• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! EPI -6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் ப்ரண்ட்ஸ்...

மீண்டும் நானே... சாரிப்பா நேத்து கொஞ்சம் பிஸி.....இன்னைக்கு அடுத்த காதல் போடுறேன் படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. நன்றி டியர்ஸ்..... போன பதிவுக்கு கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி டியர்ஸ்... சீக்கிரம் ரிப்ளை பண்ணுறேன்...

காதல் – 6

நீ ஒருவனே உலகமெனக் கரம் நீட்டினேன்...

என்னை ஏற்றுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்...

ஏற்றுக் கொள்வாயா?

வீட்டிற்கு வந்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான் கெளதம். அவன் அருகில் அவன் முகத்தையே வினோதமாகப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான் அஷோக்.

நீண்ட நாட்களுக்குப் பிறகான, மகனது சிரிப்புச் சத்தம் கமலாவை எட்ட வேகமாக அறையை விட்டு வெளியில் வந்தார்.

அவன் எதைப் பற்றியும் கவனிக்காமல் மீண்டும் சிரிக்க ஆசையாகப் பார்த்திருந்தார்.

அவரைப் பார்த்த அஷோக்கோ ‘பையனுக்கு லூசு பிடிச்ச சோகத்துல அத்தைக்கு ஏதாவது ஆகிட்டா?’ என்னும் விதமாகக் கமலாவையும், கௌதமையும் மாறி மாறிப் பார்த்திருந்தான்.

கண்களில் சிறு கண்ணீர் கூட வந்துவிட்டது மகனின் சிரிப்பை பார்த்து. இப்பொழுது அவரை வினோதமாகப் பார்ப்பது அஷோக் முறையாகிற்று.

பல வருடங்களாக இயந்திர தனமாக இருந்த மகன் கடந்த சில மாதங்களாக முழு இயந்திரமாகவே மாறிவிட்டிருந்தான். துபாய் வேலையை விட்டு ஏன்? சாதாரணக் காலேஜ் ப்ரொபசராக வேலை செய்கிறான் என்ற காரணமும் சொல்லாமல் ஏதோ கடமைக்கு வாழ்வதாக வாழ்ந்திருந்தான்.

முதல் முறையாக இன்று தான் அவன் உயிர்ப்பாக இருப்பது போல் அவர் கண்களுக்குத் தெரிந்தது.

“கெளதம்” ஆசையாக அழைத்தவர், அவனை நெருங்கி, அவன் முகத்தை வாஞ்சையாக வருடினார்.

தன் சிரிப்பை நிறுத்தியவன், தாயை அருகே நெருங்கி அமர வைத்து, அவர் மடியில் படுத்துக் கொண்டான். மகனது இந்தச் செய்கையில் அவர் கன்னத்தில் கண்ணீர் வழிய கண்களைத் துடைத்தபடி மகனது தலையை இதமாக வருடினார்.

“அம்மா” அவர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் மெதுவாக, தடுமாற்றத்துடன் அழைத்தான்.

“குடிச்சிருக்கியா கெளதம்?”

“ம்ம்... லைட்டா” தாயை வயிற்றோடு அணைத்துக் கொண்டான்.

அவர் கண்ணில் இருந்து வழிந்த நீர் அவன் கன்னத்தில் பட்டு தெறிக்க,

“மச்... இப்போ எதுக்கு அழுறீங்க?” மெதுவாகக் கடிந்து கொண்டான்.

‘அதான, இப்போ அத்தை எதுக்கு அழுறாங்க, பையன் இன்னைக்கா குடிக்கிறான், கொஞ்ச நாளாவே இப்படித் தானே அலைகிறான்’ மனதில் எண்ணிக் கொண்டான் அஷோக். வெளியில் சொன்னா அவனிடம் யார் அடி வாங்குவதாம்?

“என் பிள்ளையை இப்படிப் பார்த்து எத்தனை வருசமாச்சு” அவர் ஏக்கமாக உரைத்தார்.

