு மனம் விட்டு சிரித்தார் நாகு. அடுத்த கொஞ்ச நேரத்தில் சப்பாத்திக்கு மாவை இந்தர் பிசைய, சத்தியநாதன் காய்களை வெட்ட ஆரம்பித்தார்.

‘முருகா... சீக்கிரமே இவனுக்கும், ரதிக்கும் கல்யாணத்தை முடித்து வையப்பா’ மனதில் அவசர வேண்டுதலை வைத்துவிட்டு முகத்தில் தோன்றிய புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தார்.

இரவு ஏழு மணி...

அப்பொழுது அவரின் சிந்தனையை கலைத்தது, வீட்டின் அழைப்பு மணி... ‘யாராக இருக்கும்’ என்ற யோசனையுடன் அவர் எழ,

“நீ இரு பாட்டி நான் பார்த்துட்டு வருகிறேன்” என விட்டு கதவை திறக்க சென்றான் இந்தர்.

கதவை திறக்க அங்கே புன்னகையுடன் நின்றிருந்தனர், கௌதமும், மதியும்.

“இப்போ தான் உன்னை பத்தி நினச்சேன் மதிகுட்டி அதுக்குள்ள வந்து நிற்குற?”

உதடு சுழித்து பழிப்பு காட்டியபடியே, “நான் உன்னை எல்லாம் பார்க்க வரல, என் பாட்டியையும், அப்பாவையும் பார்க்க வந்தேன், அவங்களை எங்கே?” கேட்டபடியே அவனை இடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள் மதி.

அவள் அவ்வாறு கூறவும் முகத்தில் சிறு வருத்தம் தோன்ற அவளுக்கு வழி விட்டவனைக் கண்டு, தோளில் தட்டியபடி “உன்னை பாக்க தான் வந்திருக்கா, சும்மா உன்னை டீஸ் பண்ணுறா?’ அவனை அணைத்தபடி உள்ளே நுழைந்தான் கெளதம்.

சமையலறை வாசல் நிலையில் கைகளை கட்டியபடி நின்றிருந்து பாட்டியையும், மாமாவையும் கொஞ்சும் மதியையே பார்த்திருந்தான் இந்தர்.

‘என்ன ஒரு அழகான பாசக்கூடு’ ரசிப்புடன் பார்த்திருந்தான் கெளதம்.

மதி, இந்தரை கண்டுக் கொள்ளவே இல்லை. வெளியில் மழை சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மதி மனதில் மெல்லிய சாரலாய் இந்தர் நினைவு.

‘எப்படி இருக்கன்னு கேட்குறானா பாரு?’ அவள் மனம் சிணுங்கிக் கொண்டிருந்தது.

‘மறந்தவங்களை தான் எப்படி இருக்கன்னு கேட்கணும், உன்னை தான் நான் மறக்கவே இல்லையே’ அவன் மனம் சிணுங்கியது.

அவன் மனக்குரல் அவளுக்கு கேட்டதுப் போல் அவனைபார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்து நின்றவள் அவனை தாவி அணைத்துக் கொண்டாள். “என்னை நீ மறந்துட்ட தான எரும?” கேட்டபடியே ஒரு கொட்டு வேறு.

“உன்னை மறப்பனாடி?” கூறியபடியே அணைத்துக் கொண்டான்.

புன்னகை முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரே அமர்களமும், கொண்டாட்டமும் தான். சமையலறையையே ஒரு வழி பண்ணிவிட்டனர்.

இந்தர் சமையலை மனம் நிறைய உண்டபடி வீட்டுக்கு கிளம்பினர் மதியும், கௌதமும். அன்றைய நாள் மிகவும் சந்தோசமாக கழிந்தது எல்லாருக்கும்.

அன்று சனிக்கிழமை மாலை நேரம். மதியையும், கௌதமையும் வீட்டில் விட்டு விட்டு எல்லாரும் கோவிலுக்கு கிளம்பினர்.

“மச்சி இன்னைக்கு பால்கோவா அவளுக்கு ஊட்டி விட மறந்துராதே” ரகசியம் பேசினான் அஷோக்.

