• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen... Epi 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? காதல் சொல்ல வந்தேன்..! கதையின் அடுத்த காதல் போடுறேன்... படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... போன பதிவுக்கு லைக் & கமெண்ட்ஸ் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி டியர்ஸ்.... கௌதம் அவன் மனைவியை பார்த்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும்? படித்து தெரிந்துக் கொள்வோமா??

53599194_428827374529591_9071146416171045650_n.jpg


காதல் – 2

தமிழை உயிராய் நேசிக்கும் எனக்கு

எதுகை, மோனை தெரியவில்லை

என்னவன் கொஞ்சும் அழகை நான் ரசிக்கையில்....!

முதல் நாள் காலேஜ் கிளம்பக் காலையில் கண்ணாடி முன் நின்றிருந்தாள் மதி. கண்களில் சிறிது மையிட்டு, நீள கூந்தலை பின்னலிட்டு, மல்லிப்பூ சூடியவள் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.

அவளே அவள் கண்களுக்குத் தேவதையெனத் தெரிய... “அழகிடி மதி“ என்றபடி கண்ணாடியில் அவளே அவளுக்கு ஒரு பறக்கும் முத்தம் அளித்தவள்... எல்லாரையும் தோற்கடிக்கும் அழகுடன்... முகத்தில் தோன்றிய வற்றாத புன்னகையுடன் தன் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

“கிளம்பிட்டியா மதி“ வாசலில் ஒலித்தது விஜயேந்திரன் குரல்.

“இதோ ரெடி ஆகிட்டேன்“ என்றபடி அவன் முன் தரிசனம் தந்தாள் அவனின் தேவதை.

அரக்கு நிற சுடிதார் அவளுக்குப் பாந்தமாகப் பொருந்த... அவன் கண்களுக்கு இன்று ரொம்ப அழகாகத் தெரிந்தாள் அவனின் மதிகுட்டி.

“கலக்குறடி மதிக்குட்டி“ செல்லமாக அவளின் தலையில் தட்டியவன் அவளை அழைத்துக் கொண்டு அவளின் கல்லூரியில் விட்டு... தானும் ஆபிஸ் நோக்கி சென்றான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன், அவளின் ஒரே ஒரு அத்தையின் செல்ல மகன். சிறுவயதிலையே தன் பெற்றோரை இழக்க, மதியின் தந்தை அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்...

அதன் பிறகு அவனின் மதிக்குட்டி தான் அவனின் உலகமானது... படித்து முடிக்கவும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைக்க... அவன் கிராமத்தை விட்டு சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டான்... இப்பொழுது மேல் படிப்புக்காக வந்திருக்கிறாள் மதி.

கல்லூரி வாசலில் வந்து நின்ற மதி... அந்த வளாகத்தையே சுற்றி பார்த்தாள். அப்பொழுது “ஹாய்“ என்ற குரல் கேட்க திரும்பியவள் அங்கு நிற்றிருந்தவளை யோசனையாகப் பார்த்தாள்...

“ஐ ஆம் சுபி... பஸ்ட் இயர் எம்.எஸ்சி.(ஐடி)... நியூ அட்மிஷன்“ என்றபடி தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள் சுபி என்ற சுபிக்க்ஷா.

அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவள் “ஐ ஆம் சபர்மதி. நியூ அட்மிஷன்... எம்.எஸ்சி.(ஐடி)“ தன்னை அறிமுகபடுத்திக் கையைக் கொடுக்க...

கையை பிடித்த சுபி “நீ ரொம்ப அழகா இருக்க மதி. மதின்னு அழைக்கலாம் தானே“ என்றபடி அந்த நொடியில் இருந்து இருவரும் நண்பர்களாகினர்.

முதல் நாள் காலேஜ் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்துவதிலேயே கழிந்தது.

மாலை கல்லூரி வாசலில் மதியும், சுபியும் நிற்க... அந்த நேரம் ஒலித்தது மதியின் கைபேசி, ஸ்வைப் செய்து காதுக்கு கொடுக்க “காலேஜ் முடிந்ததா மதிக்குட்டி?“ கைபேசியில் ஒலித்தது இந்தர் குரல்.