‘எப்படி? குடிகாரனா பார்க்கவா?’ இதையும் மனதில் தான் எண்ணிக் கொண்டான் அஷோக்.

வேகமாக அவர் மடியில் இருந்து எழுந்தவன், தன் தலைகாணி அடியில் இருந்த படத்தை எடுத்து “அம்மா, இதைப் பாருங்க” அவர் கையில் அந்தப் படத்தைக் கொடுக்க, அதில் பார்வையைச் செலுத்தியவரின் முகம் அப்படியே வியப்பில் விரிந்தது.

“யாருப்பா இது...? எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு” ஆச்சரியமாகக் கேட்டார்.

‘நமக்குத் தெரியாம யாருடா இது?’ ஒரு காலை ஊன்றி எட்டிப் பார்க்க, ‘ஏதோ குழந்தை போல’ எண்ணியவன் ஷாக் அடித்தவன் போல் “டேய் எப்போ உனக்கு குழந்தைப் பிறந்திச்சுடா?” மனதில் எண்ணியதாக நினைத்து வெளியில் உளறிக் கொட்டினான் அஷோக்.

அவனை இருவரும் படு பயங்கரமாக முறைக்க, ‘அச்சோ உளறிட்டோமோ’ எண்ணியவனாக இரண்டடி பின்னால் நகர்ந்தான் அஷோக்.

“இவ பேரு சபர்மதி. உங்க பையன் வாழ்கையில் விளக்கேத்த வரும் தேவதை”

‘விளக்கேத்த தேவதை தான் வரணுமா என்ன? நான் விளக்கேத்துனா விளக்கு எரியாதாமா?’ இதையும் மனதில் தான் எண்ணிக் கொண்டான் அஷோக்.

“உங்க புருஷர் கிட்ட சொல்லுங்க, இனி கல்யாணம் எப்போ பண்ணுவேன்னு என்கிட்ட கேட்க வேண்டாமாம், நான் எப்போ சொல்லுறேனோ, அப்போ அவரை என்கூட வர சொன்னால் போதும்” அவர் இருந்த அறையை நோக்கி வேகமாகக் குரல் கொடுத்தான் கெளதம்.

‘இப்போ அந்தக் கடா மீசை இங்க என்ட்ரி ஆகணுமே’ எண்ணியவனாக ஒரு காலை தூக்கியபடி வாசலை எட்டிப் பார்த்தான் அஷோக்.

“சரி சொல்லு, யார் அது?” ஆவலாக வினவினார் கமலா.

“அம்மா, நாம முன்னாடி இருந்தோம்ல மதுரையில். அப்போ பக்கத்து வீட்டுல இருந்தாங்கல்ல அன்னலெட்சுமி டீச்சர் அவங்க பொண்ணு”

“ஆமா, அவங்களை இப்போ நீ எங்கே பார்த்த?” ஆச்சரியமாக வினவினார் தாய்.

“இந்தக் கல்யாணம் நடக்காது” வேகமாகக் குரல் கொடுத்தபடி வந்தார் கடாமீசை கருத்தபாண்டி கையில் ஒரு பேப்பருடன்.

‘அதான பார்த்தேன், இன்னும் ஆளைக்காணோமேன்னு நெனைச்சேன் வந்துட்டு நெகடிவ் வைப்ரேஷன்’ மனதில் கறுவிக் கொண்டான் அஷோக்.

கெளதம் முன் வந்து நின்றவர் “இந்தக் கல்யாணத்தை நான் நடத்த விடமாட்டேன்” கையில் இருந்த பேப்பரை அவன் முன் ஆட்டி பேச, அவரையைப் பார்த்திருந்தனர் தாயும், மகனும்.

‘ஏதோ பெரிய ஆயுதம் வச்சிருக்கே மீசை என்னவா இருக்கும்’ யோசனையுடன் அந்தப் பேப்பரை எட்டிப் பார்த்தான் அஷோக்.