“மச்சி... என்ன தான் நீ எனக்கு பால்கோவா ஐடியா தந்தாலும், நீ மிங்கிள் ஆக முடியாதுடா மச்சி” அஷோக்கை பாசமாக அணைத்தபடி கூறினான் கெளதம்.

“ஏன்டா... உனக்கு நான் நல்லது தானே பண்ணுறேன், நீ ஏன் இப்படி எல்லாம் நினைக்குற மச்சி. சீக்கிரம் நானும் மிங்கிள் ஆனா தானே மிங்கிள் ஆர்மி ஆரம்பிக்க முடியும்”

“அதெல்லாம் ஆர்மி நான் ஆரம்பிக்கிறேன்டா... நீ சமத்தா இன்னும் ஒரு ரெண்டு வருஷம் சிங்கிளா இருக்கணும்னு சாமியை வேண்டிக்கிட்டு வா போ போ” அவனை தள்ளிக் கொண்டு வெளியில் விட்டான் கெளதம்.

“சும்மா இருக்க மாட்டீங்களா? அஷோக் சார் நான் உங்க கல்யாணத்தை சீக்கிரமா நடத்தி வைக்கிறேன்?” நமட்டு சிரிப்புடன் மதிக் கூறினாள்.

அவனை கிண்டல் செய்தால் மட்டுமே அவள் சார் என விளிப்பாள். இல்லன்னா அண்ணா என்று பாசமாக அழைப்பாள்.

கடுப்புடன் திட்டியபடியே கோவிலுக்கு சென்றான் அஷோக். வாய் பொத்தி அசோக்கை பார்த்து கிண்டலாக சிரித்தாள் ரதி.

“போடி...” அவளை பார்த்து பழிப்பு காட்டியவன் காரை கிளப்ப சென்றான்.

கமலாவும், மீசையும் ஒருவரை ஒருவர் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு காரில் ஏறினர். கார் அமைதியாக கோவில் நோக்கி கிளம்பியது.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
எல்லாரும் கோவிலுக்கு செல்லவும், மதி வீட்டின் உள்ளே செல்ல, கதவை பூட்டியபடியே இரு கையையும் உரசிக் கொண்டே,

“யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்”


மெதுவாக பாடியபடியே அவளின் பின்னே சென்றான் கெளதம்.

“என்ன?” என மதி இவனை நோக்கி திரும்ப,

“வீட்டுல யாரும் இல்ல..?

“அதுக்கு..?

“ஒற்றையறை!”

“ஒற்றையறை?”

“நீயும்... நானும்... மட்டும் தனியா இருக்கோம்”

“அப்புறம்?

“புது பொண்டாட்டி... மல்லிகை பூ வாசம்... மஞ்சள் தேகம்..!”

“அட... அடடா...!”

“அப்படியே ஹாட்டா..?” ஹஸ்கி வாய்ஸில் அவள் அருகில் வந்துக் கூற,

“ஹாட்டா...?”

“ஹாட்டா... ஒரு...”

“ஒ... ஒரு?”

“ஹாட்டா ஒரு காபி போட்டு குடுடி என் பொண்டாட்டி”

“காபியா..?” என்றாள் கொஞ்சம் மூச்சை விட்டபடி.

“ஆமாம்... காபி தான் நீ என்ன நினைச்ச..?”

“நான் ஒன்னும் நினைக்கலியே?” என்றபடி அவள் நகர பார்க்க,

“ஹேய்... நீ என்ன நினைச்சன்னு சொல்லிட்டு போ...” அவளின் கை பிடித்து தடுத்தான் கெளதம்.

அந்த நேரம் அழைத்தது அவனின் கைபேசி.

‘நானே இப்போ தான் கொஞ்சம் பக்கத்துல வந்திருக்கேன், அது உனக்கு பொறுக்காதே’ மனதில் கருவியபடி பாண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்தான் கெளதம்.

அழைத்தது அஷோக் என திரையில் தெரிய “சத்தியமா சொல்லுறேன்டா நீ மிங்கிள் ஆகவே மாட்ட” அவன் பேசும் முன் இவன் கத்தி விட்டிருந்தான்.

அந்த கேப்பில் அவன் கையை உருவிக் கொண்டு சமையல் அறை நோக்கி ஓடினாள் மதி.