“ஆமா... நீ எங்க இருக்க?“

“அது வந்து மதிக்குட்டி... நான் முக்கிய வேலையில் ஆபிஸ்ல மாட்டிகிட்டேன்... பக்கத்துல ஒரு கோவில் இருக்கும் அங்க வெயிட் பண்ணுறியா? நான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல அங்கே வந்திடுறேன்“

“நினச்சேன்... காலையில் நீ அப்படிப் பீலா விடும்போதே தெரியும்டா எனக்கு... பத்து நிமிஷம்னு சொல்லுற, எந்தப் பத்து நிமிசத்தை நான் கணக்கில் எடுக்கிறது. இன்னைக்கா, நாளைக்கா, உன்னோட பத்து நிமிஷம்னு பார்த்தா... நாளைக்கு இதே நேரம்னு அர்த்தம்... சொன்ன நேரத்துக்கு ஒரு நாளாவது நீ வந்திருக்கியா?”

“இல்ல... இல்ல... நீ வேணும்ன்னா பாரு... இன்னைக்குக் கரெக்ட்டா வந்திடுவேன். அப்படி வரலன்னா நான் நாளைக்கு உனக்குச் சமையல் பண்ணி தாரேன், டீல் ஓகே வா?“

“இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல. உன் சமையலை யாரு திங்கிறது... உன் பாட்டிக்கு வேணா ஆக்கிபோடு... சரி கோவிலுக்கு எந்தப் பக்கமா போகணும்“

செல்லும் பாதையைக் கூறினான் இந்தர்.

“சரி வச்சிடுறேன்... நேரத்தோடு என்னை வீட்டில் போய்ச் சேர்த்திடு“ என்றபடி அழைப்பை நிறுத்தினாள் அவள்.

“யாருப்பா அது... உனக்குக் கிடைச்சிருக்கும் அடிமையா“ இத்தனை நேரம் இருவரும் பேசியதை கேட்டபடி மென்மையான சிரிப்புடன் கேட்டாள் சுபி.

“இல்ல...இல்ல... அடிமையெல்லாம் இல்ல... எனக்கு எல்லாமே அவன் தான்... சிம்பிளா சொல்லணும்னா என்னோட உயிர்.... சரி நான் கிளம்புறேன்... உனக்கும் பஸ் வருது பாரு“ என்றபடி கோவில் நோக்கி நடந்தாள் மதி.

இருவரும் பேசுவதைக் கேட்ட சுபி மனதில் ‘நல்ல கணவன்... மனைவி’ என்ற எண்ணமே ஓடியது. அவள் கழுத்தில் கிடந்த தாலிக்கும்... அவளின் உயிர் என்று கூறிய வார்த்தையில் உள்ள பாசத்தையும் கண்டு உறுதியாக எண்ணியவள்... தனது பஸ்சில் ஏறிக் கொண்டாள்...

அவர்கள் இருவரின் சண்டைகளையும்... பாசத்தையும் காணும் அவர்களின் ஊர் மக்கள் மதியின் தந்தையிடம் ”ரெண்டு பேரும் அத்தனை பாசமா பழகுறாங்க... வளர்ந்ததும் ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடித்து உங்க கூடவே வைத்துக் கொள்ளுங்கள்“ என்பார்கள்...

“அது என்ன? மாமா பொண்ணு கூடப் பாசமா இருந்தா உடனே கல்யாணம் பண்ணணுமா? எவன் சொன்னான் அப்படி... இவள் என் மாமா பொண்ணு என்பதையும் தாண்டிய பந்தம் ஒன்று எங்களுக்குள் இருக்கு. அது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் புரிந்தால் போதும்.

யாருக்கும் நான் விளக்க வேண்டியதில்லை... அவளுக்கு ஒன்னுன்னா நான் துணை இருப்பேன்... எனக்கு ஒன்னுன்னா அவள் துணை இருப்பாள் அதற்குக் கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை... அவனை அவள் நம்புகிறாள்... இவளை அவன் நம்புகிறான். இதைத் தவிர வேறு என்ன வேண்டும்“

அவன் வார்த்தைகளை நினைத்தபடியே இதழ்களில் புன்னகை தவழ... சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்தபடி கோவில் உள் நுழையும் பொழுது மீண்டும் அவளை அழைத்தது அவளின் அலைபேசி.

