Latest Episode Kathal Solla Vanthen ..! EPI - 5

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் நண்பர்களே.... ....

காதல் சொல்ல வந்தேன்..!! கதையின் அடுத்த காதல் (5) போடுறேன் படிச்சு உங்க லைக் & கமெண்ட்ஸ் சொல்லுங்க... இதுவரை படிச்சு லைக் & கமெண்ட்ஸ் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பட்டூஸ்... கௌதம் இன்னைக்கு அவன் ஆளை காலேஜ்ல பார்க்க போகிறான் ;);).... அடுத்த எபி வெள்ளி இல்லன்னா திங்கள் தாரேன் நண்பர்களே... வீட்டுல கல்யாணம்... ...சோ மன்னிச்சு :)...

காதல் – 5

என்றும் நீ அளித்திடும் முத்தம்

இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளத்தில்!

நீ என் பக்கத்தில் இருந்தால்

என்னுள்ளம் என்றும் சொர்க்கத்தில்!

பறவைகள் மிக உற்சாகமாக அந்த நாளின் விடியலை கொண்டாட சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. மனம் முழுக்க சந்தோசத்துடன் தன் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தாள் மதி.

குளித்து முடித்து, அழகான மெரூன் நிற காலர் வைத்த சுடியை அணிந்துக் கொண்டாள். பூ வேலைப்பாடுடன் கூடிய துப்பட்டாவை ஒரு பக்கமாக தவழ விட்டவள், தன்னை சிறிதாக அலங்கரித்து கண்ணாடியில் பார்த்தாள்.

நேற்றே அவள் கிளாஸ் பிள்ளைகள் கூறி விட்டனர் ‘ஜி.கே சார் நாளை நமக்கு வருவார், அதற்காக ஸ்பெஷலாக’ கிளம்பி வர கூறியிருந்தனர்.

மதிக்கு அதில் உடன்பாடில்லை, ஆனால் அவளின் கனவு அவளை அத்தனை உற்சாகமாக வைத்திருந்தது. ஏன் என்றே தெரியவில்லை? கடந்த சில மாதமாக அவளை அந்த கனவு துரத்துகிறது. அந்த முத்தம் அது அவளுள் ஏற்படுத்தும் தாக்கம்! அம்மம்மா! வார்த்தையால் சொல்லமுடியாது. ஏனோ! இன்று அதிக தாக்கம் அவளிடம்!

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த இந்தர், மதி அறையையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நாகு,

"டேய், என்ன அவள் அறையையே பார்த்துட்டு இருக்க, சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, அவளை நான் இன்னைக்கு காலேஜ் கொண்டு விடுறேன்"

"என்ன! நீயா?" அதிர்ந்து விழித்தவன்,

"அதெல்லாம் வேண்டாம், நானே கொண்டு விடுறேன்" என்றவன் மதி அறையின் வாசலில் நின்று " மதிக்குட்டி, மதிக்குட்டி" என அழைக்க,

"இதோ வாரேன்டா?"

உற்சாகமாக, முகத்தில் உறையா புன்னகையுடன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டே வெளியில் வந்தவளை யோசனையாக பார்த்தவன் “என்ன மீண்டும் கனவா?”

மெதுவாக தலையசத்தவள், அவனுடன் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தாள்.

இதுவரை இந்தரிடம் அவள் எதுவும் மறைத்தது இல்லை. அப்படி தான் இந்த கனவையும் கூறி இருந்தாள்.

இதழில் உறைந்த புன்னகையுடன் உணவருந்துவதை பார்த்த இந்தர் மனம் மகிழ்வதாய். 'இதன் மூலமாவது தன் தேவதை சந்தோசமாக இருக்கிறாளே' அவளைப் பார்த்து சிரித்தவன், அவளை அழைத்துக் கொண்டு காலேஜ் விட்டு, அப்படியே அவனும் ஆபிஸ் நோக்கி சென்றான்.