கண்களில் தோன்றிய கோபத்துடன் கருதபாண்டியை உறுத்து விழித்த கமலா “ஏன் நடத்த விடமாட்டீங்க?, என் புள்ள ஆசையை நான் நிறைவேத்துவேன்” நிதானமாக, ஆனால் அழுத்தமாகக் கூறினார். இன்று தான் தன் மகன் சந்தோசமாக இருக்கிறான் அதையும் கெடுக்கப் பார்க்கிறாரே என்ற கோபம் அவருக்கு.

“இதை நீயே பார்” அவர் கையில் அந்தப் பேப்பரை திணித்தார் கருத்தபாண்டி. கையில் வாங்கியவர், கௌதமை பார்க்க, அவன் தலை வேகமாகக் கீழே குனிந்தது.

‘மச்சி, ஏதோ தகிடுத் தனம் பண்ணிருக்கானே, எப்படிக் கண்டுபிடிச்சது மீசை, நான் அவன் கூடவே சுத்துறேன் எனக்குத் தெரியலியே? என்னவா இருக்கும்’ இதையும் மனதில் எண்ணிக் கொண்டான் அஷோக்.

அந்தப் பேப்பரை விரித்துப் பார்க்க அது ஒரு திருமண அழைப்பிதழ். மணமகன் கெளதம் கிருஷ்ணா, மணமகள் சபர்மதி. மணமகன் விபரம் எல்லாம் அவர்கள் விபரம்.

“டேய் கெளதம் என்னடா இது? ஆறு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை முடிச்சிட்டியா? என்னடா நடக்குது இங்க, நீ என்னடான்னா ஒரு பொண்ணைக் காதலிகிறேன்னு வந்து நிக்குற, உன் அப்பா உனக்குக் கல்யாணம் முடிஞ்சதா சொல்லுறார்? என்னடா இது?”

‘ஆத்தாடி கல்யாணத்தையே முடிச்சுட்டானா? இது எப்போ, இவன் கூடவே தானே சுத்துறேன் ஒரு வார்த்தை சொன்னானா? சொல்லிருந்தா நானும் முடிச்சிருப்பேன்ல’ அவன் கவலை அவனுக்கு.

“அம்மா அது வந்து...”

“நீ பேசாதே?” அதட்டினார் கருத்தபாண்டி.

“என்னங்க நடக்குது இங்க, சொல்லுங்க?” அவரைப் பிடித்து உலுக்கினார் கமலா.

“என்ன நடக்குதா? உன் பையனுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிஞ்சுட்டு, அவளுக்குத் தாலி கட்டி அங்கயே விட்டுட்டு வந்துட்டான்... இங்க ஹாயா தினம் தினம் ஒரு டிரஸ் பண்ணிட்டுச் சுத்துறான்” கடுப்படித்தார் தந்தை.

“டேய் கெளதம், என்னடா இது?”

கெளதம் மனது அப்படியே ஆறு மாதங்களுக்கு முன் பயணித்தது...

துபாய் பெயர் பெற்ற மிகப் பெரிய ஐடி கம்பெனி காலை நேர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

கெளதம், அஷோக், இந்தர், சுரேஷ் நான்கு பேரும் ஒரு டீம் மெம்பர்ஸ். கெளதம் படிப்பை முடிக்கவும் நல்ல வேலை கிடைக்க. உடனே
வேலையில் சேர்ந்தான். துபாய், மும்பை பிரான்ஞ் எங்கும் தன் வேலையை தொடர்வான்.


“டேய் மச்சி, எனக்கு ஒரு மாசம் லீவ் வேணும்டா” கௌதம் தான் தன் நண்பர்களுடன் கூறிக் கொண்டிருந்தான்.

“மச்சி, நான் உனக்கு லீவ் லெட்டர் எழுதி தரவா?” ஆசையாக வினவினான் அஷோக்.

“அட, லீவ் லெட்டர்க்கு பொறந்தவனே, ஏன்டா இப்படி அலையிற?” கிண்டலடித்தான் இந்தர்.