அதைப் பார்த்தவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது... திருவாரூரில் இருந்து அழைத்திருந்தார் அவளின் அப்பா சத்தியநாதன்.

“சொல்லுங்கப்பா“ என்றாள் சபர்மதி.

“வீட்டுக்கு வந்துட்டியாம்மா... பஸ்ட் டே காலேஜ் எப்படி இருந்தது?“

“இல்லாப்பா இன்னும் வரல... காலேஜ் நல்லா இருக்குப்பா. இன்னைக்கு எனக்கு ஒரு சூப்பர் பிரண்ட் கிடைச்சாப்பா பேரு சுபி“

அப்பாவிற்குத் தெரியாமல்... அவரிடம் சொல்லாமல் அவள் எதுவும் செய்வதில்லை. அதற்கான அவசியமும் இருந்ததில்லை. அவளைப் பற்றிச் சரியாகப் புரிந்து வைத்திருப்பவர் அவர்.

இந்தரையும், இவளையும் பற்றி யார் கூறியதையும் கேட்காமல் தன் வளர்ப்பின் மேல் நம்பிக்கை கொண்டு இருவரையும் நம்பியவர். இப்பொழுதும் அவனை நம்பி தன் மகளை இங்கு அனுப்பியவர். எல்லா விசயத்திலும் தன் எல்லைகள் எது என்று அவளுக்குத் தெரியும் என்ற நம்பிக்கை. இருவரின் மேல் இருக்கும் அசையா நம்பிக்கை.

“அப்படியாம்மா! எங்கே, உன் பிரண்ட்கிட்ட போன் கொடு... உன் பிரண்ட் அப்பாவுக்கும்
பிரண்ட் தானே“


“அவள் போய் விட்டாள் அப்பா... இந்தர் பத்து நிமிடத்தில் வருவேன் என்று கூறி என்னைப் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு வர கூறினான்“

“இந்தர் பத்து நிமிடத்தில் வருவானா? அது அவனால் முடியாதே“

“ஆமாப்பா. நானும் அப்படித் தான் சொன்னேன்... அதுக்கு இன்னைக்கு அவன் சொன்னதைச் செய்யவில்லை என்றால்... நாளை அவன் எனக்குச் சமையல் செய்து தருவானாம்“ கடுப்புடன் மொழிந்தாள் மகள்.

“ஹா... ஹா... அது சரி... அப்போ நாளை அவன் சமையல் என்று கூறு“ சிரித்தார் அப்பா.

“அப்பா... அவன் சமையலை அவன் கிழவிக்குப் போட சொல்லிட்டேன்“ பல்லைக் கடித்தாள் மகள்.

“அப்படிச் சொல்லாதடா... உனக்கும் பாட்டி தானே“ சமாதானபடுத்தினார் அப்பா.

“காலையில் இங்கு என்னை அழைத்து வரும் பொழுதே கிழவி கிண்டலாகச் சிரித்தது. அதிலும் அவன் கிட்ட வீட்டுக்கு வர எந்தப் பஸ் என்று கேட்கவும்... நானே உன்னைக் கூட்டிட்டு வருவேன் என்று அவன் சொல்லும் போதே கிழவி வாய் பொத்தி சிரித்தது அப்பொழுதே என்னிடம் சொல்லியிருந்தால் அவனை அடித்தாவது வீட்டுக்கு திரும்பி வரும் வழியைக் கேட்டிருப்பேன்ல“

“அப்படிச் சொல்லாதேடா... அவன் உன் அத்தான்... கொஞ்சமாவது மரியாதை கொடுடா“

“ஆமா... பெரிய சொத்தான். வீட்டுக்கு போய் இருக்கு கிழவிக்கும், அவனுக்கும்“

“எதுனாலும் பாத்து செய்டா... பாட்டி வயதானவர்“ புன்னகையை அடக்கியபடி கூறினார் அப்பா.