“மச்சி ஏன்டா இப்படி சாபம் விடுற... உன்னை மாதிரி முரட்டு சிங்கள் சாபம் பலிக்கும்டா, ஆர்.ஜே. விஜய் சொல்லிருக்கான்” அழும் குரலில் கூறியவன் “மச்சி ஃபிரிட்ஜ்ல பால்கோவா இருக்குடா?” கூறியபடியே சோகமாக அழைப்பை நிறுத்தினான் அஷோக்.

"ஹாட்டா...! ஒன்னு குடுடி" கேட்டபடியே அவளை பின்னிருந்து அணைத்தான் கெளதம்.

"ஹாட்டா... தானே தத்துட்டாப் போச்சு" கூறியபடியே அணைத்திருந்த கையை கிள்ளினாள் மதி.

"ஏய்... ஹாட்டா காபி கேட்டேன்டி இப்படி கிள்ளுற?" கேட்டபடியே அவளை இறுக்கி அணைத்தான் அவன்.

இப்பொழுது சமையலறை மேடை மேல் இருந்த மதியின் அலைபேசி அழைக்க, கௌதமைப் பார்த்து கேலியாக சிரித்தபடி அலைப்பேசியை கையில் எடுத்தாள் மதி.

இந்தர் தான் அழைத்திருந்தான். ஸ்வைப் செய்து "என்னடா இந்தர்" என்றபடி காதுக்கு கொடுத்தாள் மதி..

"ரொம்ப கரடி வேலை பாக்குறேனா அண்ணி" ரதி தான் பேசினாள்.

"அட... ரதி நீ அங்க தான் இருக்கியா? அதிலும் இந்தர் போன் உன்கிட்ட இருக்கு, என்னம்மா விஷயம்... என்ன நடக்குது" கிண்டலாக கேட்டாள் அவள்.

"ஹி... ஹி... அண்ணி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல, சொல்லுங்க அங்க என்ன நடக்குது... யாருமே இல்லை என் அண்ணன் வேற பக்கத்துல...ம்ம்" கேலியாக இழுக்க,

"யாரு உங்கண்ணனா? சரியான மக்கு வாத்தியார்டி அவரு" அவனை பார்த்து பழிப்பு காட்டியபடியே ரதியிடம் பேசினாள் மதி.

"யாரு நானா மக்கு" என்றபடி கெளதம் அவள் இடையில் கிள்ள,

"அவுச்" மெதுவாக கத்த,

"ஹா... ஹா... அண்ணி என் அண்ணன் மக்கு வாத்தியார்ன்னு இங்க வர தெரிது"

"ஹி...ஹி..." அசடு வழிந்தாள் அவள். கண்களோ கௌதமை முறைத்துப் பார்த்தது.

"இன்னைக்கு எல்லாரும் இங்க தான் தங்க போகிறோம், நீங்க கிளம்பி இங்க வரணுமாம் பாட்டி சொல்ல சொன்னாங்க?"

"என்ன விஷயம் எல்லாரும் கோவிலுக்கு தானே கிளம்புனீங்க?"

"ஆமா, கோவிலுக்கு தான் கிளப்புனோம், அப்பா, இந்தர் கிட்ட பேசணும்னு வந்தாங்க அது தான்"

"ஆஹா... விஷயம் தெரிஞ்சு போச்சு" கிண்டலாக கூறியவள் “சரி ரதி வருகிறோம்" என்றபடி அழைப்பை நிறுத்தினாள்.

அதற்குள் கெளதம் காஃபி போட்டு முடித்திருந்தான். அவளையும் அழைத்துக் கொண்டு காஃபி கோப்பைகளுடன் தோட்டத்தை நோக்கி நடந்தனர் இருவரும்...

"பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே" இருவரும் பார்வையால் தங்கள் காதலை காபி வழியாக பருகினர்...

அடுத்த எபி சனிக்கிழமை :)
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Nice update ??

Murattu single sabham palikkuma ?? rofl max
தேங்க்ஸ் பிரேமிக்கா :love::love:....
முரட்டு சிங்கிள் சாபம் பலிக்கும்ன்னு தான் விஜய் சொல்லுவான் :LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top