“போடா இப்போல்லாம் யாரும் என்கிட்ட லீவ் லெட்டர் எழுத வரதே இல்லை” வருத்தப்பட்டுக் கொண்டான் அஷோக்.

“எப்போ பார்த்தாலும் ஒரே ஷபரிங் ப்ரம் பீவர்னு எதுக்கெடுத்தாலும் அதையே எழுதினா யார் வருவா? கொஞ்சமாவது மாத்தி எழுதணும், ஸ்கூல், காலேஜ்னு இதையே எழுதினா?” கிண்டலாக கூறினான் சுரேஷ்.

“அப்போ ஸ்கூல் படிக்கும் போதே பாஸ் இதே வேலையைத் தான் சுத்தினாரா?” கிண்டலாகக் கேட்டான் இந்தர்.

“ஆமா, மச்சி அவன் வேலையே இது தான். எத்தனை நாள் டீச்சர் கிட்ட அடிவாங்கிருக்கான் தெரியுமா?” சுரேஷ் மீண்டும் கிண்டலடித்தான்.

“எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துல இந்த ப்ராஜெக்ட் முடிச்சு ஊருக்கு போயிருவீங்க, ஆனா நான் மட்டும் இங்கயே இருக்கணுமா?” கடுப்பாக வினவினான் கெளதம்.

“அட விடு கெளதம், நீயும் தான் இன்னும் ஆறு மாசத்துல சென்னைக்கே வந்திருவியே?” சமாதானபடுத்தினான் இந்தர்.

“ஆமா மச்சி, ஆறு மாசம் தானே கண்ணை மூடி திறப்பதற்குள் போயிரும்” மற்றவர்களும் சமாதானபடுத்தினர்.

“அது தான்டா நானும் சொல்லுறேன், நான் ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வாரேன், அதுக்குப் பிறகு ஆறு மாசம் தானே சீக்கிரமா போயிரும்”

“சரி, எப்படி ஒரு மாசம் லீவ் எடுப்ப” அவனைப் பார்த்தபடி வினவினான் இந்தர்.

“அது தான் எனக்கும் தெரியலடா”

“என் மதிக்குட்டி கல்யாணத்துக்கு எனக்கு மட்டும் லீவ்” நிம்மதியானான் இந்தர்.

“உனக்கு எப்படியும் லீவ் கிடைக்கும்டா மடையா?” அஷோக் தான் அவன் தலையில் தட்டிக் கூறினான்.

“அட ஆமால்ல, நம்ம எம்டி தானே மாப்பிள்ளை” சிரித்தபடிக் கூறினான் இந்தர்.

“டேய் கெளதம் பேசாமல், உனக்குக் கல்யாணம்னு லீவ் அப்ளை பண்ணுடா, ஒரு மாசம் என்ன இரண்டு மாசம் லீவ் கிடைக்கும்” ஐடியா கூறினான் சுரேஷ்.

“ஐ சூப்பர் ஐடியா? ஆனா எப்படிடா? இன்வெட்டேஷன் சேர்த்துக் குடுத்தா தானே லீவ் தருவான் ஜிஎம் சொட்ட” கடுப்பானான் கெளதம்.

“டேய்... அது எனக்குச் சொந்தகாரர்டா” பல்லைகடித்தான் இந்தர்.

“விடு மச்சி இன்னும் ஆகல தானே” சிரித்தபடிக் கூறினான் அஷோக்.

“இதுக்கு எதுக்குடா வருத்தப்படுற, இன்வெட்டேஷன் தானே வேணும் எத்தனை வேணும் சொல்லு, என்னோட ஃபிரண்ட் ஒருத்தன் பிரிண்டிங் பிரஸ் வச்சிருக்கான், போலியா ஒன்னு அடிச்சிருவோம்?” சுரேஷ் தான் கூறினான்.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“பொண்ணு பேருக்கு என்ன செய்வீங்கடா?” இந்தர் வினவினான்.