மதி அவளின் கிளாஸ் ரூம் நோக்கி செல்ல, அங்கு முழுவதும் ஜி.கே புராணம் தான். அவனின் புகழை பரப்பிக் கொண்டிருந்தது, வசந்தி என்பவள்.

பி.எஸ்சி (ஐடி) அங்கயே முடித்துக் கொண்டு, இப்பொழுது எம்.எஸ்சி (ஐடி) அங்கயே படிக்க வந்துவிட்டாள். அவளின் இறுதியாண்டு கடைசியில் தான் அவன் அங்கு வேலைக்கு வந்தானாம், அதனால் அடுத்த படிப்பையையும் இங்கே தொடர்கிறாளாம்? அவளே பீத்திக் கொள்கிறாள்.

வந்த நாள் முதல் கொண்டு, அவள் மனதில் இடம் பிடித்து விட்டானாம், நேரம் தவறாமை, அவன் நடை, உடை, அவன் பார்வை, அந்த சிரிப்பு, என எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்குமாம்.

தேவை இல்லாமல் யாரிடமும் பேசமாட்டானாம், மிகவும் யோசித்து, அளவெடுத்து தான் பேசுவானாம், வயது முப்பதாம், முக்கியமாக இன்னும் திருமணம் ஆகலியாம், இது அத்தனையும் நேற்று ஒரு நாளில் மதி காதில் வந்து விழுந்த விசயங்கள்.

“ஹாய் மதி, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க? என்ன ஜி.கே.சார் பார்க்கும் ஆர்வமா?” அவள் தான் அந்த வசந்தி தான், கிண்டலாக கேள்வி எழுப்பினாள்.

அவளை முறைத்த சுபி “இதை அவள் கணவர் முன் கேட்டிருந்தால் தெரியும் சேதி”

அவளை பார்த்து மெதுவாக சிரித்த மதி தன் இருக்கையில் அமர்ந்தாள். அவளிடம் மெதுவாக குனிந்த சுபி,

“உனக்கு கோபமே வராதா? அவள் லூசு மாதிரி கேட்குறா நீ அவளை பார்த்து சிரிச்சிட்டு இருக்க?”

“சில கேள்விகளுக்கு நாம் பதில் கூறாமல் இருப்பது தான் நல்லது. அதிலும் இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தேவையே இல்ல?” மெதுவாக சிரிப்புடன் கூறியவள், கையில் வைத்திருந்த நோட்டில் தன் பெயரை எழுத ஆரம்பித்தாள்.

“நீ எப்படி இப்படி இருக்க மதி?”

“எப்படி இருக்கேன், உன்னை போல ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண், ஒரு வாய்”

“போதும்... போதும்... நிறுத்து, தெரியாம கேட்டுட்டேன்” கையெடுத்து கும்பிட்டவளைப் பார்த்து, தெற்றுப்பல் தெரிய பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள் மதி.

"சிரிக்கும் பொழுது நீ இன்னும் அழகா இருக்க மதி" சுபி அவளின் கன்னம் கிள்ளி கூற,

"சும்மா இருக்க மாட்டியா நீ"

"நான் பொண்ணா போயிட்டேன் அது தான் சும்மா இருக்கிறேன். இதுவே பையனாக இருந்தால் அப்பவே உன் கன்னத்தில் நச்சுன்னு ஒரு கிஸ் அடிச்சிருப்பேன்"

"கிஸ்ஸா!" அதிர்ந்து விழித்தவள் கன்னத்தில் கைவைத்து சிரிக்க,

"பாரு... பாரு... கன்னம் அப்படியே ரெட்டிஷ்ஷா மாறுது"

"ஒரு நிமிஷம் கூட உன்னால பேசாமல் இருக்க முடியாதா சுபி" சிரிப்புடன் கேட்டாள் மதி.

"இப்படி அழகான பொண்ணு பக்கத்தில் இருக்கும் பொழுது எப்படி பேசாமல் இருப்பதாம்?"

"கொஞ்ச நேரம் சும்மா தான் இரேன்டி" சிரிப்புடன் கூறியபடி வாசல் பக்கமாய் திரும்ப, வாசலில் கைகளை கட்டியபடி அவர்களையே பார்த்திருந்தான் அவர்களின் ஜி.கே.சார்.