“அப்பா“ என்றபடி காலை தரையில் உதைக்க...

அவளிடம் இருந்து போனை பறித்த இந்தர் “மாமா... எப்படித் தான் இந்தப் பிசாசை சமாளிக்கப் போறேனோ“ போலியாகச் சலித்தான்.

“டேய்“ எனக் கத்தியபடி அவனின் தலை முடியை பிடித்து ஆட்ட...

“மாமா... என்னை இந்த ராக்சஷி கிட்ட இருந்து காப்பாத்துங்க“ தன்னை விடுவிக்கப் போராடியபடி மாமாவிடம் குற்ற பத்திரிக்கை வாசித்தான் இந்தர்.

பல நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தார் அந்தப் பெரியவர்.

“கலி காலம்... எங்க வச்சு என்ன பண்ணணும்னு தெரியல... பெருமானே“ என்ற குரல் கேட்டு அவனின் தலைமுடிய விட்ட மதி... அவனை முறைத்துப் பார்த்தாள்.

“மாமா அப்புறம் பேசுறேன்“ என்றபடி நமட்டு சிரிப்புடன் அவளைப் பார்த்தவன். அவளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான்.

“எரும... ஏன்டா லேட்? உன் ஆளை பார்க்க போனியா என்ன?” கிண்டலாகக் கேட்டவள், “என்னாச்சி இந்தர்... உன்னோட ஆள் பத்தி ஒண்ணுமே சொல்லாம வர... எங்கே அந்த ரதி பத்தி கதையை விடு பாப்போம்“

“பேசாம வரமாட்டியா நீ“ எரிச்சலாக அவளிடம் காய்ந்தவன் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டான்.

“டேய் என்னடா ரொம்பத் தான் பண்ணுற“ சலித்தவள் “ஆமா... இப்போ எங்கே இருகிறாளாம் அவள்... என் கல்யாணத்தன்னைக்குக் கூட அவளைக் காணுமே“ பேச்சின் ஆர்வத்தில் தான் பேசுவதையே கவனிக்காமல் பேச...

“அட! எவடா இவ... கொஞ்சம் நேரம் அந்த ஜிப்பை போட்டு தான் வையேன்... சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டு“ சலித்தவன் மனம் மிகவும் கலங்கி இருந்தது. அவளின் எதிர்காலத்தை எண்ணி...

“போடா... ரொம்பத் தான் பண்ணுற“ கூறியவள் மனமோ ‘இந்தர்க்கும், ரதிக்கும் இடையில் எதுவோ சரியில்லை’ அவள் மனம் அவனுக்காகப் பரிதவித்தது.

வழியில் இருந்த சிக்னலில் அவன் தன் வண்டியை நிறுத்திய போது அவனருகில் வந்து நின்றது அந்த கார். அவன் ரசித்து... ரசித்து ஏறியமர்ந்து ஊரை வலம் வந்த கார்... அவன் உயிர் நண்பனின் கார்.

கார் வந்து நிற்கவும், மெதுவாகத் தலையைத் திருப்பிப் பார்த்த இந்தர் முகத்தில் கோபமும், அழுத்தமும் பரவியது. மனதில் எழுந்த அழுத்தத்துடன் மீண்டும் அவனைப் பார்த்த நொடி அந்தக் கார்காரனும் இவனை நோக்கி திரும்பினான்.

இந்தரை பார்த்த நொடி அந்தக் கார்காரனுக்குக் கோபம் துளிர்க்க... கார் ஹாரனை வேகமாக அழுத்தினான்..

“எவன்டா இது இப்படி ஹாரனை அழுத்துறது... சிக்னல் விழும் வர வெயிட் பண்ண முடியாதவன்லாம் எதுக்குக் கார்ல வாரானாம்“ காதை அடைத்துக் கொண்டே அவனைத் திட்டியடி அந்தப் பக்கமாகத் திரும்பி பார்த்தாள் மதி...

அவளை, அவள் முகத்தை ஒரு நொடி பார்த்தவன் சிக்னல் விழும் முன் வேகமாகக் காரை எடுத்துச் சென்றான்.