“அதெல்லாம் அவனே பாத்துப்பான்டா”

“சரிடா மச்சி, சீக்கிரம் பத்து இன்வெட்டேஷன் ரெடி பண்ணு” கூறியபடியே வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் கெளதம் கையில் இன்வெட்டேஷன் வர லீவ் அப்ளை செய்து விட்டான். மீதி எல்லாரும் ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அவனின் இன்வெட்டேஷன் பார்க்கவே இல்லை. கௌதமும் அதைக் கவனிக்கவில்லை.

இந்தர், சுரேஷ் இருவரும் சென்னை பிரான்ச் செல்லும் நாளும் வர, தன் அத்தை மகள் திருமணத்திற்கு வர வேண்டும் என அழைப்பு கொடுத்துச் சென்றான் இந்தர்.

அஷோக் அப்படியே மும்பை பிரான்ச் கிளம்பினான். இங்குக் கடைசியாக இருந்தது கெளதம் மட்டுமே...

ஊருக்குச் செல்லும் இரண்டு நாள் முன் அவனை அழைத்தார் அவனின் எம்டி.

“உட்காருங்க கெளதம்”

“சொல்லுங்க சார்”

“என்னைக்குக் கல்யாணம்”

“சார் மே 15”

“ம்ம்... என் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாட்களுக்கு பிறகு அப்படித் தானே?”

“ம்ம்... ஆமா சார்”

“பொண்ணு பேரு சபர்மதி அப்படித் தானே?”

‘ஐயோ பொண்ணு பேரு அதுவா? அது கூடக் கவனிக்கலையா மடையா’ தன்னைத் தானே தலையில் தட்டியவன் “ஆ... ஆமா சார்” ஆமா ஒன்றை போட்டுக் கொண்டான்.

“ம்ம்... லவ் மேரேஜ் அப்படித் தானே?”

‘காசா, பணமா அவுத்து விடுடா கெளதம் உன் காதல் கதையை’ மனம் எடுத்துரைக்கத் தன் தேவதை கதையை எடுத்து விட்டான் “ஆமா சார்... பத்து வருஷ லவ் சார்... சின்ன வயசுல ரொம்பப் பிடிக்கும். அப்புறம் எங்கையோ போயிட்டா, இப்போ தான் கண்டு பிடிச்சிருக்கேன். அது தான் வீட்டுல பேசி உடனே கல்யாணத்தை வைக்கச் சொல்லிட்டேன்”

“வீட்டுல ஒத்துகிட்டாங்களா?”

“முதலில் முடியாதுன்னு என் அப்பா சொன்னாங்க சார், அவளைக் கட்டி தரலன்னா, துபாய் விட்டு ஊருக்கு வரவே மாட்டேன்னு ஒரு பிட்டை போட்டேன், உடனே இன்வெட்டேஷன் அடிச்சு அனுப்பிட்டாங்க” பெருமையாகப் புழுகினான் கெளதம்.

“ம்ம்ம்... நல்ல அப்பா” ஒரு மாதிரியாக வினவினானோ?

“சரி கிளம்புங்க கெளதம்”

“ஓகே சார்.” விடை பெற்று தன் இருக்கையில் அமர்ந்தவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

விளையாட்டாய் ஆரம்பித்த செயல் வினையாவதை அந்த நேரம் அவன் அறிந்திருக்கவில்லை. நாளை தன் வாழ்வே சிரிப்பில் முடிய போகிறது என அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

“நீ எதுக்குக் கவலைபடுற எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், கல்யாணத்துக்கு மட்டும் வரும் வழியைப் பார்” யாரிடமோ போனில் பேசியபடி வெளியே சென்றான் எம்டி ஜெயகிருஷ்ணா.

திருவாரூரில் அமர்ந்திருந்த சபர்மதியோ ‘இந்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர், பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு என் முகத்தைக் கூடப் பார்க்கலியே? இது வரை போன் கூடப் பண்ணல? என்னவா இருக்கும்’ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Achoo vasamma maattikittan dooii.. inthar naa avan thaan vijayendar raa.. avan thangachi sabarmathi ku kalyanama.. maapillai kittaye poi.. sooper
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top