அவள் முகத்தை பார்த்தவன், அப்படியே அதிர்ந்து நின்று விட்டான், கட்டியிருந்த கை தானாக கீழிறங்க, 'இவள்... இவள் எப்படி இங்கே? இந்தர் எங்கே?' தன்னை சமாளித்தவன் அவளையே பார்த்துக்கொண்டே உள்ளே
நுழைந்தான்.


"ஏய்! ஜி.கே. சார்" வசந்தி தான் உற்சாக குரல் கொடுத்தாள்,

"ஒஹ். இவர் தான் அவரா?" சுபியிடம் மெதுவாக கிசுகிசுத்தவள். அவனை ஆராய்ந்தாள்,

'இவன் முகத்தை பார்த்து அடுத்த வருடத்தையும் இங்கேயே படிக்க வந்திருக்கிறாளே? ஐந்தறிவு ஜீவன் வசந்தி. அப்படி இவன் கிட்ட என்ன இருக்கு?' யோசனையாக அவனைப் பார்த்தாள்.

‘பல்க் பாடியாகவும் இல்ல. மைதா மாவு கலரும் இல்ல, சிரிக்கவும் தெரியாது போல, சிரிச்சா அழகா இருப்பானோ?'

அவனைப் பற்றி இவள் சிந்தித்துக் கொண்டிருக்க, கடுங்கோபத்துக்கு ஆளானான் கௌதம்.

"சபர்மதி" மூன்றாவது முறையாக அழுத்தி அழைத்தான்.

"ஏய் மதி" அவளை தட்டி எழுப்பினாள் சுபி.

"என்னடி?"

"அங்க பாரு, சார் உன்னை தான் முறைக்கிறார்" சுபி மெதுவாக கூற,

'ஐய்யய்யயோ, மாட்டிகிட்டோமா?" வடிவேல் போல் முழித்தவள், எழுந்து நின்று "சாரி... சார்"

ஏற்கனவே அவளை இங்கு எதிர் பார்க்காததில் அதிர்ந்து இருந்தவன், இப்பொழுது அவளின் அலட்சிய போக்கு அவனை கோபத்துக்கு ஆளாக்கியது.

“உன்னை எல்லாம் யார் படிக்க வான்னு இங்க அழைத்தது? தினமும் இப்படி கிளம்பி வரவேண்டியது, கனவுலேயே டைம்மை போக்க வேண்டியது, அப்புறம் எல்லாம் அரியர் வைத்து காலேஜ் மானத்தை வாங்க வேண்டியது” கடுப்புடன் மொழிந்தவன், அவளை முறைத்து வருகை பதிவேட்டை டேபிளில் வீசியவன், அவளை பார்த்துக் கொண்டே வெளியில் சென்றான்.

அவன் பேசியதில் அதிர்ந்து அப்படியே நின்றாள் மதி. மொத்த வகுப்பறையும் அவளையே பார்த்திருந்தது. இதற்கெல்லாம் அசருவாளா மதி, செல்லும் அவனை முறைத்தவள்,

“லூசாடி உன் ஜி.கே. சார். அப்படி, இப்படின்னு புலம்பின, யார் கிட்ட என்ன பேசணும் என்ற ஒரு மேனர்ஸ் கூட இல்ல, இன்னைக்கு தான் முதல் முறையா என்னை பாக்கிறார் அந்த பேச்சு பேசிட்டு போகிறார். இது தான் அவர் யோசித்து பேசுறதா?” வசந்தியிடம் சாட,

“ஐயோ, நீ ஏன்டி கோபப்படுற, சார் ஏதாவது டென்ஷன்ல பேசியிருப்பார்”

அவளை பயங்கரமாக முறைத்தவள் “வாடி” என கையோடு சுபியை அழைத்துக் கொண்டு லைப்ரரி நோக்கி சென்றாள்.