அந்த நேரம் ஏனோ அங்கு நிற்க முடியாமல் இந்தர் எரிச்சலுடன் சிக்னல் விளக்கை பார்க்க, அந்த நேரம் சிக்னல் நிறம் மாற, பைக்கை வேகமாக உதைத்து கிளம்பியவன் அந்தக் கார்காரன் சென்ற எதிர் திசையில் வேகமாகப் பைக்கை செலுத்தினான்.

மனம் மிகவும் கொதித்துக் கொண்டிருந்தது, வாழ்நாளில் யார் முகத்தில் முழிக்கக் கூடாது என்று எண்ணினானோ அவனே அவன் கண் முன்னால் வரும் விந்தையை என்ன சொல்வதாம்?
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
‘அவன் அன்று கூறியது போல் அவளைத் திருமணம் செய்துவிட்டானா?, அப்போ ரதியின் வாழ்க்கை?’ ஏனோ அவளைப் பார்த்த நொடியில் இருந்து கெளதம் மனம் தவித்தது. அவளுக்காகவா? ரதிக்காகவா? அவனே அறியான்.

‘டேய் கிச்சா’ என்ற குரல் காதில் கேட்க, ஒரு நொடி அதிர்ந்து விழித்து காரை நிறுத்தியவன், எங்கிலும் சுற்றிப் பார்த்தான்.

"என்னாச்சுடா கெளதம்"


"ஒன்னும் இல்லடா" தலையை அழுந்த கோதியவன் “நிலாக்குட்டி உன்னை எப்படியும் கண்டுப்பிடித்து, என்னுள் அணைத்துக் கொள்வேன்” முணுமுணுத்தவன் காரை வேகமாகச் செலுத்தி சென்றான்.

காலையில் வீட்டில் இருந்து கோபமாகக் கிளம்பியவன் கடற்கரைக்குச் சென்று அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவன் முகத்தையே பார்த்திருந்த அஷோக் இருவருக்கும் உணவு வாங்கி வர, உண்ண மறுத்துவிட்டான் கெளதம். இத்தனை நேரம் அங்கேயே சுற்றிவிட்டு வீட்டுக்கு இப்பொழுது தான் கிளம்புகிறார்கள்...

கார் வேகமெடுப்பதைக் கண்ட அஷோக் ‘இவனுக்கு என்ன தான் ஆச்சோ தெரியல, முதல்ல அத்தை கிட்ட சொல்லி மந்திரிக்கச் சொல்லணும்’ மனதில் எண்ணிக் கொண்டான்.

“டேய்ஈஈஈ”

“ஏண்டா எரும இப்படிக் கத்துற, நான் பக்கத்துல தான இருக்கேன், என்னமோ பாகிஸ்தான்ல இருக்க மாதிரி இப்படிக் கத்துற”

“நான் கத்துன கத்தலுக்கு இந்நேரத்துக்குப் பாகிஸ்தான்காரன் கூட இங்க கிளம்பியிருப்பான், இங்க பக்கத்தில இருக்க நீ செவிடன் மாதிரி இருக்க”

‘ஐய்யய்யோ, ஓவரா தான் போறமோ, காலையில் இருந்தே ஒரு மார்க்கமா இருக்கான், இவன் கூடச் சேர்ந்து நாமளும் அப்படி ஆகிட்டோம் போல’ எண்ணியவன் “என்ன சொல்லு” விறைப்பாகவே கேட்டான்.

“காரை எடுத்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு, நான் ஆட்டோ பிடிச்சு அப்புறமா வாறேன்” என்றவன் அஷோக் பதில் கூறும் முன் எதிர் திசையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

‘இவனை எல்லாம் என் அத்தை என்ன நேரத்தில தான் பெத்துச்சோ, வச்சு செய்யுறான்யா... இதுல வீட்டுக்கு போனா அந்தக் கடாமீசை வேற கேள்வி மேல் கேள்வி கேட்குமே’ புலம்பியவன் காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி பயணித்தான்.


Next Epi Tuesday.......
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top