‘டேய் கெளதம், எதுக்கு நீ அவளை அப்படி திட்டுன, உனக்கு என்ன தான் ஆச்சு, ஒரு பொண்ணை எல்லார் முன்னாடியும் பேசுவியா?’ அவனின் மனது அவனை சாடியது.

ஏன்டா, நீ இப்படி மாறிட்ட’ அவனையே அவன் கொட்ட, ‘நாளைக்கு அவ கிட்ட சாரி கேட்கணும்’ மனதில் எண்ணிக் கொண்டவன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றான்.

ஆனாலும் மனது அவளையே சுற்றி வந்தது. ‘இந்தர், அன்று சொன்னது போல அவளையே கல்யாணம் பண்ணிட்டானா? எப்படி கண்டு பிடிக்கிறது?’ யோசித்தவன் தன் இருக்கையில் அமர்ந்தான்.

“என்னாச்சுடா, போன ஸ்பீடுல வந்துட்ட”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அஷோக், நீ கொஞ்சம் என் கிளாஸ் போயேன், நான் உன் ஹவர்ல அங்கு போகிறேன்”

“ஏன்... என்னாச்சி” அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்து கேட்க,

அவனைப் பார்த்து கோபி முறைத்த முறைப்பில், எழுந்து ஓடியே விட்டான் அஷோக்.

‘இந்தருக்கும், அவளுக்கும் திருமணம் முடிந்து விட்டதா?, இதை பற்றி எப்படி அறிவது’ பலத்த யோசனையில் இருந்தான் கெளதம்.

‘நீ அவளை அன்னைக்கே வேண்டாம்னு தானே வந்த?’ அவனின் மனது கேள்வியெழுப்ப,

‘நான் எங்கே அவளை வேண்டாம்னு சொன்னேன், அவன் தான், அந்த இந்தர் தான் எல்லாத்துக்கும் காரணம்’

‘நீ பண்ணுன வேலைக்கு அவன் அப்படி தான் பேசுவான், உடனே நீ உன் பொண்டாட்டியை விட்டு வந்திருவியா?’

‘பொண்டாட்டியா? அவளா? இல்லை என்னோட நிலா தான் என் வைய்ப்’

‘அப்போ ஏன் இவளை பற்றி அப்படி ஆர்வமா விசாரிக்க துடிக்கிற’

‘அது...’

‘என்ன அது?’

‘ஒருவேளை சீக்கிரமா, என் நிலாவை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்றால், இவளுக்கு டிவோர்ஸ் கொடுக்கிறதுக்கு முன்னால், அவளை நான் திருமணம் செய்ய முடியாதில்லையா?’

‘முதலில் நீ, உன் அவளை கண்டுபிடி, அதற்கு பிறகு இவளை பற்றி விசாரி’

‘இல்லை... இல்லை... பஸ்ட் இவளை பற்றி அறிந்த பிறகு தான் என்னால் நிம்மதியாக என் நிலாவை கண்டுபிடிக்க முடியும்’ மனதிடம் கூறியவன், நினைவு வந்தவனாக, வேகமாக தன் மேஜை டிராயரை திறந்து உள்ளிருந்த சில பேப்பரை எடுத்தவன் அஷோக்கை நோக்கி சென்றான்.

அப்பொழுது தான் சுபியும், மதியும் லைப்ரரி விட்டு மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தனர். கெளதம் கண்கள் ஆவலாக அவள் காலை ஆராய்ந்தது, அவன் அவளுக்கு தாலி மட்டுமே கட்டினான்.

‘இப்பொழுது இந்தர் அவளை திருமணம் செய்திருந்தால் கண்டிப்பாக மெட்டி அணிவித்திருப்பான்’ என்ற நோக்கத்தில் அவளின் காலை பார்க்க, அவளோ கட் ஷூ அணிந்து அவனின் எண்ணத்தில் ஒரு கூடை மண்ணை அள்ளிப் போட்டாள்.

அஷோக்கை அங்கு எதிர் பார்க்காத சுபி அதிர்ந்து நின்றது ஒரு நிமிடம் தான். பின் தன்னை தானே சாமாளித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“மிஸ். சபர்மதி, ஐ ஆம் சாரி” என்றவன் அசோக்கிடம், ஏதோ பேசி வெளியே சென்றான்.

செல்லும் அவனையே ஆச்சரியமாக பார்த்திருந்தாள் மதி.

“நான் சொன்னேன்ல சார் நல்லவர்ன்னு” அதே வசந்தி தான் கூறினாள்.

மாலை ஆகவே எல்லாரும் கிளம்பவே வெளியில் வந்த மதி, தனது செல்லை எடுத்து நாகுவை அழைத்தாள்.
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“ஹாலோ... நாகு ஸ்பீகிங்?” மதியின் நம்பர் என அறிந்தும் நாகு கிண்டலடிக்க,

‘வயசானாலும் கிழவிக்கு குசும்பு குறையல’ பல்லை கடித்தவள் “பாட்டி, நான் ரொம்ப கோபமா இருக்கேன், ஷாப்பிங் போகணும் இந்தரை வரச் சொல்லு”

“ஏன்? ஏன்? கோபமா இருக்க? யார் என்ன சொன்னா?

“ஒரு வாத்தி என்னை ரொம்ப கடுப்பேத்திட்டான், நான் ஷாப்பிங் போனா தான் என் கோபம் குறையும்”

‘எவடா இவ. கடுப்பானதுக்கெல்லாம் ஷாப்பிங் போறா? அந்த வாத்தியை முதலில் சொல்லணும்’ புலம்பியவர், “சரி... சரி வாரேன்” எனக் கூறி அழைப்பை நிறுத்தினார்.

மதி பேசுவதையே மரத்தின் பின்னால் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த கெளதம் அவளை பற்றி அறிய அவள் பின்னே செல்ல முடிவெடுத்து அப்படியே அங்கேயே தேங்கிக் கொண்டான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் நாகு, இந்தர் பைக்கை எடுத்துக் கொண்டு வர, கெளதம் மிகவும் பரபரப்பானான். லேடி ஒருவர் பைக்கில் வரவுமே அவன் மனது அப்படியே அவன் நிலாவின் பாட்டியை நினைவுப்படுத்தியது.

அவன் நிலாவின் பாட்டியும் இப்படி தான் நிலாவை பைக்கில் வைத்து சுற்றுவார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் தெரியாமல் போக, மெதுவாக காரை எடுத்தவன் அவர்கள் பின்னே சென்றான்.

அந்த குறிப்பிட்ட ஷாபிங்க் மாலில் பைக்கை நிறுத்தியவர் ஹெல்மெட்டை கழட்டி பைக்கில் வைத்து விட்டு, கழுத்தை சுற்றி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து தோளில் வழியவிட்டபடியே மதியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

அவர்கள் பின்னே சென்று, அவர்களுக்கு முன் இருந்த ஷெல்பில் எதையோ தேடுவதைப் போல் பாவ்லா செய்தபடியே நாகுவை பார்க்க, அவன் மேல் ஆயிரம் கூடை பூ விழுந்ததைப் போல் உணர்ந்தான்.

அந்த நொடி அவனின் இத்தனை வருட தேடல் ஒரு முடிவுக்கு வந்ததைப் போல் உணர்ந்தான். இமைக்கக் கூட மறந்து அப்படியே நின்று விட்டான். பின்னே இத்தனை வருடம் தேடிய அவனின் காதலியே, மனைவியாக அமையப்பெற்றால் அப்படியே பிரீஸ் ஆகி நின்றுவிட்டான்.

இடைஞ்சலாக நின்ற அவனை வருவோர், போவோர் முறைத்ததையோ, ஒரு மாதிரியாகப் பார்த்ததையோ, “லூசாய்யா” என்று கேட்டதையோ எதையுமே அவன் கண்டு கொள்ளவில்லை.

அவளைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் “நிலா” எனக் கூச்சலிட, அவனுக்கு முன்னே நின்ற மதியோ தன் கண்களை எங்கும் சுழலவிட்டாள். கனவில் வந்த அதே அழைப்பு யோசனையுடனே அந்த மாலையே பார்த்திருந்தாள்.

உடனே தன்னை முழுவதுமாக அந்த ஷெல்பில் மறைத்துக் கொண்டான் கெளதம் கிருஷ்ணா.

எங்கும் சுழல விட்ட அந்தத் திராட்சை கண்களை இன்று தான் நன்றாகப் பார்க்கிறான். உரிமையுடன் தொடர்ந்தன அவன் விழிகள். அந்தக் கண்கள் அவனை அதே இடத்தில் கட்டிப் போட்டன, அந்த நீள் விழிகள், ஆழ்கடலில் அங்கும் இங்கும் அசைகையில் கெளதம் மூச்சடைத்துப் போனான்.

“என்னா கண்ணுடா சாமி” புலம்பிக் கொண்டான். பிரம்மன் அந்தக் கண்களை வரைகையில் முழுப் போதையில் இருந்திருப்பானோ? அதனால் தான் இப்படிப் போதையேற்றுகிறதா?

‘யப்பா காந்த விழிகள்’ மனதுக்குள் எண்ணிக் கொண்டான். ‘தாலிக் கட்டிய அன்று எப்படி இவளை அறியாமல் போனேன்? என் தேவதை என்று அறியாமல் போனேனே’ மனதில் அரற்றிக் கொண்டான்.

“நான் தான் உன் கிச்சா” அவள் முன் சென்று அறிமுகப்படுத்தலாமா? யோசிக்க, “டேய் கெளதம்” என்றபடி அவன் முன் வந்து நின்றான் அஷோக்.

“நீ என்னடா இங்க வந்த?”

“நீ தான, உன் பின்னாடி என்னை ஓடி வரவச்ச?”

“நானா?”

“நீயே தான்”

“தினமும் என்னைக் கூட்டிட்டு போவ, இன்னைக்கு என்னை விட்டு நீயா போனா, நான் விடுவனா? அது தான் ஒரு பையன் கிட்ட லிப்ட் கேட்டு உன் பின்னாடியே வந்துட்டேன்”

“ச்சீ... தூரப் போ, அவளை எங்கடா?”

“யாருடா?”

“உன் தங்கச்சி?”

“என்ன என் தங்கச்சியா? அது யாருடா எனக்குத் தெரியாம?”

“நீ விலகுடா நாயே?” அவனை இடித்துத் தள்ளியவன் அவள் இருந்த பக்கமாகப் பார்க்க அங்கு யாருமே இல்லை. “போடா உன்னால அவ போயிட்டா?” அவன் மேல் காய,

“என்னாச்சுடா, யாரு எங்க போனா?”

“ஒன்னும் இல்ல வா” அவனை அழைத்துக் கொண்டே நேராக மேல் மாடி இல்லா பார் நோக்கி சென்றான் கெளதம்.

அங்குச் சென்று பீர் பாட்டிலை பார்த்து லூசு மாதிரி சிரித்தவனை நோக்கி “டேய் என்னாச்சுடா உனக்கு” எனக் கேட்டான் அஷோக்.

“மச்சி பீர் அடிச்சா கிக்கா?”

“தெரிலையேடா?” பாவமாக முகத்தை வைத்துக் கூறினான் அஷோக்.

“மச்சி காதலிச்சா?” நேராக அடுத்த கேள்விக்கு தாவினான் கௌதம்.

“மச்சி, பீர் அடிச்சா கிக்கு.... காதல் வந்தா சீக்கு...” புலம்பியபடியே பாட்டிலை வாயில் சரித்தவன் ‘அவளுக்கும், அவனுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டா?’ மனம் முழுவதும் ஒட சீக்கு வந்த கோழி போல் தலையைத் தொங்க போட்டு அமர்ந்திருந்தான்.

‘இப்போ இவனுக்குக் காதல் வந்திச்சா? இல்ல சீக்கு வந்திச்சா?’ யோசனையாக அவனையே பார்த்திருந்தான் அஷோக்.
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top